தாரம்-21
மறுநாள் காலை அவள் ஹாஸ்பிட்டல் சென்ற போது அவளுக்கு முன்னமே அவன் வந்து விட்டான் ..வந்தவன் சும்மா இல்லை...அங்கே இருந்த நர்சுகள் முன்.." வாங்க மேடம்..நைட் நல்ல தூக்கமா??..இது என்ன உங்க சொந்த ஹாஸ்பிடலா..உங்க இஷ்டத்துக்கு வரிங்க...இன்னைக்கு எனக்கு ஒரு க்ளாஸ் இருக்கு..சோ நீங்க தான் போய் பவர் பாயிண்ட் பிரசன்டேஷன் ரெடி பண்ணனும்..!!" என்று கறாராக கூறினான்..எதுவும் சொல்ல இயலாதவாளக அனி " ஓகே சார்!!!" என்று அமைதியாக கூறிவிட்டு அங்கிருந்து செல்ல எத்தனித்தாள்.. அப்போது அவளை நிறுத்தியவன் " இன்னும் க்ளாஸ்க்கு 1 ஹார் தான் இருக்கு..!!" என்று கண்களில் கேலியுடன் கூறினான்..அவனை வெறித்து நோக்கியவள்.. வேகமாக சென்றுவிட்டாள்..தன் இடத்துக்கு வந்தவள் தாமதிக்காமல் உடனே தன் வேலையை ஆரம்பித்தாள்..அவள் செய்து கொண்டு இருந்தபோது அங்கே ஒரு ஆறு அடி உயரத்தில் ஒரு ஆண் வந்து நின்றான்..முறையான உடற்பயிற்சி செய்து கச்சிதமான உடற்கட்டுடன் தாடி வைத்து ஆணழகனாக இருந்தான்..அவன் தான் ராகுல்..
ராகுல் உள்ளே வந்தததை கவனித்தவள்.." ஹே !!! ராகுல்..எனக்கு ஒரு அர்ஜன்ட் ஹெல்ப் பண்ணுங்க ப்ளீஸ்.." என்று கோரினாள்..அவளின் ப்ளீஸ்ஸை தாங்க முடியாதவனாக.." அட!!! ஹெல்ப் வேணும்னா மட்டும் மேடம் வாங்க போங்கனு சொல்லுவீங்க...மத்த நேரத்துல டேய் வாடா போடானு சொல்றது.." என்று கூறிக்கொண்டே அவள் பக்கத்தில் அமர்ந்து உதவி செய்ய ஆரம்பித்தான்..இருவர் சேர்ந்து செய்ததால் வேலை சீக்கிரமே முடிந்து விட்டது..வேலை முடிந்தவுடன்..ராகுலை தட்டிக் கொடுத்தவள்.." தேங்க்ஸ் ராகுல்..!!" என்றாள்..' ஆமா.. தேங்க்ஸ்லா சொல்லு லவ்வ மட்டும் கண்டுக்காம இரு' என்று மனதில் நினைத்தவன்.." அனிதா உங்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லனும்..!!" என்று ஆரம்பித்தவனை பார்த்து " ம்ம்..சொல்லுடா!!" என்று ஊக்கிவித்தாள்..இன்று எப்படியாவது தன் காதலை கூறிவிட வேண்டும் என்று நினைத்தவன்.." அது வந்து..." என ஆரம்பித்து பொழுது சட்டென உள்ளே நுழைந்த அனிஷ்..." அனிதா!! க்ளாஸ்க்கு டைம் ஆயிடுச்சு சீக்கிரம்மா வா !!" என்று முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க கூறினான்...ராகுலை பார்த்து " ஓகே ராகுல் எனக்கு க்ளாஸ் இருக்கு..அப்றமா பேசலாம்.." என்று கூறிக்கொண்டே அனிஷ் பின்னே சென்றாள்..அவள் போகும் திசையை நோக்கி பெருமூச்சு விட்டபடி அங்கிருந்து சென்றான்..
சிறிது நேரத்திற்கு முன்பு...
அனிதா தனியாக கஷ்டப் படுவாள் உதவி செய்யலாம் என்று உள்ளே நுழைய சென்ற அனிஷிற்கு அங்கே ராகுல் இருந்ததை பார்த்தவுடன் கதவை திறக்காமல் அங்கேயே நின்று விட்டான்..சிறிது நேரம் கழித்து ராகுல் ஒரு முக்கியமான விஷயம் கூறப் போவதாக ஆரம்பித்ததும் அவனுக்கு புரிந்தது விட்டது "ஒரு ஆணின் மனம் இன்னொரு ஆணிற்கு தான் தெரியும்"😂 அதனால் தான் க்ளாஸ்க்கு இன்னும் நேரம் இருந்தும் அனிதாவை அழைத்து கொண்டு சென்று விட்டான்..
அவர்கள் க்ளாஸ்ஸிற்குள் நுழைந்த போது ஏற்கனவே அங்கே அனைவரும் தயாராக இருந்தனர்..அதுவும் முக்கியமாக பெண்கள்.. புதிதாக ஒரு டாக்டர் அதுவும் ஹூரோ போல் என்றால் சும்மாவா?? அனிஷை பார்த்து அனைவருக்கும் பயங்கர குஷி ஏனென்றால் இவ்வளவு இளமையாக ஒரு டாக்டரை அவர்கள் பார்த்தது இல்லை..உள்ளே நுழைந்தவுடன் அனைவரையும் அமர செய்தவன்..அனிதா செய்திருந்த பிரசன்டேஷனை நோட்டமிட்டான்.. மனதிற்குள் ' பரவால்ல
நல்லலாதான் பண்ணிருக்கா..' என்று நினைத்தவன் அவளை பார்த்தான்..அவளும் தான் ஏதாவது தவறு செய்து விட்டோமோ திட்ட போகிறானோ?? என்று கண்களில் பயத்துடன் பார்த்தாள்..அவளின் பயத்தை பார்த்ததும் அவனுக்கு கோபம் வந்து விட்டது..தான் அவ்வளவு மோசமா?? என்று கவலை கொண்டான்..அந்த கவலை கோபமாக மாறியது..அவளை பார்த்து எதுவும் கூறாமல்..திரும்பி கொண்டான்...அவனின் செயலால் அனிதா வருத்தமானாள்...பின் அனிஷ் மைக்கை எடுத்து தன் லெக்சரை ஆரம்பித்தான்..அனிதாவிற்கு ஒரே ஆச்சர்யம் அவனால் எப்படி கடைசி நிமிடத்தில் பிரஷண்டேஷனை பார்த்து க்ளாஸ் எடுக்க முடிகிறது என்று.. லெக்சரை முடித்து விட்டு கிளம்பும் போது ஸ்டூடன்டஸ் தங்கள் கேள்விகளை கேட்டனர்...அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் பதிலளித்து விட்டு இருவரும் வெளியில் வந்தனர்...அவர்கள் இருவரும் சேர்ந்து நடந்து சென்று கொண்டிருந்த போது அங்கே இருந்த இரு பெண்கள்.." இவங்க ஜோடி நல்லா இருக்குல?? " என்று தங்கள் அபிப்பிராயத்தை பகிர்ந்து கொண்டனர்...அதை கேட்டும் கேட்காதது போல் இருந்தனர்..அனிஷூம் அனிதாவும்..அனிஷின் ரூமிற்குள் நுழைந்தவுடன்..அனிதாவை நோக்கி " உங்கிட்ட ஒரு கையெழுத்து ...." என்று கூறிக்கொண்டிருந்த போது அவள் மேல் பல்லி விழுக இருந்ததை பார்த்தவன் அவளின் இடையை பிடித்து தன் பக்கம் இழுத்தான்..அவன் பிடித்து இழுத்த அதிர்ச்சியில் தடுமாறியவள்..அவனின் கைகளை இறுக பற்றிக் கொண்டாள்..இவை அனைத்தும் ஒரு நிமிடத்தில் நடந்து விட்டது..
இரண்டு வருடங்கள் முழுதாக இரண்டு வருடங்கள் தன் ஆசை மனைவியை பாராமல் இருந்தவன்.. இவ்வளவு நெருக்கமாக அவளை பார்த்ததும் தடுமாற்றம் அடைந்தான்..அவள் இன்னும் மாறவே இல்லை..அதே அழகிய செவ்விதழ்கள்..மீன் போன்ற கண்கள்..மாம்பழம் போன்ற கன்னங்கள்..அதில் ரோஜாக்கள் பூத்திருந்தன...சங்கு கழுத்து என்று கழுத்தை நோட்டமிட்டவன் அங்கே தான் ஆறு வருடங்கள் முன் கடவுள் சன்னதியில் அக்னி சாட்சியாக கட்டிய மாங்கல்யத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தான்..அனிதா எப்பொழுதும் தாலியை தெரியாத படி பின் பண்ணி வைத்திருப்பாள்..இன்று அனிஷ் பிடித்து இழுத்த வேகத்தில் அது கழன்று விட்டது..அனிஷ் விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து வாங்கதான் அவளை அழைத்தான் ஆனால் அவள் கழுத்தில் தாலியை பார்த்ததும் அவனுக்கு நா எழ வில்லை... ❤️
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro