26. Closed
நால்வருக்காகவும் தோட்டத்தில் காத்துக் கொண்டிருந்த cartwheel ல் நண்பர்கள் ஏறி அமர்ந்தனர்.
சிறிது நேரத்தில் நால்வரும் பாடசாலையை அடைய, அங்கே பரபரப்பான சூழ்நிலை உருவாகியிருந்தது.
இளவரச இளவரசிகள் கூட்டம் கூட்டமாக ஆங்காங்கே தீவிரமாக கதைத்து கொண்டிருக்க, இராணுவத்தினர் ஏதோ தேடும் வேட்டையில் இயங்கிக் கொண்டிருந்தனர்.
Prince alex "Hey! இங்கு என்ன நடக்குது? ஏன் எல்லோரும் ஓரே பதட்டத்தில் இருக்காங்க?" என்று வினவ,
"உங்களுக்கு அந்த செங்கோலும் கிரீடத்தையும் பற்றி தெரியும் தானே! அது...இரண்டும் ஒரு அரசனிடம் இருந்தால் அவனால் 1000 மைல் தூரத்தில் இருக்கும் அனைத்து தீவுகளையும் ஆட்சி செய்ய முடியும்...என்று சொல்வாங்க...!" என்று மெதுமெதுவாக கதையை படிப்படியாக dreaming princess ஆரம்பிக்க,
பொறுமையை இழந்த princess Tanya "இங்க பாரு Sofia...! நீ கதை சொல்லி முடியும் போது எரிமலை வெடித்து தணிந்து குளிர்ந்து விடும். So நேராக விடயத்திற்கு வா!" என்று கூறினாள்.
"ஒரு விஷயத்தை முழுமையாக கேட்குற பழக்கமே உனக்கு இல்லை?" என்று princess Tanya ன் பேச்சில் கோபம் கொண்டாள் dreaming princess.
"Stop your fights! சும்மாவே நான் பசி கொடுமையில் இருக்கேன். என்னை இன்னும் கடுப்பேத்தாதீங்க!" என்று சில மணித்தியாலத்திற்கு முன் முழு கோழியையும் தனியாக இரைப்பையினுள் செல்ல வைத்து விட்டு ஏப்பம் விட்ட prince fred கூறினான்.
அருகில் இளவரசன் ஒருவனிடம் கதைகளை கேட்டு வந்த princess Helena மூவரையும் அருகில் இருந்த canteen ற்குள் கூட்டி சென்றாள்.
"Guys! அந்த செங்கோலையும் கிரீடத்தையும் யாரோ திருடி இருக்காங்க. அவை கெட்டவர்களின் கைக்கு போனால் பெரிய அழிவு வருமாம். அது தான் எல்லோரும் இணைந்து அதை தேடுறாங்க." என்று princess Helena கூற,
"Hey! அது எப்படி முடியும்? Queen Margaret சொன்னபடி அவை இரண்டையையும் எடுக்க நம்ம கிட்ட இருக்கும் புத்தகம் தானே வழி காட்டும்...அது இப்போ என்கிட்ட தானே இருக்கு! அப்படி இருக்கும் போது எப்படி???திருடன்???" என்று வியப்பில் கேட்டாள் princess Tanya.
"நான் சொன்னேன் தானே! அந்த புத்தகமும் இப்போ உன்கிட்ட இருக்கும் புத்தகமும் ஒன்றில்லை. நமக்கு நடந்தது அனைத்தும் தற்செயலான நிகழ்வுகள் தான்! Just stop thinking of these nonsense." என்று எழுந்து வெளியே செல்ல முனைந்தான் prince Alex.
"என்ன ஏதோ long discussion போல இருக்கு?" என்றவாறு canteen னுள் நுழைந்தான் prince Ryan.
"Personal matter! Guys let's go to our rooms!" என்றவாறு நால்வரையும் அழைத்து கொண்டு வெளியே princess Helena செல்ல, அவர்கள் செல்லும் வழியாலே canteen னுள் நுழைந்தாள் princess Roquelle.
"Hey இவங்க எப்படி??? Queen Margaret ஏதோ punishment கொடுத்தாங்களே! அதுக்குள்ள இங்க வந்துட்டாங்களா?" என்று princess Roquelle குழப்பத்தில் வினவ,
"அது எனக்கு தெரியாது. But I have a great news. அந்த செங்கோலும் கிரீடமும் காணாமல் போக இவங்க ஒருவகையில் காரணம் போல. Let's follow them!" என்று அவர்களின் பின்னால் princess Roquelle யும் அழைத்து கொண்டு சென்றான் prince Ryan.
.
.
.
"ஆமா! உங்க கிட்ட வந்து ஒப்படைக்கிறது என் பொறுப்பு. பயப்பட வேண்டாம். ஏழு கடல் தாண்டியாவது கொண்டு வந்து கையிலே ஒப்படைக்கிறேன்..." என்று gentleman royal Stephen யாரிடமோ தொலைபேசியில் பேசிக் கொண்டிருக்க,
அவரின் தோலை ஒருவர் பிடித்தார். திடுக்கிட்ட அவர் தொலைபேசியை துண்டித்து விட்டு பின்னால் திரும்ப,
கேள்விகளை அடுக்கிய பார்வையுடன் பார்த்து கொண்டிருந்தார் lady royal Alisa.
"நான் கொஞ்ச நாளாகவே உன்னை பார்த்து கொண்டு தான் இருக்கிறேன். உன் நடவடிக்கையே சரியில்லை. அடிக்கடி யார் கூடவோ phone ல பேசுற, elena ஐ கண்டாலே ஓடுற நீ அன்று அவ கூட காட்டுக்கு போனீங்க! என்ன நடக்குது?" என்று ஒற்றை புருவத்தை உயர்த்தி lady royal Alisa வினவ,
"Oh! My dear! நான் உன்கிட்ட எதையாவது மறைத்து இருக்கேனா? இப்போ என்ன சொல்ல வேண்டும்? நான் யார் கூட பேசுகிறேன்! அதை தானே...my sweet wife அது யாரென்றால்!!!" என்று gentleman royal Stephen ஏதோ ஒன்று கூற வர,
ஏதோ ஒரு மலை இடிந்து விழுந்ததை போல ஒரு சத்தம் கேட்டது.
இருவரும் திரும்பி சத்தம் வரும் திசையை பார்க்க, அங்கு lady royal Elena, gentleman royal Stephen lady royal Alisa ஐ wife என்று கூறியதை கேட்டு, மனம் துண்டு துண்டாக கண்ணாடி போல உடைய அப்படியே மயங்கி சரித்தார்.
Lady royal மற்றும் gentleman royal ஆக தங்களது profession ஐ அமைத்து கொள்ள, royal families ஐ தவிர்ந்த பொதுமக்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும்.
அதில் அவர்கள் high school studies மற்றும் universities களில் முதல் தர சித்தி பெற்றிருக்க வேண்டும். அத்துடன் ஒரு தீவில் இருந்து சிறப்பு தேர்ச்சி பெற்ற ஒருவர் மட்டுமே இதற்காக தெரிவு செய்யப்படுவார்.
பின் நேர்முக பரீட்சை மற்றும் பல tasks வழங்கப்படும். அவை அனைத்திலும் அதி சிறப்பு சித்தி பெறவும் வேண்டும். Campaign என்று 2 மாதங்கள் காட்டில் இயற்கையுடன் வாழ வேண்டும்.
அரச, அரசிகளின் வெவ்வேறான மனநிலைகளை புரிந்து கொண்டு, அதன்படி நடந்தது கொள்வதற்காக, ஒரு மாதத்திற்கு 15 வெவ்வேறு மனோநிலையுள்ள மனிதர்களுடன் பழக வாய்ப்பளிப்பர். அத்துடன் வித்தியாசமான தரை,வான், கடலில் நடைபெறும் அனர்த்தங்களில் எவ்வாறு செயல்பட வேண்டும் என ஒரு வருட காலம் பயிற்சியளிக்கப்படும்.
அதுமட்டுமல்லாமல் வீட்டை விட்டு 5 வருடங்கள் தங்கி தான் இந்த அனைத்து பயிற்சிகளிலும் ஈடுபட வேண்டும்.
ஆகவே இவ்வளவு தியாகங்களை செய்த Alisa வுக்கு Stephen ஐ இறுதி வருடத்தில் சந்திக்க நேரிட்டது.
இருவருக்கும் இருவரையும் நன்றாக பிடித்து போக, இருவரும் இதனை தங்கள் வீட்டிலும் தெரிவித்தனர்.
இருவரும் ஓரே தொழிலை புரிவதாலும் இருவருக்கிடையேயும் நல்ல புரிந்துணர்வு இருப்பதாலும் குடும்பங்கள் அதற்கு ஒத்து கொண்டது. திருமணத்தை ஒரு வருடத்திற்கு தள்ளி போட, இவர்களின் நடுவே வந்து சேர்ந்தார் Elena.
அவர் Stephen ஐ விரும்பினாலும் அது வெறும் ஈர்ப்பு தான் என Stephen உம் Alisa உம் அதனை பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.
ஆனால் விதி விடுமா என்றது போல மூவருக்கும் royal high school ல் training போக வேண்டியேற்ப்பட்டது.
அங்கு Elena ன் தொல்லை அதிகரித்து கொண்டே சென்றது. அதற்கு ஒரு காரணம் அவளின் அக்காவான lady high royal லே royal high school லினை நடத்துவதே.
Royal high school லுக்கு செல்லவே அனைத்து lady royals மற்றும் gentleman royals கும் உள்ள ஓரே கனவாகும். ஆகவே Alisa மற்றும் Stephen அங்கு செல்லவே பல முயற்சிகளில் இறங்கினர்.
Elena ஓ Stephen ஐ தனது அக்காவிடமும் மேலதிகாரிகளிடம் கெஞ்சி கூறி royal high school ற்கு gentleman royal ஆக வர வாய்ப்பு அளிக்குமாறு ஒற்றைக்காலில் நின்றாள்.
அவர்களும் அவரது documents மற்றும் certificates ஐ பார்த்து அவரின் திறமையில் வியக்க, Elena ன் வேண்டுகோளையும் ஏற்று கொண்டனர்.
அதிகாரிகள் குலுக்கல் முறையில் அதி திறமையான 10 பேர்களில் இருவரை தெரிவு செய்தனர். அதிலே அதிஷ்டவசமாக Alisa கும் அங்கு செல்ல வாய்ப்பு கிட்டியது.
அங்கு சேர்ந்ததன் பின் இரு குடும்பங்களும் இருவரையும் திருமணம் செய்து வைக்க முடிவெடுத்தனர்.
திருமணத்தை பெரிதாக செய்ய நினைத்தாலும் Stephen கும் Alisa வுக்கும் திருமணம் நடந்ததை Elena உம் அவளுடைய அக்கா lady high royal கு கேள்விப்பட்டால் அவர்களின் பல வருட கஷ்டங்களிலும் தியாகங்களிலும் கிடைக்க பெற்ற அரிய வேலைவாய்ப்பு பறிபோகும் என்று எண்ணி திருமணத்தை இரு குடும்பங்களும் இரகசியமாக நடத்தி முடித்தனர்.
இவை அனைத்தையும் அறியாத lady royal Elena royal hospital ல் படுக்கையில் இருந்தார்.
.
.
.
Princess Helena உம் princess Tanya உம் அறையினுள் நுழைய, அறையோ தலைகீழாக மாறியிருந்தது.
"What happened? என்ன???" என்று ஆச்சரியமாக princess Helena வினவ, அதனை காதில் வாங்கிக் கொள்ளாமல் உடனே புத்தகம் வைத்திருக்கும் இடத்தை நோக்கி புறப்பட்டாள்.
ஆனால் அதனை திறந்து பார்க்க, அவளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அதில் அந்த புத்தகமோ குச்சியோ இருக்கவில்லை.
"What???where??? Book???" என்ற பதற்றத்தில் princess Tanya உறைந்து நிற்க,
"எங்கே அந்த book உம் குச்சியும்???யாரு எடுத்து இருப்பாங்க?" என்று princess Helena வினாக்களை அடுக்க விடை தெரியாமல் அருகே இருந்த கதிரையில் அமர்ந்தாள் princess Tanya.
"இந்த புத்தகத்தையா தேடுறீங்க இருவரும்?" என்று lady high royal, படை தளபதி மற்றும் princess Roquelle, prince Ryan உம் அறையின் கதவருகில் நின்றவாறு வினவினர்.
என்ன பதில் கூறுவது என்று தெரியாமல் நால்வரும் நிற்க அவர்களின் தலைகளோ அவர்களின் கட்டளைகள் வரும் வரை காத்திருக்காது ஆம் என்று தலையசைத்தன.
"Come with me!" என்று படை தளபதி நால்வரையும் royal conference hall ற்கு அழைத்து சென்றார்.
Conference hall ஓ மிகவும் விசாலமாகவும் நடுவே ஒரு வட்ட மேசையும் பல அடி உயரமான விளக்குகளும் பூட்டப்பட்டிருந்தது.
நால்வரையும் அமர சொன்ன, படை தளபதி அவர்களின் முன்னால் உள்ள கதிரையில் காலின் மேல் கால் போட்டுக்கொண்டு அமர்ந்து, தனது cooling glass ஐ கழற்றி முன்னால் இருந்த மேசையில் வைத்தார்......
Gentleman royal Stephen யாருடன் அடிக்கடி தொலைபேசியில் கதைக்கிறார்?
Lady royal Elena வுக்கு உண்மை தெரிந்தால் என்ன நடக்கும்?
Gentleman royal Stephen மற்றும் lady royal Alisa ன் வேலை கை நழுவிப் போகுமா?
நண்பர்களுக்கு தண்டனை வழங்கப்படுமா?
Thanks for the votes and comments.
Keep supporting.
Sorry for the laaaaate ud....
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro