31. Hide
"நான்கு அரசர்களும் இணைந்து அறிவால் இருள் தேசத்தை வீழ்த்த முடிவெடுத்தனர்.
இருள் தேசத்தை சுற்றியிருக்கும் 16 நாட்டு அரசர்களுடன் இரகசிய பேச்சு வார்த்தைகளை நடத்தினர்.
சில மாதங்களின் பின், இருள் அரசனுக்கு king Michael போர் அழைப்பை விடுத்தார்.
தொடர்ச்சியான வெற்றிகளை கண்ட இருள் அரசனோ தயங்காமல் அழைப்பை ஏற்று கொண்டது மட்டுமன்றி போரில் தான் வெற்றி பெற்றால் சகல வளமிக்க செழுமையான king Michael ன் நாட்டை தனக்கு தர வேண்டும் என்று ஒப்பந்தம் இட,
அதற்கு king Michael கையொப்பமும் இட்டார். மேலும் அவரும் இருள் அரசனுடன் ஒப்பந்தம் ஒன்று இட மறக்கவில்லை.
அந்த ஒப்பந்தத்தின்படி King Michael இந்த போரை வென்றால் இதுவரையும் இருள் அரசன் அடிமையாக்கி கொண்டு இருக்கும் 1000 அடிமையாளர்களை விடுவிக்க வேண்டும் என்பதே!
இருள் அரசன் ஒப்பந்தத்தை ஆமோதிக்க, போர் நாளும் வந்தது.
ஆகவே king Rochelle உம் 4 அயல் நாட்டு தரை படைவீரர்கள் இணைந்து போரை ஆரம்பித்தனர்.
இவர்களின் ஓரே குறிக்கோள் எப்படியாவது இருள் தேச படைவீரர்களை அரண்மனை எல்லையை தாண்ட வைப்பதே!
அவ்வாறே இருள் தேச படைவீரர்கள் எல்லையை விட்டு வெளியே வந்து தாக்குதல்களை நடத்தினர்.
இதனால் வெகு சிரமமின்றி அந்த நாட்டு மக்கள், சிறை கைதிகள் மற்றும் அடிமைகளை அநியாயமான தாக்குதல்களில் இருந்து பாதுகாக்க கூடியதாக அமைந்தது.
பின்பு அரண்மனை எல்லைக்கு வந்த படைவீரர்களை வானம் மூலமான தாக்குதல்கள் மேற்கொள்ள தீர்மானித்தனர்.
அந்த தாக்குதலின் மூலம் இருள் நாட்டு படைவீரர்களை தீவின் விளிம்பிற்கு கொண்டு வர முடிவெடுத்தனர்.
ஆகவே king Michael லும் அவரது அம்பு எய்தும் வீரர்களும் வாயு பலூன்களின் உதவியை கொண்டு போரை தொடர்ந்தனர்.
king James (princess Tanya ன் தாத்தா) உம் மற்ற 4 நாட்டு விமான படைவீரர்களும் தங்களது நுணுக்கங்களை பயன்படுத்தி இருள் அரசனுக்கு ஆதரவளிக்கும் வெளி தீவுகளின் படைவீரர்களை எதிர்த்து யுத்தம் புரிந்தனர்.
ஆகவே எவ்வித உதவியும் கிடைக்காத இருள் அரசனும் அவனது மனைவியும் தனது அரண்மனையிலிருக்கும் சுரங்கத்தில் ஒளிந்து கொண்டனர்.
இதனை அறியாது யுத்தம் புரிந்து கொண்டிருந்த சேனாதிபதிகளும் படைவீரர்களும் கடற்கரைக்கு வந்தடைந்தனர்.
இரவு நேரம் என்ற படியால் போர் ஒத்தி வைக்கப்பட்டிருக்க, சேனாதிபதிகள் ஒன்றுகூடி ஒரு சபை கூடினர்.
தாங்கள் எப்படியும் இந்த யுத்தத்தில் தோல்வியடைய தான் போகின்றோம் என்று அனுமானித்து கொண்டு யாருக்கும் தெரியாமல் அங்கிருந்து உயிர் தப்பி ஓட முடிவெடுத்தனர்.
மீண்டும் அரண்மனைக்கு சென்று தஞ்சம் புகுவது என்பது நடக்காத காரியம் ஏனெனில் நாட்டின் பெரும்பாலான பகுதியை எதிரணியினர் கைப்பற்றியிருந்தமையை அவர்கள் அறிந்து இருந்தனர்.
ஆகவே இரவோடு இரவாக 10 சேனாதிபதிகளும் 100 படைவீரர்களும் படகுகள் மூலம் நாட்டை விட்டு வெளியேறினர்.
இதுவும் king Williamson (Princess Helena ன் தாத்தா) ஒரு திட்டமாகவே அமைந்திருந்தது.
ஆகவே ஏற்கனவே கடலின் அடியில் நங்கூரமிடப்பட்டு இருந்த நீர்மூழ்கி கப்பல்கள் மூலம் அந்த அனைத்து படகுகளையும் சுற்றி வளைத்து ஆட்கொண்டனர்.
அப்படகுகளில் வந்த அனைவரையும் நிலாவின் வெளிச்சம் மறைய முன்னரே கைதிகளாக western silver island ற்கு கொண்டு வந்தனர்.
காலையில் எழுந்து நின்ற படைவீரர்கள் சேனாதிபதிகள் இல்லாததை கண்டு திக்குமுக்காடி இருக்க, அவர்களை ஆக்கிரமித்து கொண்ட King willamson யுத்தத்தில் வெற்றி பெற்றார்.
ஒப்பந்தத்தின் போலவே சிறை கைதிகளையும் அடிமைகளையும் விடுவித்து சுதந்திரத்தை பரிசாக கொடுத்தான் இருள் அரசனின் முதல் சகோதரன் king Williamson.
இருள் அரசனை கைதியாக தனது நாட்டுக்கு கொண்டு செல்ல அவனது சகோதர மனம் அவனை விடவில்லை.
King Williamson ன் நண்பர்களும் அதனை ஆமோதித்தனர். ஏனென்றால் இப்போது இருக்கும் நிலைமைக்கு இருள் அரசனால் எவ்வித யுத்த ஆயத்தங்கள் செய்ய முடியாது என்பதே. அவனிடம் அதற்கான பலமோ படையோ இருக்கவில்லை.
மாறாக முன்னையதை போல படைவீரர்களை உருவாக்க வேண்டுமெனில், 50 வருடங்களாவது கஷ்டப்பட்டு உழைக்க வேண்டும் என்றுபடியால் இருள் அரசனுக்கு உயிர் பிச்சை அளித்து விட்டு அங்கிருந்து வெற்றியுடன் புறப்பட்டனர் நான்கு அரசர்களும்." என்று வாசித்து முடித்தாள் princess Tanya.
"சில வருடங்கள் கடக்க, king Williamson ன் மனைவிக்கு இரண்டாவது குழந்தையாக ஒரு ஆண் குழந்தை பிறந்தது.
அடுத்த சில மாதங்களில் இருள் அரசனின் மனைவிக்கும் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. ஆகவே அவன் தனது மகனுக்காகவாவது இந்த இராச்சியத்தை கட்டியெழுப்ப தீர்மானித்தான்.
ஆனால் படையெடுத்து மாவீரன் ஆகுவது என்பது கனவிலும் நடக்காது என்றறிந்தவன் தனது அப்பாவின் இறப்புக்கு காரணமான அந்த சம்பவத்தை நினைவுபடுத்தி கொண்டு கிரீடத்தையும் செங்கோலையும் கைப்பற்ற திட்டம் தீட்டினான்.
ஆனால் அவனுடனே அரச சபையில் ஒன்றாக இருந்த king Michael ன் ஒற்றர் ஒருவரின் மூலம் அவனது திட்டத்தை அறிந்து கொண்டார் king Michael.
ஆகவே நால்வரும் ஒரு சபையை கூட்டி இதனை பற்றி நீண்ட நேரம் கலந்தாலோசித்தனர்.
King Williamson கிரீடம் மற்றும் செங்கோலை கொண்டு வர, அதனை எடுத்து கொண்டு அரசர்களும் அவர்களது மனைவிமார்களும் தாங்களின் நட்பு உருவாக காரணமாக அமைந்த royal high school ஐ நோக்கி புறப்பட்டனர்.
அங்கே king Williamson ன் மனைவி கிரீடத்தில் உள்ள சிவப்பு நிற பளிங்கை கழற்றி, அதனை மறைத்து வைப்பதற்காக கிழக்கு திசைக்கு தனியாக சென்றார்.
King Michael நடு காட்டு பகுதியினுடாக சென்று ஒரு குகையை அடைந்தார்.
அதில் செங்கோலை ஒரு பெட்டியில் இட்டு அதனை ஏதாவது அவசர தேவைகளுக்கு வெளியே எடுப்பதற்காக, சில குறியீடுகளை உருவாக்கினார்.
அதனை ஒரு வரைபடத்தில் இரகசிய முறையில் குறித்தார் king Michael ன் மனைவி.
பின் சில மந்திரங்களை இட்டு அந்த வரைபடத்தை இரண்டு பொருட்களாக திரிபடைய செய்தனர்.
ஆகவே அவ் வரைபடம் ஒரு diamond ஆகவும் ஒரு திறப்பாகவும் திரிபடைந்தது. அந்த திறப்பில் diamond ஐ முறையாக வைத்தால், அது வரைபடமாக மாறி விடக்கூடியவாறும் மந்திரம் போடப்பட்டது.
அந்த diamond ஐ king Michael தனது அதிஷ்டமான காப்பு கத்தியில் வைத்து கொண்டார்.
திறப்பை எடுத்து கொண்டு காட்டிலிருந்து வடக்கு திசையாக சென்ற king Rochelle ன் மனைவியும் சில மந்திரவாதிகளும் சுரங்க பாதை ஒன்றை அமைத்தனர்.
அதனுள் வரும் நபர்களை திறப்பை நெருங்கவிடாது செய்ய பல உபாயங்களையும் செய்து வைத்தனர்.
இறுதியாக அந்த திறப்பை கொண்டு மட்டுமே வெளியேறக்கூடிய ஒரு கதவுடன் கூடிய ஒரு அறையை ஒருவாக்கினர்.
ஆனால் அந்த அறையை திறப்பதற்காக பல விடுகதைகளுடன் கூடிய கதவையையும் உருவாக்கினார் king Rochelle ன் மனைவி.
இறுதியாக கிரீடத்தை எடுத்து கொண்டு நான்கு அரசர்களும் கிழக்கு திசையில் உள்ள நீர்வீழ்ச்சியை நோக்கி செல்ல முடிவெடுத்தனர்.
அந்த நீர்வீச்சியினூடாக சென்றால் அதன் நடு பகுதியில் கற்பாறை ஒன்று இருப்பதாகவும் அதனை உடைத்தால் அதற்கு பின்னால் மாய சக்திகளை கொண்ட ஒரு பெட்டி இருப்பதாகவும் மந்திரவாதிகள் குறிப்பிட்டனர்.
அங்கு செல்பவர்களுக்கு மாய சக்திகள் சாபம் இடுவதாகவும் அந்த சாபங்கள் பழிக்காமல் இருக்க, தம்மிடமுள்ள விலை உயர்ந்த பளபளக்கும் பொருள் ஒன்றை பரிசளிக்க வேண்டும் எனவும் அதன் மூலம் திருப்தி அடைந்த பிறகு நம் கூறும் எதனையும் அந்த மாய சக்திகள் செய்வதாகவும் மந்திரவாதிகள் மேலும் கூறினர்.
அதன்படி நான்கு அரசர்களும் தங்களது நாட்டில் இருக்கும் விலையுயர்ந்த பளபளக்கும் பொருளை கொண்டு வருமாறு கட்டளையிட்டனர்.
அடுத்த நாள் இரவு எட்டு பேரும் இணைந்து மீண்டும் ஒரு முறை இதனை பற்றி கலந்தாலோசிக்க, இதில் சில மாற்றங்களை செய்ய முன்வந்தனர்.
ஆகவே இவர்கள் மறைத்து வைத்திருக்கும் கிரீடத்தையும் செங்கோலையும் பற்றிய தகவல்களும் வழிகளும் அமைந்த ஒரு புத்தகத்தை எழுதினர்.
அந்த புத்தகத்துக்கு பூட்டும் அதனை திறக்க வித்தியாசமான வடிவில் குச்சி ஒன்றையும் உருவாக்கினார் king willamson.
அடுத்த நாள் அதிகாலையிலேயே அந்த குச்சியை கொண்டு போய் செங்கோலை மறைத்து வைத்திருக்கும் அந்த குகையிலே செங்கோலை எடுப்பதற்கு பயன்படுத்தப்படும் அதே குறியீடுகளை வைத்து ஒரு பெட்டியை தயாரித்து அதனை ஒளித்து வைத்தார் Prince James.
இவ்வளவு கஷ்டங்கள் நாட்டு மக்களுக்காக தான் படுகிறார்கள் என்று எண்ணிய அந்த நாட்டு அரசி Queen Margaret தனது நாட்டின் தனித்துவமான The dragon lion ஐ இவர்களுக்கு பரிசாக அளித்தார்.
அந்த dragon lion ஓ மிகவும் பலமான பயங்கரமான ஆனால் எசமானுக்கு பணிவான ஒரு விலங்கு.
ஆகவே அந்த dragon lion ன் எசமானாக உரிமை எடுத்து கொண்ட king Michael, அதனை அந்த குகைக்கு காவலாக இருக்குமாறு பணித்தார்.
பின்னர் கிரீடத்தை மறைக்க, நான்கு அரசர்களும் மந்திரவாதிகளும் பொருட்களை கொண்டு வந்த சிப்பாய்களும் நீர்வீச்சியினூடாக பாறையை அடைந்தனர்.
பின் பாறை உடைத்து உள்ளே பார்க்க, அங்கோ பல வர்ணத்திலால் ஆன சிறிய பூச்சிகள் பறந்து கொண்டிருந்தன.
அதனை வைத்து அங்கு ஏதோ மாய சக்திகள் இருப்பதாக ஊகித்து கொண்டனர்.
ஆகவே தங்கள் நாட்டிலிருந்து கொண்டு வந்த விலைமதிப்பான பளபளப்பான பொருட்கள் ஒவ்வொன்றாக கீழே வைத்தனர்.
மூன்றாவது பொருளும் வைத்து நான்காவது பொருளையும் கீழே வைக்க, அந்த வர்ண பூச்சிகள் கருப்பு நிறமாக மாறியது.
ஓலங்களும் கூச்சங்களும் அதிகரிக்க தொடங்கியது. அங்கிருந்த அனைவரும் அடுத்து என்ன நடக்கும் என்பதை எண்ணி திக்குமுக்காடி நின்றனர்.
அதில் மந்திரவாதி ஒருவன் அந்த சிப்பாயை காட்ட, அவனோ வாய் குழியினுள் எச்சியையும் மிகவும் கடினத்துடன் விளங்கியவாறு வியர்வை ஊற்றில் நனைத்து கொண்டிருந்தான்.
அவனோ king James ன் அரியாசனையில் பதிக்கப்பட்டிருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு பளிங்கை எடுத்து வர உத்தரவிட்டும் அந்த சிப்பாய் அந்த விலைமதிக்க முடியாத பளிங்கை கண்டு மயங்கி அதனை தனது பையில் போட்டு கொண்டான்.
அதே போன்ற ஒரு போலியான பளிங்கை தான் கொண்டு வந்து மாய சக்திகளிடம் ஒப்படைத்தான்.
ஆகவே மாய சக்திகள் கோபமடைந்து சாபமொன்றை இட்டது....
எப்படியான சாபமாக இருக்கலாம்?
The dragon lion ஆ நண்பர்கள் குகையில் கண்டது?
அவ்வாறு அதை தான் கண்டிருந்தால், அந்த விலங்கு இவ்வளவு காலம் உயிர் வாழ்ந்து இருக்குமா?
இருள் அரசனை இந்த update ல் miss பண்ணீர்களா?
Thanks for the votes and comments.
Keep supporting.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro