Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

Halloween party

அனைவரும் Halloween party காக பரபரப்பாக ready ஆகிக் கொண்டிருந்தனர்.

Anna ( cartoon specialist) உம் Mary ( super memory power) உம் யாருக்கு தெரியாமல் room ன் மேல் coner ல் ஏதோ set பண்ணிக்கொண்டிருந்தனர்.
.
.
.
Albert (chemistry expert) உம் danish உம் இணைந்து தீ வராத புகை மாத்திரம் வெளிவரும் வெடிப்பொருகளை தயாரித்து கொண்டிருந்தனர்.

அவை வெடிபொருள் என ஊகிக்காத வண்ணம் அவற்றை பந்துகள் போல வடிவமைத்தனர்.
.
.
.
Isek தான் இந்த party ல் main roll ஐ எடுத்திருந்தான். அதற்காக அவன் கஷ்ப்பட்டானோ இல்லை அவன் அருகில் இருந்தவர்கள் வாட்டி வதைக்கி எடுத்தான்.

"Hey Ben! Bring my suit quickly!"

"Hey Lucy! என் shoes அ Polish பண்ணுங்க. Polish பண்ணின shoes ல முகத்தை பார்த்து தலை வார கூடியளவு பளிச் என்று இருக்கனும்."

"யாருடா இந்த suit iron பண்ணினா? பாரு கோடுகள் அப்படியே இருக்குது. என் தாத்தா கூட இப்படி dress பண்ண மாட்டாரு! நாங்க எந்த பரம்பரை என்று இவங்களுக்கு தெரியாதா? இல்லை தெரியாத மாதிரி நடிக்கிறாங்களா?"

"Hey அந்த gwen அ கூட்டி வாங்க! Makeup போட அரைமணித்தியாலத்துக்கு முன் seat ல வந்து உட்கார்ந்தா அவளை இன்னும் காணமே! டேய் யாராவது போய் அவளை அடிச்சு இழுத்துட்டு வாங்கடா!"

என கட்டளைகள் இட அவ்விடத்துக்கு வந்து சேர்ந்தாள் gwen.

"என்னடா சும்மா நொய் நொய் என்று இருக்க! நீ தானே 4 கு வர சொன்ன! ஆர்வக்கோளாறுல tution classல இடம்புடிக்கிற மாதிரி 3.30 வந்து உட்கார்ந்தால் நான் என்ன பண்ண முடியும்! " என வெடிக்கும் பட்டாசு போல கேட்டாள் gwen.

Audrey  (makeup expert) plaste of parish ஆல் செய்யப்பட்ட நீண்ட மூக்கையும் இரண்டு வேட்டை பற்களையும் கொண்டு வந்தாள் Isek ன் வேண்டுகோளிற்கேற்ப.

"Hey Gwen, glue போதாமல் இருக்குதே! இடையில கழன்று விழுந்துச்சு என்றால் என்ன பண்ணுறது?" என Audrey வினவ "it's ok. அவனுக்கு இருக்கிறதே நீண்ட மூக்கும் நீண்ட பல்லும் தான் கழன்று விழுந்தாலும் விளங்காது! " என்றாள் gwen.

Isek ஐ இரத்தம் உறிஞ்சும் dracula போல makeup செய்து விட்டனர்.

அனைவரும் hall ல், கீழே mat போட்டு இருக்க அதில் அமர்ந்து கொண்டனர். Danish அமர்ந்திருக்கும் இடத்திற்கு அருகே ஒரு நீண்ட பெட்டி வைக்கப்பட்டிருந்து.

"Hey guys! பாருங்கடா முதுகு வலிக்காமல் சாய்ந்து இருக்க பெட்டி ஒன்று கூட வைத்திருக்கிறாங்க!" என அதன் மேல் கை வைத்து சாய்ந்து அமர்ந்து கொண்டான்.

இடை இடையே யாரோ கதவு தட்டுவது போல சத்தம் கேட்க சளைத்து போன danish "டேய் அந்த கதவை திறந்து விடுங்கடா! யாரோ கதவை உடைக்க போறாங்க! " என அவன் கூறி மற்றவர்களை பார்க்க அவர்களோ பயந்து போய் danish கை வைத்திருந்த பெட்டியை பார்த்து கொண்டிருந்தனர்.

"அப்ப்ப்ப்போ! இது சவப்பெட்டியா டா!" என்றவாறு அருகில் அமர்ந்திருந்த Albert ன் மேல் குதித்தான் danish.

Piano play பண்ண பெட்டியில் இருந்து வெளியே வந்தான் Isek. "சும்மாவே இவன பார்க்க 10 கண் வேணும். இந்த நிலைமையில் 100 கண்களும் போதாது!" என்றாள் Anna.

"என் அருமை பிசாசுகளே! பேய்களே! இங்கு வந்தமைக்கு நன்றி!" என Isek ஆரம்பிக்க Hugo உம் Deniyal எழுந்து போக ஆயத்தமாகினர். அனைவரும் ஏன் என்று வினவ "அவன் பேய், பிசாசுகள் கிட்ட தான் பேச போறான். நாங்க இரண்டு பேரும் மானிட வர்க்கத்தினர் அதுதான் போக போறோம்!" என கூறினர்.

Loral தலையில் அடித்து கொள்ள robin இருவரையும் அமர வைத்தான்.

மீண்டும் தொடங்கிய lsek "1000 1000 வருடங்களுக்கு முன்பு, கறுப்பை கக்கும் இரவு நேரம் அது. அணு அளவேனும் வெளிச்சமும் இருக்கவில்லை. மயான பூமியில் நிலவும் அமைதி அங்கே!

3 சிறுவர்கள் தனது தொலைந்து போன நாய் குட்டியை தேடி சோளம் பயிரிடப்பட்ட பண்ணையில் புகுந்தனர். அவர்களை தீண்டி சென்ற குளிர் காற்றும், expiry date ஆகிய torch battery ஆல் off ஆகிய torch அவர்களின் பயத்தை மெழுகூட்டியது.

ஆமா அந்த நாய் ஏன் தொலைச்சதோ தெரியல்ல. அதை விடுவோம் that's out of our story.

அவர்களின் பின்னால் திடீரென  குதிரை ஓடும் கால் தடத்தின் சத்தம் மாத்திரம் கேட்டது. தடபுட தடபுட தடபுட தடபுட தடபுட...!" என கூற

"டேய் என்னடா? கதைமுழுக்க தடபுட தான் இருக்கும் போல!" என்றான் danish. "தடபுட என்று ரயில் தானே போகும்?" என கேள்வி பார்வையுடன் gwen loral ஐ பார்த்தாள்.

"நாங்க washroom போய் வாறேன்!" என Audrey ஐ இழுத்து கொண்டு ஓடினாள் gwen. சிறிது தூரம் சென்ற பின் "Let's active our mission!" என்றதும்  Audrey main switch பக்கம் சென்றாள்.

Gwen யாராவது வருகிறார்களா? என்று நோட்டமிட்டு கொண்டிருந்தாள். Audrey main switch அருகில் செல்ல அவளுக்கு முன் maini switch ஐ யாரோ off பண்ணினான்.

இருட்டில் அந்த நபரை காணாத Audrey பயத்திலேயே gwen னிடம் ஓடினாள். Gwen ன் torch light வெளிச்சத்தின் திசையில் ஓட, gwen "Nice work Audrey! " என கூற "But அது நான்...." என கூற முன்பே அவளை கூட்டிக் கொண்டு hall ற்கு சென்றாள்.

Lights off ஆகியது பிள்ளைகளின் ஒரு வேலையாக இருக்கும் வேண்டும் என்று எண்ணி ஆசிரியர்கள் அதனை பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. "Light போனதும் நல்லம் தான்!" என்றவாறு கதையை தொடங்கினான் Isek.

"குதிரையின் கால் தடங்களின் சத்தம் வரவர சத்தமாக கேட்க தொடங்கியது. எங்கே இருக்கிறோம் என்று தெரியாத மூவரும் எங்கே ஓடுவது என்று தெரியாமல் ஓடினர். கால் போன போக்கில் ஓடினர்.ஓடினர் ஓடி கொண்டே இருந்தனர்..."

இவனின் பேச்சு தொல்லை தாங்க முடியவில்லை. Robin உம் leo உம் இணைந்து எலும்புகூட்டை கழற்றி இரு புயத்தை எடுத்து, அதில் wheels ஐ இணைத்தனர். பின் அவர்களின் remote control ஆல் அதனை செயல்படுத்தி நண்பர்களுக்கிடையே அவர்களின் அருகில் சென்று பயம் காட்டுவதற்காக அதனை ஓட செய்தனர்.

அதனை கண்டு சிலர் அடித்து பிடித்து ஓட, Katherine அதனை அருகில் இருந்த சுத்தியலால் அடித்து உடைத்தாள். அப்போது தான் அனைவருக்கும் அது யாரோ ஒருவனின் வேலை என்று விளங்கியது.

"ஓடிய நண்பர்கள் ஒரு இடத்தில் களைத்து போய் அமர்ந்தனர். அவர்கள் அமர்ந்த அந்த இடத்தில்... அந்த இடத்தில்...ஒரு மரம். மரம் என்று அவர்கள்  நினைத்தார்கள். ஆனால் இருந்ததோ குதிரையை ஓட்டும் தலை இல்லாத ஒருவன்...." என்று Isek கூற Anna உம் Mary உம் தங்கள் கைகளில் இருந்த button ஐ அழுத்த தலையில்லாத horse rider ஒருவர் Isek ன் முன் வந்து நின்றது.

Isek ஓ "ஆஆஆ ஆஆஆ ஆஆஆ!" என கத்த அனைவரும் சிரித்தனர். "டேய் அது projector!" என்றான் danish. "Ha ha ha எனக்கும் தெரியும் அது! நான் கதையில் வார 3 பேரும் கத்தின மாதிரி கத்தி காட்டினேன்!" என தோற்காமல் கூற "எங்களுக்கு அது ரொம்ப அழகா விளங்கிச்சு!" என்றாள் Maya.

"You all are insulting for a professional story teller! I'm warning you!

Ok let's come to the story! மூவரும் திரும்பி பார்க்க, கண்ட காட்சியில் அவர்களின் இதயம் வாய்க்கு வந்து எட்டி பார்த்து விட்டு ஓடிச் சென்றது. மூவரும் ஓட்டம் பிடிக்க ஆரம்பித்தனர். ஆனால் அவர்கள் அதே இடத்தில் தான் ஓடிக் கொண்டிருந்தனர்..." என்று கூற danish உம் Albert உம் chemical bomb ஐ தூக்கி வீச அதோ கீழே விழுந்து வெடித்தது.

"Bombs Bombs Bombs!!" என்றவாறே அனைவரும் hall ஐ விட்டு வெளியேற ஆரம்பித்தனர். அறை முழுவதும் புகை மூண்டது.

பின்னர் அதனை danish உம் Albert உம் உருவாக்கியதாக ஒப்புக் கொண்டனர்.

Halloween party உம் அரைகுறையில் முடிந்தது.

Room ற்கு சென்று "Hey guys...நாம plan படி principal office குள்ள போவோம்!" என்றான் robin. Plan ல் உள்ளவர்கள் அவன் பின்னால் பின்னால் செல்ல, ஒரு சோடி கண்கள் இதனை பார்த்து கொண்டிருந்தது.

Thanks for the votes & comments.
Keep supporting.

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro