34. Fly to the dark wolf island
"Helen! தள்ளி இரு. ஏதோ ஒரு பயங்கரமான விலங்கு அது!" என்று தனது வாளை எடுத்து the dragon lion ன் பக்கத்திற்கு prince Tommy நீட்ட,
"Don't hurt the dragon lion. அது நம்மலுடைய நண்பன். Tommy தயவு செய்து அதனை விடு!" என்று வாளை நீட்டிய கையை கீழே இறக்க முயன்றவாறு கூறினாள் princess Helena.
அவளது நண்பர்களும் dragon lion ன் மீது இருந்து prince Tommy எட்டி பார்த்தனர்.
"என்ன பண்ண போற Helen? நீ இங்கு நண்பர்கள் ஓட விளையாடிட்டு இருக்க, அங்கு அரசர்களை இருள் அரசன் கடத்திட்டு போயிருக்கான். Mummy கூட அழுதுகொண்டு இருக்காங்க! ஆனால் நீ..." என்று தன்பாட்டுக்கு prince Tommy திட்டிக் கொண்டிருக்க,
"எனக்கு எல்லாம் தெரியும் Tommy. நம்மால் தான் இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலை உருவாகி இருக்கு. அதனால் இதனை நம்மலயே சரி செய்ய பார்க்கிறோம். விளக்கமாக சொல்வதற்கு எனக்கு நேரம் இல்லை Tommy. நான் வந்து சொல்கிறேன். என்னை நம்பு! Please என்னை போக விடு" என்று உறுதியாக princess Helena கூறிக் கொண்டே dragon lion ன் அருகில் சென்றாள்.
"Helen wait!" என்று prince Tommy அவளை மீண்டும் அழைக்க, அவளும் என்ன என்றவாறு அவனை பார்த்தான்.
"நீ போகும் இடத்துக்கு இவை தேவைப்படும்!" என்று composs ஒன்றையும் அரண்மனை தீ பிடித்த போது எடுக்கப்பட்ட princess Helena ன் இரசாயன பொருட்கள் அடங்கிய பையையும் கொடுத்தான்.
நன்றி கூறிய princess Helena, "Mummy கிட்ட சொல்ல வேண்டாம். அவங்களை கவனமாக பார்த்து கொள். நான் சீக்கிரம் வருவேன். Trust me!" என்று கூறி, dragon lion ன் மீது ஏறி அமர்ந்து கொண்டாள்.
நால்வரும் இருள் தேசத்தை நோக்கி பறக்க, இந்த முறை எதிர்பார்ப்பின் பார்வையில் அவர்கள் செல்வதையே பார்த்து கொண்டிருந்தான் prince Tommy.
"Tanya, map ஐ பார்த்து எந்த திசையில் போக வேண்டும் என்று கூறு, Helena நீ தான் அந்த திசையை composs ல பார்த்து கூற வேண்டும்!" என்று dragon lion ஐ ஓட்டிய வண்ணம் prince Alex கூற,
"Guys! just 20 minutes ல போக ஒரு குறுக்கு வழி இருக்கு. அதில் நாம போவோம். இப்படியே வடக்கு திசையில் போக வேண்டும் கிட்ட தட்ட 800 மீற்றர் தூரத்தில் Icy slide island இருக்கும்!
Fred, நீ உன் binocular ஐ வைத்து அந்த island கொடியை கண்டுபிடிக்கனும். அங்கிருந்து N 49° W கு திரும்பினால், 3km தூரத்தில் இருள் தேசம் இருக்கு.
Fred உனக்கு icy slide island ட கொடியை தெரியுமா? அதுல..." என்று princess Tanya கூறிக்கொண்டே செல்ல,
ஐந்து விரல்களையும் அவள் முகத்தின் முன் காட்டி அவளின் பேச்சை நிறுத்தியவன், "I know! அங்கு தான் எனக்கு விருப்பமான freeze ice cola உம் dizzy ice cream cone உம் இருக்கு. அதனால எனக்கு நன்றாகவே தெரியும். அவங்கட கொடியில் polar bear ice cream குடித்து கொண்டு இருக்கிறது தானே இருக்கு!" என்று தனக்கும் சில பொது அறிவு இருப்பதாக நிரூபித்தான்.
"உங்க இரண்டு பேருக்கும் நிறைய general knowledge தெரியும் என்று எனக்கு தெரியும். இப்போ நாங்க போற வழிய பார்ப்போம்!" என்று கண்களை உருட்டியவாறு princess Helena கூற,
Prince fred ஓ dragon lion ன் வயிற்று பகுதி வரை தலையை குனித்து, ஒரு கையில் binocular உடனும் மற்ற கையில் cup cake உடனும் icy slide island ஐ அவதானித்து கொண்டே வந்தான்.
சிறிது நேரத்தில் "eureka eureka!" என்று prince fred கைகளை உயர்த்தி கத்த, மற்ற மூவரும் பயந்து போனர்.
"உனக்கு ஏதாவது பேய் பிசாசு பிடிச்சிரிச்சா? நாம மயான தீவை கடக்கவே இல்லையே! இல்லை தலையை தொங்க போட்டு வந்ததால மூளை கலங்கி போச்சா?" என்று princess Tanya அவனை உலுக்கி கேட்க,
"Very funny! இதை கேட்டு நான் சிரிக்கவா? Tany பாணி, நாம icy slide island கு மேலால தான் பறந்துகிட்டு இருக்கோம்!" என்று prince fred கீழே காட்ட, மற்ற மூவரும் அந்த திசையை பார்த்தனர்.
"Tanya! இப்போ வழியை சொல்லு!" என்று prince Alex கேட்க,
"N 49° W கு போகனும்!" என்று princess Tanya தனது வரைபடத்தை பார்த்து கூறினாள்.
முன்னால் இருந்த princess Helena தனது composs ஐ வைத்து சரியான திசையை காட்ட, prince Alex அந்த திசையில் பயணித்தான்.
சற்று நேரம் கடக்க,
"Guys, நமக்கு ஒரு பிரச்சினை!" என கண்கள் விரிய கூறினாள் princess Tanya.
"What?" என்று பின்னால் திரும்பி prince Alex வினவ,
கீழே பார்த்த princess Helena ன் உதடுகள் "Death mangroves island!" என்று உச்சரித்தன.
அதனை கேட்ட, princess Tanya வுக்கும் prince Alex க்கும் பயம் தொற்றிக் கொண்டது.
பேய் அறைந்ததை போல நின்ற மூவரையும் பார்த்து பயந்து போன prince fred, "இந்த இடம் உங்களுக்கு முதலிலே தெரியுமா?" என்று வினவ,
"ஆமா! யாரும் இந்த island ஐ தாண்டி போக மாட்டாங்க. ஏனென்றால் இங்கு இருக்கிற ஆதிவாசிகள் தாங்கள் உயர்ந்தவர்கள் என்றும் அவங்கட அனுமதி இல்லாமல் யாராவது தீவை தாண்ட முயன்றால் அவர்கள் மீது தாக்குதல் நடத்தி கொலை பண்ணுவதாகவும் என் dad சொல்லி இருக்காரு!" என்று கூறினான் prince Alex.
"இவங்க ரொம்ப மோசமானவங்க, எவருக்கும் அனுதாபங்கள் கூட காட்ட மாட்டாங்க! இப்போ நாம என்ன செய்யுறது? வரைபடத்துல இது தான் ரொம்ப குறுகிய தூரம் என்று இருந்ததே! அதுல வேறு நாம அரைவாசி தூரமும் வந்து விட்டோம்!" என்று princess Tanya கூற,
ஏதோ கீழே இருந்து வேகமாக நேராக வந்து இவர்களை தாண்டி மேலே சென்றது. "What's that? Jet ஆ?" என்று கீழே குனிந்து prince fred பார்க்க,
அவனின் மூக்கை இலேசாக உரசிப்பட்டவாறு சென்றது ஒரு அம்பு!
"நம்மல தாக்குறாங்ககககககக!" என்றவாறு உரக்க கத்தி கொண்டு dragon lion ன் மீது அங்கும் இங்கும் பாய்ந்து தலையை காப்பாற்ற முனைந்தான் prince fred.
அடுத்த சில செக்கன்களில் ஆயிரக்கணக்கில் அம்புகள் dragon lion ஐ நோக்கி வர, prince Alex தன்னால் முயன்றளவு dragon lion யும் அதன் மீது பயணிப்பவர்களையும் காப்பாற்றுவதற்காக பலவாறு பல திசைகளில் அதனை ஓட்டி கொண்டிருந்தான்.
Princess Helena தனது பையை திறக்க, princess Tanya உம் அவளது அருகில் அமர்ந்து என்ன செய்ய போகிறாய் என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு கொண்டிருந்தாள்.
"நான் சொல்வதை செய்!" என்றவாறு princess Helena தனது பழைய பை அதாவது prince Tommy கொடுத்த பையிலிருந்து சில குப்பிகளை வெளியே எடுத்தாள்.
அந்த பையில் இருந்து புத்தகத்தை எடுத்து சில பக்கங்கள் புரட்டி, இறுதியில் சிவப்பு, நீல, பச்சை நிற திரவங்களை ஒரு நீண்ட குப்பியில் ஒன்றாக கலந்தாள்.
Prince Alex dragon lion ஐ ஓட்டிய விதத்தில் குப்பியிலிருந்து சில துளிகள் கீழே விழவும் மறக்கவில்லை.
திறக்கப்பட்ட புத்தகத்தின் பக்கத்தை பார்த்த princess Tanya, "வானவெடி யா? எதுக்கு இப்போ அதை தயாரிக்கிற?" என்று சத்தமாக princess Tanya வினவ,
அவளின் கையில் நீண்ட குப்பியை கொடுத்த princess Helena அதனுள் மேலும் இரு நிற திரவங்களை ஊற்றினாள்.
பின் அதனை எடுத்து நன்றாக கலந்தவள், அவசர அவசரமாக குப்பியிலிருந்த திரவத்தை dragon lion ஐ சுற்றி வர வெளியே கொட்டி விட்டாள்.
அதுவோ ஒவ்வொரு நிறத்தில் பல வகையான வான வெடிகளாக வெடித்தது.
அவற்றின் நிறங்களாலும் புகையினாலும் கீழே இருந்தவர்களால் முறையாக இவர்களை நோக்கி குறி வைக்க முடியாமல் போனது.
ஆகவே விரைவாக செயல்பட்ட prince Alex, மின்னல் வேகத்தில் dragon lion ஐ பறக்க விட்டான்.
"Well done Helena!" மூவரும் அவளை பாராட்ட, இந்த வான வெடிகளால் தான் அன்று அரண்மனை தீ பற்றி எரிந்தது என்று கதை கூறிக் கொண்டிருந்தாள்.
சில நிமிடங்களில் அவர்கள் நால்வரும் இருள் தேசத்தின் எல்லைக்குள் நுழைந்து விட்டனர்.
அரசர்கள் கடத்தப்பட்டு அங்கே வைத்திருப்பதால், இருள் தேசம் முழுவதும் பாதுகாப்பு பல மடங்கு பலப்படுத்தப்பட்டு இருந்தது.
சுற்றி வர light house ன் விளக்குகள் தரையை நோக்கியும் வானை நோக்கியும் வெளிச்சம் விட்டு கொண்டிருந்தன.
ஆகவே இதுக்கு பிறகும் Dragon lion மீது செல்வது உகந்ததல்ல என்று எண்ணிய நால்வரும் தங்களது பைகளுடன் இறங்கினர்.
Dragon lion ஐ அங்கிருந்து திருப்பி அனுப்பியவர்கள் உள்ளே செல்வது எவ்வாறு என்று யோசித்து கொண்டிருக்க,
Princess Helena தனது பையை திறந்தாள். "Helena ஏன் இங்கும் வானவெடி போட போறியா? இங்கு போட்டால் அடுத்த நிமிடம் சமாதி நம்மலுக்கு தான் கட்ட வேண்டி வரும்!" என்று prince fred பேசி கொண்டு செல்ல,
அவனின் வாயை தன் கையினால் இறுக மூடினாள் princess Tanya.
பையிலிருந்து ஒரு பெட்டியை எடுத்தவள், அதனை திறந்து ஒரு குப்பியை வெளியே எடுத்தாள்.
"இது நாம lady high royal ட locker ல இருந்து எடுத்து வந்தது!" என்று நால்வரினதும் தலைகளின் மீதும் சில துளிகள் princess Helena இட, நால்வரும் மறைந்து போனர்.
"Hey guys! Guys! எங்க இருக்கீங்க? என்னை தனியாக விட்டுட்டு போய்ட்டீங்களா? நான் இங்க வர முடியாது முடியாது என்று சொன்னேன். ஆனால் நீங்க தான் என்னை இழுத்து கொண்டு வந்தீங்க. இப்போ விட்டுட்டு போய்டீங்க!" என்று மற்றவர்கள் முன்னால் இருந்தாலும் விளங்காத prince fred சிறு பிள்ளை போல அழ ஆரம்பித்து விட,
"டேய் இது disappearing portion டா! நாம அருகில் இருந்தாலும் இருக்காத மாதிரி தான் விளங்கும்! உன் கை கூட உனக்கு விளங்காது" என்றாள் princess Helena.
"Wow! பாருங்களே! நாம எப்போவோ திருடினது இப்போ உபயோகபடுகிறது." என்று princess Tanya கூற,
"Guys, ஆனால் எனக்கு தெரிந்த வரையில் இந்த portion தண்ணீர் படும் வரையில் தான் வேலை செய்யும். ஒரு வேளை எங்கள் மீது தண்ணீர் பட்டால் நாம மாட்டிக் கொள்வோம். So be careful!" என்று prince Alex கூறினான்.
ஆகவே நால்வரும் இன்னும் நேரம் கடத்தாமல் இருள் தேசத்தின் உள்ளே செல்ல, அதே கனவுகள் அலைகளாக princess Helena ன் கண்களுக்கு முன் ஓட ஆரம்பித்தது...
.
.
.
"What? இது எப்படி?" என்று அதிர்ந்து நின்றான் அவன்!
Dragon lion ஐ திருப்பி அனுப்பியது சரியா?
ஏன் மீண்டும் princess Helena கு கனவுகள் வர தொடங்கியது?
இவர்களால் நினைத்ததை செய்ய முடியுமா?
Thanks for the votes and comments.
Keep supporting.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro