தாரமே - 32
அனிஷின் கண்களில் இருந்த பிடிவாதத்தை பார்த்த ராஜேஷ் இதில் ஏதோ இருக்கிறது என்பதை புரிந்து கொண்டார்..அனிஷிடம் எதுவும் கேட்பதற்கு அவருக்கு விரும்பவில்லை..
அவனுக்கு வேண்டும் என்றால் அவனே கூறுவான் என்று விட்டு விட்டார்..
அவன் கூறியது போல் ரிச்சர்ட்க்கு கால் செய்து தான் பணம் தருவதாக கூறி அந்த விபத்தை பற்றின தகவல்களை அழிக்க கூறினார்..
அனிஷிற்கு ' அனிதா எங்கே ? ' என்று கேட்க வேண்டும் போல் இருந்தது.. ஆனால் அவள் ஒருவேளை தனக்காக வீட்டில் சமைத்து கொண்டு இருப்பாளாக இருக்கும் என நினைத்தான்..
அனிதாவும் ஸ்ருதியும் மிகவும் பயந்து போய் இருப்பார்கள்.. அவர்கள் வந்தவுடன் இருவரையும் கட்டி அணைத்து கொள்ள வேண்டும்.. ஸ்ருதியை தனக்கு முத்தம் கொடுக்க சொல்ல வேண்டும்..
இப்படி தன் நினைப்பில் மூழ்கி இருந்தவனுக்கு பாவம் தெரியவில்லை அவர்கள் இருவரும் அவனை விட்டு பிரிந்து சென்று விட்டார்கள் என்று..
இப்படி அவன் நினைத்து கொண்டு இருக்கையில் கதவை திறந்து ராஜேஷ் உள்ளே ஓடி வந்தார்..
வந்தவர் அவன் தலையில் இடி விழுவது போல் " அனிதா ஸ்ருதிய கூட்டிட்டு போய்விட்டாள்.. "
" அவ வீட்டிற்கு போயிருப்பாள் சித்தப்பா "
" இல்லடா நான் இப்போ தான் உன்னோட வீட்டிற்கு உனக்கு ட்ரஸ்லாம் எடுத்துட்டு அப்படியே அனிதாவை கூட்டிட்டு வரலாம்னு போனேன்.. அப்போது லட்சுமி அம்மா ஓடி வந்து இந்த லெட்டரும் இந்த நோட்டும் கொடுத்தாங்க.. "
அனிஷிற்கு என்ன நடக்கிறது என்று ஒன்றும் புரியவில்லை.. வேகமாக அவர் கையில் இருக்கும் பேப்பர்களை வாங்கி பார்த்தான்..
அந்த பேப்பரில்..
' என்னால் என்னோட லைஃப் ஃபுள்ளா அனிஷிற்கு என்னவாகும் என பயந்து கொண்டே வாழ முடியாது.. என்னை யாரும் தேட வேண்டாம் ப்ளீஸ்.. '
அந்த லெட்டரில்..
' ஒருவேளை நான் 2 வருடத்திற்குள் வரவில்லை என்றால் அனிஷ் இந்த கடிதத்தை வைத்து டிவர்ஸ் வாங்கி கொள்ளலாம் ' அடியில் அவளின் கையொப்பம் இருந்தது..
அனிஷிற்கு தலையில் இடி விழுந்தது போல் இருந்தது.. என்னவாயிற்று? அனிதா ஏன் அவனை விட்டு பிரிந்து செல்ல வேண்டும் ? ஒருவேளை இந்த விபத்து அந்த கால்கள் செய்பவர்களால் என்று நினைத்து விட்டாளா? இல்லையே அவன் தானே அந்த பெண் குறுக்கே வந்ததால் காரை திருப்பும் போது கார் கண்ட்ரோல் இழந்து போஸ்ட் மரத்தில் மோதியது.. ( அனிஷிற்கு அந்த கார் வந்து இடித்தது தெரியவில்லை )
அவன் அந்த பெண் யாரென்று தெளிவாக பார்த்து இருக்கலாம்..
அவள் ஏன் டிவர்ஸில் மறுபடியும் வந்து நிற்கிறாள் ? இது மடத்தனம்.. ஒருவேளை அப்பா அவளை போக சொல்லிருப்பாரோ ? இல்லையே அதற்கு வாய்ப்பில்லை.. ஒருவேளை அப்படி நடந்து இருந்ததாலும் அவள் ஒன்றும் அப்படி முட்டாள் இல்லையே தந்தையே எப்படி தன் சொந்த மகனை கொல்ல முடியும்?
அவன் எப்படி யோசித்துப் பார்த்தாலும் ஒன்றும் புரியவில்லை அதனால் இப்போதைக்கு அவள் கூறியதை மதித்து அவள் போக்கில் விடலாம் என முடிவு செய்தான்..
அவளின் முடிவை மதிக்க விரும்பினான்..
அதனால் தன் சித்தப்பாவிடம் அவளுக்கு தெரியாமல் அவள் எங்கே இருக்கிறாள் என தேட சொன்னான்..
அனிதாவின் வீட்டில் இருந்து அவனை பார்க்க வந்த போது அவர்களிடம் தான் பார்த்து கொள்வதாக கூறினான்.. அவர்களும் இது அவனின் குடும்ப விஷயம் என்று அவனிடம் விட்டு விட்டார்கள்..
அனிஷிற்கும் அனிதா பிரிந்து சென்றது மிகவும் வருத்தமாக தான் இருந்தது.. ஆனால் அவள் ஏன் இப்படி செய்தாள் என்று அவனுக்கு தெரியவும் இல்லை புரியவும் இல்லை அதனால் அவள் போக்கில் விட்டு விடலாம் என முடிவு செய்தான்.. ஆனால் அவளை இழக்க அவனுக்கு விரும்ப்பம் இல்லை.. அதனால் அவள் கூறிய 2 வருடங்கள் காத்திருந்து அவள் வரவில்லை என்றால் அவளை நேரில் சென்று அழைத்து வந்து விடலாம் என முடிவு செய்தான்..
அவன் மருத்துவமனயில் இருந்த நாட்களில் யாரிடமும் ஒழுங்காக பேசவில்லை.. முக்கியமாக தன் தந்தையிடம்.. அவரும் அவன் அனிதா பிரிந்து சென்ற கவலையில் உள்ளான் என்று எதுவும் கூறாமல் மெளனமாக இருந்தார்..
அவன் டிஸ்சார்ஜ் ஆகும் போது அவன் சித்தி எவ்வளவு வற்புறுத்தியும் அவன் தன் வீட்டிற்கே போக வேண்டும் என அடம் செய்தான்..
அவனுக்கு கையில் மட்டும் தான் சின்ன ஃபார்க்சர் என்பதால் அவர்களும் சாப்பாடு மட்டும் தினமும் வந்து கொடுப்பதற்காக மட்டுமாவது அவர்கள் வரவேண்டும் என கேட்டனர்..
அவன் வீட்டிற்குள் நுழைந்த போது அவனை அழைத்தது அவன் அன்று ஸ்ருதிக்காக வாங்கிய பூங்கொத்து தான் ஆனால் இன்று வாடிய நிலையில் இருந்தது அவனின் வாழ்க்கை போல்..
அனிஷ் அவனின் கடந்த காலத்தை பற்றி கூறி முடித்தவுடன் அங்கு பெரும் அமைதி நிலவியது..
அபிக்கு தன் அண்ணனை எப்படி சமாதானம் செய்ய வேண்டும் என தெரியாமல் திணறினான்...
அவனிற்கே நாளை என்ன நடக்க போகும் என தெரியாத போது அவனால் எப்படி எல்லாம் சரியாகிவிடும் என்று கூற முடியும்?
அதனால் அவன் சென்று தன் அண்ணனை கட்டி கொண்டான்..
அஜய்க்கு என்ன கூறுவது என தெரியாததால் அமைதி காத்தான்..
கீர்த்திக்கு இங்கு ஏதோ பெரிய தப்பு நடந்தது போல் தோன்றியது.. அனிஷிற்கு அன்று அனிதாவிற்கு கால் வந்ததது பற்றி தெரியவில்லை.. ஏதோ ஒன்று அவளுக்கு புரியவில்லை..
ஆனாலும் அவளுக்கு அவள் அக்காவிற்கு உண்மை தெரிய வேண்டும் என தோன்றியது..
அதனால் அமைதியை கலைக்கும் விதமாக " மாமா நீங்க கண்டிப்பாக அக்காக்கு இதை பற்றி சொல்ல வேண்டும்.. அவளுக்கு உண்மை தெரியனும் மாமா.. ப்ளீஸ் " என்று கூறிவிட்டு அவள் மொபைலை எடுத்து அனிதாவிற்கு டயல் செய்து விட்டு அனிஷிடம் மொபைலை கொடுத்தாள்..
அவனும் வாங்கி காலை ஸ்பீக்கரில் போட்டான்..
மறுமுனையில் அனிதா எடுத்தவுடன் சிறிது நேரம் அமைதியாக இருந்தவன் மெதுவாக " அனி.. ஐ யம் ஸாரி.. நான் உன்க்கிட்ட இருந்து மறச்சு இருக்க கூடாது தான்.. உனக்கு அந்த கால்கள் செய்ததது.. என்னோட அப்பா " என்று ஒருவழியாக தன் மனதில் இருந்ததை போட்டு உடைத்தான்..
மறுமுனையில் சிறிது நேரம் அமைதி நிலவியது..
அனைவருக்கும் அதிர்ச்சி தரும் விதமாக அனிதா " எனக்கு தெரியும் " என்றாள்..
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro