Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

9. Dark world

Gentle man royal Stephen ஐ கண்டதும் Princess Helena கு கண் முன்னே அன்று கண்ட கனவுகள் மீண்டும் ஒரு முறை வந்து சென்றது.

தலையை பிடித்துக் கொண்டாள். அங்கு அனைவரையும் விரைவாக குதிரை லயத்திற்கு வர கூற, அங்கிருந்து Princess Helena தலைவலியுடனே சென்றாள்.

High school ற்கு பின்னால் குதிரை லயம் அமைந்துள்ள அந்த பகுதி 5 கிலோமீற்றரிற்கு புல் வெளி பரந்து காணப்பட்டதுடன் 100 குதிரைகளும் வரிசையாக இருந்தன.

அனைவரையும் வரிசையில் ஒவ்வொரு குதிரைகளின் முன்னும் நிற்க வைத்த, gentle man royal Jackson நடுவே வந்து நின்றார்.

"Good afternoon! I'm gentle man royal Jackson. இன்று நான் எப்படி குதிரையை தன் நண்பனாக்கி கொள்வது என்று சொல்லி தர போகின்றேன். இங்கு உங்களுக்கு முன்னால் உள்ள குதிரைகள் தான் உங்களின் நண்பன்.

முதலில் குதிரையின் முன்னால் 1 மீற்றர் தூரத்தில் நிற்க வேண்டும்!" என விபரிக்க,

யாரோ ஒருவன் மறைந்திருந்து "ஏன் social distance maintain பண்ண? குதிரைக்கு corona ஆ?" என நக்கலடிக்க, சிலர் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தனர்.

"குதிரைக்கு corona இல்லை. வந்த உங்களுக்கு corona இருக்குமா என்று தெரியவில்லையே! Ok now let's start our lesson.

குதிரைகளின் முன்னால் நேராக நிற்க வேண்டும். பின் அதனை நேராக நோக்கியவாறு அதன் நெற்றி பகுதியை லாவகமாக வலது கையினால் தொட வேண்டும். அவ்வாறு தொடும் போது உங்களுடன் சாந்தமாக நடந்துக் கொண்டால் அது உங்கள் நண்பனாகி விட்டது என்று அர்த்தம்.

அவ்வாறு இல்லையெனில் நாம் குதிரையை கட்டாயப்படுத்தி அதன் மீது சவாரி செய்யக் கூடாது. அவ்வாறு செய்தால் எமது உயிருக்கும் ஆபத்து ஏற்படும் வகையில் குதிரை நடந்து கொள்ளும். Ok who gonna try first?" என gentle man royal Jackson வினவினார்.

"Me!" என்றவாறு முன்னால் வந்த Prince Alex, சொல்லி தந்தவாறு முறைப்படி படிபடியாக முன்னேறி சென்று குதிரையின் நெற்றியை தொட, அதுவும் அவனை நண்பனாக ஏற்று கொண்டது.

இதனை கண்ட இளவரசிகள் Prince Alex ஐ நோக்கி கைதட்டல்களும் கூச்சலும் இட்டனர். "I know you would do this! My prince!!!" என Princess Helena ன் காதருகில் யாரோ கத்த, Princess Helena உம் திரும்பி பார்த்தாள்.

அவள் அருகில் இருக்கும் அந்த loudspeaker ஐ விழுங்கிய நபர் Princess rouqelle என்று அறிந்ததும் அதிர்ச்சி அடைந்து முகத்தை 130 பாகை விரிகோணத்திற்கு திருப்பி கொண்டாள்.

Princess rouqelle இவளின் திடீர் செயலில் அவளை அப்போது தான் அறிந்து கொண்டாள்.

"Don't shout! Do you know? குதிரைகள் பெரிய சத்தங்கள், thunder, தீ, plastic bags, Umbrellas, butterflies என்பவற்றுக்கு பயப்படக்கூடிய ஒரு மிருகம். So stop shouting.

Prince Alex, உன் குதிரையை கூட்டிக் கொண்டு I mean, நடந்து சென்று ஒரு சுற்று சுற்றி விட்டு வா! Others can try now!" என gentle man royal Jackson கூற, அனைவரும் Prince Alex கு குதிரை கட்டுபட்டதை கண்ட தைரியத்துடன் வேலைக்கு இறங்கினர்.

பெருமூச்சு ஒன்றை விட்ட Princess Helena, குதிரையின் முன்னால் போய் நின்றாள். கண்களை மூடிக் கொண்டே கையை குதிரையின் நெற்றிக்கு அண்மையில் கொண்டு சென்றாள்.

குதிரையும் அவளுக்கு கட்டுப்பட்டு வரும் சமயத்தில் அருகில் இருந்த plastic bag ஐ கொண்டு போய் ஊதி Princess Helena கும் குதிரைக்கும் இருந்த 15 சென்டிமீட்டர் நடுவே வெடிக்க செய்தாள் Princess rouqelle.

அதன் சத்தமும் plastic bag ஐயும் கண்டு குதிரை தடுமாற தொடங்கியது. Princess Helena ஐ நோக்கி இரு முன் கால்களையும் உயர்த்தி பயங்கரமாக தலையை ஆட்டி, கனைக்க தொடங்கியது.

"Princess stay out!" என Princess Helena ன் கையை பிடித்து இழுத்து விட்டு குதிரையின் முன்னே போய் reins ( குதிரையை செலுத்த பிடிக்கப்படும், nose band உடன் தொடர்பில் இருக்கும் பட்டி) ஐ பிடித்து இழுத்து மேலும் இருவருடன் குதிரையை சமாதானப்படுத்தினார் gentle man royal Jackson.

அதனை சமாதானப்படுத்தி பின்னால் திரும்பி பார்க்க, ஒரு குதிரை Prince ஒருவனின் குளவிக்கூட்டு தலையை அசைப்போட்டு கொண்டிருந்தது.

இன்னுமொரு குதிரை Princess ஒருத்தியின் புத்தகத்தை எடுத்து கொண்டு ஓட, அதன் பின்னால் அவள் ஓடிக் கொண்டிருந்தாள்.

சிலர் குதிரைக்கு வைக்கப்பட்ட நீர் வாளியை தலையில் வைத்து கொண்டும், இன்னும் சிலர் குதிரையின் சாப்பாட்டில் நீந்திக் கொண்டிருந்தனர்.

Princess Helena ஐ gentle man royal Jackson இழுத்து விட்ட போது அவள் போய் சேற்றுநில நிலத்தில் விழுந்ததை கண்டு இன்னும் வயிற்றை பிடித்து சிரித்து கொண்டிருந்தனர் Princess rouqelle உம் அவளது நண்பிகளும்.

High school bell அடிக்க, எல்லோரையும் அவர்களது அறைகளுக்கு அனுப்பி விட்டு பெருமூச்சு விட்டார் gentle man royal Jackson.

அறைக்குள் சென்ற Princess Helena நேராக washroom ற்குள் சென்றாள். குளித்துக் கொண்டே அவள் சேற்றில் விழுந்த போது கை கொடுத்து எழுப்பாது தன்னை நோக்கி பற்களை காட்டி சிரித்து கொண்டிருந்த முகங்களை நினைக்க, அவளுக்கு தெரியாமலே கண்களில் இருந்து கண்ணீர் கொட்டியது.

எத்தனை மணித்தியாலங்கள் சென்றது என்றும் தெரியாமல் மனதில் கவலைகள் குறைய அழுது முடித்த பிறகு வெளியே வர, அவளின் ipad ல் அடுத்த பாடத்திற்கான notification வந்திருந்தது.
.
.
.
பாறையின் மீது அமர்ந்திருந்து மழை வர போகின்றது என எதிர்வுக்கூறிக் கொண்டிருந்த தவளையை ஓரே சமயத்தில் குறி வைத்து வாயினுள் கவ்விக் கொண்டது அந்த பாம்பு.

பாம்பின் விஷம் தவளை நரம்புகளினுள் ஊடுருவி செல்ல, அதே போல மக்களின் இயலாமையை குறிவைத்து அடிமைதனத்தை மேலோங்க வைத்திருக்கும் ஆட்சியின் வாசனை அந்த நாட்டின் சுற்று புற சூழலே எடுத்து காட்டியது.

காரிருளும் கரிய மேகமும் சூழ, இராஜளி, கழுகு, ஹைனா மற்றும் ஓநாய்களின் தன்பாட்டுக்கு ஏனைய விலங்குகளை வேட்டையாட தருணம் வரும்வரை  காத்து கொண்டிருந்தது.

ஓநாய்கள் கட்டப்பட்ட வண்டியை ஓட்டியவாறு ஒருவன் வியர்வை கொட்ட கொட்ட அந்த பிரம்மாண்டமான அரண்மனையின் முன்னால் வண்டியை நிறுத்தினான். டொன் கணக்கில் பாரமான முதலைகள் இரண்டை கொண்ட தடாகத்தின் மேலே, முழுவதும் இரும்பினால் ஆன கதவு திறப்பட்டது.

வண்டியில் இருந்து மூவர் இரத்த காயங்களுடன் இறங்கி, விரைவு விரைவாக அரண்மனைக்குள் நுழைந்தனர்.

நடைபாதையை மட்டும் கடந்த மூவருக்கு மூச்சு தட்டியது. அரண்மனை நோக்கி நோட்டமிட, சபையினுள் அனைவரும் கறுப்பு நிற ஆடைகளை அணிந்து இருந்தனர்.

நடுவே சிம்மாசனத்தில் கறுப்பு நிற நீண்ட ஆடையும் முகத்தை மூடும்படியான ஓநாயின் தோலும் ஓநாயின் விலாஎன்புகளால் அமைக்கப்பட்ட நீண்ட தடியும் ஓநாயின் பற்களால் வடிவமைக்கப்பட்ட மோதிரமும் அணிந்த சிவப்பு நிற கண்களுக்கு சொந்தக்காரனான அந்த அரசன் வீற்றிருந்தான்.

அவனின் முன்னால் போகவே பயப்படும் அளவுக்கு பயங்கரமானவன் என்றாலும் பேச வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகினர் மூவரும்.

அதில் ஒருவன் "அரசனே! நம்மால் இதுக்கு மேல் ஒன்றும் செய்ய முடியாது. நம் படைவீரர்களில் முக்கால் வாசி பேர் இறந்து விட்டனர். கால்வாசி பேரில் அநேகமானோர் காயப்பட்டு இருக்கின்றனர்.

உணவும் நீரும் இல்லாமல் அனைவரும் சோர்ந்து போய் விட்டனர். எங்களிடமிருந்த ஆயுதங்களில் அநேகமானவை அழிவடைந்து விட்டன. அம்புகளும் முடிவடைந்து விட்டன. ஆகவே நாம் இந்த யுத்தத்தில் தோல்வியை சந்திக்கும் கட்டத்தில் உள்ளோம். ஆகவே அயல் நாட்டு அரசனின் பேச்சுக்கு பதிப்பளி......." என்று முடிக்கும் முன்பே, அரசனின் ஆள்காட்டி விரல் உயர்ந்தது.

இரு காவலர்கள் அவனை இழுத்து கொண்டு வெளியே செல்ல, அவனை இறுதியாக பார்த்து கொண்டனர் மற்ற இருவரும்.
.
.
.
மாலை நேரத்தில் கூரையின் மீது செதுக்கப்பட்ட சேவல் மேற்கு திசையை நோக்கி நின்றது.

அனைவரும் அழகிய ஆடைகளையும் அணிகலன்களையும் அணிந்து கொண்டு வெளியே yard கு வருகை தந்தனர்.

Princess Helena உம் கீழே இறங்கி வர, அவளின் காதருகில் வந்து சிலர் சிரிப்பலைகளை செலுத்தி விட்டு சென்றனர்...


யாரு இந்த இருண்ட நாட்டின் அரசன்?

அயல் நாட்டு அரசனின் வேண்டுகோள் என்னவாக இருக்கும்?

Princess Helena வுக்கும் இந்த அரசனுக்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா?

Thanks for the votes and comments.
Keep supporting.

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro