அல் பாத்திஹா - தோற்றுவாய்
அத்தியாயம் : 1
மொத்த வசனங்கள் : 7
அல் பாத்திஹா என்ற அரபுச் சொல்லுக்கு தோற்றுவாய்,
முதன்மையானது எனப் பொருள்.
திருக்குர்ஆனின் முதல் அத்தியாயமாக இது அமைந்துள்ளதால் இந்தப் பெயர் வந்தது. திருக்குர்ஆனிலேயே இந்த அத்தியாயம் குறித்துச் சிறப்பித்துக் கூறப்பட்டிருக்கிறது.
பார்க்க 15:87
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் .
திருக்குர்ஆன் 1:1
الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ
1. எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. (அவன்) அகிலத்தைப் (படைத்துப்) பராமரிப்பவன்.
திருக்குர்ஆன் 1:2
الرَّحْمَٰنِ الرَّحِيمِ
2. அளவற்ற அருளாளன். நிகரற்ற அன்புடையோன்.
திருக்குர்ஆன் 1:3
مَالِكِ يَوْمِ الدِّينِ
3. தீர்ப்பு நாளின்1 அதிபதி.
திருக்குர்ஆன் 1:4
إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ
4. (எனவே) உன்னையே வணங்குகிறோம். உன்னிடமே உதவியும் தேடுகிறோம்.
திருக்குர்ஆன் 1:5
اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ
5. எங்களை நேர்வழியில் செலுத்துவாயாக!
திருக்குர்ஆன் 1:6
صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ
6, 7. அது நீ யாருக்கு அருள் புரிந்தாயோ அவர்கள் வழி. அவர்கள் (உன்னால்) கோபிக்கப்படாதவர்களும், பாதை மாறிச் செல்லாதவர்களும் ஆவர்.26
திருக்குர்ஆன் 1:7
This is my first attempt...
Kandippa Ellarum read pannunga bayan adayungal Allah rehmat seivanaaga..
Jazhakallah khair.. 😊
Yours lovingly,
Halima :)
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro