Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

கர்ப்பம்(Pregnant) - Part 2/2


ஐந்து வருடங்கள் எப்படி ஓடின என தெரியவில்லை.

"அருண்! எதாவது changes தெரியுதா அம்மா கிட்ட?"

"அதுலாம் ஒன்னும் இல்ல. சாப்டலாமா நு கேட்க சொன்னாங்க."

"ஆ.. சாப்ட சொல்லு."

"நினைச்ச மாதிரி டாக்டர் ஆகிட்ட. அம்மா சொன்னாங்க நீ நல்லா பார்த்துக்கிட்டியாம்.நைட் ஷிப்ட் ஆ?"

"ஆமாம். தாங்க்ஸ் அருண். கஷ்டமா இருந்தாலும் ஆசைப்பட்டு பண்ணுற வேலைங்கிறதால பொறுத்துக்க முடியுது. நீ என்ன பண்ற? லைப் எப்படி போகுது?"

"மார்கெட்டிங் ல இருக்கேன். அது போகுது. அக்கவுண்ட்ஸ்(accounts) படிச்சவன் எப்படி மார்கெட்டிங் நு தோனுதுல, இந்த மண்டைக்கு அது நல்லா வருது," சிரித்தான் அருண்.

"நீ திறமையானவன்னு எனக்கு தெரியும்," அவனும் கேட்க நினைத்தது ஆனால் அவளுக்கு பொறுமை கம்மி அதுவும் அவன் எவ்வாறு எடுத்துக்கொள்வான் என பெரிதாய் நினைக்காது சஞ்சனா கேட்டுவிட்டாள், " கல்யாணம் ஆச்சா அருண்?"

"இல்ல. வீட்ல பார்த்துட்டு இருக்காங்க. உனக்கு?"

"ஹ்ம்ம்ம்..ஆச்சு. பைனல் இயர் படிக்கும்போதே."

நாங்கள் பிரிந்த இரு வருடத்துக்குள் அவளுக்கு திருமணம் நடந்தது என கணக்கு போட்டேன்.

"ஹஸ்பண்ட் என்ன பண்றார்?"

"அவரு export-import ல இருக்கார். " அவள் தொடர்வதற்குள் அருகில் இருந்த நர்ஸ் குறுக்கிட அவளின் ஆபீஸில் இருக்கிறோம் என அருணின் மரமண்டையில் உதித்தது. அவளைத் தொந்தரவு செய்யாது அவன் கிளம்பி அம்மாவின் படுக்கைக்கு வந்தான்.

"ஏன் டா இவ்ளோ நேரம்?"

"ஒரு முழு வார்ட் கு ஒரே ஒரு டாக்டர். பிஸியா இருந்துச்சு.. இருந்தாங்க. அதான் நின்னு கேட்டுட்டு வந்தேன்," வாய் பழைய நியாபகத்தில் குளறியது.

அம்மா இட்லியை முடித்தாள். பின் இவனுடன் பொழுது போக பேசினாள், யூடியூப்(YouTube) இல் இன்றைய சீரியல் எபிஸோட் பார்த்தாள். அம்மா தூங்கியபின் மீண்டும் வார்ட் desk கு சென்ற அருணுக்கு ஏமாற்றம், அங்கு சஞ்சனா இல்லை. shipping பண்ணுற புருஷனுக்கு தான் என்னை விட்டுட்டு போனாளா என அருணின் மூளை சஞ்சனாவை கேலியாய் பார்த்தது. நம்ம எதிர்காலத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை என்றாளே இந்த எதிர்காலத்துக்கு தான் ஆசைப்பட்டு சென்றாளோ. அசதியாய் இருக்க அருணும் நாற்காலியிலேயே தூங்கினான்.

விழித்தபோது கையைத் தூக்கி வாட்ச் இல் மணி இரண்டு என பார்த்த போது ஒரு பக்கமாய் நாற்காலியில் சாய்ந்ததில் கை வலித்தது. எழுந்து கையை உதறினான். மீண்டும் கண்களை மூடினால் தூக்கம் வரவில்லை. எப்படி வரும், சஞ்சனா வார்ட் deskஇல் உட்கார்ந்திருக்கிராளே! இந்த நேரத்தில் டீ கிடைத்தால் நன்றாய் இருக்கும் என தோன்றியது.

அப்போது திடீரென அம்மாவின் breathing machine(ventilator) பீப் பீப் என கீச்ச அருணுக்கு தூக்கிவாரிப் போட்டது! அம்மா தூங்கிக்கொண்டிருந்தாள் ஆனால் மிஷினோ தொண்டைக் கிழிய பீப் பீப் என கத்தியது. அருண் பதறினான். அம்மாவின் தோளைத் தட்டினான். மூச்சு இரைக்க ward desk கு ஓடிச் சென்று சஞ்சனாவைக் கூப்பிட்டான், "சஞ்சு, அம்மாவோட machine சத்தம் போடுது, என்ன ஆச்சுன்னு பாரேன்."

இதற்கெல்லாம் முதலில் நர்ஸை அனுப்பி நிலமை சிக்கலாய் இருந்தால் மட்டுமே டாக்டர் செல்வது வழக்கம். எல்லாவற்றுக்கும் டாக்டர் சென்றால் வார்ட் இன் இதர பேஷண்ட்களை யார் கவனிப்பது. ஆயினும் அருண் என்பதாலோ என்னவோ சஞ்சனா எழுந்து முன்னாள் ஓடும் அருணைப் பிந்தொடர்ந்தாள்.

அங்கு அம்மா தூக்கத்திலிருந்து விழித்து மெத்தையில் உட்கார்ந்திருந்தாள். சஞ்சனாவின் கண்கள் பேஷண்ட் இன் உடல் நலத்தை கவனித்தன. அவர் குத்துக்கல்லாய் உட்கார்ந்திருப்பதை பார்த்ததும் மிஷினுக்கு சென்று சில பொத்தானை அமுக்கினாள். அலரும் குழந்தையின் வாயில் பால் பாட்டிலை திணித்தது போல் அடங்கியது மிஷின்.

"Airway connection கட் ஆச்சு அதுனால மிஷின் அலாரம் warn பண்ணியிருக்கு. ஆனா உங்க அம்மா மிஷின் இல்லாமலே மூச்சு விட்டுட்டு இருந்துருக்காங்க. அதுனால அவங்க எந்த difference உம் feel பண்ணல. No issues. நீங்க எப்படி இருக்கீங்க?"

அம்மா தோளைக் குலுக்கினாள், "நல்லா தான் தூங்கிட்டு இருக்கேன்."

சஞ்சனா புன்னகைத்தாள், "குட். படுத்துக்குங்க. உங்க மகன் கொஞ்சம் பதறிட்டாரு."

பீதி குறைந்து இப்பொழுது தான் அறிவு மீண்டும் வந்தது அருணுக்கு. நிதானமடைந்த அருண் சஞ்சனாவை நோக்கியபோது சற்று அதிர்ச்சியானான். மெல்லிய உடல்வாகாய் நினைவில் இருந்த சஞ்சனா இன்று நிறை மாத கர்ப்பிணியாய் நின்றாள். இன்றோ நாளையோ பெத்துவிடுவாள் போல. அவள் அம்மாவிடம் பேசிவிட்டு மெதுவாய் முதுகை வளைத்து நடந்து அவன் பார்வையிலிருந்து மறையும்வரை கண்கொட்டாமல் பார்த்தான் அருண்.

நம் எதிர்காலத்தின் மேல் நம்பிக்கை இல்லை என சொன்னவள் இப்பொழுது இன்னொருத்தவனின் குழந்தையை சுமப்பதும் அவனோடு அவளின் எதிர்காலத்தைப் பிண்ணிபிணைத்திருப்பதும் அருணுக்கு உறுத்தலாய், கோபமாய், எரிச்சலாய் முக்கியமாய் ஆதங்கமாய் இருந்தது. அவனிடம் அப்படி என்ன இருக்கிறாதாம். பெரிய உலக மகா வல்லவனோ. பெரிய டாக்டர் ஆகனும்னு சொன்னாளே, இப்போ கர்பமா இருக்கா. பெருசா கனவு, லட்சியம்னு பாடம் வேற எனக்கு எடுப்பா.

காமத்தின் உச்சத்தில் அவளை முழுமையாய் முத்தமிட்டிருக்கிறான். ஆனால் செக்ஸ் எனும் ஒரு விஷயத்தில் மட்டும் அவள் பிடியாய் இருந்தாள். என்ன தான், எவ்வளவு தான் தமிழ் பெண்கள் தொட விட்டாலும் கற்பு எனும் விஷயத்துக்கு செக்ஸ் எனும் வரையறை விதித்திருந்தனர். முத்தங்கள் அவ்வரையறைக்குள் அடங்கும் என யார் விதித்தார் என தெரியவில்லை. ஆதலால் அவளை நிறைய முத்தமிட்டிருக்கிறான். எவ்வளவு தான் காமமும் மோகமும் முட்டிமோதினாலும் அவளின் உடன்பாடின்றி எதுவும் செய்ததில்லை. அவனின் விரல்கள் அக்கோடின் எல்லைக்குள் ஆர்வமாய் ஆராய்ந்திருந்தன. ஆனால் இப்பொழுது அவளின் கர்ப்பம் அவனைப் பார்த்து நக்கலாய் சிரித்தது. உனக்குக் கிடைக்காத செக்ஸ், உனக்குக் கிடைக்காத குழந்தை, உனக்குக் கிடைக்காத குடும்பம், உனக்கு கிடைக்காத எதிர்காலம் யாவும் இன்னொருத்தவனுக்குக் கொடுத்துவிட்டாள் என ஒரு குரல் குத்திக்காட்டியது.

நம்பமுடியாது ward desk கு வந்தான் அருண். சஞ்சனா உட்கார்ந்திருந்ததால் அவன் கோபத்தைக் இன்னும் கூட்டாமல் ஒளிந்திருந்தது அவளின் வயிர்.

"கஷ்டமா இல்லையாpregnantஆ இருந்துட்டு வேலைப் பார்க்கிறது?" இந்த போக்கில் தொடங்குவோம் என ஆரம்பித்தான்.

சஞ்சனா நிமிர்ந்தாள், "கஷ்டம் இல்லன்னு பொய் சொல்ல மாட்டேன். கஷ்டம் தான் அதுவும் புது டாக்டர்ங்கிறதால கருணையே இல்லாம ஒரு வார்ட் முழுக்க நம்ம தலைல கட்டிருவாய்ங்க. இன்னை மாதிரி நைட் ஷிப்ட் லாம் சாதாரணம். பட் என்ன சொல்றது... எங்களோட குழந்தை, எங்களோட சந்தோஷம். அவருக்கு குழந்தைங்கன்னா ரொம்ப ஆச. லேட் ஆ பெத்துக்கலாம் தான் சொன்னாரு பட் நான் தான் இப்போவே ஒரு குழந்த பெத்துக்கலாம்னு முடிவு பண்ணேன். பார்த்துக்கலாம் நு ஓவர் தைரியத்துல சொல்லிட்டேன்," சஞ்சனா சிரித்தாள். "Thanks Arun for your concern."

அவளுக்கு எப்படி தெரியும் நான் அக்கறையில் கேட்கவில்லை அகங்காரத்தில் கேட்கிறேன் என்று.

என் முகத்தின் சிறு நலிவு சுலிவுகளையும் மொழி பெயர்ப்பவள் என் முக மாற்றத்தைக் கவனித்து விட்டாள், "ஹே... ஆர் யூ ஒகே? நான் இதுலாம் பேசுறது மனசுக்கு கஷ்டமா இருந்தா..."

"இல்ல இல்ல. ஐம் ஒகே."

"எதாவது சொல்லனும்னா சொல்லிடு அருண்."

நான் மௌனமாக இருந்தேன். எனக்கே நா கூசியது.

"அருண்."

"ஹ்ம்ம்."

"நீ நல்லவன் தான், வல்லவன் தான். கண்டிப்பா உன்ன சில பொண்ணுங்களுக்கு பிடிக்கும்" இங்கு சஞ்சனா புன்னகைத்தாள். "உனக்கு என்ன குறை, பிரியலாம்னு நான் சொன்னது முட்டாள்தனமான்னு ரொம்ப நாள் யோசிச்சேன். உனக்கே தெரியும்."

"ஆமா.. நீ கேள்வி கேட்டே டார்சர்(torture) பண்ணது மறக்க முடியுமா? நீ சரியான முடிவெடுத்திருக்கன்னு நான் தான ஒவ்வொரு தடவையும் சமாதானப்படுத்துவேன். "

"ஹ்ம்ம்.. அவர பார்த்த பிறகு தான் நான் எடுத்தது சரியான முடிவுன்னு முழுமையா நம்புனேன். அவர பார்த்த பிறகு தான் நமக்குள்ள இருந்தது காதல் இல்லைன்னு புரிஞ்சது. அவர் கூட நிறைய புள்ளைங்க பெத்துக்கனும்னு தோனுச்சு." மீண்டும் சிரித்தாள். "சில்லியா(silly) இருக்குல்ல கேட்க?"

"ஹே.. அப்டிலாம் இல்ல."

"உனக்குன்னு ஒருத்தி வருவா அருண். இவள் இன்னொருவருக்கானவள். அவ்ளோ தான் சொல்ல முடியும் என்னால."

"ஹே.. I know. Take it easy "

"உன் முகத்த பார்த்ததும் சும்மா சொல்லனும்னு தோனுச்சு." திடீரென நர்ஸ் கூப்பிட, "இரு அருண், வர்ரேன்," என சொல்லிவிட்டு தன்னால் எவ்வளவு வேகமாய் நடக்க முடியுமோ அவ்வளவு வேகமாய் இன்னொரு பெட் கு சென்றாள்.

மீண்டும் அம்மாவின் பெட் கு வந்து அன்னாற்காலியில் அமர்ந்தான் அருண். கட்டிலில் oxygen mask உடன் தூங்கும் அம்மாவின் முகத்தில் சஞ்சனாவின் சாயல் தெரிந்தது.

[முற்றும்]

[திடீர்னு ரெண்டு நாள் உட்கார்ந்து எழுதிட்டேன் இந்த சிறு கதையை. என்ன சொல்ல வர்ரேன்னு எனக்கு தெரியும், பல விஷயம் சொல்ல வந்தேன். அதில் ஒன்றாவது உங்களுக்கு வந்து சேரும் என நம்புகிறேன் அதுவும் குறிப்பா இந்த விஷயம்:

ஒரு பெண்ணுக்கு எப்பொழுது இவர கல்யாணம் பண்ணிக்கலாம்னு தோனும்? When she wants to have kids with him, when she wants to have children who look like him:)

அப்புறம், a personal news: I'm engaged:) Completely in love! லூசு மாதிரி சிரிச்சுட்டு இருக்கேன், இன்னொரு மனுஷனையும் சிரிக்க வச்சிட்டு இருக்கேன்:) ]

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro