32. The dragon lion
"உங்கள் நால்வரினதும் உறவுகள் வலுவடையும் போது, அதுவே இந்த உலகில் தீய சக்தி தலை தூக்க காரணமாக அமையும்" என்று ஒரு குரல் கேட்க,
"ஆனாலும் மற்றைய மூன்று பரிசுகளுக்காக இந்த கிரீடத்தை பாதுகாக்கும் பொறுப்பு எங்களுக்கானது" என்று இன்னொரு குரல் பதிலளித்தது.
அதனை வைத்து விட்டு அரசர்கள் வர முன்னர் king James ன் மனைவி royal high school லுள்ள நூலகத்தினுள் சென்று, அங்கே எழுதப்பட்ட புத்தகத்தை மிகவும் நுணுக்கமான முறையில் மறைத்து வைத்தார்.
நான்கு அரசர்களும் நடந்ததை மனைவியர்களிடம் கூற, எட்டு பேரும் மந்திரவாதிகளும் சேர்ந்து அந்த மாய சக்திகள் செய்த சாபத்தை முறியடிக்க ஏதாவது வழி இருக்கிறதா என ஆராய்ந்து கொண்டிருந்தனர்.
இறுதியில் ஒரு மந்திரவாதி எழுந்து சற்று தயக்கத்துடன் தனது கருத்தை ஐ கூறினான்.
'அந்த மாய சக்தி கூறியபடி உங்கள் நால்வரினதும் தொடர்புகள் இருக்கும் போது தான் தீய சக்திகள் உருவாகும் என்றால் நீங்கள் நால்வரும் உங்களது தொடர்புகளை அதாவது நட்பை துண்டித்து கொண்டால் அந்த சாபம் பழிக்காமல் இருக்க வாய்ப்புண்டு. இதற்கு வேறு வழியிருப்பதாக எனக்கு தோன்றவில்லை' என்று அவன் கூற,
பல வருடங்களாக பேணி வந்த உயர்ந்த நட்பை ஒரு நொடியில் முறிப்பது என்பது எவ்வளவு வேதனையை தரும் என்பது யாவரும் அறிந்த விடயமே. எனினும் அவர்கள் அரசர்களாயிற்றே!
மக்களின் பணியாளராக இதை கட்டாயம் செய்தே ஆக வேண்டும் என்ற நிர்பந்த வரையறையிள் விழ, நான்கு அரசர்களும் மிகவும் கடினத்துடன் மனதை தைரியப்படுத்தி அவ்விடத்திலிருந்து பிரித்து நான்கு திசைகளில் சென்றனர்.
திசைகளே நான்காக பிரிந்தது வழிக்காட்டுவதற்காக அல்லவா!
அதற்கு பிறகு நான்கு இராச்சியங்களும் தங்களுக்கிடையிலான தொடர்புகள், பொருளாதார பந்தங்கள், சுற்றுலா பயணங்கள் என அனைத்தையும் நிறுத்திக் கொண்டன.
பரம்பரையில் தோன்றிய மற்றவர்களும் இதனையே பின்பற்றி இருந்தனர் தனது சொந்த தேவைகளுக்காக அல்ல, மாறாக நாட்டு மக்களுக்காக!" என்று வாசித்து முடித்தான் prince Alex!
"எவ்வளவு பெரிய தியாகம் பண்ணியிருக்காங்க! But நாங்க இது ஒன்றும் தெரியாமல் பெரிய அழிவுக்கு குழி தோண்டி விட்டோம்!" என்று தொலைபேசியின் மறுமுனையிலிருந்து prince fred கூற,
"நீ சொல்வது உண்மை தான். அப்படியே இரு. நான் மற்ற இருவரையும் conference call ல் கூப்பிடுகிறேன்" என்று கூறி princess Helena ஐயும் princess Tanya யும் conference call ல் சேர்த்து விட்டான்.
.
.
.
"Mommy..." என்று அனைத்து கதைகளையும் கேட்டு விட்டு princess Helena தனது சந்தேகங்களை கேட்க வாய் எடுக்க, அவளின் தொலைபேசிக்கு அழைப்பு வந்தது.
அவளின் அம்மா "உன் நண்பர்கள் தான் கூப்பிடுறாங்க. So பேசிவிட்டு கீழே வா!" என்றவாறு பாட்டியின் மோதிரத்தை princess Helena ன் விரலுக்கு போட்டு, செல்லமாக கன்னத்தை தட்டி விட்டு சென்றார் queen Victoria.
"Hello சொல்லுங்க! ஏன் call பண்ண இவ்வளவு நேரம் எடுத்தீங்க? I need to tell very important news!" என்று prince George அவளின் பையில் காகிதத்தை போட்டதையும் அதனை கண்டுபிடித்த விதத்தையும் princess Helena மற்ற மூவரிடமும் கூற,
"What prince George? ஏன் அவன் அப்படி ஒரு கடிதத்தை எழுதனும்? அந்த கிரீடத்தில் அப்படி என்ன இருக்கு? எதற்கும் நீ அந்த கிரீடத்தை அணியாதே!" என்றாள் princess Tanya.
"ஆமா! அப்படி ஒரு கடிதத்தை அதுவும் அப்படி ஒரு நேரத்தில் எழுதி இருந்தால் அதில் ஏதோ ஒன்று இருக்கு! So நீ அதை அணியாமல் இருப்பது தான் நல்லது" என்று prince Alex உம் கூற,
"அது தான் என் விருப்பத்துக்குரிய tiara ஆச்சே! அதை பார்க்கும் போது கூட எந்த மாற்றமும் இல்லை. எதுக்கும் அதனை சற்று தள்ளி வைத்தால் சரி." என்று princess Helena பேசிக் கொண்டிருந்த வண்ணம் கிரீடத்தை கொண்டு போய் drawer ல் வைத்தாள்.
பின் Prince Alex உம் prince fred தங்களது தாத்தாவின் diary ஐ பற்றி கூற,
princess Tanya தன்னுடைய பாட்டியின் வரலாற்றை கண்டுபிடித்ததை பற்றி கூற,
Princess Helena தனது அம்மா கூறிய கதைகளையும் பரிமாறிக் கொண்டிருந்தாள்.
இவ்வாறு ஒருவர் மாறி ஒருவர் நடந்த அனைத்தையும் கூறி முடித்தனர்.
"Guys wait! ஒரு விசேட செய்தி வந்து இருக்கு!" என்று princess Tanya தனது ipad ல் விழுந்த notification ஐ பார்த்து கூறிவிட்டு, அதனை தட்டி செய்தியை சத்தமாக வாசித்தாள்.
"தற்போது கிடைத்த செய்தி.
99 நாட்டு அரசர்களும் ஒன்று கூடிய மாநாட்டு வளாகத்தில் ஒரு பதற்ற நிலை.
உள்ளே சென்ற எவரும் வெளியே வரவில்லை!
மாநாட்டிற்கு வருகை தந்த அரசர்கள் அனைவரும் மிகவும் நுணுக்கமான முறையில் கடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
இது தொடர்பாக மேலும் விசாரணைகள் தொடர்ந்து வருகிறது!" என்று வார்த்தைகள் வந்தும் வராமலும் வாசித்தாள் princess Tanya.
"நான் நினைச்சேன்! ஏதோ பிழையாக இருக்கு என்று!" என princess Helena வந்த கடிதங்களில் கையொப்பம் இடப்படாமல் இருந்ததை பற்றி நண்பர்களிடம் கூறினாள்.
"oh my God! இப்போ என்ன செய்ய போகிறோம்? எங்களால் எங்க அப்பாமார்களும் மாட்டிக் கொண்டு விட்டாங்க!" என்று அழுத குரலில் prince fred கூற,
"இப்போ அழும் நேரம் இல்லை fred. இராணுவ படையினர் மூலம் இதை நிறுத்தும் வரை எங்களால் பார்த்து கொண்டிருக்க முடியாது. We have do something!" என்று princess Helena ஒட்டு மொத்த தைரியத்தையும் வரவழைத்து கூறினாள்.
"Yeah of course. நாம தான் இதை ஆரம்பித்தோம். இதை நாங்களே முடிப்போம்!" என்று princess Tanya உம் அவளின் பக்கத்திற்கு பேச,
"நீங்க மூன்று பேரும் போறீங்க என்றால் நானும் வருகிறேன். வேறு என்ன செய்ய? நான் என்ன செய்த பாவத்திற்கோ sorry sorry நான் என்ன சாப்பிட்ட பாவத்திற்கோ நீங்க எல்லாம் என் friends கிடைத்ததற்கு!!" என்று prince fred புலம்பி தள்ளினான்.
"போவதற்கு ready! But எப்படி போவது? இருள் தேசத்திற்கு எப்படி விரைவாக போவது?" என்று princess Helena கேள்விகளை தொடுக்க,
சிறிது நேரம் யோசித்த princess Tanya "எப்படி போவது என்று எனக்கு தெரியாது. But இருள் தேசத்திற்கு வெறும் 20 நிமிடங்களில் செல்ல குறுக்கு வழி ஒன்று இருக்கு!" என்று அவளது அப்பாவின் office அறையில் கண்டு பிடித்த அந்த வரைபடத்தை பற்றி கூறினாள்.
"That's great! But எப்படி போவது? Alex ஏன் உன் சத்தத்தையே காணவில்லை?" என்று princess Helena வினவ,
அவனோ சற்று முன் அவனது அறை யன்னல் அருகே பறந்து கொண்டிருந்த அந்த விலங்கை பார்த்து திகைத்து நின்று கொண்டிருந்தான்.
மற்ற மூவரினதும் தொடர் அழைப்பின் மூலம் தன்னிலையடைந்தவன் இவர்களுக்கும் அந்த விலங்கு தெரியுமாறு video call ஐ அழுத்தினான்.
அதனை கண்ட princess Helena "இது அந்த குகையில் கண்ட விலங்கு தானே! அது எப்படி உன் அரண்மனைக்கு வந்தது alex?" என்று வினவ,
"இந்த விலங்கு குகையிலிருந்த விலங்கு தான் என்று எப்படி உறுதியாக சொல்ற?" என்று prince fred princess Helena விடம் வினவினான்.
"Because alex அதனை தாக்கிய போது அதற்கு காயம் ஏற்பட்டது தானே! அப்போ அதை பார்க்கும் போது எனக்கு பாவமாக இருந்தது.
அதனால் நீங்க மூவரும் சென்ற பிறகு நான் அதற்கு என் ஆடையை கிழித்து கட்டு போட்டு விட்டேன். அதோ அந்த கட்டு தான்!" என்று அன்று குகையில் அவள் இவர்களுடன் வர தாமதமாகியதன் காரணத்தை கூறினாள்.
"எப்படி அங்கு இருந்த விலங்கு இங்க? அதுவும் இது எந்த மாதிரியான விலங்கு?" என்று princess Tanya வினவ,
"இது Helena சொன்னபடி குகையில் இருந்த விலங்கு என்றால் அந்த diary ல் குறிப்பிட்டுள்ளது போல இது தான் the dragon lion! ஒருவேளை நான் இந்த விசிலை ஊதியதால தான் இங்கு வந்ததோ தெரியவில்லை." என்று prince Alex கட்டிலில் இருந்த விசிலை எடுத்து மீண்டும் ஊதினான்.
அந்த விசில் நண்பர்கள் நால்வருக்கும் கேட்காவிடினும் அந்த விலங்கு prince Alex ன் அறையிலிருந்த பெரிய யன்னல் வழியே அறையினுள் நுழைந்தது.
பின் அவன் மீண்டும் விசிலை ஊத, அந்த விலங்கு அவனை தனது பெரிய நாக்கினால் நக்கியது.
அவனும் நான்கு நாளைக்கு வைக்கோலால் தேய்த்து குளிக்க வேண்டி வரும் என்று எச்சிலை துடைத்தவாறு எண்ணிக் கொண்டான்.
"Dragon lion உன்னை ஒன்றும் பண்ணவில்லை. உன் கூட friend ஆகிறிச்சு போல. குகையில் தாக்கியதற்கு காரணம் அவனுடைய எசமான் அதாவது உன் தாத்தா யாரையும் உள்ளே விட கூடாது என்று கட்டளை போட்டதற்காக தான் இருக்கும். அதனை தாக்கியதற்கு மன்னிப்பு கேளு முதல்ல.
அது சரி விசில் எப்படி உனக்கு கிடைத்தது?" என்று princess Helena வினவ,
அவனும் அந்த அறையில் நடந்ததை கூறினான்,
மேலும் "But அந்த photo ல் சிறிய குட்டி ஒன்று தான் இருந்தது. அதுவும் இந்த விசில் அதனுடையதாக தான் இருக்கும்.
Queen Margaret தாத்தாவுக்கு கொடுத்த dragon lion வயது வந்ததாக தானே இருக்கனும். அதுவும் தாத்தா அதனை குகையிலேயே விட்டுட்டு வந்து விட்டாரு. இது தான் அந்த dragon lion என்றால் அப்பா கையில் வைத்து இருக்கிறது என்ன வகையான விலங்கு?" என்று குழம்பி போனான்.
"நிறைய யோசித்து இல்லாத மூளைக்கு வேலை கொடுக்க வேண்ணாம். Dragon lion உன் கூட friend ஆகிறிச்சு என்றால் அதை பயன்படுத்தி நம்ம இருள் தேசத்திற்கு செல்லலாம்! வேலை முடிந்தது" என்று தனது கருத்தை princess Tanya கூற,
"போக வாகனம் இல்லை என்று சந்தோசப்பட்டேன். அந்த சந்தோசத்தை கூட கொண்டாட விடமாட்டியே tany பாணி!
Wait! இன்னுமொரு பிரச்சினை...அப்பாவையும் கடத்தி கொண்டு போயிருக்கும் இந்த நேரத்தில நம்ம அவங்களை காப்பாற்ற போவது mum தெரிந்தால்....?" என்று prince fred இந்த பயணத்தை எப்படியாவது நிறுத்த கூற,
"அவங்க கிட்ட நாம போவதை பற்றி கூற கூடாது! ஆனால் எப்படி அது சாத்தியம்?" என்று princess Tanya வினவ,
"ஆமா! எங்களுக்கு twins கூட இல்லையே. அப்படி இருந்தாலாவது சமாளிக்கலாம்" என்றான் prince Alex.
"Prince alex நீ ஒரு புத்திசாலி. I got an idea! எங்க நாட்டில் portion factory ல் cloning portion இருக்கு. அந்த portion ஐ யார் அருந்தினார்களோ அவர்களுடைய இன்னுமொரு copy அவர்களை போலவே உருவாகும்!" என்று princess Helena தீர்வு கூற,
"That's a fantastic idea! அதனால் நாம இங்கு இல்லாதது யாருக்கும் தெரிய வாராது" என்றனர் மற்ற மூவரும்.
"But பிரச்சினை இருக்கு..." என்று தீர்வையும் கேள்வி குறியாக்கினாள் princess Helena...
The dragon lion உண்மையில் எங்கிருந்து வந்தது?
இந்த dragon lion உம் புகைபடத்திலிருக்கும் விலங்கும் ஒன்றா?
Princess Helena கு வந்த பிரச்சினை என்ன?
இன்னும் 5 ud களில் கதை நிறைவு பெற இருப்பதால் கதையை பற்றிய உங்களுடைய கருத்துகளை எதிர்பார்க்கிறேன்...
Thanks for the votes and comments.
Keep supporting.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro