37. The plan
அவளும் எதிர்பாராத செயலில் திகைத்து அவன் இழுத்த திசையிலே இழுப்பட்டு சென்றாள். அடுத்த பக்கத்தில் இருந்து prince Alex அவளை இழுக்க,
ஆனால் prince Ryan ன் பிடியோ பலமாக இருந்தது.
ஆகவே அவளும் அவனுடைய திசையில் செல்ல, முன்னால் இருந்த சிறை கம்பி அவளை தடுத்து நிறுத்தியது.
"என்னடா பண்ணுற அவளை விடு!" என்று மற்ற மூவரும் கத்த,
"இவளை எனக்கு தேவையில்லை. Just இது மட்டும் தான்!" என்று prince Ryan அவளின் கையிலிருந்த பாட்டியின் மோதிரத்தை திறந்து அதனுள் இருந்த சிவப்பு பளிங்கை கையில் எடுத்தான்.
"What? இது என்னது helen?" என்று princess Tanya வினவ,
சற்று யோசித்துப் பார்த்த princess Helena "நாம high school இருந்த போது ஒருமுறை பூங்காவில் போய் தொலைந்து விட்டேன். அந்த நேரம் என் கை ஒரு மரத்தண்டில் கிழிந்தது. எழும்பி பார்க்கும் போது, என் கையில் இந்த பளிங்கு இருந்ததாக என்னிடம் fred கொண்டு வந்து கொடுத்தான். Fred ஞாபகம் இருக்கா?!" என்று princess Helena அதன் மகிமை தெரியாமல் கூறினாள்.
"ஆமா அதே தான்! அந்த பளிங்கு கிரீடத்தில் இருந்து கழற்றப்பட்ட princess Helena ஓட பாட்டியால் ஒளித்து வைக்கப்பட்டது. கிரீடத்தின் இதயமே இந்த பளிங்கு! இதை பற்றி உங்களுக்கு தெரியாதா?
இது இருக்கிற இடம் தெரிந்து அங்க போனேன். ஆனால் அந்த நேரம் பார்த்து princess Helena அதனை எடுத்தாள்.
பின் இது princess Helena விடம் தான் இருப்பதை உறுதி செய்து, GPS ஒன்றை தயார் செய்தேன். எல்லாம் கண்டுபிடித்த பிறகு இறுதியாக, கொள்ளையர்களை அனுப்பி இதனை எடுத்து வருமாறு கட்டளையிட்டேன்.
Anyhow நீங்களே என் கைக்கு கொண்டு வந்து கொடுத்து விட்டீங்க! Thank you so much!
காவலாளிகளே! இவர்களின் கைகளை அந்த விசேட கைவிலங்குகளால் கட்டி முடிசூட்டப்படும் இடத்திற்கு அழைத்து வாங்க!
இவங்க கண் முன்னாடியே மீதி எல்லாவற்றையும் பார்க்கும் பாக்கியத்தை கொடுப்போம்." என்று நமட்டு புன்னகையுடன் prince ryan வருங்கால dark wolf island ன் அரசன் கட்டளையிட்டான்.
அவன் முன்னே செல்ல நால்வரினதும் கைகளையும் கட்ட ஆரம்பித்தனர் காவலாளிகள்.
prince fred ஓ தப்பித்து ஓட முயற்சிக்க,
அவனுக்கு ஒரு உதை கொடுத்த princess Helena கண்களால் சும்மா இரு என்றாள்.
காவலாளிகள் இருவர் முன்னால் இவர்களின் கை தொடராக கட்டப்பட்ட விலங்கை பிடித்து நடக்க,
முன்னால் சென்ற princess Tanya ன் backpack ஐ princess Helena மெதுவாக திறந்து அவளின் portion box ல் இருந்து smoke portion ஐயும் fainting Portion யும் கையில் எடுத்தாள்.
Princess Helena ன் backpack லிருந்து prince Alex சிறிய வாளையும் எடுத்து தனது shirt ன் கையில் மறைத்து கொள்ள, இவைகளை பார்த்து கொண்டிருந்த prince fred ஓ குழப்பத்தில் இருந்தான்.
"டேய் நானும் உங்க கூட தானே இருந்தேன். எப்போடா இப்படி எல்லாம் செய்ய plan பண்ணீங்க!" என்று prince fred வினவ,
அவனுக்கு முன்னால் இருந்த prince Alex "Ryan அவனுடைய வீரதீர சாகசங்களை சொல்ல, நீ வாயை திறந்து பார்த்து கொண்டிருந்த அப்போ தான் நாங்க மூன்று பேரும் இதை plan பண்ணினோம்!"
அதை விடு என் backpack ல இருக்க torch ஐ எடு!" என்றான் அவனுக்கு முன்னால் நடந்து சென்ற prince Alex.
நால்வரையும் முடிசூட்டு அரங்கத்திற்கு சற்று அருகில் ஒதுக்கப்பட்ட இடத்தில் கொண்டு வந்து நிற்க வைத்து பின்னால் 4 காவலாளிகள் நின்று கொண்டிருந்தனர்.
இவர்களின் இடத்திலிருந்து பார்க்க,
முன்னால் இவர்களை போல கைவிலங்கு மூடப்பட்டப்படி 98 அரசர்கள் வரிசையாகவும் நிரல்களாகவும் நிற்பாட்டப்பட்டிருந்தனர்.
அவர்களை சுற்றி வர இருள் தேச இராணுவத்தினரும் அவர்களுக்கு அடுத்து ஓநாய்கள் மற்றும் ஹைனாக்கள் கொண்ட இரதங்களும் வண்டிகளும் தொடராக நிறுத்தப்பட்டிருந்தன.
இவை அனைத்தும் அவர்களை சுற்றி வர இருக்க அரங்கம் மையத்தில் கறுப்பு மற்றும் சிவப்பு நிறத்தினால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.
நால்வரும் நின்றிருந்த நடு அரங்கத்தில் 40 மீற்றர் தூரத்தில் அரசரும் அரசியும் அரசனின் அப்பாவும் prince Ryan உம் நின்றிருக்க, அவர்களுக்கு சற்று பின்னே கூடாரம் ஒன்றில் ஏறத்தாழ 100 வீரர்கள் நின்றிருந்தனர்.
இவைகளையெல்லாம் தாண்டி எப்படி கிரீடத்தையும் செங்கோலையும் எடுப்பது என்பது இயலாத காரியமாகவே தோன்றியது.
இவர்களுக்கு பின்னால் இருந்த காவலாளிகளுக்கு தெரியாத வண்ணம் Princess Tanya prince fred உடைய கையில் இருந்த torch ஐ பறித்தாள்.
என்ன பண்ணுற என்றவாறு prince fred கண்களால் வினவ, "இது விசேட கை விலங்கு. இதை திறக்க திறப்பு கிடையாது. ஒளியால் மாத்திரமே இதனை திறக்க முடியும். இருள் தேசம் எப்போதும் இருளாகவே காணப்படுவதால் இதனை இங்கு பாவிப்பது அதிகம்!" என்று மெதுவாக கூறி,
Torch light ஐ பிடித்ததும் அது தானாக திறப்பட்டது.
"பெரிய சாகசம் பண்ணிட்டா! இது திறந்தால் என்ன? திறங்காவிட்டால் என்ன? எப்படி தப்பிக்கிறது என்று தெரியாம முழிச்சுட்டு இருக்குறோம்!" என்று கடுப்பில் பேசினான் prince fred.
"Wait! இங்க பாரு fred, அந்த இராணுவத்தினர் இருக்கும் கூடாரம் கயிற்றால் கட்டப்பட்ட இருக்கு. அதில் உள்ள இரண்டு கயிற்றை வெட்டினால் அது தானாக கீழே விழுந்து விடும்.
அதுக்குள்ள இதோ இந்த கயிற்றின் உதவியுடன் அரசனுக்கு இடது பக்கத்திற்கு என்னால் செல்ல முடியும். அப்படி போய் செங்கோலை எடுக்க பார்க்கிறேன்.
Helen நீ வலது பக்கமாக போ! கிரீடத்தை எடு." என்று prince alex plan ஐ கூற,
"Wait a minute! இவ்வளவு பேர் இருக்காங்க. அதுவும் அரசனுக்கு இரு பக்கத்துல தான் செங்கோலும் கிரீடமும் இருக்கு. அதை எடுக்கும் போது அவங்க உங்களை பார்க்கத்துட்டு கை கட்டி இருப்பாங்களா?
அதுவும் இந்த 4 காவலாளிகளிடமிருந்து எப்படி தப்பிக்க போறீங்க?" என்று prince fred இவர்களை புரிந்து கொள்ள முடியாமல் வினவினான்.
"அதுக்கும் plan இருக்கு. முதல்ல நீ தான் களம் இருக்க போற. Tanya ஓட fainting portion ஐ பயன்படுத்தி இங்கு இருக்கிற 4 பேரையும் திசை திருப்பி கட்டி விடுவோம்.
நீ போய் கயிற்றை வெட்டு. அந்த கலவரத்துக்கு எல்லோரினதும் கவனம் போய் விடும். நீ அதுக்குள்ள அங்க இருக்கும் மேசையின் கீழ் ஒளிந்து விடு.
பின் நான் என் part ஐ செய்ய போக, அங்கேயும் அதாவது அரசன் இருக்கும் இடத்தில் smoke portion போடப்படும்.
நாங்க இருவரும் face shield போட்டு போகின்றதால் எமக்கு வழி தெளிவாக விளங்கும்.
Tanya இங்கிருந்து கீழே உள்ள அரசர்களின் கைவிலங்கிற்கு torch light ஐ பிடித்து அவர்களை விடுவிப்பர். கிரீடமும் செங்கோலும் கைக்கு வந்த பிறகு விசிலை ஊத dragon lion வரும்.
எப்படியும் சண்டை வர தான் போகிறது. அதுக்கு தான் Ryan ஐயும் கடத்தலாம் என்று எண்ணினோம்.
அரசர்களை விடுவிக்க சொல்லுவோம், இல்லை என்றால் ryan கொல்லுவதாக மிரட்டுவோம்! Mission over!" என்று plan ஐ ஒருவாறு கூறி முடித்தான் prince Alex.
"கேட்க நல்லா தான் இருக்கு! Workout ஆகுமா?" என்று princess Tanya வினவ,
"செய்து பார்க்காம ஒன்னும் சொல்ல முடியாது. Let's try! Quick fred, உன் பையில sword இருக்கு தானே!" என்றவாறு princess Helena கூறி plan ஐ ஆரம்பித்தாள்.
Prince Alex காவலாளிகள் மீது அருகே இருந்த கள்ளி மர செடியில் fainting portion ஐ பூசி வீசினான்.
இதற்கிடையில் prince fred ஓ ஓரமாக சென்று வாய்ப்பு கிடைக்கும் வரையில் ஒளிந்து நின்றான்.
அது பட்டு இருவர் அங்கேயே மயக்க, அவர்களுக்கு என்ன நடந்தது என பார்த்து கொண்டிருந்த மற்ற இருவரின் மூக்கின் அருகில் மயக்க மருந்தை வைத்தனர்.
அவர்களும் மயங்கி விழ அவர்களை கஷ்டப்பட்டு மூவரும் இணைந்து இழுத்து கொண்டு போய் அருகே இருந்த மேசையொன்றின் கீழே படுக்க செய்தனர்.
அதில் ஒருவனின் ஆடையை prince fred கு அணிவிக்க அதுவோ கைகளினாலும் கால்களினாலும் தொங்க ஆரம்பித்தது.
அதுவும் பரவாயில்லை அந்த காவலாளி ஏனோ ஒரு வருடமாக குளிக்கவில்லை என்று காட்டியது அந்த ஆடையில் இருந்து வந்த நாற்றம்.
Fred க்கோ குமட்டிக் கொண்டு வந்தது.
இதற்கிடையில் prince fred தனக்கு ஒதுக்கப்பட்ட இடத்திற்கு செல்ல, prince Alex face shield உடன் கயிற்றின் வழியாக மேலே ஏற ஆரம்பித்தான்.
Prince fred ஓ ஒரு வழியாக ஒரு கயிற்றை அறுத்து முடித்தான். அவனின் மனமோ அடுத்த நொடி முழு கூடாரமும் விழுந்து விடும் என கூறினாலும் இரண்டு நிமிடம் கடத்தும் எதுவும் நடக்கவில்லை...
Prince Alex ன் plan workout ஆகுமா?
Gentleman royal Stephen யார்?
இவர்களால் உலகை காப்பாற்ற முடியுமாக இருக்குமா?
So sorry for the late update. Only one more update to finish this story. As I think I would give the regular update for platinum hands🦾 after the Eid festival.
Stay tuned and keep supporting friends!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro