தாரம்-13❤💜
"அங்கிள் உங்க கிட்ட நான் ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும் !!!" என்று அவன் கூறிய உடன் அனைவரும் அவனை திரும்பி பார்த்தனர் ..." நிச்சயதார்த்தம் முடிஞ்சு 1 வீக்ல நா யு.எஸ் கிளம்பனும் ...என்னோட பிஜி கோர்ஸ்க்காக..இத நா அனிக்கிட்டக்கூட சொல்லல என்னோட கோர்ஸ் ஒரு 3 இயர்ஸ் இருக்கும் அங்கிள்..அனியும் அவளோட யுஜி முடிக்கட்டுமே.." என்று கூறினான்..அனியின் தந்தைக்கோ இப்பொழுதுதான் நிம்மதியாக இருந்தது.." நாக்கூட அனி இன்னும் சின்ன பொண்ணுதான அதுக்குள்ள எதுக்கு கல்யாணம்ன்னு யோசிச்சே மாப்ள இப்போ நீங்க எடுத்து இருக்க முடிவிற்கு நா சம்மதிக்கிறே..அனி உனக்கு இதுல எதுவும் பிரச்சினை இல்லையே..???" என்று அனிஷிடம் ஆரம்பித்து அனியிடம் முடிக்க அவளோ தன்னவன் தன்னை விட்டு தூரம் செல்கிறான் என்ற அதிர்ச்சியில் இருந்து மீண்டவளாக " பராவாயில்லபா அவரு படிச்சு முடிச்சதுக்கு அப்றமே கல்யாணம் பண்ணிக்கிறோம் !!!" என்று தன் மனதை மறைத்து இன்முகமாக கூறினாள்..பின் அவர்களின் நிச்சயதார்த்த சுபநிகழ்ச்சி இனிதே ஆரம்பித்தது..பெரியோர்கள் முன்னிலையில் நிச்சய பத்திரிகை வாசிக்க பட்டது..அனைவரும் நிச்சயம் முடிந்ததும் தங்கள் வாழ்த்தினை தெரிவித்தனர்..அனிஷ் அனைவர் முன்னிலையிலும் தன் அனியின் விரலில் வைர மோதிரத்தை அணிவித்தான்..அதில் ஆங்கில 'எ' எழுத்து ஒன்றோடொன்று பின்னி இருந்தது..அது பார்க்கவே மிக அழகாக இருந்தது..வைர கற்கள் விளக்கொளியில் மின்னியது..
தன்னவளின் விரலில் அணிவித்தவன் அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் ' ஐ லவ் யூ ' என்று கூறினான் ...ஆனால் அவளோ ' டைம் இல்ல டைம் இல்ல..' என்று சிரித்துக்கொண்டே சொன்னாள்.. பின் அந்த நிச்சயதார்த்த சுபநிகழ்ச்சி மிகவும் இன்பமாக கழிந்தது... நாட்கள் எப்படி நகர்ந்தது என்றே தெரியவில்லை ஒரு வாரம் முடிந்துவிட்டது அனிஷ் வெளிநாட்டிற்கு கிளம்புவதற்கான நேரம் வந்துவிட்டது ...என்னதான் அவள் சரி என்று கூறினாலும் அவளுக்கு அனிஷை பிரிவது மிகவும் வருத்தமாக இருந்தது...
அவள் ஒரு வாரமாக அனிஷிடம் கேட்கும் கேள்வி " நீங்க எப்போ திரும்பி வருவிங்க?? எந்த லீவு இருந்தாலும் வந்துட்டீங்களா?? ப்ளீஸ் ...சீக்கிரம் வந்துடுங்க!!! கண்டிப்பா போய்தா ஆகணுமா ??எனக்கு கஷ்டமா இருக்கு ப்ளீஸ் போகாதீங்க.. என்று மாறிமாறி இதையே கூறிக் கொண்டிருந்தாள் அவனும் பொறுமையாக " சீக்கிரம் வந்துடுவே ...எந்த லீவு கிடைச்சாலும் ஓடி வந்து விடுவேன்... உனக்கு டெய்லி வீடியோ கால் பண்றேன் இல்ல கால் பண்றேன் ....எனக்கும் உன்ன பிரிஞ்சு கிளம்புவது ரொம்ப ரொம்ப கஷ்டமா தான் இருக்கு ...ஆனாலும் என் அனிக்கு அவளுக்கு பிடிச்ச மாதிரி ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொடுக்குனும் இல்லையா அது என்னோட கடமை இல்லையா!!!" இதையே அவனும் ஒரு வாரமாக கூறிக்கொண்டே இருந்தான்..
அவன் கிளம்ப வேண்டிய நாளும் வந்தது அவளை பிரிந்து செல்வது மிகவும் வருத்தமாக தான் இருந்தது... ஆனால் அவன் அங்கே செல்வதற்கு ஒரு முக்கிய காரணம் இருப்பது அவனை தவிர யாருக்கும் தெரியாது ஏன் அனிக்கும் கூட தெரியாது.. அவன் மேற்படிப்புக்காக வெளிநாட்டிற்கு சென்று விட்டான்... நாட்கள் எப்படி சென்றது என்றே தெரியவில்லை இரண்டு வருடங்கள் முடித்துவிட்டது இப்பொழுது அனிதா CRRI பண்ணிக்கொண்டிருந்தாள்..
ஆனிஷ் அவளிடம் கிளப்பும் முன் தான் தினமும் கால் செய்வதாக கூறியிருந்தான் ஆனால் அவன் வாரத்திற்கு ஒரு முறை தான் கால் செய்வான் அதுவும் அவளின் தந்தை எண்ணிற்கு தான்..அதனால் அவளால் அவனிடம் மனம் விட்டு் பேச முடியாமல் போய்விட்டது ...ஆனால் பிரிந்து இருந்தால் தான் காதல் அதிகரிக்கும் என்பது அனிதா இப்பொழுது புரிந்து கொண்டாள் விளையாட்டுத்தனமாக இருந்த அவளது காதல் இப்பொழுது மிகவும் ஆழமாக அதிகரித்து விட்டது ...அவள் அவனை எப்பொழுது பார்ப்போம் என்று ஏங்கிக் கொண்டிருந்தாள் ...ஆனால் தன் மனதை அவள் யாரிடமும் வெளி காட்டாமல் அவன் அவளுக்கு அணிவித்த மோத்திரத்தை பார்த்து தினமும் பேசிக் கொள்வாள் .. ஏனோ அவளுக்கு தன்னவனிடம் பேசும்போது இருக்கும் உணர்வு கிடைக்கும் அன்றும் தன் ரூமில் தனிமையில் இருந்த போது தன்னவனின் ஞாபகத்தில் மோதிரத்தை பார்த்து .." டேய் மாமா எப்படா என்ன பாக்க வருவ ஃபிராடு என்னை விட்டுப் போயிட்ட இல்ல ..
என் கூட பேச கூட மாட்ற ..நீ வந்ததுக்கு அப்புறம் உனக்கு எவ்ளோ பெரிய பனிஷ்மென்ட் காத்துட்டு இருக்கு தெரியுமா ஐ ரியலி ரியலி ரியலி மிஸ் யூ டா மாமா ப்ளீஸ் சீக்கிரமா என் கிட்ட வந்துடே அப்புறம் உன்ன எங்கேயுமே விட மாட்டேன்... இன்னைக்கு என்ன நாள்னாச்சு உனக்கு ஞாபகம் இருக்கா??? மூணு வருஷமா எனக்கு நீ விஸ் பண்ணவே இல்லடா இடியட்..."
" ஹாப்பி பர்த்டே அனி..❤❤" என்ற தன்னவனின் குரல் கேட்ட அதிர்ச்சியில் படுக்கையில் இருந்து குதித்து எழுந்தாள்..அவளால் நம்பவே முடியவில்லை தன்னவன் தன்னெதிரில் நிற்கிறான் ... 😍😍😍 அவனை பார்த்ததும் ஓடி சென்று அவனை அணைத்து கொண்டாள் ..அவனின் முகம் முழுவதும் தன் இதழை பதித்தாள்.. அவளின் செய்கையில் தினறியவன் எவ்வளவு முயன்றும் தன்னை அடக்க முடியாமல் அவளின் செவ்விதழ்களை சிறைக் கொண்டான் அனியின் கள்வன்..😍😍
அனி தன்னவனின் மார்பில் சாய்ந்து அமைதியாக இருக்க ...அவன் அவளை கூந்தலை மென்மையாக வருடிக் கொண்டுருந்தான்..அனி அவனிடம் " அனிஷ் நா உங்கள எவ்ளோ மிஸ் பண்ணே தெரியுமா ?? இடியட் எப்பபாரு என்னைய கஷ்டபடுத்திட்டே இருக்க ??? டெய்லி அழுதுட்டே இருப்பே தெரியுமா ?? உங்க வாட்ஸ்அப்ல லாஸ்ட் சீன் பாத்துட்டே இருப்பே .. " என்று அவள் கூறியதற்கு எல்லாம் ம்ம்..என்றே சொல்லிக் கொண்டு இருந்தான்..கடுப்பாகியவள்.." அனிஷ் உங்களுக்கு தெரியுமா எனக்கு ஒருத்தன் ப்ரோபோஸ் பண்ணான்டா..அவனுக்கு ஓகே சொல்லிட்டேனே..!!!" என்று அவள் கூறியதற்கும் ம்ம்..என்றவன் பின் அற்தம் புரிந்தவனாக "ஏய்...!!!" என்றான்..
அவனை முறைத்தவள் சற்றென்று அழுக ஆரம்பித்து விட்டாள்..பதறியவனாக..." அனில்க்குட்டி ஏன்டி அலற ?? " "நீ மாறிட்ட அனிஷ் நா சொல்றத நீங்க கவனிக்ககூட மாட்டீங்க?? அதுமட்டுமில்ல இப்போ கொஞ்சம் மெலிஞ்சுட்டீங்க..வேற ஹேர் ஸ்டைல் மாத்திட்டீங்க பட் ஓகே...எனக்கு நீங்க கொஞ்ச கம்மிதா பரவாயில்ல அட்ஜஸ்ட் பண்ணிக்கிறே.. " இது எல்லாத்தையுமே அவள் அழுதுகொண்டே கூறினாள்..அவளின் செய்கையில் சிரித்தான்..
அவளை இறுக அணைத்து " ஏய் லூசு !! நா உன்னய பிரிஞ்சு எவ்ளோ ஏங்கி போய் இருந்தே தெரியுமா?? உன்ன அணைச்சுட்டு உக்காந்து இருந்தப்போ எவ்ளோ ஹாப்பியா இருந்தது தெரியுமா ?? கண்ண மூடி அத அணுபவிக்ககூட விட மாட்டியா டி ...??" என்று செல்லமாக அவளை கடிந்து கொண்டான்...😍😍..
தொடரும்..
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro