38. The end
கயிற்றை வெட்டியதும் எந்த ஒரு மாற்றமுமே நிகழவில்லை. மாறாக முன்னால் இருந்த சாப்பாட்டு மேசையின் மீது பெரிய கட்டை ஒன்று வந்து விழுந்தது.
திடீரென வந்த பெரிய சத்தத்தை நோக்கி அனைவரும் திரும்ப, இதுதான் என்னுடைய இறுதி நாள் என்று கண்களை மூடிக் கொண்டான் prince fred.
அவனையும் தாண்டி மின்னல் வேகத்தில் வந்த வாளொன்று சரியாக அரங்கத்தின் இரு கயிற்றையும் வெட்ட,
அந்த கூடாரத்தின் போர்வை அப்படியே விழுந்து இராணுவத்தினரை மூடிக் கொண்டது.
Prince fred ஐ நோக்கி வந்த காலடி சத்தம் நிற்க, கீழே தலை வைத்து படுத்திருந்தவனை நோக்கி கை ஒன்று நீட்டிப்பட, அவனும் எழுந்து பார்த்தான்.
அங்கே நின்றிருந்த ஒரு உருவத்தை கண்டு வியந்த அவனுக்கு வார்த்தைகள் தடுமாறியது.
"பேயை பார்க்குற மாதிரி பார்க்குற. நான் தான் Stephen. உங்க பக்கம் தான், முதல்ல எழுந்திரு! இப்படியே இவனுங்க இருக்க மாட்டாங்க. கொஞ்ச நேரத்துல வந்துடுவாங்க. So let's move!" என்றவாறு அவனையும் இழுத்து கொண்டு சென்றார் gentleman royal Stephen.
.
.
.
இதற்கிடையில் prince alex உம் princess Helena உம் தங்களுக்குரிய இடங்களுக்கு சென்று, princess Helena தனது கையிலிருந்த smoke portion ஐ அரசன் இருக்கும் இடத்தில் எரிந்தாள்.
புகைமூட்டம் எங்கும் பரவ, வேட்டையில் இறங்கினர் இருவரும்.
.
.
.
Princess Tanya ஓ மேலிருந்து கீழே touch light ஐ அடிக்க, அதுவோ 5 மீற்றர் செல்லும் போதே இருள் அதனை விழுங்கியது.
என்ன பண்ணுறது? என்று அவள் தடுமாற, கோட்டையின் வாயிலில் இருந்த பெரிய வலுமிக்க மின்குமிழ்களின் திசையை அரங்கம் நோக்கி திருப்பியது dragon lion.
இதனால் அரைவாசி அரசர்களின் கைவிலங்குகள் கழன்றது. அதில் அவர்கள் நால்வரினதும் தந்தைகளும் அடங்கினர்.
.
.
.
ஒருவாறு புகைமூட்டத்தை தாண்டி prince Alex செங்கோலை எடுத்து விட்டு princess Helena ஐ தேடினான்.
.
.
.
அரங்க போர்வையை வாள்களால் கிழித்து கொண்டு இராணுவத்தினர் வர, அவர்களை சமாளிக்கவே gentleman royal Stephen னால் பெரிய முயற்சி எடுக்க வேண்டி ஏற்பட்டது.
அதிலும் தன் பையை கட்டிபிடித்து இருந்த prince fred ஐயும் காப்பாற்றும் பொறுப்பும் இருந்தது.
ஆனால் எதிர்பாக்காத விதமாக prince fred ன் பின்னால் வந்த ஒருவன் வாளை நீட்ட, அவனோ பயத்தில் பையை திறந்து வாள் என்ற நினைப்பில் violin ஐ நீட்டினான்.
"அய்யோ! Violin ஐ வைச்சு என்ன பண்ணுறது? ஒருவேளை இவன் இசைக்கு ஏதாவது பிரியமானவன் என்றா நான் violin வாசிக்க, அவன் என்னை விட்டு விடுவான்!" என்ற நினைப்பில் prince fred violin வாசிக்க ஆரம்பிக்க,
முன்னால் இருந்தவனோ மயங்கி விழுந்தான்.
அவனை திரும்பிப் பார்த்த, gentleman royal Stephen "welldone prince fred! அப்படியே வாசி. இது வழமையான சுருதியின் எதிர்மறை. இதனால் இதனை கேட்கக் கூடியவர்களை மயக்கமடைய செய்யலாம். Smart work!
இதோ இந்த ear buds ஐ போட்டு கோ! இல்லையென்றால் நீயும் மயங்கி விழ வேண்டி வரும்." என்று earbuds ஐ கொடுத்தார் gentleman royal Stephen.
உண்மையில் Prince fred ஓ ஏதோ பயத்தில் தவறுதலாக இசைத்தது தான் இதற்கு காரணம். ஆனாலும் அதனை வெளியே சொன்னால் தனக்குள்ள மரியாதையும் போய் விடும் என்ற எண்ணத்தில் கூறவில்லை.
அப்போது தான் அவனுக்கு அந்த sauce பட்ட scroll கும் இதை தான் கூறியது என்று நினைவுக்கு வந்தது.
.
.
.
அரங்கத்தின் கீழே கைவிலங்கு கழன்ற அரசர்களும் நேருக்கு நேரே சண்டையிட, அவர்களுக்கு உதவியாக dragon lion ன் களத்தில் இறங்கியது.
.
.
.
புகை மூட்டம் எங்கும் பரவ,
கிரீடத்தை மெதுவாக பிடித்து தன்பக்கம் எடுக்க முனைந்தாள் princess Helena.
புகைமூட்டத்தினூடாக இன்னுமொரு கை கிரீடத்தின் மறுமுனையை பிடித்திருக்க, சற்று நொடியில் தோன்றியது முழு உருவமும்.
Prince Ryan ஒரு கையில் wine glass உம் மறு கையில் கிரீடத்தையும் பிடித்து இழுத்து கொண்டிருக்க, அவனின் கண்களிலோ புகை நுழைந்து விளையாடிக் கொண்டிருந்தது.
அவனின் நிலையை புரிந்த princess Helena தனது பக்கத்திற்கு வேகமாக கிரீடத்தை இழுக்க, கிரீடமோ அவனின் கையிலிருந்து விடுபட்டு princess Helena உடைய கையில் தஞ்சமடைந்தது.
Prince ryan கோபத்தின் விளிம்பிற்கு சென்றிருப்பதாக அவன் கையை உறுக்கி உடைத்த wine glass ன் துண்டுகள் உள்ளங்கையை துளைத்து இரத்தம் கசிந்தாலும் அதனை பொருப்பெடுக்காததலில் விளங்கியது.
Princess Helena கு இரத்த கைகளை கண்டு மீண்டும் பலமாக தலை வலிக்க ஆரம்பித்தது.
"Helen!" என்று பின்னால் prince Alex கத்த, அவனை princess Helena திரும்பிப் பார்ப்பதற்குள் இரத்தம் வழிந்த கையால் கிரீடத்தை அபகரித்தான் prince Ryan.
ஒரு நொடியில் அனைத்து புகையும் வாஸ்பமாகி போய்விட, அனைவரும் அந்த நொடி உறைந்து நின்றனர்.
அந்த நொடியில் இருள் அரசனின் தலையில் கிரீடத்தை அணிவித்து இருந்தான் prince Ryan.
இருள் அரசன் ஆசனத்தை விட்டு எழுந்து நிற்க, இருள் தேசம் அவனுக்கு மரியாதை செலுத்தியது.
தாம் உயிரையும் பணயம் வைத்து இறங்கிய முயற்சி அனைத்தும் மண்ணாய் போனதை நினைத்து வருந்த, மீண்டும் அடியாட்கள் நால்வரையும் gentleman royal Stephen யும் பிடித்தனர்.
சில நொடியில் கிரீடத்தில் படித்த prince Ryan ன் இரத்த சொட்டு சிவப்பு நிற பளிங்கில் விழ, கிரீடம் மற்றும் செங்கோல் சாம்பலாகி உதிர்ந்து பறந்தது.
"இந்த இரண்டையும் அழிக்கும் ஒரே வழி அணிந்திருக்கும் அரசனின் பரம்பரையிலிருப்பவரின் ஒரு சொட்டு இரத்தமே!" என்று அவ்விரண்டும் சாம்பலாக காரணத்தை gentleman royal Stephen கூற,
அப்போது தான் அன்று queen Margaret கூறிய கதையிலும் இது இருந்ததை ஊகித்து கொண்டனர் நண்பர்கள்.
இருள் மேகங்கள் விலக, இருளை துரத்தி அடித்தப்படி சூரியன் இரதத்தில் வலம் வந்தான்.
ஒளி கதிர்கள் இருள் தேசத்தை மொய்க்க, தாவரங்கள் அடிமைதனத்தில் இருந்து விடுபட்டு தலைநிமிர்ந்து வளர ஆரம்பித்தது.
ஓநாய்களும் ஹைனாக்களும் வெளிச்சத்தை கண்டு மிரண்டு ஓட, மீதி இருந்த அரசர்களின் கைவிலங்கள் கழன்றது.
கோட்டையை உடைத்த வண்ணம் prince Tommy, prince George மற்றும் Richard தலைமை தாங்கிய படை இருள் தேச இராணுவத்தை சுற்றி வளைத்தது.
King Edward மற்றும் prince Alex ன் அப்பா இருள் அரசனையும் அவனின் தந்தையையும் தப்பித்து விடாமல் பிடிக்க, prince Alex prince Ryan ஐ பிடித்தான்.
"இந்த ஆட்டம் இன்னும் முடியவில்லை. இப்போ தான் ஆரம்பம்!" என்று சீறிய prince Ryan வாயில் tissue paper ஐ அமுக்கினான் prince fred.
ஒருவாறு இருள் தேசம் ஒரு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர, இருள் அரசன், அரசி மற்றும் இருள் அரசனின் அப்பாவை royal prison கும் prince Ryan ஐ royal சீர்திருத்த பள்ளிக்கும் அனுப்பி வைத்தனர்.
வேலையெல்லாம் முடிந்து prince Tommy கை கொடுத்து அரவணைத்த இருந்த gentleman royal Stephen ஐ நால்வரும் கண் இமைக்காமல் பார்த்து கொண்டே இருக்க, அதனை புரிந்த அவர் flash back ஐ கூற தொடங்கினார்.
"நான் உண்மையில் prince Tommy ஓட friend. அவன் அவனோட cousin royal high school கு வாரதாக கூறி விசேட கவனம் எடுக்குமாறும் சொன்னான். அதோட உன் photo ஐயும் அனுப்பி வைத்தான்.
அதை வைத்து தான் நான் yoga class ல் முதலாவதாக princess Helena ஐ identify பண்ணிக் கொண்டேன்.
Royal high school இல் யாரையும் தனியாக கவனிக்க முடியாது. எல்லாரையும் சமனாகவே treat பண்ண வேண்டிய கட்டுப்பாடு இருந்ததால் princess Helena ஐ ஒளிவு மறைவாகவே நான் கவனித்து வந்தேன்.
அடிக்கடி prince Tommy உடன் தொலைபேசியில பேசுறத கூட lady royal Alisa சந்தேகத்துல தான் பார்த்தா! அந்த காட்டு பயணம் கூட ஆசைக்காக lady royal Elena கூட போனது இல்லை மாறாக princess Helena வின் பாதுகாப்புக்காக தான் போனேன்.
ஆனால் இங்கு வந்தது என்றால் எப்படியாவது கிரீடத்தையும் செங்கோலையும் மீட்டு கொண்டு வர வேண்டும் என்று தான்." என்று விளக்கமளித்தார் gentleman royal Stephen.
"பொதுவாக சம்பவத்துடன் தொடர்புட்ட எந்த ஒரு பொருளை அல்லது நபரை கண்டால் Helen கு தலை வலியும் கனவும் வரும். அப்போ இதுக்கு ஒன்றும் நீங்க சம்மதம் இல்லை என்றால் எப்படி உங்களை பார்த்ததும் Helen கு கனவு வந்தது?" என்று prince Alex வினவ,
"அது இப்படி கூட இருக்கலாம். நான் gentleman royal Stephen ஐ தனியாக பார்க்கும் போது கனவு வரவில்லை ஆனால் அவர் பிள்ளைகள் கூட வரும் போது தான் எனக்கு கனவு வந்தது. So அதுல prince Ryan உம் இருந்து இருக்கலாமே!" என அக்கேள்விக்கும் பதிலளித்தாள் princess Helena.
அனைத்தும் நல்லபடியாக முடிய, இருள் தேச சுதந்திர காற்றை சுவாசித்தனர் நண்பர்கள்.
ஒரு வாரத்திற்கு பின்...
"அடுத்ததாக இந்த 99 நாட்டையும் இருள் தேச அரசிடமிருந்து மீட்டெடுக்க முயற்சித்த princess Helena, princess tanya, prince Alex, prince fred மற்றும் gentleman royal Stephen கும் இந்த medals உம் கிண்ணமும் பரிசாக வழங்கி கௌரவிக்க அவர்களை அன்புடன் மேடைக்கு அழைக்கிறேன்!" என்று lady royal Alisa announce பண்ண,
ஐவரும் மேடைக்கு வந்தனர். அவர்களுக்கு queen Margaret உம் lady high royal உம் பரிசளித்து கௌரவிக்க, இளவரச இளவரசிகளின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் எழுந்து நின்று கை தட்டி உற்சாகப்படுத்தினர்.
நண்பர்கள் நால்வரினதும் நட்பு எனும் ஆணிவேர் வலுவடைய, அவர்களின் பெற்றோர்களும் சாப தடைகளை மீறி நட்பு எனும் அழகிய உறவில் இணைந்து கொண்டனர்.
The dragon lion prince Alex ன் செல்லபிராணியாகவும் பதவி உயர்த்தப்பட்டது.
Princess Helena ன் மீது எவ்வளவு பொறாமை இருந்தாலும் அவள் நாட்டுக்காக செய்ததை நினைத்து பெருமையடைந்தார் queen Mary.
Lady royal Elena கும் gentleman royal Jackson கும் இனிதே திருமணமும் முடிய, அவர்களின் திருமண பொறுப்பை முழுவதுமாக lady royal Alisa உம் gentleman royal Stephen அன்புடன் ஏற்று நிறைவேற்றினர்.
அப்போ அப்போ royal high school ல் princess Roquelle இனதும் அவளது நண்பிகளினதும் அட்டகாசங்கள் இருந்தாலும் அதனையும் இரசித்து enjoy பண்ணினர் Royal friends நால்வரும்...
The end
கதை முழுவதுமாக எவ்வாறு இருந்தது என்று feedback ஒன்றை comment section ல் போடவும்😁.
Thank you very much for your support my dear friends. Whenever I felt bore to write, I read your comments. It motivated me to write more and more and develop my imaginative ideas!❤
I hope you have enjoyed "Royal friends". If there is anything to say about this story positive or negative, include that in comment box.
Let's meet you all in "platinum hands🦾" in shaa allah. Till then by.
Stay tuned and stay safe!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro