Underground
அடுத்த பக்கத்தில் இருந்து பேசிய நபரின் பேச்சை கேட்டு அதிர்ந்து நிற்க, இவளை கண்ட ஒரு சோடி கண்களுக்கு உரிமையாளன் landline ன் wire ஐ வெட்டினான்.
"Hello! Hello! Heeelllllooo!" என Leena எவ்வளவு பேசியும் அடுத்த பக்கத்தில் இருந்து பதில் வரவில்லை. Phone ல் ஏதாவது கோளாறாக இருக்க வேண்டும் என்று எண்ணி, அவள் தனது அறைக்கு சென்றாள்.
"Hey Mary! இப்போ எனக்கு என்ன நடந்துச்சு என்று தெரியுமா?" என Leena கேட்க "ஏன் இந்த முறையும் fruits களவெடுத்த என்று Newton robot திரட்டிட்டு வந்தானா?" என தனது முடியை பின்னிக் கொண்டு கேட்டாள்.
"No Mary! Deniyal ட அக்கா ட friend call எடுத்து இருந்தா. அன்று என்னமோ முக்கியமான விஷயம் கூற இருந்தாலே!" என கூற Leena ஐ இடைமறித்த Mary "இன்னக்கி அதை சொன்னாலா?" என ஆர்வத்துடன் கேட்டாள்.
"இல்லை அதுக்குள்ள phone மீண்டும் cut ஆகிறிச்சு!" என Leena கூற ஏமாற்றத்துடன் உட்கார்ந்தாள் Mary. "But அவங்கட batch ல உள்ள பல பேரோடயும் projects காணாமல் போனதாக சொன்னா. அதுமட்டுமல்ல project presentation செய்யாதவங்களுக்கு principal அவங்களுக்கு final certificate ஐயும் கொடுக்கலயாம்! அவட project ஏதோ flying என்று முடிக்க வர முன்பே phone cut ஆகிறிச்சு. எப்படி இருந்தாலும் அவங்க பாவம். 5 மாதங்கள் உழைப்பும் வீணாக போச்சு." என கவலையுடன் Leena கூற "ஆமா! இது நமக்கு மட்டும் நடக்கவில்லை. போன 2 batch கும் நடந்திருக்கு என்றால் ஏதோ ஒரு பெரிய மர்மம் இங்கு இருக்கு! இதை இப்படியே விட்டால் நமக்கு பிறகு வரும் பிள்ளைகளுக்கும் இதே தான் நடக்கும். We need to do something. நாளைக்கே இதை நாம மத்தவங்கட சொல்லுவோம்." என Mary கூறிவிட்டு படுக்க சென்றனர்.
அடுத்த நாள் இனிதே ஆரம்பிக்க,அனைவரும் பரபரப்புடன் தங்களது projects கான வேலைகளைகளை செய்து கொண்டிருந்தனர்.
Albert (chemistry expert) தன் project ற்கு சில ஆணிகள் தேவைப்பட,Robot lab லிருந்த robin னிடம் சென்று அதனை வேண்ட "அங்கு பாரு! அந்த cupboard ல் 4 வது yellow drawer ல இருக்கு!" என இடத்தை காட்டிக் கொடுத்தான்.
Albert drawer ஐ திறந்து ஆணிகளை இரு கைகளிலும் அடுக்க, அவனால் drawer ஐ மூடமுடியவில்லை. அப்படியே திறந்து வைத்து விட்டு "Thanks robin! நீ என்ன பண்ணிக்கிட்டு இருக்க?" அவனின் project ல் மூக்கை நுழைத்து கொண்டிருக்க, cupboard ன் கீழே விழுந்து இருந்த தனது device ஐ பொறுக்கிக் கொண்டிருந்த Katherine மேலே பார்க்காமல் எழுந்தாள்.
எழுந்த வேகத்தில் உச்சி மண்டை பலமாக drawer ல் பட, அவளுக்கோ கோபம் பொங்கி கொண்டு வந்தது. Albert ஐ பார்த்து "get lost idiot!" என்று Katherine கூறியது தான் கடன் "இப்படி ஒரு இராட்சசியோட எப்படி தான் robin இருக்கிறினோ!" என எண்ணி, அங்கிருந்து துண்டில்லை துணியில்லை என்று ஓட்டம் பிடித்தான் Albert.
இதனை கண்ட robin கோ சிரிப்பை அடக்க முடியவில்லை. Katherine கடுப்பிலே தனது வேலைகளை தொடர்ந்தாள்.
காலையுணவுக்கான bell அடிக்க, அனைவரும் தத்தமது project ஐ பாதுகாப்பாக வைத்துக் விட்டு canteen ஐ நோக்கி சென்றனர்.
Robin ன் gang இரு மேசைகளை ஒன்றிணைத்து அமர்ந்து கொண்டனர். Leena தனக்கு இரவு வந்த call ஐ பற்றி கூறிக் கொண்டிருந்தாள். "Hey! நாங்களும் தான் phone தினமும் பேசுறோம். எப்பவாச்சும் இடையில cut ஆகி இருக்கா?" என hugo வினவ "guys, நான் morning எங்க landline கிட்ட யாரோ technicians மாதிரி அணிந்து கிட்டு என்னமோ செய்துட்டு இருந்தாரு!" என்றாள் loral.
"வர வர இந்த school ல மர்மங்கள் நிறையவே நடக்குது! போற போக்கில் பேய் பிசாசு எல்லாம் school ல இருக்குது என்று கதை வராட்டி சரி!" என gwen கூற "it's getting interesting!" என்றான் robin.
"Robin நீ ஏதோ இது எல்லாம் ஒன்றுக்கு ஒன்று சம்பந்தம் ஏன் சொன்ன?" என Mary வினவ " ஆமா Mary! 2005 ல தான் ஏதோ incident நடந்திருக்கு. அதே year ல இங்க படித்த students தான் இப்போ நமக்கு teachers ஆக வந்து இருக்காங்க! So இதுல என்னமோ connection இருக்குற மாதிரி இருக்கு எனக்கு!" என்று விளக்கினான் robin.
"எனக்கு என்னமோ robin சொல்றது சரி என்று படுது. But projects காணாமல் போனதற்கும் இதற்கும் சம்பந்தம் இருக்குற மாதிரி என்றால் எனக்கு தோன்றவில்லை!" என Deniyal கூற "எப்படி இருந்தாலும் எனக்கு Principal எப்பவுமே ஒரு doubt" என்றான் leo.
"எனக்கும் தான்! அவருடைய drink taste ல யே அது விளங்கிச்சு!" என்றான் danish ஏதோ ஆராய்ச்சி செய்து கிடைக்கப்பெற்ற முடிவு போல! "Hey guys! அவருடைய number 12 என்பதால தான் அவர்ட office ல Soldiers & drink bottles எல்லாமே principal 12 தான் வெச்சு இருந்தாரு!" என்றாள் Mary.
"Guys! அந்த underground அ பத்தி என்ன நினைக்குறீங்க? இப்பவும் அது இருக்குமா?" என Maya laptop ஐ நோண்டியவாறே கேட்க "எனக்கு என்னமோ அப்படி ஒன்னு இருக்கு போல தான் தோனுது!" என்றாள் loral.
"Yeah loral. எனக்கும் அப்படி தான் தோனுது. இப்படி தோன்ற காரணம் Principal ட rules & regulations ல தோட்டத்தை தாண்டி அந்த சிறிய காட்டுக்குள்ள போக வேண்டாம் என்று சொன்னதுதான்." என robin கூற "அப்போ போய் தான் பார்ப்போமே!" என கூறி கண்ணடித்தாள் gwen.
"Are you serious?" என hugo வினவ "ஆமா! இதை கண்டுபிடிக்க நாம போய் தான் ஆகனும். எத்தனையோ மர்மம் நடக்குது. So one by one ஆக இயன்றளவு solve பண்ணுவோம்." என்றான் robin.
"Then, why we are wasting the time. Let's go!" என Deniyal விரைவுபடுத்த "அவசரம் எப்போதும் ஆபத்தை கொடுக்கும்! First we need a plan!" என robin தனது plan ஐ கூற அடுத்த நிமிடம் அனைவரும் களத்தில் இறங்கினர்.
"Guys இது நம்ம 4 பேர் கிட்ட இருக்கிற watch. இதுல GPS connect பண்ணியிருக்கு! அதோட 4 பேர் ஓட பேசவும் முடியும்.(the golden cat) நான், danish, Deniyal underground அ தேடி போறோம். So danish ட watch அ Albert கட்டிக்கோ! ஏதாவது inform பண்ணும் என்றால் Green button அ press பண்ணு!" என danish ன் watch கழற்றி கொடுக்குமாறு கூறினான் robin.
Leena மற்றும் Mary Miss sabrina ஐ அவர்களின் கவனத்தில் வைத்து கொண்டனர். Albert & Hugo Miss Isek டம் தங்களது project ஐ பற்றி விளக்கிக் கொண்டு வெளியே செல்வதை தடுத்துக் கொண்டிருந்தனர்.
Gwen உம் leo உம் Carlos Sir ஐ வெளியே செல்ல விடாமல் பார்த்துக் கொண்டிருக்க, Maya தனது laptop ல் principal ஐ பார்த்து கொண்டிருக்க, loral principal office ற்கு நேராக உள்ள hall ல் அவரை கவனித்து கொண்டிருக்குமாறு தன் வேலையை செய்து கொண்டிருந்தாள்.
Simon மற்றும் Anna விடமும் தங்கள் plan ஐ கூறிவிட்டு வெளியே தோட்டத்தில் சிறிய காட்டு பகுதிக்கு enter ஆகும் இடத்தில் walkie talkie உடன் நிற்க செய்தனர்.
பின்னர் robin, danish மற்றும் Deniyal காட்டுக்குள் செல்ல முன் Simon தனது binoculars ஆல் வெளியில் இருந்து Principal office உட்பட அனைத்து யன்னல்களையும் நோட்டமிட்டு யாராவது பார்க்கிறார்களா? என அவதானித்தான்.
யாரும் அவதானிக்காத நேரம் பார்த்து robin கு கையிலுள்ள கண்ணாடி மூலம் சூரிய ஒளியை தெறிப்படைய செய்து signal ஐ அனுப்பினான்.
பின் மூவரும் காட்டு பகுதிக்குள் நடந்து சென்றனர்.
10 நிமிட நடைபயணத்துலும் எதுவும் தடயமும் கிடைக்கவில்லை.
"இங்க தான் அன்று recording காக நான் வந்த இடம்!" என Deniyal சுற்றும் முற்றும் பார்த்து கூற "அப்போ அந்த இடிமுழங்குற சத்தம் இங்க யா கேட்டச்சு! நீ வேறு பயந்து ஓடினேடா. அந்த இடமா?" என danish அவனை வம்புக்கு இழுக்க ஆரம்பித்தான்.
"Hey wait guys!" என robin கூற இருவரும் வைத்த காலையும் பின்னால் வைத்து அப்படியே சிலையாக நின்றனர்.
Thanks for the votes & comments.
Keep supporting.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro