தாரமே -1❤
சென்னை பாரீஸ் நகரின் குடும்ப கோர்ட்..
" மிஸஸ் அனிதா ராகவ் உங்களுக்கு இந்த விவாகரத்துக்கு சம்மதமா??"
அப்படி அந்த குடும்ப வக்கீல் கேட்ட கேள்விக்கு கண்கள் கலங்கிட கண்ணீருடன் " சம்மதம் " என்றாள் அவள் .
அப்பொழுது அந்த வழக்கறிஞர் அந்த காதல் ஜோடிகளை பிரிக்க மனமில்லாமல் மீண்டும் ஒரு முறை கேட்டார் "மிஸஸ் அனிதா நல்லா யோசிச்சுதா இந்த முடிவு எடுத்திருக்கிங்களா ??" என்று கேட்டார்
"ஆமா சார் ..என்னால இதுக்கு மேல இவங்க கூட வாழ முடியாது !!" என்று வாய் கூசாமல் பொய் உறைத்தாள்.
இந்த பதிலைக் கேட்ட ஒருவனின் கண்கள் கலங்கி உணர்ச்சி வசப்பட்டு " நோ!!!".. என்று கத்தினான்.
அந்த குரல் கேட்ட திசையில் அனைவரும் திரும்பி நோக்கினர்.
" நோ அனி என்னால உன்னையும் ஸ்ருதியையும் பிரிஞ்சு வாழ முடியாது ...ப்ளீஸ்டி நம்ம வீட்டுக்கு போய் பேசிக்கலாம்.." என்று கெஞ்சும் குரலில் கேட்டான் .
" மிஸ்டர் அனிஷ் ராகவ் கோர்ட்ல இப்படி கத்த கூடாது!" என்று நீதிபதி எச்சரித்தார்.
" ஐ யம் சாரி சார்.. கொஞ்சம் எமோஷனல் ஆகிட்டேன்!!" என்று கூறிவிட்டு தன் கண்களில் வழிந்த நீரைத் துடைத்துக் கொண்டான் அந்த அனிஷ் ராகவ்...
" சாரி மிஸஸ் அனிதா ராகவ் உங்களுக்கு விவாகரத்து கொடுக்க முடியாது..உங்க ஹஸ்பன்ட் இதுக்கு சம்மதம் சொல்லவில்லை விவாகரத்து என்பது இரண்டு கட்சியினரும் ஒத்துக்கொண்டாள் தான் கொடுக்க இயலும்.!" என்றார் நீதிபதி.
இதை ஏற்கனவே எதிர்பார்த்தவள் எதுவும் செய்ய முடியாமல் விழித்தாள்..அவளிடம் இருந்த கடைசி வாய்ப்பும் நழுவி விட்டது.. இப்பொழுது அவள் எந்த காரணத்தை வைத்து அவனை பிரிவது? அவள் அவனை விட்டு பிரியவில்லை என்றால் அனிஷின் உயிருக்கு ஆபத்து ஆயிற்றே.
அங்கே இருந்து தன்னோட இரண்டு வயது குழந்தையத் தூக்கிக் கொண்டு நகர்ந்தாள் அனி ..
"அம்மி..நாம எங்க போடோம்" என்று தன் மழலை மொழியில் கேட்ட தன் மகளிடம் " தாத்தா வீட்டுக்குடா செல்லம் !" என்றாள் அனி. " அப்போ அப்பா ??" என்று தன் மகள் கேட்ட கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் விழித்தாள். அவள் ஏதோ கூற வருவதற்குள் பின்னிருந்து ஒரு குரல்
" அப்பா உங்கள விட்டு எங்கையும் போக மாட்டேன்டா செல்லம் !" என்றது..
தன் அப்பாவின் குரல் கேட்ட குஷியில் தன் அம்மாவின் கைகளில் இருந்து நழுவி தன் அப்பாவின் கால்களை கட்டிக்கொண்டாள் அந்த இரண்டு வயது சுட்டி குழந்தை..
தன் கால்களை கட்டிக்கொண்டு இருந்த தன் மகளை தூக்கி அணைத்து கொண்டான் அனிஷ்.
நம் கதையின் நாயகன் நாயகி பற்றி பார்க்கலாம்.
நம்ம ஹீரோ அனிஷ் ராகவ் ...இல்லை குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் டாக்டர் அனிஷ் ராகவ் இந்தியாவில் உள்ள டாப்மோஸ்ட் சர்ஜன்ஸ்களில் ஒர
ஒருவன் அவன் மட்டும் அல்ல அவனுடய முழு குடும்பமுமே...ராகவ்ஸ்' பல்நோக்கு மருத்துவமனையின் முதலாளி ...சின்ன வயதிலேயே தன் தாயை இழந்து ...அன்புக்காக ஏங்கியவன்.. ஆள் பார்க்க சரி ஹான்ட்ஸம்மா இருப்பான்...ஆறடி உயரம் .... கவர்ந்து இழுக்கும் இரு கண்கள்...கூர்மையான நாசி எப்பொழுதும் புன்னகை தவழும் உதடுகள்...மொத்தத்தில் பொண்ணுங்களின் மிகப்பெரிய க்ஸ்...ஆனால் என்ன கொஞ்சம் திமிரும் கோபமும் அதிகம் ...
இப்பொழுது நம் கதையின் நாயகி அனிதா...அனிஷை திருமணம் செய்வதற்கு முன் அனிதா ராஜ் இப்பொழுது அனிதா ராகவ்... அவளும் மருத்துவர் தான் ஆனால் யுஜி முடித்துவிட்டு ராகவ் மருத்துவமனையில் வேலை செய்கிறாள் .. அவளும் அழகில் ஒன்றும் குறைந்தவள் இல்லை...நல்ல அழகு .. இயற்கையிலேயே மற்றவரைகளை கவர்ந்து இழுக்கும் சிரிப்பு ... மாநிறமாக இருந்தாலும் அழகிற்கு இலக்கணமாக இருந்தாள்..யாராக இருந்தாலும் ஒரு தடவையாவது அவளை திரும்பி பார்த்து விடுவார்கள்
அவ்வளவு தான் இவர்களை பற்றியது நம் கதைக்குள் செல்வோமா ???
" அனி புரிஞ்சுக்கோடி..ப்ளீஸ் வா நம்ம வீட்டிற்கு போய் பேசிக்கலாம்!" என்று கூறிக்கொண்டே தன்னவளுடைய கைகளை பற்றினான் அவள் அவனின் கையினை உதறிவிட்டு " ப்ளீஸ் அனிஷ் என்னால உங்கள மறுபடியும் நம்ப முடியாது.." என்று கோபமாக கூறிவிட்டு நடக்க ஆரம்பித்தாள்...
என்னாதான் கோபம் இருந்தாலும் ஒரு பெண்ணிற்கு தன்னவன் தன் பின்னால் வர வேண்டும் எதிர்ப்பாளர்கள் ...
நம் அனி ஒன்றும் விதி விலக்கு இல்லையே 😅😅😅 அவளும் திரும்பி பார்த்தாள் ...
ஆனால் அவனோ தன் மகளிடம் ஏதோ கூறிக்கொண்டு இருந்ததைப் பார்த்து அவளுக்கு இன்னும் கோபம் ஏறியது..தன்னவள் தன்னை முறைப்பதைப் பார்த்து ஒரு நமட்டு சிரிப்புடன் தன் மகளிடம் " பாப்பு நீங்க போய் நம்ம கார்ல் உக்காருங்க நா போய் அம்மாவ கூட்டிட்டு வர்றேன்... ம்ம்.." என்று கூறி ஒரு முத்தத்தை தன் மகளிடம் கொடுத்துவிட்டு தன் அனியை நோக்கி நடந்தான்.
" ஐயோ வரானே...அனி கோபமா இருடி!!" என்று தனக்குள் கூறிக்கொண்டே திரும்பிக் கொண்டாள்.." ஓய் இங்க பாருடி...ப்ளீஸ் வாடி வீட்டுக்கு போகலாம்" என்று கூறிய அவனை முறைத்தாள்..
" நோ அனிஷ் ஐ கான்ட் !" என்று கோபமாக கூறினான் .. அவளை கெஞ்சலாக நோக்கியவன் " இப்போ என்ன உனக்கு நான் சாரி கேக்கணும் சாரி சாரி சாரி சாரி சாரி போதுமா? வாடி நம்ம வீட்டுக்கு போய் பேசிக்கலாம் போய் பேசிக்கலாம் !!" என்று கெஞ்சினான்..
சற்றும் நகராத அவளை நோக்கியவன் 'உன்ன என்னோட ஸ்டைல்ல தான்டி டீல் பண்ணணும்...' என்று தனக்குள் கூறிக்கொண்டே அவளை அலேக்காக தூக்கி கொண்டான் அவளின் அனிஷ்..❤️❤️
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro