Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

தாரமே - 25

கீர்த்தி அபி இருவருக்கும் அதிர்ச்சி அளித்தது அந்த செய்தி ஏனென்றால் அன்று அனிஷ் எப்படி அடிப்பட்டு கிடந்தான் என்று அவர்கள் இருவரும் கண் எதிரில் பார்த்தார்கள்.. இது எப்படி சாத்தியம்? அன்று அனிஷின் இரத்தம் வழியும் உடலை பார்த்ததும் மயங்கி விழுந்தாளே அனிதா.. தன் தந்தையிடம் செல்ல வேண்டும் என்று அடம் பிடித்த ஸ்ருதியை சமாதானம் செய்ய முடியாமல் எப்படி தவித்தனர் அனைவரும் இப்பொழுது என்னவென்றால் அந்த அனைத்திற்கும் காரணமான விபத்தே நடக்கவில்லை என்கிறார்கள் என்ன தான் நடக்கிறது இங்கே?

அதிர்ந்து போய் இருக்கும் இருவரையும் பார்த்ததும் அஜய்க்கு இங்கு ஏதோ சரியில்லைஎன்பது புரிந்தது ஆனால் இது புரிந்து என்ன செய்ய முடியும் இவர்கள் இருவரும் இப்படி பேய் அறைந்தது போல் இருக்கிறார்களே..

இருவரையும் நிகழ் காலத்திற்கு கொண்டு வருவதற்காக தன் கையில் இருந்த ஃபைலை மேஜையில் போட்டான்..

சத்தம் கேட்டு நிகழ் காலத்திற்கு வந்தனர் இருவரும்.. கீர்த்தியின் கண் அசைவில் அவள் என்ன சொல்கிறாள் என்பதை உணர்ந்த அபி.. அஜையிடம் " ஓகே சார் நாங்க வந்தது அந்த விபத்து நடந்த டீடைல்ஸ் இருந்தா அந்த வண்டி எண்ண வச்சு யாரு இதுக்கு பின்னால் இருக்காங்கனு கண்டுபிடிக்கலாம்னு நினைத்தோம்.. பரவாயில்லை சார் இதுக்கு அப்புறம் நாங்க பாத்துகிறோம்.."

சிறிது நேரம் யோசனை யில் ஆழ்ந்த அஜை இருவரையும் நோக்கி " என்கிட்ட எப்படியும் உதவி கேட்டு வந்துட்டீங்க.. சோ.. நா உங்களுக்கு உதவி பண்றேன்.. " என்றான்..

இதை கேட்ட அபிக்கு கோபம் ஆயிற்று ' தேவையில்லாம இவன் ஏன் நம்ம விஷயத்துல மூக்க நுழைக்குறான் 'என்று நினைத்து அவனை மறுக்கலாம் என வாயை திறந்தபோது அவனின் காலில் ஏதோ பாறை விழுந்தது போல் இருந்தது என்ன வென்று பார்த்தால்.. கீர்த்தி அவனின் கால்களை மிதித்து கொண்டு இருந்தாள்..

கால்கள் அவனை மிதித்தாலும் முகத்தில் சிரிப்புடன் " ரொம்ப தேங்க்ஸ் சார்.. கண்டிப்பாக உங்க உதவி தேவைப்படும் நானே உங்க கிட்ட  எப்படி கேட்கலாம்னு யோசித்து கொண்டு இருந்தேன்.. "

வலி தாங்க முடியாமல் அபி கண்களில் கண்ணீருடன்.. " ஆமா சார் ரொம்ப உதவியாக இருக்கும்!! ;) "

அவனின் கண்களில் கண்ணீரை பார்த்த அஜை " ப்ரோ ஏன் அழுகுறீங்க ? "

" அது ஒன்னும் இல்ல சார்.. உங்க பரந்த மனதை நினைத்து கண் கலங்கிட்டான்.. " என்று கூறிக்கொண்டே அபியை பார்த்து முறைத்தாள்..

அவளுக்கு பயந்து ஆமா என்று தலை அசைத்தான் அபி..

அவர்களின் சேட்டைகளை பார்த்து மனதிற்குள் சிரித்துக் கொண்ட அஜை.. கீர்த்தியை நோக்கி " அடுத்து என்ன ப்ளான் பண்ணி இருக்கீங்க ? "

" இங்க ரிஜிஸ்டர் ஆகவில்லை என்றால்.. கண்டிப்பாக இது அந்த பழைய எஸ்ஐ க்கு தொடர்பு இருக்கும்.. சோ நம்ம போய் அவர மீட் பண்ணி விஷயத்த கேட்கலாம்.. "

" ஓகே அப்போ நான் போய் அவரோட வீட்டு அட்ரஸை பார்த்து எடுத்துக் கொண்டு வருகிறேன்.. " என்று கூறிவிட்டு பழைய ரிக்கார்டுகள் இருக்கும் அறைக்கு சென்றான்...

சிறிது நேரம் கழித்து வந்த அஜய் இருவரையும் அவனை தொடர சொல்லி சைகை காட்டிவிட்டு வெளியே நோக்கி சென்றான்..

வாழ்க்கை  சிலருக்கு  ரோஜா மலர்கள் படர்ந்த மெத்தை போல் இருக்கும்.. ஒரு சிலருக்கு அந்த ரோஜா மலர்களில் உள்ள முட்கள் போல் இருக்கும்..

வாழ்க்கையில்  இருக்கும் எல்லா முடுச்சுகளுக்களை அவிழ்க்க முடியாது ஆனால் அதை அவிழ்க்க முயற்சிக்கலாம்..

தன் அக்காவின் வாழ்வில் இருக்கும் முடுச்சுகளை அவிழ்க்க முயற்சிக்கிறாள் கீர்த்தி ஆனால் எப்படி என்று தெரியவில்லை..

இந்த மூன்று இளைஞர்களும் தங்களால் முடிந்த உதவிகளை செய்யலாம் என கை கோர்த்து இருக்கின்றனர்

இவர்கள் மூவரும் கிளம்புவதை பார்த்த கான்ஸ்டபிள் முருகானந்தம் யாருக்கோ கால் செய்து " அவர்கள் கிளம்பி விட்டனர் சீக்கிரம் கிளம்பி போயிடுங்க " என்று கூறிவிட்டு அவர்கள் போகும் திசையை பார்த்து முறைத்தார்..

கேரளாவில்...

காலை சாப்பாட்டிற்காக டேபிலிள் சாப்பாடை எடுத்து வைத்து கொண்டு இருந்த அனியை பின்னால் இருந்து கட்டி அணைத்த அனிஷ் அவளின் கழுத்து வளைவில் தன் முகத்தை ஒட்டிக் கொண்டான்..

அவளை அணைத்து கொண்டே அவளை முகர்ந்தவனுக்கு ஏனோ பல நாட்கள் அழைந்து விட்டு வீடு வந்து சேர்ந்தது போல் உணர்ந்தான்..

சிறிது நேரம் அப்படியே நின்றவன்.. வீட்டில் யாரும் இல்லாமல் இருப்பதை உணர்ந்தவன் அனியிடம் " என்ன வீட்டில் யாரையுமே காணலாயே.. ?"

" அம்மா அப்பா கோவிலுக்கு போயிருக்காங்க.. கீர்த்தி சென்னை கிளம்பிட்டாள்.. "

" இவ்ளோ சீக்கிரமாவா?  "

" ஏதோ நம்மலுக்கு சில வருடங்களுக்கு முன்பு கால் பண்ணிட்டு இருந்தாங்கள அவங்க யாருனு கண்டுபிடிக்க போறேனு சொன்னா.. "

இதை கேட்டு அதிர்ந்து போனான் அனிஷ்..

வேகமாக வெளியே சென்று யாருக்கோ கால் செய்தான்.. 

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro