தாரம் - 36
கீர்த்தி அப்படி கேட்டதும் அனைவருக்கும் அவள் என்ன சொல்கிறாள் என்பது போல் தான் இருந்தது?
ஆனால் அவள் கூறுவதும் உண்மைதானே ! எமர்ஜென்சி கான்டாக்டில் கார்த்திக்கின் நம்பர் இல்லாதபோது அவர்கள் ஏன் அனிஷிற்கு ஆக்ஸிடன்ட் என்று இவனுக்கு கால் செய்ய வேண்டும்?
அனைவரும் கார்த்திக்கை நோக்கி கொண்டு இருந்ததால் அவனுக்கு என்ன கூறுவது என்றே தெரியவில்லை
அவன் வாழ்வில் இப்படி ஒரு சமயம் வரும் என்று அவன் நினைத்துக்கூட பார்த்தது இல்லை..
அவன் எப்படி கூறுவான் அவனின் நெருங்கிய நண்பனின் விபத்திற்கு மூல காரணம் அவனின் அன்பு தங்கை என்று? என்ன ஒரு முரண்பாடு ?
அவன் எதுவும் கூறாமல் மெளனம் சாதிப்பதை பார்த்து கீர்த்தி கூற ஆரம்பித்தாள்..
" நாங்க அனிஷ் மாமா அட்மிட் ஆகி இருந்த ஹாஸ்பிடல்க்கு போனோம் அங்க யார பார்த்தோம்னு தெரியுமா?
அஞ்சலி "
ரொம்ப தெரிந்த பெயரை கேட்டதும் அனிதா வியப்பாக " அஞ்சலி!!? "
" ஆமாக்கா உன்னோட பெஸ்ட் ஃபிரண்ட் அஞ்சலி தான்.. இன்னும் ஷாக்கான விஷயம் என்னன்னா அஞ்சலி தான் உன்னோட மாமனாரோட உயிர் நண்பரோட பொண்ணு அதாவது அனிஷ் மாமாவ கல்யாணம் பண்ணிக்க வேண்டிய பொண்ணு!"
" அதுக்கும் மேல அஞ்சலி மாமா ஆக்ஸிடன்ட்னு அட்மிட் ஆகிருந்த சமயத்துல அங்க தான் வேலை பார்த்து கொண்டு இருந்தாள்.. அவளுக்கு எல்லா விஷயங்களும் தெரியும் இந்த விஷயத்துல கார்த்திகோட தங்கச்சி மகதியும் இன்வால்வ் ஆகி இருக்காங்க.. "
இதை கேட்ட அனிஷிற்கு எதுவும் புரியவில்லை.. வாழ்க்கை எத்தனை ஆச்சரியங்களை கொடுக்கும்
கார்த்திக்கை பார்த்து அனிஷ் கோபமுடனும் குழப்பத்துடனும் " என்ன தான்டா இங்க நடக்குது? அஞ்சலி மகதி இன்னும் எவ்வளவு பேர்டா? வாய கொஞ்சம் திறந்து சொல்லேன்டா!!"
என்ன கூறுவது என்றே தெரியாமல் " ஐயம் ஸாரிடா அனிஷ் " என்றான்
அனிதா ஸாரி என்றதை கேட்டதும் அவளுக்கு உடம்பெல்லாம் நடுங்கியது.. ஏன் ? அவள் அப்படி என்ன செய்து விட்டாள் ? அவள் காதலித்த ஒருவனை கல்யாணம் செய்து கொண்டாள் அவ்வளவு தானே ?
Karthik's POV ( இது ஒரு 2 அப்டேட்ஸ்கு போகும் ஸோ கார்த்திக் எப்படி எல்லாத்துயும் சீக்கிரம் சொல்லி முடித்தான் என்றெல்லாம் கேட்க படாது!🤓🥴😂 )
அனைவரும் கார்த்திக்கை பார்த்து கொண்டு இருப்பதை அவனுக்கு என்ன சொல்வது என்று கூட தெரியவில்லை
அவன் வாழ்வில் ஒரு முறை கூட இப்படி ஒரு நாள் வரும் என்று எதிர்பார்க்கவில்லை
வாழ்வில் நமக்கு ஒரு பொறுப்பு இருந்து அதை நம்மால் நிறைவேற்ற முடியாமல் இருந்தால் அதிலும் அதற்கு முழு காரணமும் நாமாக இருந்தால் குறைந்தபட்சம் நம்மையாவது நம்மால் குறை கூற முடியும் ஆனால் நம் வேலையை நாம் ஒழுங்காக செய்தும் , அந்த பொறுப்பை செய்து முடிக்க உலகத்தின் எல்லை வரை சென்றும் விதி ஒன்றினால் அந்த பொறுப்பை முடிக்க முடியாத போது யாரை குறை கூறுவது? விதியை ?
அவன் ஒன்றும் தன் நண்பனிடம் உண்மையை மறைக்க வேண்டும் என்று இல்லையே அவனின் சின்ன தங்கையை காக்க வேண்டிய பொறுப்பு அவனோடது ஆயிற்றே..
ஒரு பெரிய மூச்சை எடுத்து கொண்டு தன் கதையை கூற ஆரம்பித்தான்
அவன் பெற்றோர் இறந்த போது அவன் தங்கை வெறும் ஐந்து வயது குழந்தை.. 15 வயதான அவனால் தன் குட்டி தங்கையை எப்படி பார்த்துக் கொள்வது என்று தெரியாமல் இருந்தான்..
அவனுக்கு குடும்பம் என்று சொல்லிக் கொள்ள யாரும் இல்லை..
அப்போது தான் அவன் தந்தையின் தங்கை வந்தார்..
அவர் இருவரையும் தன் வீட்டிற்கு அழைத்து சென்று பார்த்து கொண்டார்.. ஆனால் ஏனோ அவன் அத்தைக்கு மகதியை பிடிக்கவில்லை.. எப்போதும் அவளை திட்டிக் கொண்டு அவள் பெற்றோர் இறந்ததற்கு காரணம் அவள்தான் என்று எப்போதும் திட்டிக் கொண்டே இருந்தார்..
அவனால் சென்று தன் அத்தையிடம் மகதியை திட்ட வேண்டாம் என்று சொல்லி வாதாட முடியவில்லை அதனால் தன் அத்தைக்கு தெரியாமல் தன் தங்கை என்ன வேண்டும் என்று கேட்டாலும் வாங்கி கொடுத்தான்.. அவனால் வாங்கி கொடுக்க முடியவில்லை என்றாலும் அவனிடம் இருக்கும் பொருட்களை அவளிடம் கொடுத்து விடுவான்..
ஒரு நாள் அவன் ஸ்கூலில் இருந்தபோது அவனின் தங்கையின் க்ளாஸ் டீச்சர் அவனை அழைத்தார்.. அவனும் சென்று பார்த்தபோது அவனின் தங்கை உடம்பெல்லாம் அடியோடு நின்று கொண்டு இருந்தாள்..
திகைத்து போய் என்ன நடந்தது என்று கேட்ட போது தான் தெரிந்தது அவனின் தங்கை அவளின் க்ளாஸ்மேட்கிட்டே இருந்த பொருள் தன்னுடையது என்று கூறி அவளிடம் சண்டை பிடித்து இருந்திருக்காள்..
முதலில் அவன் சின்ன பெண் தானே என்று விட்டு விட்டான்.. ஆனால் போக போக அவனிடமும் அவனின் பொருட்கள் வேண்டும் என்று அடம் பிடித்து சண்டை பிடிக்க ஆரம்பித்தாள்..
நாட்கள் செல்ல செல்ல அவளின் ஆசைகள் பொருட்களில் இருந்து மனிதர்கள் மேல் வளர ஆரம்பித்தது..
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro