தாரமே-24❤
இதுவரை..
அனிஷூம் அனிதாவும் பிரிந்து இரண்டு வருடங்கள் கழித்து மீண்டும் சேரப்போவதாக நினைக்கிறார்கள்...அவர்கள் இருவரையும் சேர்த்து வைக்க கீர்த்தி, அனிதாவின் தங்கை..அவர்கள் இருவரையும் பிரித்த அந்த மர்ம பெண் யார் என்று கண்டுபிடிக்க போவதாக சபதம் எடுக்கிறாள்..
இனி..
காலை கதிர்கள் முகத்தில் அடிக்க..தூக்கத்தில் இருந்து விழித்த கீர்த்தி பஸ் ஜன்னல் திரையை விலக்கி பார்த்தாள்..
பரபரப்பான சென்னை மாநகராட்சி உள்ளே பஸ் நுழைந்தது தெரிந்தது..வேகமாக எழுந்தவள் பஸ் நின்றதும் தன் உடைமைகளை எடுத்துக் கொண்டு கீழே இறங்கினாள்...
தான் தங்கியிருந்த மகளிர் விடுதிக்குள் நுழைந்தவள்..தன்னை ஓடி வந்து அணைத்து கொண்ட அந்த குட்டி குழந்தை வந்து அணைத்து கொண்டது..அந்த குழந்தை அங்கே வேலை செய்யும் ஒரு பெண்ணின் குழந்தை..
சில ஆண்டுகளுக்கு முன்...
கீர்த்தி தன் தோழிகளுடன் கடற்கரை சென்ற போது..அங்கே ஒரு இளம்பெண் கடலில் குதித்து தற்கொலை முயற்சி செய்வதை பார்த்து..அப்பெண்ணை காப்பாற்றி
விசாரித்ததில் இளம் வயதில் காதலித்து கர்ப்பமான பின்..காதலனால் கைவிடப்பட்டவள்..
தன் பெற்றோரிடம் கூற பயந்துபோய் தற்கொலை முயற்சி செய்தாள்...அவளை சமாதானம் செய்து அப்பெண்ணின் வீட்டில் பேசி பார்த்த போது..அப்படிப்பட்ட பெண் தனக்கு வேண்டாம்..என்று கைவிட்டனர்..
அதனால் தன் தோழிகளுடன் சேர்ந்து அவளுக்கு அடைக்கலம் கொடுத்து..அவளுக்கு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்ததும்..கீர்த்தி தங்கி இருக்கும் மகளிர் விடுதியிலேயே அவளுக்கு வேலையும் வாங்கி கொடுத்தாள்...
தன்னை அணைத்து கொண்ட குழந்தையை தூக்கி கொஞ்சி விட்டு..தன் அறைக்குள் நுழைந்தவள்..சிறிது நேரம் உறங்கி விட்டு எழுந்து கிளம்பினாள்...கிளம்பிக் கொண்டு இருந்த போதே..அனிஷின் தம்பி அபிக்கு கால் செய்தாள்...
மறுமுனையில்
" ஹலோ......" என்ற தூக்க கலக்கத்தினால் ஆழ்ந்த குரலில் கூறினான்
அந்த குரலை கேட்டு பல நாட்கள் ஆனதால் அவளுக்கு அவனை அப்பொழுதே பார்க்க வேண்டும் போல் இருந்தது ..
" சீக்கிரம் கிளம்பி அடையார் பஸ் ஸ்டாண்டுக்கு வந்துடு வேலை இருக்கு.." என்று கூறிவிட்டு அவனின் பதிலுக்கு கூட தாமதிக்காமல் காலை கட் செய்தாள்..
அடையார் பஸ் ஸ்டாண்ட்..
கீர்த்தி அடர் பச்சை நிரத்தில் ஒரு சுடியும் அதற்கு ஏற்றாற்போல் கழுத்தை ஒட்டிய செயின் அணிந்து பார்க்க அழகாக இருந்தாள்..
அவளுக்கு அருகில் ஒரு கருப்பு நிற பென்ஸ் வந்து நின்றது..உள்ளே இருந்து ஒரு அழகான இளைஞன் சன்கிளாஸ் அணிந்து கீர்த்தியைபார்த்து விசில் அடித்தான்.. இந்நேரம் வேறு ஒருவனாக இருந்து இருந்திருந்தால் அங்கு நடந்து இருக்கும் ஸுன் வேறாக இருந்திருக்கும்..அது அபி என்றதாள் அமைதியாக இருந்தாள்..
உள்ளே நுழைந்து இருக்கையில் அமர்ந்தவள்..அவன் பக்கம் திரும்பாமல் " அடையார் போலீஸ் ஸ்டேஷன் க்கு போனும் " என்றாள்..
ஒரு நிமிடம் அதிர்ந்து போனான் பின் " யாரடி கொலை பண்ணிட்டு வந்த ? " என்று அதிர்ந்து போய் கேட்டான்
அவனை பார்த்து முறைத்தவள் " உங்க அண்ணனும் அண்ணியும் சேரனுமா ? வேனாமா? " " ஹா ஹா சேரனும் அனிஷ் தொல்லைய தாங்க முடியல இதோடு அவங்க லவ் ஸ்டோரிய 1234567891 டைம்ஸ் கேட்டுட்டே!! " என சலித்து கொண்டே வண்டியை ஸ்டார்ட் செய்தான்..
அடையார் போலீஸ் ஸ்டேஷன்...
" சார் இங்க எஸ்.ஐ எங்க இருக்காங்க னு தெரியுமா? " என்று அங்கே இருந்த நடுத்தர மனிதரிடம் கேட்டான் அபி.. அவனை ஏற இறங்க பார்த்தவர்
" நீ என்ன அவனோட ஃபிரண்டா? போ போ உள்ள தான் இருக்கான்.." என்று கூறிவிட்டு " இதுக்கு தான் சின்ன பசங்களுக்கு கீழ வேலை பாக்க கூடாது.. எவ எவோனுக்குளாம் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது " என்று சலித்து கொண்டே சென்றார்..
' இப்போ இங்க என்ன தான் நடந்தது ' என்பது போல் அபி முழித்தான்..' கண்டுக்காதே' என்பது போல் சைகை காட்டிவிட்டு அவர் காமித்த அறையை நோக்கி விரைந்தாள் கீர்த்தி..
உள்ளே நுழைந்த கீர்த்தி அங்கே இருந்த மனிதனை பார்த்து அயர்ந்து போய் நின்றாள் ஏனென்றால் அங்கே இருந்த அஜய் அப்படி!!°
அஜய் - பயோடேட்டா
உயரம் - ஆறடி இருக்கும்
பாடி - தினமும் ஜிம் போகும் பழக்கம் போல்
ஸ்டேட்டஸ்-கண்டிப்பாக ஸிங்கில் தான்..
ஸ்கோர் - 150/10:))
மொத்தத்தில் 100% பாய் ஃபிரண்ட் மெட்டிரியல்!!$%€£₹
அயர்ந்து போய் இருக்கும் கீர்த்தியை பார்த்த அபி ' இவள இங்க விட்டது தப்பா போயிடுச்சே இவ வேற பாக்குறத பாத்தா இன்னும் கொஞ்ச நேரம் விட்டா இவங்க இரண்டு பேரோட பசங்க வந்து பாய் அங்கிள்னு கை காமிச்சிட்டு போயிடுவாங்க போல அபி உஷார் அடைய வேண்டிய தருணம் இது!!" என்று நினைத்தவன் " சார் ... " என்று மெதுவாக அழைத்தான்
பின்..
கீர்த்தி இன்று இங்கே வந்ததன் காரணம் இரண்டு வருடங்கள் முன் இங்கே அடையார் அருகே தான் அனிஷ் கார் விபத்தில் சிக்கியது..
அதனால் இங்கே அருகில் இருக்கும் போலீஸ் ஸ்டேஷனில் கண்டிப்பாக பதிவு செய்திருக்க வேண்டும்..
இவர்கள் வந்ததன் காரணம் அறிந்த அஜய் அவர்களுக்கு உதவலாம் என்று பழைய ரிக்கார்டுகளை எல்லாம் ஆராய்ந்து பார்த்தான்..
ஆனால் எல்லாரும் அதிரும் படியாக இரண்டு வருடங்கள் முன் அங்கே எந்த விபத்தும் பதிவாகவில்லை..
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro