36. Flash back
"உன் வாயால ஒன்றுமே நல்லது வராதா?" என்றவாறு prince fred முதலில் ஓட்டம் பிடிக்க, மற்ற மூவரும் பின்னால் திரும்பி பார்க்காமல் கைகளை பிடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
மூவரினதும் முகம் வியர்வை துளிகளால் நனைந்து இருக்க, அவர்களின் மனமோ பயத்தினால் ஆட்கொள்ளப்பட்டிருந்தது.
இருள் முழுவதும் அவர்களை சுற்றி வளைக்க, அவர்களால் நினைத்தளவு தூரம் ஓட முடியாமல் போனது.
வேகம் மெதுமெதுவாக குறைய ஆரம்பித்தது. சுற்றிலும் முற்றிலும் பார்த்த prince Alex அவர்களின் திசையை மாற்றுவதற்காக பிரிந்து செல்ல திட்டமிட்டான்.
நான்கு வழிகள் முன்னால் பிரிய நால்வரும் பிரிந்து செல்ல தயாராகினர்.
திடீரென்று அவர்களை ஓநாய்களும் ஹைனா கூட்டங்களும் சுற்றி வளைத்தன.
அவைகளின் இடையிடையே எச்சில் கொட்டும் கூரிய பற்களையும் இழுத்து இழுத்து மூச்சு விட்டப்படி வெறியை காட்டும் முகத்தையும் கண்ட நால்வரினதும் முகத்தில் பயம் தெளிவாக படர்ந்து இருந்தது.
எப்படி தப்பிப்பது? என்ன செய்வது? என்ற கேள்விகள் கூட அவர்களின் மூளையினால் கிரகிக்க முடியவில்லை. கிரகிக்க விடவும் இல்லை அந்த ஓநாய்களின் ஊளைகள்.
பின்னால் இரும்பு ஆடையை அணிந்த முகத்தையும் முழுவதுமாக மூடிய காவலர்கள் பத்து பேர் தனது கூரிய நீண்ட ஆயுதங்களுடன் வந்து பயத்தில் உறைந்து போயிருந்த நால்வரினதும் கால்களையும் கைகளையும் கட்டி அரண்மனைக்கு அதாவது இருள் அரசனின் கோட்டைக்கு கூட்டி சென்றனர்.
போகும் வழியில் அரண்மனையின் வேலைப்பாடுகள் இவர்களின் பயத்தை மேலும் மெழுகூட்டியது. ஆங்காங்கே albino விலங்குகளின் (வெளிறிய விலங்குகள்) தலைகள் தொங்க விடப்பட்டிருந்தன.
அவைகள் யாவும் இவர்களையே கண் இமைக்காமல் பார்த்து கொண்டிருப்பதை போல உணர்ந்தனர்.
இவ்வாறு அரண்மனையை சுற்றி பார்த்து கொண்டு வர, முன்னால் திறப்பட்ட ஒரு அறையின் கதவினூடாக prince Alex சுவரில் தொங்கவிடப்பட்டிருந்த ஒரு புகைப்படத்தை கண்டு திகைத்து போனான்...
.
.
.
சிறிது நேரத்தில் அவர்களை சுரங்க பாதையினூடாக அழைத்து சென்று, இருள் படர்ந்த இரும்புச் சிறையில் அடைக்கப்பட்டனர்.
அவற்றை சுற்றி பார்க்க, அங்கு பல மக்கள் சிறுவர்கள் உட்பட பெண்கள் மற்றும் ஆண்கள் கிழிந்த ஆடைகளை அணிந்து பல நாட்கள் உணவில்லாமல் எலும்புடன் ஒட்டிய தசைகளை கொண்டவர்கள் கண்களில் கண்ணீருடன் நால்வரையும் பார்த்து கொண்டே நின்றிருந்தனர் .
"நம்மலுக்கும் இதே நிலை தான்!" என்றவாறு princess Tanya கீழே அமர,
"என் cupcakes இருந்திருந்தால் இரண்டு நாளைக்காவது சமாளிக்க முடியுமாக இருந்திருக்கும். முதலை எங்க விட்டிச்சு? அனைத்து cupcakes யும் சாப்பிட்ட கண்கொள்ளா காட்சியை நினைக்கும் போது எல்லாம் என் வயிறு எரிகிறது!" என்று princess Helena ன் முகத்தை கோபத்தில் பார்த்தான் prince fred.
"நான் எத்தனை தடவை தான் உன்கிட்ட sorry கேட்குறது? மன்னிச்சுடு டா! நான் அப்படி செய்யாவிட்டால் நீ தான் முதலையிட வாயிக்குள்ள போயிருப்ப!" என்று princess Helena கெஞ்சிக் கூற,
Prince Alex காவலர்கள் சிறையை பூட்டி விட்டு செல்லும் வரை அமைதியாக ஏதோ சிந்தனை ஒன்றில் நின்று கொண்டிருந்தான்.
பின் "Guys! இது எல்லாம் பண்ணது வேறு யாரும் இல்லை Prince Ryan தான்!" என்று prince Alex கூற,
இதனை கேட்ட மற்ற மூவரும் அதிர்ந்து நின்றனர்.
"Prine Ryan ஆ?!" என்று prince fred வினவ,
"ஆமா! நாம கோட்டைக்குள் நடந்து வரும் போது அவனது அறையில் அவனது புகைப்படம் தொங்கவிடப்பட்டிருந்தது!" என்று prince Alex கூறினான்.
"புகைப்படத்தில் இருந்தவன் தான் prince Ryan என்று எப்படி உறுதியாக சொல்கிறாய்?" என்று princess Tanya வினவ,
"ஆமா! அவன் தான் எனக்கு நூறு சதவீதம் தெரியும் அது அவனே தான். நான் நல்லா தான் பார்த்தேன்.
And அவன் அணிந்திருந்த cloak கூட அன்று நாம lady high royal ன் office ற்குள் இரவில் சென்ற போது மரத்தில் இரும்பு கூட்டை கட்டிக் கொண்டிருந்தவன் அணிந்திருந்த இருள் தேச இலட்சினை பொருத்தப்பட்டிருந்த அந்த cloak தான்!" என்று நியாயப்படுத்தினான் prince Alex.
"Are you sure? அவன் அணிந்திருந்ததை போல cloak இந்த இருள் தேசத்தில் நிறையவே இருக்கலாம் தானே! அதை வைத்து இதை prince ryan தான் செய்தான் என்று எப்படி உறுதியாக கூறுவது?" என்று கேட்டு விட்டு ஏதோ ஒன்று நினைவுக்கு வந்ததாக princess Tanya,
"ஒருவேளை அது உண்மையாக கூட இருக்கலாம். Because royal high school registration book ல் prince ryan உடைய நாடு Down fire island என்றே இருந்தது அதாவது dark wolf island கு மிகவும் அருகில் இருக்கும் island தான் அது!" என்று கூற,
"நீ தான் BBC ஆச்சே! பாரு உன்கிட்ட இருந்து ryan தப்பிச்சு இருக்கான். அவனை பற்றிய ஒரு உண்மையான details கூட உன்னால கண்டு பிடிக்க முடியவில்லை. அதை விடு முதல்ல விஷயத்துக்கு வருவோம். ஒருவேளை dark wolf island என்று கூறினால் எடுக்க மாட்டாங்க என்று தெரிந்தோ தெரியவில்லை!" என்று கூறினான் prince fred.
"Prince ryan என்று சொன்ன பிறகு தான் நடந்த அனைத்து நிகழ்வுகளும் ஒன்றோடு ஒன்று தொடர்புருகிறது போல இருக்கு.
Can you remember? நாம queen Margaret ஐ சந்திக்க போன அதே நாள் தான் அந்த புத்தகம் காணாமல் போனது!" என்று princess Helena கூற,
அவள் கூறுவது புரியாமல் "அதுக்கும் prince Ryan கும் என்ன சம்பந்தம் ?" என்று வினவினான் prince Alex.
"Prince Ryan மாத்திரம் தான் queen Margaret ஐ நாம சந்திக்க போன நேரம் அங்கு வரவில்லை. அவனுக்கு தலை வலி என்று வராமல் விட்டதாக princess Roquelle கூறிக் கொண்டிருந்தாள். So அந்த புத்தகத்தை அவன் எடுக்கவும் வாய்ப்பு இருக்கு தானே!" என்று princess Helena கூற, prince Alex ன் சந்தேகம் இன்னும் வலுவானது.
"Hey guys! இன்னும் ஒன்று. நான் அந்த library ல இருந்து புத்தகத்தை எடுத்த அதே இரவு ஒருவன் அங்கு வந்து இருப்பதாக அவனுடைய இரத்த தடங்களை வைத்து சொன்னாங்க தானே!
அதாவது அவரது கை கிழித்து இரத்தம் வந்திருக்கனும் என்று சொன்னாங்க! So அந்த நாளுக்கு பிறகு இருந்து prince ryan கூட நீண்ட கையுள்ள shirt/T shirt தானே அணிந்து கொண்டிருந்தான்." என்று princess Tanya வும் பங்கிற்கு கூறினாள்.
"Tany பாணி! அதே நாள் prince Volker உடைய கைக்கும் கட்டு போட்டு இருந்தான். So எப்படி நம்மலால நீண்ட கை shirt அணிந்ததை வைத்து அவன் என்று சொல்லலாம்?" என்று prince fred இன்னும் நீங்காத சந்தேகத்தில் கேட்க,
மூவரும் இவனும் prince ryan ஒரு ஒற்றனாக இருப்பானோ என்ற வகையில் பார்க்க ஆரம்பித்தனர்.
"இது என்ன பார்வை என்று புரியுது! சரி உங்கட அனுமானங்களை continue பண்ணுங்க. நான் இப்படியே சாய்து உட்கார்ந்து கேட்டு கொண்டிருக்கிறேன்" என்றவேறு கம்பி கதவின் அருகில் உட்கார்ந்தவாறு prince fred கன்னத்தில் கை வைத்து கேட்க, மற்ற மூவரும் தொடர்ந்தனர்.
"அது மட்டுமா! அவன் நாட்டுக்கு திரும்பும் போதும் கூட அவனுடைய நாட்டுல இறங்கவில்லையே! மாறாக prince Volker உடைய நாட்டுக்கு தானே போனான்." என்று prince Alex கூற,
"அந்த செங்கோல் கூட நாம வரைபடத்தை எடுத்த இடத்தில் தான் ஒளித்து வைத்து இருந்தாங்க என்றால் அவனும் நம்மலுக்கு தெரியாமல் நம்ம கூட வந்திருக்க வேண்டும்.
ஒருவேளை அந்த வரைபடத்தை எடுக்கும் போது ஏற்பட்ட பெரிய சத்தம் எங்காவது செங்கோல் வைக்கப்பட்டிருந்த அறை கதவு திறப்பட்ட சத்தமாக கூட இருக்கலாமே. நாம தான் அதை கவனிக்காமல் விட்டோம்." என்று princess Tanya விளக்கினாள்.
"அப்போ அவன் நம்மல கண்காணித்துக் கொண்டே இருந்திருக்கான். இது இவன் மட்டும் செய்யததாக இருக்குமா? அல்லது prince Volker, princess Roquelle உம் சம்மந்தப்பட்டிருக்கலாமா?
ஒருவேளை prince George உடைய கடிதத்திற்கும் prince Ryan கும் ஏதாவது தொடர்பு இருக்குமா? எனக்கு அப்படி இருக்கும் போல என்று தோணுது!" என்று princess Helena கூற,
பின்னாலிருந்து கைதட்டலுடன் ஒரு அவன் தீப்பந்த வெளிச்சத்தில் முகம் தெரிய, நண்பர்களின் சிறையின் அருகில் வந்தான்.
"நீங்க நான்கு பேரும் very smart! ஆனால் அவன் நான் தான். இந்த Prince Ryan தான் என்று கண்டு பிடிக்க அதிக நேரம் எடுத்துட்டீங்க.
நானே உங்கட இறுதி சந்தேகத்தையும் தீர்க்குகிறேன்!
நான் high school கு வரும் போது என் நாடு உங்க அப்பாமார்களின் போரில் ஒன்றன் பின் ஒன்றாக தோல்வியை தழுவி, எழுந்து நிற்க முடியாத வீழ்ச்சியில் இருக்க, அதனை எப்படியாவது மீட்டெடுத்து அழியாத ஆட்சியை நிலைநிறுத்த தாத்தா ஒரு முடிவுக்கு வந்தார்.
நீங்க அந்த library கு போய் புத்தகத்தை எடுத்த அந்த நாள் தான், என் தாத்தா கிரீடத்தையும் செங்கோலையும் பற்றி முழு கதையும் கூறினார்.
அப்போது ஏதோ ஒரு விசித்திரமான புத்தகத்தை எடுத்ததை பற்றி princess Tanya மற்ற இருவரிடமும் பேசிக் கொண்டிருப்பதை கேட்டேன். ஆகவே தாத்தா கூறிய புத்தகத்தையா அவள் எடுத்தாள் என்று அறிய அதே இரவு நான் அங்கே சென்று பார்த்தேன்.
என்னுடைய வருங்கால ஆட்சி அதிகாரம் கடல் மண்ணாக உதிர்ந்து போவது என் கண் முன்னே படமாக ஓட,
வந்த கோபத்தில் கையை ஓங்கி அடிந்தேன். என் கையிலிருந்த காப்பு உடைத்து கையை கிழித்தது. இரத்தமும் வெளியேறியது. அதை மறைக்க தான் நான் அன்றிலிருந்து நீண்ட கையுள்ள ஆடைகளை அணிந்தேன்.
அன்றைய நாளிலிருந்து நான் என் நண்பர்களுக்கு கூட தெரியாமல் உங்க நான்கு பேரையும் மூடாத கண்களால் கண்காணித்துக் கொண்டே இருந்தேன்.
அதாவது என் திட்டம் யாருக்கும் தெரியாது.
அடுத்து அந்த குகைக்கு நீங்க போகும் போது நான் பின்னாலேயே தொடர்ந்து வந்தேன். அந்த dragon lion ஐ prince Alex காயப்படுத்தி இருந்ததால் அதனிடமிருந்து இருந்து இலகுவாக தப்பித்து உள்ளே வந்தேன்.
நீங்க வரைபடம் எடுக்கும் puzzles ஐ தீர்த்தவுடன் எனக்கு பின்னால் இருந்த கதவும் திறப்பட்டது. அதிலிருந்து தான் நான் செங்கோலையும் கைப்பற்றி கொண்டேன்.
பின் கிரீடத்தின் வரைபடம் உங்க கிட்ட இருப்பதாக அறிந்து, தக்க நேரம் வரும் வரை பதுங்கி இருந்தேன்.
அடுத்த நாள் queen Margaret ஐ பார்க்க போன சமயம் அதை சந்தர்ப்பமாக எடுத்து princess Tanya ன் அறையில் புகுந்து வரைப்படத்தையும் புத்தகத்தையும் எடுத்து கொண்டு கிரீடத்தை கைப்பற்ற சென்றேன்.
அதையும் வெற்றிகரமாக எடுத்து விட்டு, அதனை ஏற்கனவே high school தீவு கடலில் நங்கூரமிடப்பட்டிருந்த கப்பலின் கொள்ளையர்களிடம் கொடுத்து விட்டு உங்களோடு இணைந்து ஏதும் தெரியாதது போல இருந்து விட்டேன்.
ஆனால் இதற்கிடையில் இரண்டு முறை உங்க நால்வரையும் போட்டு தள்ளுவதற்கு கூட plan பண்ணி இருந்தேன்.
ஒரு நாள் இரவு நீங்க வழமையாக போகும் வழியில் பெரிய இரும்பு கூடு ஒன்றை வைத்து உங்களை பிடித்து கடலில் போட திட்டம் போட்டேன். ஆனால் எதிர்பாராத விதமாக அதை நீங்களே பாதுகாப்பாக இறக்கி விட்டதை கண்டு கொதித்து எழுந்தேன்.
அடுத்தது அந்த மின்விளக்கை அறுத்து princess Helena ன் மீது விழ வைக்க தீர்மானித்தேன். ஆனால் gentleman royal Stephen தான் குறுக்கே வந்து காப்பாற்றி விட்டார்...
இறுதியாக உங்க ட கேள்விக்கு வருகிறேன்.
Prince George ஐ அவனது skateboard ஐ வைத்து நான் மிரட்டி, princess Helena ன் மீது GPS ஐ பொருத்துமாறு சொன்னேன். அவனும் வேறு வழியின்றி ஒத்து கொண்டான்.
ஆகவே அன்று prince Volker உன்னை தள்ளி விட்ட போது, prince George தான் princess Helena ஐ விழ விடாமல் பிடித்து கொண்டான். அப்போது தான் அவன் அவனுடைய கையிலிருந்த GPS flying wolf எனப்படும் ஒரு gadget ஐ வைத்து விட்டான். பின் அதை உன் tiara ல் இருக்குமாறு programme பண்ணி விட்டான்." என்று தான் செய்தவைகள் அனைத்தையும் கூறி முடிக்க,
"GPS எதுக்கு உனக்கு? எங்களை ஏன் கொல்ல பார்த்த? அது தான் உன்கிட்ட இப்போ எல்லாம் இருக்கே! ஆட்சி இன்னும் கொஞ்ச நேரத்தில் கிடைக்க போகிறதே. இப்போ எங்களை வெளியே விடு!" என்று prince Alex கோபத்தில் கத்தினான்.
"பெரிய hero மாதிரி scene போடாத! நீங்க எல்லோரும் உங்க கண்களால் எனது அப்பாவோட முடிசூட்டு விழாவை பார்க்கனும். இங்கு இருக்கிற மொத்த 99 அரசர்களுடய இறுதி மூச்சையும் பார்க்கனும்.
அதுவும் அது தான் உங்களுடைய இறுதி பார்வையாக அமையனும். என் அப்பாவை ஓட ஓட வெட்டினார் தானே உங்க அப்பா! அதுக்கு எல்லாம் பழி தான் இது" என்று லாவா கண்களில் prince Alex யும் princess Helena யும் சுட்டெரித்து கொண்டிருந்தான் prince ryan.
"இந்த முடிசூட்டு விழாவுக்கு, இந்த அழியாத ஆட்சிக்கு, எனக்கு இன்னும் ஒன்று மட்டும் தான் தேவை! உனக்கு GPS எல்லாம் programme பண்ணிவிட்டதும் princess Helena ஐ மாத்திரம் கொல்ல பார்த்ததற்கும் காரணம் இதை எடுக்க தான்!" என்று prince ryan princess Helena ன் கையை சிறை கம்பிகளின் இடையிலிருந்து பிடித்து இழுக்க,
அவளும் எதிர்பாராத செயலில் திகைத்து அவன் இழுத்த திசையிலே இழுப்பட்டு சென்றாள். அடுத்த பக்கத்தில் இருந்து prince Alex அவளை இழுக்க,
ஆனால் prince Ryan ன் பிடியோ பலமாக இருந்தது...
அவன் prince ryan ஆக இருந்தால் gentleman royal Stephen யார்?
Prince Ryan ஏன் princess Helena ன் கையை இழுத்தான்?
நண்பர்களால் தப்பிக்க முடியுமாக இருக்குமா?
Thanks for the votes and comments.
Keep supporting.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro