தாரமே-22
கடலளவு அவர்களுக்குள் காதல் இருந்தும் கடுகளவு கூட அதை காட்டாமல் எப்படி இருக்க முடியும்??
அனிஷ் அனிதா கழுத்தில் மாங்கல்யத்தை பார்த்ததும் அவனுக்கு நா எழவில்லை...இவள் என்னவள் என்னும் எண்ணம் மட்டுமே அவனிடம் நிறைந்து இருந்தது ஆனால் அது சிறிது நேரம் தான்...அவள் ஏன் தன்னை விட்டு சென்றாள் என்ற கோபம் ஆட்க்கொண்டு விட்டது..அதனால் எதுவும் கூறாமல் அங்கிருந்து விரைந்து வெளியேறி விட்டான்...
அனிதாவிற்கு சிறிது நேரம் முன் நடந்தது எல்லாம் கனவு போல் இருந்தது.. சிறிது நேரத்திற்கு முன் தன் அனிஷை பார்த்தது போல் உணர்ந்தாள்..அந்த இரண்டு நிமிடத்தில் ஒரு பெரிய கனவு கோட்டையே கட்டி விட்டாள்..ஆனால் அவன் இவளை விலக்கி விட்டு சென்றதும் அது தூள் தூளாக உடைந்து விட்டது..தனக்கு மட்டும் ஏன் இப்படி???
தன்னையே நொந்து கொண்டு ...தன் வேலைகளை கவனிக்க ஆரம்பித்தாள்..ஆனால் அனிஷ் அப்பொழுது சென்றவன் திரும்பி வரவில்லை..அவன் எப்படியும் ஸ்ருதியை பார்க்க வருவான் அப்பொழுது பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டாள்..தன் வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு சென்றவளுக்கு ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது..
அவள் தன் ஸ்கூட்டியை விட்டு இறங்கி தன் வீட்டை நோக்கி நடந்து சென்றபோது...அவள் வீட்டருகே நிறைய பேர் நின்ற மாதிரி இருந்தது.. யாரென்று பக்கத்தில் சென்று பார்த்த போது அங்கு அனிதாவின் பெற்றோரும் அவளின் தங்கை கீர்த்தியும் நின்று கொண்டு இருந்தனர்..தன் அம்மா அப்பாவை பார்த்ததும் அவள் கால்கள் தானாக நின்று கொண்டது..அதே சமயம் அவள் வருவதை கவனித்து விட்டனர்..அவளிடம் ஓடி வந்த அவள் தங்கை அவளை அணைத்து கொண்டாள்.." அக்கா எங்ககிட்டயாச்சும் சொல்லிருக்கலாம்ல..நாங்க கூடவா உன்ன தப்பா நினைப்போம்..எவ்ளோ கஷ்டப்பட்டோம்னு தெரியுமா???" என்று கூறியதை கேட்டதும் அனிதாவின் கண்களில் நீர் வழிய ஆரம்பித்தது..அவளின் தங்கையை அணைத்து கொண்டவள்..தன் அப்பா அம்மாவை நோக்கி சென்றாள்..அவள் வருவதை பார்த்ததும் அவள் அப்பா ராஜன் அவளின் தோளை தட்டி கொடுத்து " பரவாயில்லை மா ...எனக்கு தெரியும் நீ ஏதாச்சும் பண்ணா அதுக்கு ஒரு காரணம் இருக்கும் என்று கூறி கொண்டே அவள் தலையை வருடினார்..தன் தந்தையை பார்த்து உணர்ச்சி ததும்பிய குரலில் தேங்க்ஸ் பா என்றாள்..பின் அம்மாவிடம் சென்றாள்..அவள் வருவதை பார்த்ததும் அழுதுகொண்டே மறுபுறம் திரும்பி கொண்டார்..அவரிடம் சென்றவள்.." அம்மா சாரிமா..என்னைய மனுச்சிடுங்க ப்ளீஸ்..!!!!" என்று அழுதுகொண்டே கூறினாள்..அவள் அழுவதை தாங்க முடியாமல் அனிதாவை தழுவி அணைத்து கொண்டார்..பின் சிறிது நேரம் கழித்து அனைவரும் உள்ளே சென்றனர்.. ஸ்ருதியை பார்க்க வேண்டும் என கூறனர்...அவள் ஏதோ கூறவருவதற்குள் ஒரு மழலை குரல் அவர்களை கவர்ந்தது...
அங்கே அனிஷூம் ஸ்ருதியும் உள்ளே நுழைந்தனர்..அனிஷிடம் தான் இன்று ஸ்கூலில் கற்றுக் கொண்ட ரைம்ஸ்ஸை தன் மழலை மொழியில் அழகாக கூறி கொண்டிருந்தாள்...ஸ்ருதி உள்ளே இருப்பவர்களை பார்த்ததும் தன் அப்பாவின் கைகளில் இருந்து நழுவி ஓடி சென்று தன் அம்மாச்சியை கட்டிக் கொண்டாள்..அவரும் அந்த குட்டி குழந்தையை தூக்கி உச்சி முகர்ந்தான்..பின் தன் தாத்தா..சித்தி அனைவரிடமும் சென்று விட்டு தன் அம்மாவின் கையையும் தன் அப்பாவின் கையையும் பிடித்துக் கொண்டு தன் மழலை மொழியில் " இனிமே ஸ்ருதிக்கு அம்மா..அப்பா..தாத்தா..அம்மாச்சி..சித்தி எல்லாரும் இருக்காங்களே..!!! ஆனால் பெரிய தாத்தா மட்டும் மிஸ்ஸிங் " ..இதை கேட்டவுடன் அனைவரின் கண்களிலும் கண்ணீர் நிறைந்து இருந்தது.. ஸ்ருதியை தூக்கிக் கொண்ட அனிஷ்..அவளிடம்.." பெரிய தாத்தாக்கு கொஞ்சம் வேலை இருக்கு அதா வர முடியல..அவருக்கு எவ்ளோ சீக்கிரம் வேலை முடியுமோ அவ்ளோ சீக்கிரம் திரும்பி வந்துடுவாரு..என்று கூறிவிட்டு ஸ்ருதியின் நெற்றியில் முத்தமிட்டான்..
பின் அனைவரும் கவலை தரும் தலைப்புகளை தவிர்த்து விட்டு கலகலப்பாக பேச ஆரம்பித்தனர்..அனிஷும் ராஜனும் உலக நடப்பை பற்றி பேச.. ஸ்ருதியை தூக்கிக் கொண்டே சமையலை அனியின் அம்மா பார்க்க..அனிதாவை அழைத்துக் கொண்டு ரூமிற்குள் நுழைந்த கீர்த்தி..கதவை தாழிட்டு விட்டு.." அக்கா..ப்ளீஸ் அன்னைக்கு என்ன நடந்ததுன்னு சொல்லு..அம்மாவும் அப்பாவும் உன்க்கிட்ட எதுவும் கேட்க கூடாதுனுதான் சொன்னாங்க..பட்..யூ ஹாவ் டூ சே மி கா..!!" என்று வற்புறுத்தினாள்..அனிதா அனிஷிற்கு ஆக்ஸிடென்ட் ஆன அன்று நடந்தவற்றை கூற ஆரம்பித்தாள்..அவள் கூறி முடிந்ததை கேட்ட போது கீர்த்தியின் கண்களில் கண்ணீர் வழிந்தது..தன் தமக்கையை கட்டிக் கொண்டவள்.." அக்கா மாமாக்காக நீ இவ்ளோ பெரிய விஷயம் பண்ணிருக்கியா??..அந்த நேரத்துல உனக்கு எப்படி இருந்துருக்கும்??" என்று அவளை கட்டி கொண்டு அழுது தீர்த்தாள்.." அக்கா மாமா க்கு இது தெரியுமா?? " என்று கேட்டவளின் வாயை அடைத்தவள் " ப்ளீஸ் அவருக்கு மட்டும் எக்காரணத்தைக் கொண்டும் தெரிய கூடாது..என் மேல் சத்தியம்.." என்று கூறி சத்தியம் வாங்கி கொண்டு ரூமை விட்டு வெளியேறினாள்..அவள் போகும் திசையை நோக்கி பெருமூச்சு விட்டவள்
... பின் யோசித்துப் பார்த்தவள் " நான்தான சொல்லக்கூடாது!!" என்று நினைத்து கொண்டே தன் மொபைலை எடுத்து அனிஷின் தம்பி ஆதர்ஷ் க்கு டையல் செய்தவள்.. மறுமுனையில் எடுத்த வுடன் " நம்மளுக்கு ஒரு முக்கியமான மிஷன் இருக்கு!!!" என்றாள்...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro