தாரம் -14❤❤
அவர்கள் தாங்கள் பிரிந்த இருந்தபோது அணுபவித்த சோகங்களை பகிர்ந்து கொண்டனர்..கொஞ்ச நாழிதான் பின் அவர்களுக்குள் எப்பவும் போல் செல்ல சண்டைகள் ஆரம்பித்தது...அனிஷ் எப்பவும் போல் தன் வாயை வைத்துக்கொண்டு சும்மா இராமல் அவளிடம் எதையாவது கூறி வாங்கி கட்டி கொண்டான்..நன்றாக தான் இருவரும் பேசி கொண்டு இருந்தனர்.. திடீரென்று அனி " ஆமா அனிஷ்..உங்க கோர்ஸ் 3 இயர்ஸ்னு சொன்னீங்க ஆனா 2 இயர்ஸ்ல வந்துட்டீங்க ளே ..???" என்று உங்கள் எல்லாருடைய சந்தேகத்தையும் தீர்த்து வைக்கும் நோக்கத்தோடு கேட்டாள்.." அதுவா அனிமா என்னோட ஆக்ச்சுவல் கோர்ஸ் 2 இயர்ஸ்தா பட் 1 இயர் அங்க ப்ராக்டீஸ் பண்ணணும்னு நினைத்தேன்..என்னோட ஃபைனல் மார்க்ஸ் நல்லா இருந்ததுனால எனக்கு இரண்டு சாய்ஸ் குடுத்தாங்க ஒன்னு இங்க வேலை செய்யணும் இல்லன்னா யு.எஸ்ல பிரக்டிஸ் பண்ணிக்கலாம்ன்னு சொன்னாங்க எனக்கும் என்னோட அனில்க்குட்டிய பாக்காம இருக்க முடியலயா சோ கிளம்பி ஓடி வந்துட்டே .... " என்று அவன் கூறி முடித்ததும் அவனைப் பார்த்து " உங்களுக்கு என்மேல அவ்ளோ அன்பு இருக்கா அனிஷ் என்னால அந்தளவுக்கு அன்ப திரும்பி குடுக்க முடியுமா ??? எனக்கு பயமா இருக்குடா !!!" அவளை இடையோடு அணைத்து கொண்டான்..அவனின் இறுகிய அணைப்பில் அவனின் மார்பில் புதைந்து போனாள்... அவளின் தலையில் முத்தமிட்டவன்.." அனிம்மா உனக்கிட்ட நா ஒண்ணு சொல்லவா..எனக்கு உன்ன எதுக்கு புடிச்சுருக்குன்னே தெரியலடி ...சில விஷயங்கள் நமக்கு அவ்ளோ பிடிக்கும் ஆனா ஏன்னு தெரியாது...அது மாதிரி தான் நீ..இப்பவும் சொல்றே எப்பவும் சொல்லுவேன்டி உன்னளவு இந்த உலகத்துல யாராலையும் அன்பு காட்ட முடியாதுடி..!!!" என்று அவன் கூறியதும் எம்பி அவன் தாடையில் இதழ் பதித்தவள்.." உங்ககிட்ட ஒன்னு கேக்கவா..எனக்கு எப்பவுமே சுயமரியாதைதா பெருசுன்னு நினைப்பே..அதுவும் இல்லாமா எனக்கு ஈகோ ரொம்ப அதிகம்...பட் உங்ககிட்ட மட்டும் என்னால காமிக்க முடியல ஏன்??? " " ஏன்னா உனக்கு என்ன ரொம்ப பிடிச்சிருக்கு அதனாலதான் ...யூ ஆர் இன் லவ் வித் மீ.." " அப்டியா ??? எனக்கு ஒன்னும் அப்டி தெரியலயே.. என்று உதட்டை பிதுக்கி அழகு காட்டியவளை தன் மார்போடு அணைத்துக் கொண்டான் அவளின் அனிஷ் 💞💞
இருவரும் இவ்வுலகில் இல்லை அவர்களை உலகிலிருந்து அழைத்து வந்தது மோனியின் குரலில்தான் " ஹலோ மாமா உள்ள என்ன பண்ணிட்டு இருக்கீங்க ???" இவவேற !!" என்று அவளும் "ஐயோ வந்து ரொம்ப நேரமாயிடுச்சு மாட்டிக்கிட்டேயேடா சேகரு..!!' என்று அவனும் அழுத்துக்கொண்டு பிரிந்தனர்..அனி போய் கதவை திறந்தவள் " ஏன்டி எப்பபாரு டிஸ்டர்ப் பண்ணிட்டே இருக்க ???" என்று கடித்துக்கொண்டாள்.." அம்மா தாயே அனிதா ..உங்கள் தாய்தான் தங்களை அழைத்து வர கூறினார்கள் சகோதரியே ...!" என்று நாடக ஸ்லேங்கலில் கூறியதும் சிரித்து விட்டாள் மோனியின் செல்ல அக்கா...
மோனிக்கும் அனிக்கும் 2 வருட வித்தியாசம் ..ஆனால் மோனிதான் அக்கா மாதிரியும் அனி தங்கை மாதிரியும் நடந்து கொள்வார்கள்...தன் தங்கை என்றால் அவளுக்கு உயிர்..அவளையும் ராஜகோபால் மருத்துவம் படிக்க வைக்க வேன்டும் என்று மிகவும் விரும்பினார்..ஆனால் அவள் ஒன்றும் அனி கிடையாதே சண்டையிட்டு ஆர்க்கிடெக்ட் எடுத்து 2 ஆம் ஆண்டு படித்து கொண்டு இருக்கிறாள்..அவளும் அழகில் ஒன்றும் சலித்தவள் இல்லை மாநிறமாக இருந்தாலும் பேரழகி தான்....
தன் தங்கையின் தலையில் செல்வமாக தட்டியவள் அவளை இழுத்துக் கொண்டு ஹாலிற்கு வந்தாள்.. அப்பொழுது தான் தெரிந்தது அங்கு ஒரு மாநாடே கூடியிருந்தது..அங்கு அனைவரையும் கண்டதும் முதலில் திணறியவள் பின் அனைவரையும் குசலம் விசாரித்தாள் அவளுக்கு அனிஷின் சித்தி வைதேகியை மிகவும் பிடித்து விட்டது ... அப்பொழுது தான் அங்கே ஒரு நெடிய மனிதன் அமர்ந்து இருப்பதை கவனித்தாள்...' யாருடா இவன் ???' என்பது போல் பார்த்தவளிடம் " அண்ணி உங்களுக்கு என்னைய தெரியாதுன்னு தெரியும் நான்தான் அனீஷோட தம்பி அபி !!!" என்று தன்னைத்தானே அறிமுகப்படுத்திக் கொண்டான்..." ஓகே ஓகே !!" என்று அனியும் அவளிடம் அறிமுகமாகி கொண்டாள்.. ஆனால் அந்த பெயரை கேட்டதும் கீர்த்தி யின் கண்களில் தெரிந்த அதிர்ச்சியை யாரும் கவனிக்கவில்லை... அவனைத்தவிர!¡! அங்கே கூடியிருந்த அனைவரும் அதாவது அனியின் பெற்றோர்கள் அனிஷின் அப்பா அவனின் சித்தப்பா சித்தி மற்றும் தம்பி பின்னர் சில உறவினர்கள் அங்கு இருந்தனர்...
அனிஷ் மேல் படிப்பை முடித்துவிட்டு வந்தவுடன் திருமணம் வைத்துக்கொள்ளலாம் என்று இருந்ததால்... இப்பொழுது திருமணம் பற்றி பேச வந்துள்ளனர் அவர்கள் இருவரின் ஜாதகப்படி இன்னும் ஒரு மாதத்தில் திருமணம் என முடிவு செய்யப்பட்டது ....அவர்கள் அனைவரும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு அங்கிருந்து கிளம்பினர் அனிடம் பிரியா விடை பெற்றுக்கொண்டு பிரிந்தான் அனிஷ்...ஆனால் ஆதர்ஷ் மற்றும் மோனியின் கண்களில் தெரியும் கோபத்தையும் அவர்களின் அமைதியையும் யாரும் கண்டுகொள்ளவில்லை கண்டு கொண்டு இருந்தால் நன்றாக இருந்திருக்கும்...
அவர்கள் கிளம்பியதும் தான் ஞாபகம் வந்தது தான் அவனிடம் கேட்க வேண்டிய கேள்வியை கேட்காமல் மறந்துவிட்டோம் என்று...." எப்படி தன் தந்தையிடம் தங்கள் திருமணத்திற்கு சம்மதம் பெற்றான் என்று அனிதா அறியாள்...
நாட்கள் அதன் போக்கில் செல்ல.... கண்ணை மூடி திறப்பதற்குள் ஒரு மாதமும் முடிந்து விட்டது ....பெற்றோர்களின் வற்புறுத்தலால் ஒரு மாதம் மாப்பிள்ளையும் பெண்ணும் பேசிக் கொள்ளாமல் இருக்க வேண்டும்... அவர்கள் ஒன்றும் சளைத்தவர்கள் இல்லையே எப்படியோ தினமும் சந்தித்து விடுவார் ஆனால் அந்த ஒரு மாதமும் கீர்த்தி அபி திருமண விடயாக வீட்டிற்கு வரும் போது எல்லாம் அவனை முறைத்துக் கொண்டே சுற்றினாள்...
அவர்கள் இருவரும் எதிர்பார்த்த அவர்களின் திருமண நாளும் வந்தது ...
Hi..guys sry for the upd plus small upd.. actually ennaku exams nd match practice pa..daily Eve practice so seri tired pa .... Innime regular ah poda try panre..gud night 😴 💤😴 💤...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro