Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

தாரம்-11💞

அனிதாவும் அனிஷூம் நெருங்கிய நண்பர்கள் ஆகினர் அவன் அவளின் படிப்பில் நன்றாக உதவினான்...தன் தந்தையின் ஆசைக்காக டாக்டர் படிக்க ஒத்துக்கொண்ட அவளுக்கு பெரிதாக அதில் விருப்பம் இல்லை... அதனால் அவள் படிப்பில் ஆர்வம் காட்டவில்லை ஆனால் அனிஷ் அவளை படிக்க வைத்தான்... அவளுக்கு ப்ராக்டிக்கலாக தன் பேஷன்டன்ட்களை காண்பித்து அவளுக்கு படிக்க உதவினான்...அவனும் தன் மேல் படிப்பிற்காக தன்னை தயார் செய்து கொண்டிருந்தான் அனிதா இப்பொழுது இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்த போது
அனிஷ் அவனின் மேல் படிப்பிற்காக யுஎஸ் செல்ல வேண்டியிருந்தது...தன்னவளிடம் இதை பற்றி கூறுவதற்கு முன் அவளின் கண்களில் தெரியும் குழப்பங்களை தீர்க்க எண்ணினான்

வழக்கம் போல் காலேஜ் முடிந்ததும் அனிஷிடம் அன்று நடந்தவற்றை ஒன்று விடாமல் ஒப்பித்துக் கொண்டிருந்தாள்... அப்பொழுது அனிஷ் அவளின் கைகளை பிடித்து கொண்டு அவளின் கண்களை பார்த்து" அனி நீ என்னோட காதல வழுக்கட்டாயாமான சூழ்நிலைல ஏத்துக்கலல உன் மனசுக்கு புடிச்சிருக்குல????" என்று கேள்வியாக அவளை பார்த்தான்..

" இல்லவே இல்லை!!!!" என்று சிரித்துக்கொண்டே தலையை இடது புறமாஙக ஆட்டினாள் " அப்றம் ஏன் உன்னோட கண்கள்ள எப்போதுமே ஒரு கலக்கம் இருக்கது..நா கவனிச்சுட்டுதா அனி இருக்கே ப்ளீஸ்டா எனக்கிட்ட உனக்கு என்ன பயம் சொல்லு...உனக்கு என்னய பிடிக்கலையா????"

" சே சே..அப்டிலா இல்ல அனிஷ் எனக்கு நீங்கனா ரொம்ப இஷ்டம்!!!! ஐ ரியலி லைக் யூ அ லாட் !!!!" என்று புன்சிரிப்புடன் கூறினாள். " தென் எதுக்கு அந்த மூணே மூணு மேஜிக்கல் வேர்ட்ஸ் உன்னோட வாய்ல இருந்து வர மாட்டேங்குது????" என்று அவன் கேட்டதும் சிறிது நேரம் அமைதி காத்தவள்..

" எனக்கு பயம் அனிஷ் .. எனக்கு முன்னாடி இருந்தே காதல் மேல நம்பிக்கை இல்ல.. என்னைய பொருத்த வரைக்கும் கல்யாணத்துக்கு அப்பறம் வர காதல்தா உண்மையோனு தோணும்.. அது மட்டுமில்லாம என்னோட அப்பா..அவருக்கு நானா உயிர் அவர்கிட்ட நா எப்டி இத சொல்றதுன்னு தெரியல.. அவருக்கு காதலாம் புடிக்காது அனிஷ் அவருக்கு நா எப்டி சொல்லி புரிய வைப்பே ... அப்றம் இன்னொன்னு இருக்கு அனிஷ் ஆக்ச்சுவலா நா கல்யாணம் பண்ற வரைக்கும் மொரட்டு சிங்கிள்ளா இருக்கும்னு ஆசைப்பட்டே பட்...முடியாதே!!!😉😉😉😉" என்று அவள் கூறி முடித்துவிட்டு திரும்பிய போது அவன் பலத்த யோசனையில் இருந்தான்..' அட நம்மட்ட கேள்வி கேட்டுட்டு யோசிச்சுட்டு இருக்காரா இடியட் ???' என்று மனதுக்குள் பொறுமியவள் அவனின் முதுகில் ஒரு போடு போட்டாள்...பலத்த யோசனையில் இருந்து கலைந்தவன் அவளிடம் திரும்பி " அனி நா சீக்கிரமா கிளம்பனும் நீ சீக்கிரம் வா உன்னய போய் ஹாஸ்டல்ல விட்டுட்டு வரேன்..." என்று கடகடவென கூறியவன் அவளின் பதிலுக்கு காத்திராமல் அவளின் பையை எடுத்துக்கொண்டு அவளின் கரம் பற்றி இழுத்து சென்றான்...அவளை ஹாஸ்டலில் விட்டவன் அவளிடம் ஒரு தலை அசைப்புடன் வேகமாக சென்று விட்டான்...அவள் கடுங் கோபத்தில் இருந்தது பாவம் அவன் அறியவில்லை 😔😔😔😔!!!

அவன் வந்தவுடன் சண்டை போடுவதற்கு ஆயிரம் காரணங்களுடன் காத்திருந்தவள் இரண்டு நாட்கள் அவன் வரவில்லை என்றவுடன் அவன் வந்தால் போதும் என்று இருந்தாள்.. இரண்டு நாட்கள் அவனை காணாமல் தவித்து போனாள் பாவம்..😔😔😔

அவள் அடுத்த நாள் காலையில் எழுந்தபோது அவளின் அம்மா மூன்று முறை அவளை அழைத்திருந்து இருக்கிறார்.. நம்மாளு தான் கும்பகரணியாச்சே 😉😉...

வேகவேகமாக எழுந்தவள் தன் தாயிற்கு அழைத்தாள் " அம்மி என்ன கூப்டு இருந்தீங்க ???" " அனிம்மா சீக்கிரமா கிளம்புடா இன்னும் ஹாஃப் அன்ட் ஆர்ல கார் வந்துடும் மத்தத வீட்டுக்கு வந்து பேசிக்கலாம் செல்லம்❤❤❤" என்று அவசரமாக கூறியவர் அவளின் பதிலுக்கு காத்திராமல் வைத்து விட்டார்...

" அட என்னடா இது யாருமே நம்ம பேச்ச மதிக்க மாட்றாங்க!! சே அனி உன் நிலமை இவ்ளோ கவலைக்கிடமாக ஆயிடுச்சு!!" என்று தனக்குள் கூறிக் கொண்டவள் தன் அன்னையின் கட்டளையை மீற தைரியம்
இல்லாமல் கிளம்பினாள்

வீட்டிற்குள் நுழைந்ததும் அங்கே அனைவரும் ஒரு பரபரப்புடன் இருந்தனர்... அவள் வந்தவுடன் தன் அம்மாவிடம் சென்றவள் " அம்மி என்னாச்சு நம்ம வீட்ல ஏன் இவ்ளோ கெஸ்ட்ஸ் ???" " அட அனிமா வந்துட்டியா வாடா செல்லம் என்று அவளை அணைத்து கொண்டவர் " மோனீ!!!" என்று தன் இளைய மகளை அழைத்தவர் " அக்காவ கூட்டிட்டு போய் ரெஸ்ட் எடுக்க சொல்லுடா!!" என்றே அவளிடம் கட்டளையிட்டு விட்டு வந்த விருந்தினர்களை கவனிக்க சென்றார்...

' இங்கே என்ன நடக்கிறது ???' என்று விழித்தவள் தன் தங்கையை பார்க்க அவளோ அவளை பார்த்து சிரித்துக் கொண்டு இருந்தாள்.." ஒன்னும் இல்ல அனி இன்னைக்கு உனக்கு‌ நிச்சயம் அவ்ளோதா!!!" என்று தன் தங்கை கூறியவுடன் அதிர்ச்சியில் உறைந்தே போனாள் 😰😰😰😰

வேகமாக தன் தாயிடம் சென்றவள் அம்மா இங்கே என்ன நடக்குது எனக்கு இப்போ எதுக்கு கல்யாணம் ஐ அம் ஜஸ்ட் 20 உங்களுக்கு இது விளையாட்டா தெரியுதா ப்ளீஸ்மா எனக்கு இப்போ கல்யாணம் வேண்டாம் ப்ளீஸ் ..." என்று கெஞ்சினாள் ஆனால் அவள் அன்னையோ " அனிமா நீ போய் நல்லா ரெஸ்ட் எடுத்துக்கோடா சாய்ந்தரம் உனக்கு நிச்சயம் இருக்குடா நீ பயப்படுற மாதிரி ஒன்னும் இல்லை உனக்கு நல்லது தான் நாங்க பண்ணுவோம் புரிஞ்சுக்கோ போடா கண்ணா போய் தூங்கு.." இன்று அவள் கூற வருவதை கூட கேட்காமல் அவளை அனுப்பி வைத்தார்.

தன் ரூமிற்குள் வேகமாக நுழைந்தவள் தன் மொபைலை எடுத்து அனிஷிற்கு கால் செய்தாள் ஆனால் அவனோ மொபைலை சுவிட்ச் ஆஃப் செய்து வைத்திருந்தான் அனுக்கு பாவம் என்ன செய்வது என்றே தெரியவில்லை அவளுக்கு அவளை சுற்றி என்ன நடக்கிறது என்பதே புரியவில்லை!!!!....

தன் குடும்பத்தாரிடமும் கூறமுடியாமல் தனக்கு நடக்கவிருக்கும் விசயத்தையும் தடுக்க முடியாமல் தவித்தாள் அழுதுகொண்டே இருந்தவள் சிறிது நேரத்தில் உறங்கியும் போனாள் அவள் எவ்வளவு நேரம் உறங்கினால் என்பது அவளுக்கு தெரியாது சாயந்தரம் போல் மோனிகா வந்து அவளை "அடியே அனி எந்திரி டி எந்திரிச்சு ரெடியாகு இப்போ உனக்கு நிச்சயதார்த்தம் எந்திரிச்சு தொலடி!!! லூசு" சென்ற தங்கம் தங்கையின் வசை மொழியில் பதற்றத்துடன் எழுந்தாள் பின் அவளை வலுக்கட்டாயமாக எழுப்பி ரெடி ஆக்கினாள் அவளின் தங்கை. எதையும் தடுக்க முடியாத நிலையில் இருந்தாள் அனி அழுது அழுது அவள் கண்கள் இரண்டும் வீங்கியிருந்தது அதை மறப்பதற்கு மிகவும் சிரமப்பட்டனர் இருவரும்...ஆனால் அவள் ஒன்றை கவனிக்கவில்லை அவள் அழுதும் அவளின் தங்கை எதுவும் அவளிடம் கேட்க வில்லை❣❣❣❣

Sry for the late upd guys...ennoda frst stryah complete pannite..check pannadhavanga check pannikonga pa...aprm
.

.
.
.
.
.
Silent readers plz plz plz plz plz cmt pannunga pa atleast vote aachum pannunga..ennaku rmba kastama irukku😔😔😔

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro