கை நீட்டி அழைக்கிறேன்..
21 வயது அன்னபூரணிக்கு ஐந்து வருடங்கள் முன்பு தலையில் ஏற்பட்ட காயத்தின் விளைவாக ஷார்ட் டெர்ம் மெமரி லாஸ். இக்கட்டான காலகட்டத்தை தன் பெற்றோர் மற்றும் உயிர் தோழியின் துணையோடும் போராடி கடந்து விட்டாள் இருப்பினும் எதையோ இழந்த பரிதவிப்பு. ஆண்களை கண்டு விலகியோடும் பெண்ணுக்கு, யாரையோ தேடித் துடிப்பதை அவள் ஆழ் மனம் கனவில் கோடிட்டு காட்டுகிறது. யார் அவன்? இதற்கு விடை அவள் மட்டுமே அறிவாள். நினைவு திரும்புமா? 26 வயது விஸ்வநாதன் காத்திருக்கிறான் அவளுக்காக. தன் கையில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய காதலி, தன்னை மறக்க நேர்ந்ததில் இன்றளவும் பரிதவிக்கிறான். அவளை பிரிந்து வேறு ஊரில் குடியேறும் கட்டாயம். குடும்ப பொறுப்புக்கும் காதலுக்கும் இடையில் ஊசலாடுகிறான், விஷ்வா ஐந்து ஆண்டுகளாய். கைசேருமா இவர்கள் காதல்? Started June3rd 2021…