Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

தாரம் -16❤❤

கிச்சனுக்குள் நுழைந்தவன் அங்கே நடந்த கூத்தை பார்த்து மயக்கம் வராத குறைதான்...செய்வது எல்லாம் செய்துவிட்டு வெகுளியாக முழித்துக் கொண்டு இருந்தாள்...கேஸை அணைத்தவன் அவள் கையில் இருந்த பாத்திரத்தை பிடுங்கி ஸிங்கில் போட்டுவிட்டு அனியிடம் திரும்பியவன் " உனக்கு சமைக்கத் தெரியுமா தெரியாதா???"  அசடு வழிந்தவள் இல்லை என்று தலையாட்டினாள்...தன்னையே நொந்து கொண்டவன் " கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி என்ன நடந்தது???" " அதுவா...ஆக்சுவலி எனக்கு கேஸ் எதுல பத்த வைக்கனும்னு தெரியலையா அதுனால பூஜ ரூம்ல போய் மேட்ச் பாக்ஸ் எடுத்து பத்த வச்சேனா....!!!!"" இங்கு நடந்ததை ஊகித்தவன் எதுவும் கூறாமல் சமைக்க ஆயுத்தமானான்...


உப்மா செய்யலாம் என்று நினைத்தவன்..அவளிடம் ரவையை எடுத்து வர கூறினான்...ஆனால் அவள் எடுத்து வந்த அரிசி மாவை பார்த்து நொந்து போய் விட்டது அவனுக்கு...பின் அவள் இங்கே இருந்து எதுவும் செய்ய போவதில்லை என்பதை புரிந்து கொண்டு அவளை குளிக்க அனுப்பினான்..

ரெடியாகி கீழே வந்தவளுக்கு பசி வயிற்றைக் கிள்ளவும் வேகமாக கிச்சனுக்குள் நுழைந்தாள்... அனிஷ் அங்கே தான் சமைத்து வைத்ததை  எடுத்து வைத்துக் கொண்டிருந்தான் ... " அனிஷ் எனக்கு சீக்கிரமா எடுத்து வைங்க எனக்கு ரொம்ப ரொம்ப பயங்கரமா பசிக்குது ப்ளீஸ் ....!!" அவளை அமைதிப்படுத்தி டைனிங் டேபிளில் உட்கார வைத்து உப்மாவை எடுத்துக் கொடுத்தான் ...அதை ரசித்து உண்டவள்..."அனிஷ் உங்களுக்கு எப்டி இதெல்லாம் தெரியும் ???" " அமெரிக்கால நமக்கான வேலைய நாம்தான் செய்யனும் அப்ப பழகுனதுதான்...!!"

இருவரும் சாப்பிட்டு முடிக்க அனியின் குடும்பம் உள்ளே நுழைந்தது...அனிஷ் அவர்கள் வந்ததும் அனியி்ன் தாயிடம் " உங்க பொண்ணுக்கு என்ன பிடிக்கும் பிடிக்காதுன்னு சொன்ன நீங்க அவளுக்கு சமைக்க தெரியாதுன்னு சொல்ல மறந்துட்டீங்களே அத்தை...!!!" என்று பொய் அழுகையுடன் கூறியவனை முறைத்து வைத்தாள்...அனியின் அம்மா அசடு வழிந்தவர்.." சாரிப்பா அனிஷ்..சொல்ல மறந்துட்டே.." " அம்மா..போதும் போதும்..வாங்க வந்து எனக்கு சொல்லி குடுங்க இல்லன்னா இவரு என்னைய கலாய்ச்சே சாவடிப்பாரு.." என்று தன் அம்மாவை பிடித்து இழுத்து சென்றவள்..அனிஷை பார்த்து அழகு காட்டினாள்..அனிஷ் தன் மாமனாரின் பேச்சில் கவனத்தை செலுத்தினான்..பின் அனிஷின் வீட்டில் இருந்து அனைவரும் கூடினர்... கிச்சனுக்குள் நுழைந்த  வைதேகி அதாங்க அனிஷின் சித்தி.." ஐயோ என்ன சம்மந்தி எங்க வீட்டு மகாலட்சுமிய இப்டி வேல வாங்குறீங்க..நீ போமா அனி ..நாங்க பாத்துக்கிறோம்.." என்று அனுப்ப முயன்றவரை தடுத்தவள்‌‌..." ஐயோ அத்த..உங்க பையன்‌ எனக்கு சமைக்கத் தெரியாதுன்னு ஓவரா சீனப்போடுறாரு..அவர் முன்னாடி நா சமைச்சு காமிக்கல என்னோட பேரு அனிதா இல்ல.." என்று சவால் விடும் பாவனையில் கூறியவளை பார்த்து இரண்டு தாய்மார்களும் சிரித்துக் கொண்டனர்..பின் அனி தன் அன்னையிடம் இருந்தும் மாமியாரிடம் இருந்தும் தன் முதல் சமையல் வகுப்பை இனிதே ஆரம்பித்தாள்...

அங்கே ஆண்கள் அனைவரும் எப்போதும் போல் தொழில்..நாட்டுநடப்பு..பற்றி அலசி ஆராய்ந்து கொண்டு இருந்தனர்..ஆனால் ஒரு ஜுவன் மட்டும் தன் கண்கள் கொண்டு வீட்டை அலசி கொண்டு இருந்தான்..அவன்தான் ஆதர்ஷ்..அங்கே விளையாடிக் கொண்டிருந்த குட்டி வாண்டினை பிடித்தவன்.." டேய் எங்கடா உங்க மோனி அக்கா???" "அவங்க காலையிலயே ஸ்கூலுக்கு போய்டாங்களே‌." ' ஓ ...மேடம் காலேஜ்க்கு கிளம்பியாச்சா...' என்று யோசித்துக்கொண்டே திரும்பியவன் அதிர்ச்சி ஆனான்.. ஏனென்றால் அங்கே மோனி தன் ஒற்றை புருவத்தை உயர்த்தி அவனை முறைத்துக் கொண்டு இருந்தாள்...அசடு வழிந்தவன்.." சும்மா தெரிஞ்சுக்கலாமேன்னு..." என்று கூறிக்கொண்டே நழுவினான்....

பெண்கள் மூவரும் சமைத்து முடித்தவர்கள்..அனைவரையும் சாப்பிட அழைத்தனர்..ஆண்கள் அனைவரும் சாப்பிட உட்கார்ந்தனர்..அனி அனிஷிடம் சென்றவள்..அவள் செய்த அல்வாவை எடுத்து வைத்தாள்..' பாருடா..நம்மாளு இவ்ளோ சமைக்க கத்துக்கிட்டாளா...' என்று மனதுள் மெச்சிக் கொண்டவன்..அதை சுவைக்க தொடங்கினான்..." அண்ணா..அண்ணி செஞ்சத நீ மட்டும் சாப்டக்கூடாது...குடு இங்க"  என்று பறித்துக் கொண்டான்..இப்ப உங்க எல்லாருக்கும் ஒரு கேள்வி ' அது நல்லா இருந்ததா இல்லையா???' ..டாடியோட லிட்டில் ப்ரின்ஸஸ் எப்டி சமைச்சுருப்பா!!😂😂

ஆதர்ஷின் நிலையைப் பார்த்து பரிதாபமாக இருந்தது..."‌டேய் எல்லாத்தையும் நீயே முடிச்சுடாதடா...எனக்கு குடு...!!" என்று அனி அவன் கையில் இருந்து பறிப்பதற்கு முன் அது அனிஷ் கையில் இருந்தது...அனி எவ்வளவு கேட்டும் கொடுக்கவில்லை... அனைவரும் சாப்பிட்டு முடித்ததும் அனி பாத்திரங்களை எடுத்து வைத்து கொண்டு இருந்தவள் அனிஷ் அங்கே அவள் செய்த அல்வாவை குப்பையில் கொட்டிக் கொண்டு இருந்தான்...அதை பார்த்த அனிக்கு ஏனோ மனம் கஷ்டமாக இருந்தது...

பின் அனி தன் அன்னையிடம் சென்றவள்...அவரின் மடியில் படுத்து கொண்டாள்...அவருக்கும் தன் மகள் இன்னும் சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறாளே என்ற பயமும் வருத்ததும்...ஆனால் தன் மருமகன் எப்படியும் அனியை பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கையே அவருக்கு ஆறுதலாக இருந்தது...

அனிக்கு அப்பொழுது தான் தான் இவ்வளவு நாள் கேட்க வேண்டிய கேள்வி ஞாபகம் வந்தது..." அம்மி...அனிஷ் எப்டி அப்பாட்ட சம்மதம் வாங்குனாரு..??" " உனக்கு தெரியாதா ???...உனக்கு தான் உங்க அப்பாவ பத்தி தெரியுமே..அனிஷ் வந்து கேட்டப்போ சரி கோபம் ஆயிட்டாரு... ரொம்ப திட்டி வெளியப் போனு சொல்லிட்டாரு...அனிஷ் நினச்சிருந்தா..அவர் பின்னாடி ஆயிரம் பொண்ணுங்க வருவாங்க ஆனா உன்மேல இருக்க காதல்னால நம்ம வீட்டு வாசல் முன்னாடி நின்னுட்டே இருந்தாரு..எனக்கு ரொம்ப கஷ்டமாயிடுச்சு..ஆனா அனிஷ் கல் நெஞ்சையும் கரச்சுட்டாரு...ஆனா அப்போ வரைக்கும் அவரோட குடும்பத்த பத்தியோ தன்னோட அப்பாவ பத்தியோ அவர் சொல்லவே இல்லையே...அப்றமா அப்பாவா கேட்டதுக்கு அப்புறம்தான் சொன்னாரு..கொஞ்ச நேரத்துல அவங்க அப்பாவும் வந்துட்டாரு..அவங்களோட எளிமையும்..பணம் இருக்குன்னு திமிரும் இல்லாம இருந்ததே எங்களுக்கு நிம்மதி இருந்தது..எப்படியோ உன்ன ஒரு நல்ல குடும்பத்துக்கு அனுப்பியிருக்கோம்...!!" என்று பெருமூச்சு விட்டார்...இவை அனைத்தையும் கேட்ட அனிக்கு தன் கண்ணீரை அடக்க முடியாமல் தினறினாள்...அங்கிருந்து எழுந்தவள் வேகமாக தங்கள் ரூமிற்குள் நுழைந்துக் கொண்டாள்...ஜன்னல் அருகே சென்றவள் அனிஷ் குழந்தையுடன் குழந்தையாக விளையாடிக்கொண்டு இருந்த அனிஷை பார்த்தவளுக்கு அவனை கட்டி அணைக்க வேண்டும் போல் இருந்தது..❤❤❤

Sry guys nethu podanu sonnadhu marandhuduchu....😉😉 Adha ippo pottutte...2 days leavedha Soo ennala mudinja varaikkum upds poda try panre... byeee 💞💞 💞
.
.
.
.
.
.
Silent readers knjm cmts pannunga pa.. atleast vote aachum pannunga plzz 😭...

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro