Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

35. Inside

"இவ வேறு call பண்ணி பண்ணி தொலைக்கிறாளே!" என்றவாறு தனது தொலைபேசியை எடுத்து gentleman royal Stephen காதில் வைக்க,

அடுத்த பக்கத்தில் இருந்த lady royal Alisa ஓ உச்ச சுருதியில் வசைபாடிக் கொண்டிருந்தார்.

"Calm down honey! நான் நாளையே அங்கு வந்து விடுவேன்...please நான் சொல்றதை கொஞ்சம் நிதானமா  கேளு!" என்று gentleman royal Stephen கெஞ்ச, அவரோ விடுவதாக இல்லை.

"சரி நான் உண்மையையே சொல்றேன் கேளு!" என்று gentleman royal Stephen கூற, அவரும் அமைதியானார்.

"உண்மையில் நான் தான்..." என்று கூற வரும் போது, அறையின் வெளியே "பேரன்! பேரன்! எங்க இருக்க?" என்று இருள் தேச அந்த கிழவனின் சத்தம் வர,

gentleman royal Stephen தனது அழைப்பை துண்டித்து விட்டான்.

"நான் இங்கு தான் இருக்கேன் தாத்தா! நமக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்து இருக்கு. போன கொள்ளையர்களை திரும்பி வர சொல்லுங்க!" என்று சந்தோச பார்வையில் கூறினான் கிழவனின்  பேரன்.
.
.
.
"ஆ!" என்று மெதுவாக கூறிய வண்ணம் princess Helena தனது தலையை பிடிக்க, அவளை காணாவிட்டாலும் அவளின் சத்தத்தில் அவளுக்கோ ஏதோ என்று அறிந்த கொண்ட நண்பர்கள்,

"Helen! What happened?" என்று அவள் இருக்கும் இடம் அறியாமல் சுற்றி வர பார்த்து கொண்டே கேட்டனர்.

"Don't worry I'm ok! அந்த கனவு எனக்கு திரும்பவும் வந்தது. அது தான் தலை வலிக்கிறது. பரவாயில்லை let's move!" என்று தலையை பிடித்த வண்ணமே princess Helena கூற,

நண்பர்கள் மீண்டும் மீண்டும் அவளை வலியுறுத்தி கேட்டனர்.

"Guys I'm ok! Let's move. நமக்கு நேரம்  இல்லை. எல்லோரும் கையை பிடிச்சு கொள்ளுங்க! அதோ தெரியுதே அது தான் பிரதான வாயில் அதனுள் நுழைவது தான் இப்போதைய plan" என்று princess Helena கூற,

நால்வரும் கையை பிடித்த வண்ணம் மெதுமெதுவாக சத்தங்கள் காட்டாமல்  திறந்த பிரதான வாயிலினுள் நுழைந்தனர்.

ஆயிரம் வெளிச்ச வட்டங்கள் அவர்கள் மீது வருடிச் சென்றாலும் காவலர்களுக்கு இவர்கள் கண்ணுக்கு படவில்லை.

உள்ளே நுழைந்தவர்கள் பெருமூச்சு விட, "guys அதோ ஒரு 500 m தூரத்தில் இருக்கும் அந்த பிரம்மாண்ட கதவு தான் இருள் தேச அரண்மனையின் கதவாக இருக்க வேண்டும்!" என்று prince Alex கூற,

"ஆமா! அந்த கதவு இருள் தேசத்தில்  எங்கிருந்தாலும் தென்படும் என்று என் dad கூட சொல்லி இருக்காரு!" என்றாள் princess Tanya.

"Ok let's move! Hey! fred ஓட சத்தமே இல்லை. ஒருவேளை அவன் கீழ எங்கயாச்சும் விழுந்து காணாமல் போய்ட்டானா?" என்று princess Helena வினவ,

"பெரிய தொல்லை போய்றிச்சு! காசு கொடுத்தும் பண்ண முடியாத காரியம். இப்போ தான் நான்  நிம்மதியாக இருக்கேன்!" என்று princess Tanya தன்னை ஆசுவாசப்படுத்தி கொள்ள,

அருகில் இருந்து பலமான அடி ஒன்று அவளின் முதுகிற்கு விழுந்தது. "ஆஆஆய்!" என்று அவள் கத்த, "நான் உன் அருகில தான் இருக்கேன். அவ்வளவு சீக்கிரமா உன்னை சுதந்திரமாக இருக்க விடமாட்டேன்!" என்று சிரித்தான் prince fred.

"சத்தம் போடாதீங்க! யாரோ வாராங்க!" என்று prince Alex எச்சரிக்கை விட, அனைவரும் தங்கள் நிற்பது யாருக்கும் தெரியாது என்ற நம்பிக்கையுடன் சற்று வீதியை விட்டு தள்ளி நின்றனர்.

ஓநாய்கள் பூட்டப்பட்ட வண்டி வேகமாக அவர்களின் திசையில் வர, அவர்களின் கால்களோ அவர்களின் அனுமதி இல்லாமல் நடுங்க ஆரம்பித்தது.

வண்டி வந்த வேகத்தில் அவர்களை தாண்டிச் சென்றாலும் கரடுமுரடான பாதையில் தேங்கியிருந்த நீரினுள்  வண்டியில் சில்லு வேகமாக சென்று வர, முழு நீரும் நண்பர்களின் மேனியில் வந்து மெய்த்தது.

நீர் பட்ட அடுத்த நொடியே அவர்கள் தென்பட ஆரம்பித்து விட்டனர்.

"Guys! நாம தெரியுறோம். வாங்க போய் ஒளிந்து கொள்வோம்" என்று prince fred மற்றவர்களை இழுத்து கொண்டு போய் புதர் ஒன்றின் பின்னால் ஒளிந்து கொண்டான்.

"என்ன பண்ணுறது? எப்படி அரண்மனைக்குள்ள நுழையுறது? disappearing portion உம் முடிச்சுறிச்சே!" என்று சோகமாக தரையில் அமர்ந்த வண்ணம் princess Helena கூற,

புதரிலிருந்து முன்னால் யாராவது வருகிறார்களா? என்று நோட்டமிட்டு பார்த்த princess Tanya, பின்னால் திருப்பினாள்.

"நம்மலுக்கு பின்னால் ஆறு இருக்கு!" என்று மலர்ந்த முகத்தோடு princess Tanya கூற,

"அதுக்கு? இறங்கி குளிக்க போறியா?" என்று கேட்டான் prince fred சடக்கென்று!

"Fred bread! நான் என்ன அவ்வளவு முட்டாளா? இந்த ஆற்றின் நீர் அரண்மனையை சுற்றி இருக்கும் நீர் தடாகத்துக்கு செல்லுது! And  அங்கு பாரு, படகு ஒன்றும் இருக்கு! ஆறு முழுவதும் பெரிய பெரிய புற்கள் வளர்ந்து இருக்கு அதோடு இங்கு இருளாக இருப்பதால நாம யாரு கண்களுக்கும் படாமல் மெதுவாக படகில் ஏறி போகலாம்!" என்று தனது idea ஐ கொடுக்க,

அவளின் முதுகில் மீண்டும் ஒரு அடி விழுந்தது. "Superb Tany பாணி. உனக்கும் மூளை இருக்கு. கொஞ்சம் தூசி தட்டி எடுத்தால் இதை விட நல்லா இருக்கும்!" என்று கூறிக் கொண்டே படகு இருக்கும் திசையில் செல்லும் princess Helena உடனும் prince Alex உடனும் சேர்ந்து கொண்டான்.

படகை மரத்தோடு கட்டப்பட்டிருந்த கயிற்றை prince Alex தனது வாளினால் அறுத்து விட, prince fred துடுப்பினால் கப்பலை செலுத்தினான்.

Binocular ஐ எடுத்து princess Helena நோட்டமிட்டு கொண்டிருக்க, தனது பையை திறந்து blanket ஒன்றை எடுத்து அதனை தனது முழு மேனியும் மூடிபடுமாறு மூடி  தூங்க ஆரம்பித்தாள் princess Tanya.

"லூசு! என்ன பண்ணுற? எழுந்திரு!" என்று தனது துடுப்பினால் prince fred அவளை அடிக்க, அவளும் எதிர்பாராத அடியில் எழுந்து நின்றாள்.

அவள் எழுந்த விசையில் படகு இரு திசைகளும் அசைந்து ஆற்றில்
சலனத்தை உருவாக்கியது.

ஆற்றங்கரையில் இளைபாறிக் கொண்டிருந்த காவலன் ஒருவன், கரையொதிங்கிய அலைகளின் வேகத்தை வைத்து ஏதாவது ஒன்று ஆற்றில் பயணிக்கிறது என்பதை ஊகித்து, அதனை நோக்கி தனது கையிலிருந்த தீபந்ததை நீட்டினான்.

உடனே செயல்பட்ட prince Alex princess Tanya ன் blanket ஐ எடுத்தான்.

அனைவரையும் படகின் தரையில் படுக்க கூறி, படகு மேற்பரப்பில் blanket ஐ விரித்து மூடினான்.

ஆகவே காவலனுக்கு அந்த படகு யாருமில்லாமல் தனியாக மிதந்து கொண்டிருப்பதாகவே விளங்கியது.

ஆற்று நீரை குடிக்க வந்த ஓநாய்களின் விளையாட்டாலே அலைகள் உருவாகி இருக்க வேண்டும் என்று அவன் நினைத்து கொள்ள, அரண்மனையில் அடிக்கப்பட்ட மணி ஒலியை கேட்டு அவன் அவ்விடத்தை விட்டு சென்றுவிட்டான்.

அவனை blanket ஊடாக பார்த்து கொண்டிருந்த prince Alex அவன் சென்றதும் நண்பர்களிடம் தெரிவித்தான்.

"இரண்டு பேரும் கொஞ்சம் பேசாமல் வாரீங்களா? நம்மல அவங்க கிட்ட மாட்டி கொடுக்கும் வரை இரண்டு பேருக்கும் தூக்கம் போகாதா?" என்று princess Helena ஏச,

அவளின் ஏச்சை ஒரு பொருட்டாக கருதாத princess Tanya ஆற்றையே உன்னிப்பாக பார்த்து கொண்டிருந்தாள்.

"ஒரு மாட்டுக்கு ஒரு சூடு. இவளுக்கு அதுவும் இல்லை!" என்று prince fred உம் அவளை ஏசி முடிக்க,

அவளோ ஆற்றை பார்த்த வண்ணம் அருகில் இருந்த prince Alex ஐ குலுக்கி கொண்டே இருந்தாள்.

அவனும் விடு விடு என்றாலும் தொடராக அவனை ஆட்டிக் கொண்டிருந்ததால் தொல்லை தாங்க முடியாமல் அவள் பார்க்கும் திசையில் இவனும் பார்த்தான்.

"மு..மு..மு...முதலை....முதலை....முதலை...." என்று prince Alex கத்த ஆரம்பிக்க, prince fred உம் princess Helena உம் படகின் ஓரத்தில் வந்து எட்டி பார்த்தனர்.

ஆற்றின் மேற்பரப்பில் தனது கண்களையும் இரையை கிழிக்கும் பற்களை பதித்த வாயையும் காட்டியவாறு நான்கு முதலைகள் இவர்களை வேட்டையாடுவதற்காக வந்து கொண்டிருந்தன.

"Fast fast!" என்று துடுப்பை இரட்டை வேகத்தில் prince Alex செலுத்த, மூவரும் அந்த வேகத்தில் படகின் பின் பகுதிக்கு இழுப்பட்டு போய் விழுந்தனர்.

Prince fred உடைய பை திறப்பட, அதிலிருந்து அவனின் cupcakes விழ ஆரம்பித்தது.

"No no! Slow down...என்... என்... என் cupcakes! My cupcakes!" என்று அவை ஆற்றில் விழாமல் தடுப்பதற்காக அவனும் ஆற்றில் பாய முனைந்தான்.

"என்னடா suicide பண்ண போறா? அதுவும் cupcake காக?" என்று அவனை இழுத்து படகில் உட்கார வைத்து princess Tanya, அவனை சுய நினைவுக்கு கொண்டு வர முயற்சித்து கொண்டிருக்க,

"உன் பையை தா!" என்று prince fred ன் அனுமதி இல்லாமல் அதனை இழுத்து எடுத்த princess Helena, அதனுள் இருந்த cupcakes ஐ நாலாபக்கமும் வீசினான்.

"He...Helena...Helena என்ன பண்ணுற?" என்று prince fred ஏதோ தவறான காரியம் செய்ததை போல திகைப்படைந்து கேட்க,

princess Tanya உம் அவளை கேள்வி பார்வையில் பார்த்தாள்.

"அங்கு பாருங்க! அந்த முதலைகள் cupcakes ஐ சாப்பிடுது. அவைகளுக்கு இதன் ருசி விளங்கி இருக்கு! இது தான் தப்பிக்க ஓரே வழி!" என்று காட்டி கூறிய princess Helena தொடர்ந்து,

"Alex நீ வேகமாக ஒரு கரைக்கு போ! நான் எப்படியாவது இந்த cupcakes ஐ வைத்து முதலைகளை திசை திருப்ப பார்க்கிறேன்!" என்று கூறி cup cakes ஐ இயன்றவரை தூரத்திற்கு வீசினாள்.

ஒவ்வொரு cupcakes உம் ஆற்றில் விழும் போது prince fred ன் மனதிலோ ஒவ்வொரு பாறாங்கற்கள் விழுவதை போல உணர்ந்தான்.

அவையும் cupcakes வீசப்பட்ட திசையை நோக்கி திருப்பி சென்றன. அதே சமயம் Alex உம் ஓர் கரையோரமாக கப்பலை கொண்டு வந்து நிறுத்தினான்.

கஷ்டப்பட்டு பல அடிகளுடன் கரை இறங்கியவர்கள் பெருமூச்சு ஒன்றை விட்டனர். ஆனால் பாவம்! cupcakes ஐ இழந்து கவலையிலிருந்து இன்னும் prince fred மீண்டு வரவில்லை.

அவனை princess Helena தேற்றி கொண்டிருக்க, prince Alex ஓ "நாம ரொம்ப அருகில் வந்து விட்டோம். அதோ தெரியுது அரண்மனை!" என்று கூற, அனைவரும் அதனை நோக்கி பார்வையை செலுத்தினர்.

அதனை பார்த்த princess Helena கு அதே கனவுகள் அதே அலைகளில் கண் முன் வரவே, இந்த முறை அவளுக்கு பலமாக தலை வலி வந்தது.

கஷ்டப்பட்டு கண்களை திறக்க முன்னால் போக வேண்டிய பாதையை பார்த்தாள். அந்த இடம் அவளின் கனவுகளில் வந்த அதே மயான பூமி! எங்கும் இருள்...இருள் மாத்திரம் ஆட்சி செய்து கொண்டிருந்தது.

"Helena are you ok? Helena? இந்த முறை உண்மையை சொல்லு!" என்று prince  Alex கண்டிப்பாக வினவ,

"இந்த இடம்... நான் கண்ட கனவுலும் இருந்தது. இதே இடம்...இதே இருள்...! ஆனால் இந்த இடத்தில் தான் என்னையும் இன்னும் மூன்று பேரையும்..." என்று, அவளுக்கு கனவில் princess Tanya அணிந்திருந்த அந்த bracelet நினைவுக்கு வர அதனை பார்த்தாள்.

அதுவும் அவள் அன்று புத்தகத்தை அருகில் கண்ட போது வந்த கனவிலும் அதனையே அவள் அணிந்திருந்தாள்.

"இந்த bracelet போட்டு இருக்கும் Tanya, fred மற்றும் இன்னும் ஒரு நபர் அதாவது இப்போ நம்ம கூட இருக்கிற alex...எங்களை இந்த இடத்தில் வைத்து ஓநாய் கூட்டம் திரட்டிக் கொண்டு வருவது போல தான் கண்டேன்...!" என்றது தான் கடன்,

அவர்களின் பின்னால் ஓநாய்கள் வருவதாக அவைகளின் ஊளைகள்  சமிஞ்சை கொடுத்து கொண்டிருந்தது.

"உன் வாயால ஒன்றுமே நல்லது வராதா?" என்றவாறு prince fred முதலில் ஓட்டம் பிடிக்க, மற்ற மூவரும் பின்னால் திரும்பி பார்க்காமல் கைகளை பிடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர்...

ஓநாய்கள் அவர்களின் அருகருகில் வருவதை அரண்மனை மேல் மாடியிலிருந்து வெவ்வேறு அறைகளிலிருந்து பார்த்து கொண்டிருந்தன வெவ்வேறு இரு சோடிக் கண்கள்....



நண்பர்கள் ஓநாய்களிடம் மாட்டி கொள்வார்களா?

அந்த இரு சோடி கண்களுக்கு சொந்தமான இரு நபர்கள் யாவர்?

Princess Helena கண்ட கனவில் அனைத்தும் நிகழுமா?

Thanks for the votes and comments.
Keep supporting.

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro