Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

33. Cloning portion

"But அந்த portion எங்க நாட்டில் தடை விதிக்கப்பட்டு இருக்கு because அந்த portion ஐ அருத்தினால் அதன் செயற்பாடு வெறும் 4 மணித்தியாலங்களுக்கு மட்டும் தான் இருக்கும். பின் அந்த copy ஐ 4 மணித்தியாலங்களினுள் உண்மையான நபர் தொட்டால் மாத்திரமே அது அழியும்.

அப்படி செய்யவில்லை என்றால் அந்த copy 4 மணித்தியாலத்திற்கு பின் நேர்மறையாக செயற்படும்.

அதாவது நான் அருந்தினால் குறிப்பிட நேரத்தின் பின் நான் விரும்பாத செயல்பாடுகளை செய்ய முற்படும்.  

அதனால் எனக்கு அதனை wizard uncle தர மாட்டாரு. And களவில் எடுப்பது என்றாலும் இப்போதைக்கு அரண்மனையை விட்டு வெளியே போக முடியாதே!" என்று princess Helena கூறினாள்.

இதனை கேட்ட, Prince fred ஓ சந்தோசத்தில் குதிக்க, மற்ற இருவரும் ஏமாற்றத்துடன் இருந்தனர்.

மீண்டும் அவளே "guys, அந்த wizard uncle ஓட மகள் எனது நெருங்கிய நண்பி. அதனால் அவள் கிட்ட உதவி கேட்போம்!" என்று தீர்ப்பையும் கொடுத்தாள்.

Wizard ன் மகளை conference call ல் அழைத்து, அவளுக்கு நடந்தவற்றையும் cloning portion வேண்டும் என்றும் கூறினர்.

"அந்த portion இந்த நாட்டில் தடைசெய்யப்பட்டதே! அதனால் அதனை எடுப்பது இயலாத காரியம். ஆனால் எனக்கு ஒரு யோசனை தோணுது. இந்த cloning portion ஐ தயாரிக்கும் முறை எனக்கு தெரியும்." என்று அவள் கூற,

"என்கிட்ட portions ஐ தயாரிக்க பயன்படுத்தும் அனைத்து ingredients  உம் இருக்கு. ஆனால் நான் அதனை தயாரித்து மற்றவர்களுக்கு எப்படி தருவது! how?" என்று princess Tanya கேட்டாள்.

சற்று நேரம் மௌனமாக இருந்த conference call ன் அமைதியை உடைத்தெறிந்தவாறு பேச ஆரம்பித்தான் prince Alex.

"Don't worry. நான் dragon lion ஐ கூட்டி கொண்டு முதலில் Tanya ன் அரண்மனைக்கு வருகிறேன். பின் நீ செய்ய portion ஐ எடுத்து கொண்டு helena மற்றும் fred கு கொடுப்போம்." என்று கூற,

'இவங்க எந்த ஒரு பிரச்சினையை கூறினாலும் சமாளித்து விடுறாங்களே!' என்று எண்ணிய prince fred,

இன்னுமொரு முறை இந்த பயணத்தை தடுக்க நினைத்து , "alex, அப்போ நீ இல்லாததை உன் அம்மா அறிந்து கொள்வாரே! அப்போ என்ன பண்ணுறது?" என்று வினவ,

"நீ சொல்றதும் சரிதான்!  Richard கிட்ட Mum கு நான் இல்லாததை பற்றி சந்தேகம் வராதபடி நடந்து கொள்ள சொல்கிறேன். அவன் ஏதாவது செய்வான். Don't worry! Ok guys மணித்தியாலக்கனக்காக பேசி கொண்டு இருந்தது போதும்! Let's begin our work. நான் இன்னும் பத்து நிமிடத்தில் tanya ஓட அரண்மனையில் இருப்பேன்." என்று அழைப்பை துண்டித்து விட்டு prince alex,

Dragon lion ன் விசிலை எடுத்து  மாலை ஒன்றில் பூட்டி அதனை கழுத்தில் அணிந்து கொண்டான்.

பின் தனது பையில் தாத்தாவுடைய வளையல் கத்தி, வாள், கயிறு, torch மற்றும் சில தேவையான பொருட்களை அடுக்கி கொண்டே Richard யும் அழைத்து நடந்ததை விளக்கினான்.

Richard ஆரம்பத்தில் அவனை தடுத்தாலும் பிறகு நடந்ததையும் நடக்க போவதையும் அழுத்தி கூற, அவனும் அதற்கு சம்மதித்தான்.

Richard தாத்தாவின் அறைக்கு சென்று dragon lion ன் முதுகில் அமர்வதற்கு பொருத்தப்படும் அமர்வை கொண்டு வந்து கொடுத்தான்.

அது மிகவும் பெரிதாகவும் பாரமாகவும் ஆறு பேர் அமர்ந்து செல்ல கூடியதாகவும் இருந்தது.

அதனை dragon lion மீது போட்டு அனைத்து ஆயத்தங்களையும் செய்து முடித்து விட்டு, Richard இடம் விடைபெற்று விசிலை ஊதிய வண்ணம் பறந்தான் prince Alex.
.
.
.
"அரசரே! 98 அரசர்களையும் நீங்கள் கூறியது போல நுணுக்கமான முறையில்  கடத்தி கொண்டு வந்து விட்டோம். அவர்களை இப்போது என்ன செய்வது?" என்று கொள்ளைகார தலைவன் கூற,

அவனுக்கு ஒரு முட்டி தங்கத்தை வழங்கியவன், "உன்னுடைய வேலை இதனுடன் முடிந்து விட்டது. நீ போகலாம்!" என்றான் இருள் அரசன்.

சபையில் இருந்த மந்திரி ஒன்றை கூப்பிட்டு, இராணுவ தளபதிக்கு ஒரு கடிதம் ஒன்றை எழுத உத்தரவிட்டான்.

அதில் அரசர்களை கடத்திய பொறுப்பை தாங்கள் ஏற்று கொள்வதாகவும் இதனை அறிந்த பின் dark wolf Island மீது ஏதாவது படையெடுப்போ அல்லது தாக்குதல்களோ செய்ய முற்பட்டால், கடத்தப்பட்ட அனைத்து அரசர்களையும் ஒன்றன் பின் ஒன்றாக கொன்று குவிப்பதாகவும் குறிப்பிடமாறு உத்தரவிட்டார்.

இதன் போது வந்த தனது மகனை ஆரவாரமாக வரவேற்று அவனுக்கு விருப்பமான அனைத்து உணவுகளையும் குடிபானங்களையும் கொடுத்து உபசரித்தனர் அரசன், அரசி மற்றும் அரசனின் தந்தை.

"மகனே! இனி யாராலும் நம்முடைய ஆட்சியை பறிக்க முடியாது. இன்று இரவு அனைத்து தீவுகளுக்கும் ஒரு மன்னன் என்று முடிசூட்டப்படும் விழாவுக்காக நான் ஆவலுடன் காத்து கொண்டிருக்கிறேன். எனக்கு பின் ஆட்சி உனக்கு தான்!" என்று ஆனந்தத்தில் இருள் அரசன் பேச,

"ஆனால் இன்னும் அதற்கான நேரம் வரவில்லை. இந்த கிரீடத்தில் இருக்க வேண்டிய பளிங்கு எங்கே? அது இல்லாமல் ஆட்சியை நிலைநாட்ட முடியாது!" என்றான் அந்த கிழவன் அதாவது இருள் அரசனின் அப்பா.

"கவலை வேண்டாம் தாத்தா. அந்த பளிங்கை எடுக்கவும் நான் ஒரு திட்டம் போட்டு இருக்கிறேன். இன்று இரவு 12 மணிக்கு முன் அது நம்முடைய கைக்கு கிடைத்து விடும். அதற்காக நான் தற்போது இரு கொள்ளையர்களை அனுப்பியும் விட்டேன்.

ஆகவே முதலில் நம் வெற்றியை கொண்டாடுவோம்! Cheers!" என்று மகன் Wine glass ஐ மேலே உயர்த்தி காட்ட, அந்த மேசையில் அமர்ந்திருந்தத மற்றவர்களும் அவ்வாறே செய்தனர்.

மகனை நினைத்து தாத்தாவும் இருள் அரசனும் பெருமை பட, அந்த கொள்ளையர்கள் இருள் தேசத்தில் இருந்து ஒரு கப்பலில், கையிலுள்ள அந்த உபகரணத்தில் பளிச்சென்று கொண்டிருந்த சிவப்பு நிற புள்ளியை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
.
.
.
"தேன் ஒரு கரண்டி, pinecone ஐ நன்றாக உரலில் இடித்த பின் அதில் இரண்டு கரண்டி, பச்சை அல்கா ஒரு கோப்பை, சிலந்தி வலை ஒன்று இதனை போட்டு திரவத்தின் நிறம் பச்சையாக மாறும் வரை நன்றாக கலத்தல் வேண்டும்." என்று wizard ன் மகள் முதல் instruction ஐ கொடுக்க,

"இதை நாம குடிக்கனுமா? முட்டியை பார்க்கும் போதே குமட்டிக் கொண்டு வருது!" என்று princess Tanya தனது முகத்தை ஒரு மார்க்கமாக வைத்து கொண்டு கூறினாள்.

"இது இன்னும் starting தான். இப்போ பேசாமல் நான் சொல்றதை செய். எங்களுக்கு நேரம் இல்லை!" என்று, தொடர்ந்தாள் wizard ன் மகள்.

"பின் அதற்கு முதலையின் வால் 2cm, அமேசன் காட்டிலுள்ள  பாம்பின் முட்டை, முளைக்கும் நிலையிலுள்ள பயறு மற்றும்  ருசியிற்காக சிறிதளவு பேர்முடா முக்கோணியிலிருந்து எடுக்கப்பட்ட உப்பு நீரில் சிறிதளவு." என்று wizard ன் மகள் instruction கொடுத்து கொண்டிருக்க,

princess Tanya உம் மும்முரமாக இயங்கி கொண்டிருந்தாள்.

முழுமையாக portion ஐ தயாரித்தவள், அதனை 3 சிறிய குப்பிகளில் ஊற்றினாள்.

தனது அப்பாவின் வரைபடம், torch மற்றும் சில வகை portion அடங்கிய பெட்டி ஒன்றையும் தனது பையினுள் இட்டாள்.

வெளியே அப்பா கடத்தப்பட்ட செய்தி அவளுடைய அம்மாவுக்கு தெரிந்து அவரோ புலம்பிக் கொண்டிருக்க,

princess Tanya அவரை தேற்றுவதற்காக வெளியே செல்ல முனைந்தாள்.

அப்போதே prince Alex உம் வர, அவள் தன்னுடைய குப்பியை கண்ணையும் மூக்கையும் மூடியவாறு அருந்தினாள்.

அருந்தி சில செக்கன்களில் அவளை போன்ற ஒரு உருவம் எதிரே தோன்ற,

அதனிடம் போய் அம்மாவை தேற்றுமாறு கூறி dragon lion ன் மீது ஏறி அமர்ந்தாள்.
.
.
.
"எப்படியும் போய் தான் ஆக வேண்டும்! வேறு வழியில்லை" என்று எண்ணிய prince fred,

தனது violin ஐ மற்றும் வாள் ஒன்றை எடுத்தவன் வேறு என்ன இந்த பெரிய பையில் போட வேண்டும் என்று எண்ணிய வண்ணம் முழு அறையையும் சுற்றி பார்த்தான்.

சில நிமிடங்களில் prince Alex உம் princess Tanya உம் வந்து சேர,

அவனது அறையினுள் யன்னல் வழியாக  நுழைந்த princess Tanya அவனுக்கு குப்பியை நீட்டினான்.

"இதில் என்ன போட்டு இருக்கு?" என்ற வண்ணம் prince fred ஆராய,

இவனிடம் உண்மையை கூறினால் குடிக்க மாட்டான் என்று எண்ணிய princess Tanya "அதுல fresh milk, curd, cheese and cream போட்டு இருக்கு!" என்று கூறிய வண்ணம் prince fred உடைய பையை எடுத்து prince Alex இடம் கொடுத்தாள்.

"உன்னை நம்பலமா? என் உயிருக்கு உத்தரவாதம் இருக்கா?" என்று prince fred வினவ,

"வாயை மூடிட்டு குடி! அதனை விரிக்க இப்போ நேரம் இல்லை" என்று குப்பியிலுள்ள portion அனைத்தையும் அவளே அவனின் வாயில் ஊற்றி விட்டாள்.

Prince Alex அந்த பையை எடுக்க, அது மிக பாரமாக இருந்தது.

"என்னடா இது?" என்று prince Alex வினவ, அவனோ அசடு வழிந்தான். ஆகவே prince Alexஅதனை திறந்து பார்க்க, அதில் நூற்றுக்கணக்கான cupcakes இருந்தது.

Prince fred ன் பிரதி ஒன்று அவனது அறையில் தோன்ற, மூவரும் அவ்விடத்தை விட்டு princess Helena ன் அரண்மனையை நோக்கி விரைந்தனர்.

"கடவுளே! இப்படியே நான் திரும்ப வந்தேன் என்றால், நான் இனிமேலும் வாசிக்கின்ற கதை புத்தகத்தில் இறுதி பக்கத்தை முதலிலே பார்க்க மாட்டேன்!" என்று கடவுளை வேண்டிய வண்ணம் வானில் பறந்தான் prince fred.
.
.
.
Princess Helena தனது பையை ஆயத்தமாக்கி கொண்டிருந்தாள். அப்போதே அவள் lady high royal ன் office ல் இருந்து எடுக்கப்பட்ட அந்த பெட்டியை கண்டெடுத்தாள்.

அதனை திறந்தவள், அதில் ஒரு குப்பி ஒன்று இருந்தது. அதனை திறக்க முனைய, அது கை தவறி கட்டிலில் சிறிது சிந்தியது.

சிந்தியதும் அந்த கட்டில் மாயமாக மறைய, அதன் மீது இருந்த  பொருட்கள் அந்தரமாக மிதந்து கொண்டிருந்தன.

அந்த குப்பியை எடுத்து திருப்பிப் பார்க்க, அதில் disappearing portion என்று எழுதப்பட்டு இருந்தது.

ஆகவே அதனையும் torch ஐயும் எடுத்து கொண்டாள்.

சிறிய வாள் ஒன்றை எடுப்பதற்காக drawer ஐ திறந்து அதனுள் கையை இட்டு தேட,

அவள் அறியாமல் அந்த pink tiara ல் இருந்த சிறிய wolf போன்ற ஈ அவளின் கையிலிருக்கும் பாட்டியின் மோதிரத்துடன் ஒட்டி கொண்டது.

அனைத்தையும் ஆயத்தபடுத்தி அவள் balcony ல் இருக்க, dragon lion உடன் அவளது நண்பர்கள் வந்து சேர்ந்தனர்.

Dragon lion ஐ இறக்குவதற்காக அந்த balcony ன் இடம் போதாமல் இருக்க,

Dragon lion ன் ஓரத்திற்கு வந்த princess Tanya, princess Helena ன் குப்பியை அவளின் கைக்கு வீசினாள்.

அதனை அவள் சரியாக பிடிக்கும் தருணத்தில் பின்னால் prince Tommy  வந்து நின்றான்.

"Helen! என்ன பண்ணுற?" என்று dragon lion ஐ மாத்திரம் கண்ட prince Tommy கூச்சலிட்டான்.

  princess Helena எதிர்பாராத சத்தம் வந்த திசையை திரும்பி பார்க்க, வீசப்பட்ட அந்த குப்பி அநாதையாக தரையில் விழுந்து உடைந்தது...

Princess Helena கு இருள் தேசத்திற்கு செல்ல முடியுமாக இருக்குமா?

இருள் அரசனின் மகன் யார்?

அவனின் திட்டம் என்ன?

அந்த பளிங்கு எங்கே இருக்கிறது?

Thanks for the votes and comments.
Keep supporting.

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro