Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

தாரமே-35

அனிதாவிற்கும் அனிஷிற்கும் கார்த்திக்கை பார்த்தது  ஆச்சரியமாக இருந்தது

இவன் எப்படி இங்கே வந்தான் ? அனிதாவின் அட்ரஸ் யாருக்கும் தெரியாதே! பின்னே எப்படி ?

என்னதான் ஆயிரம் கேள்விகள் இருந்தாலும் வீட்டிற்கு வந்தவனை அழைக்க வேண்டுமே

" உள்ள வாடா ஏன் வெளிய நிக்குற? எப்படி இருக்கடா? பாத்து எவ்ளோ நாள் ஆயிடுச்சு? "

அனிதாவும் தன் பங்கிற்கு " வாங்கண்ணா உள்ள வாங்க !" என்று அழைத்தாள்

" இல்ல மச்சி நான் எம்.டி பண்றதுக்கு அமெரிக்கா போயிட்டேன்டா அதான் டச்ல  இருக்க முடியல !! இன்னைக்கு வந்ததுக்கு காரணம் எனக்கு கல்யாணம்டா அமெரிக்கால ஒரு பொண்ண பார்த்து மனசு ஸ்லிப் ஆகி லவ் பண்ணி இப்போ கல்யாணம் பண்ண போறேன்டா.  அதான் இன்விடேஷன் குடுக்க வந்தேன்"

" யாருடா அந்த பொண்ணு நம்ம ஊரு பொண்ணுதான?"

" இல்லடா அவ அமெரிக்காடா பேரு ஜெனி!"

" ஓஓஓஓஓ பாருடா!! சூப்பர்டா கண்டிப்பா கல்யாணத்துக்கு வரோம் எப்போ கல்யாணம்? பத்திரிகை எங்க? "

" வாட்ஸப்ல அணுப்பிட்டேன் டா "

" கோவம் வர மாதிரி காமெடி பண்ணாதனு எவ்ளோ தடவை சொல்லிருக்கேன் !! கஞ்சப் பயலே!!" என்று கூறிக்கொண்டே அவனை அடித்தான் பின் இருவரும் சிரித்து கொண்டே பழைய கதைகளை பேச ஆரம்பித்தனர்..

கீர்த்தியின் இடத்தில் ( முன்னிரவில்)

கீர்த்தி  கூட்டம் மருத்துவமனைக்கு சென்று அங்கு இருந்த ரிஷப்ஷனிஸ்டிடம் விசாரித்து கொண்டு இருந்த போது கீர்த்தி அனிதாவின் காலேஜ் தோழி அஞ்சலி

அஞ்சலியும் அனிதாவும் நெருங்கிய தோழிகளாக இருந்த போதும் அனிதாவும் அனிஷிற்கும் கல்யாணம் நிச்சயம் ஆனதில் இருந்து அஞ்சலி அனிதாவிடம் பேசுவதை நிறுத்தி விட்டாள்..

ரிஷப்ஷனிஸ்டிடம் திரும்பியவள் அது யாரென்று கேட்டாள்

" அது ஹாஸ்டல் டிராக்டரோட பொண்ணு அஞ்சலி "

அதை கேட்டதும் கீர்த்திக்கு ஆச்சரியமாக இருந்தது

அனிஷின் தந்தைக்கு அவர்களின் கல்யாணத்தில் அவ்வளவு சந்தோஷம் இல்லை என்று அவளுக்கு தெரியும் ஏனென்றால் அவருக்கு இந்த மருத்துவமனையின் டிராக்டரான மிஸ்டர்.மகேந்திரனின் பொண்ணை தான் அனிஷிற்கு கல்யாணம் செய்து வைக்க வேண்டும் என்று ஆசை என்று தெரியும்

ஆனால் அந்த பொண்ணு அஞ்சலி என்பது எதிர் பார்க்காதது

மறுபடியும் ரிஷப்ஷனிஸ்டிடம் திரும்பியவள் " இவங்க எவ்ளோ வருஷமா இங்க வேலை பாக்குறாங்க?"

" ஒரு 3 இயர்ஸ் இருக்கும் "

அப்போ அனிஷ் அட்மிட் ஆகி இருந்த சமயத்தில் அவள் இங்கு தான் வேலை செய்து கொண்டிருந்திருக்கிறாள்..

ஆனால் ஏன் அனிதாவை வந்து பார்க்கவில்லை?

ஏதோ யோசித்தவளாக அஞ்சலியின் பின் ஓடினாள்...

அஞ்சலியின் முன் சென்று நின்றவள் " ஹாய் அஞ்சலி " என்று கூறி அவளை நோக்கி புன்னைகைத்தாள்    

கேரளாவில்..

மூவரும் அமர்ந்து பேசி கொண்டு இருக்கையில் மறுபடியும் பெல் சத்தம் கேட்டது " இன்னைக்கு என்ன நிறைய பேர் வந்துட்டே இருக்காங்க " என்று கூறி கொண்டே சென்று கதவை திறந்த போது வெளியில் அபியும் கீர்த்தியும் நின்று கொண்டு இருந்தனர்..

" என்னடா இங்க ? "

" சும்மா தான் அண்ணா ஏன் நான் வரக்கூடாதா?" என்று கேட்டு கொண்டே உள்ளே நுழைந்தான் 

அங்கே கார்த்திக்கை பார்த்ததும் இருவரும் திரும்பி பார்த்து கொண்டனர்..

அனிதா கீர்த்தி கையில் இருக்கும் பேக்கை வாங்கி கொண்டு போய் உள்ளே வைத்தாள்..

தன் அண்ணியை 3 வருடங்கள் கழித்து மீண்டும் பார்த்ததும் அபிக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது..

அனிதாவும் அபியை பார்த்ததும் அவனின் தலையை தட்டிக் கொடுத்தாள்..

பின் அனைவரும் அமர்ந்து பேசி கொண்டு இருக்கையில் திடிரென்று அனிஷிடம் கீர்த்தி " மாமா உங்க மொபைலில் எமர்ஜென்சி கான்டாக்ட் யார வச்சு இருக்கிங்க? "

" உன் அக்கா நம்பர் தான்மா ஏன் ?"

" அப்போ உங்களுக்கு ஆக்ஸிடன்ட் ஆன சமயத்துல?"

அவள் கேள்வியை கேட்டதும் அனிஷிற்கும் அனிதாவிற்கும் இவள் ஏதோ சொல்ல வருகிறாள் என புரிந்தது

" அப்பவும் உங்க அக்கா நம்பர் தான்மா "

" ஓ..."

கார்த்திக்கிடம் திரும்பியவள் " அப்புறம் ஏன் மிஸ்டர்.கார்த்திக் உங்களுக்கு மாமாக்கு ஆக்ஸிடன்ட்னு  கால் வந்தது?"

அனிஷு ம்  அனிதாவும் கீர்த்தியை புரியாமல் பார்த்தனர்..

 

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro