25. Grand parents
"இல்லை. Helena! உன் ஓட தாத்தா தான் அந்த அரசனோட முதல் மகன்..." என்று பின்னால் கேள்விக்கான விடை வரவே நால்வரும் திரும்பி பார்க்க, அங்கு இருப்பவரை கண்டு திகைத்து நின்றனர்.
பின்னால் queen Margaret நின்று கொண்டிருந்தார்.
Lady royal Elena அனைவரையும் அழைத்து கொண்டு மீண்டும் பாடசாலைக்கு செல்ல முற்பட,
அவரிடம் வந்த queen Margaret "Elena! நான் princess Helena, princess Tanya, prince alex மற்றும் prince fred கூட தனியாக பேச வேண்டும். நீங்க மற்றவர்களை கூட்டிட்டு போங்க.I'll send them later!" என்று கூற, நால்வரும் தங்களுடைய பெயரை அவர் கூறியதை எண்ணி அதிர்ச்சியடைந்து நின்றனர்.
"உங்க நால்வருக்கும் ஏதோ பெரிய punishment தரபோறாங்க. இப்படி தான் இங்கு யாராவது பிழை செய்தால் தனியாக கூப்பிட்டு இரும்பை உருக்கி காதுல ஊற்றுவாங்க. Helena நீ என் prince Alex கிட்ட இருந்து பிரித்ததற்கு இது தான் தண்டனை... Enjoy!" என்றவாறு princess Helena வுக்கு punishment வழங்க போவதாக எண்ணி சந்தோசத்தில் குதித்து கொண்டே சென்றாள் princess Roquelle.
போகும் வழியில் நடந்ததை prince ryan கு message பண்ணவும் அவள் மறக்கவில்லை.
"என்ன? ஆந்தை மாதிரி காதுல வந்து அலறிட்டு போறாள் Roquelle? இன்றும் ஏதாவது உன் juice ல கலந்து இருக்கிறாலாமா?" என்று prince Alex வினவ,
"இல்லை...wait what?" என்று princess Helena prince Alex கூறியது புரியாமல் கூறினாள்.
"நாம இங்கு வந்த முதல் நாள் நடந்த party ல உன்னுடைய juice ல அவள் ஏதோ கலந்து இருந்தாள் தானே! அது தான் கேட்டேன்."
"Wait! அது??? அது உனக்கு எப்படி தெரியும்? Tanya சொன்னாலா?" என்று வியப்புடன் வினவினாள் princess Helena.
"No. No...நீ Roquelle ஐ royal ship லிருந்து கடலுக்கு தள்ளிவிட்டதுல இருந்து உன்னை நான் கண்காணித்துக் கொண்டே இருந்தேன். Roquelle நெருப்பு போல... அப்படி இருந்தும் அவள் கூட அடிக்கடி மோதுகிற உன்னை பற்றி தெரிந்து கொள்ள ஆசைப்பட்டேன்.
சில நாட்கள் உன்னை நீ அறியாமையே பின்னால் கூட வந்திருக்கிறேன். ஒரு முறை நீ school பக்கத்திலிருக்கிற, நுழைய தடை விதிக்கப்பட்ட garden னுள் புகுந்த போது கூட நான் தான் நீ அங்க போயிருப்பதாக fred கு message பண்ணேன்!" என்று கூற,
"Wait! அது prince George ஓட Number தானே!" என்று princess Tanya கேள்வியை தொடுத்தாள்.
"Yeah. அவனுடையது தான். அந்த நேரம் என் கையில் phone இருக்கவில்லை. என் அறைக்கு போய் phone ஐ எடுக்க நேரமாகும் என்று எண்ணி அருகிலிருந்த prince George உடைய phone ஐ எடுத்து தான் message போட்டேன்." என்று விளக்கினான் prince Alex.
"அது நீ தானா?! நல்ல நேரம் அப்படி ஒரு message அந்த நேரமே போட்ட. இல்லை helen ஐ கண்டுபிடிக்க எனக்கு ரொம்ப tired ஆக வேண்டி வந்திருக்கும்!" என்று prince fred கூறிக் கொண்டே கால் வலிப்பதாக கூறி அருகிலிருந்த படிக்கட்டில் அமர்ந்து கொண்டான்.
"அது தான் எனக்கு யாரோ என் பின்னாடியே வருவதாக feel ஆகிச்சு!" என்று அன்று எழுந்த சந்தேகத்தை princess Helena முன்வைக்க,
"இல்லை Helen. அது நான் இல்லை. நான் உன் பின்னால் வந்தது உண்மை. ஆனால் garden உள்ளே வரவில்லை. Just வெளியே இருந்து மட்டும் தான் பார்த்தேன்...!" என்று prince Alex கூற, இன்னும் குழம்பிப் போனாள் princess Helena.
"சரி அதை விடு, அப்போ அந்த party?" என்று princess Tanya இழுக்க,
"first day party ன் போது என் முன்னாடி தான் princess Roquelle உம் அவளது நண்பிகளும் Helen கு ஏதோ மருந்து கலந்த juice ஐ கொடுக்க plan பண்ணாங்க.
Helen பார்க்கும் போது எல்லாம் ஏனோ நான் முன்பே பார்த்த மாதிரி ஒரு உணர்வு. அதே உணர்வு தான் பிறகு tanya யும் fred யும் பார்க்கும் போதும் வந்தது.
So ஏதாவது பண்ணி helen காப்பாற்ற நினைத்தேன். ஆனால் அவங்க வேகமாக செயல்பட்டதால் எனக்கு வந்த ஓரே ஒரு idea party main table கு அருகில் வைக்கப்பட்டிருந்த prince George உடைய skating board ஐ பயன்படுத்துறது தான்." என்று முடிக்க,
"I thought that would be prince George!" என்று princess Helena தனது guessing பிழையானதையும் அவ்வாறு எண்ணுவதற்கு அன்று prince George கும் gentleman royal கும் நடந்த வாக்குவாதத்தை கூறினாள்.
இவ்வாறு இவர்கள் பேசிக் கொண்டிருக்க, படிக்கட்டில் அமர்ந்திருந்த prince fred ன் பின்னால் வந்து அவனின் முதுகை தட்டிய queen Margaret கு ஏமாற்றமே மிஞ்சியது.
அவனோ கதையில் மூழ்கி போய் இருக்க, அவனை எப்படி திசை திருப்புவது என்று எண்ணிய Queen Margaret கு idea ஒன்று தோன்றியது.
பகல் உணவுக்காக தயார் செய்யப்பட்ட மூக்கிலுள்ள மணநுகர்ச்சி கலங்களை அரங்கமேற்றி குத்தாட்டம் போடும் BBQ chicken ஐ servant ஒருவர் மூலம் கொண்டு வர செய்து, பின் அதனை மூக்கை தொடும்படியாக இருபக்கமாக அசைத்தார் queen Margaret.
Prince fred ஓ அதன் வாசனையில் தன்னை தொலைத்து நிற்க, உடனே அதனை கொடுத்தவர் யார் என்றும் பார்க்காமல் பறித்து உண்டான்.
அப்போதும் queen Margaret கு ஏமாற்றமே மிஞ்சியது. ஆகவே தொண்டையை சற்று சரி செய்வதாக இரும, நால்வரும் அவரை பார்த்தனர்.
"உங்க நான்கு பேரையும் இப்படி ஒன்றாக கண்டது எனக்கு எவ்வளவு பெரிய சந்தோசம் தெரியுமா?" என்று கண்கலங்க queen Margaret கூற,
"என்ன இவ பேசுறா? நாம இவங்கள கண்டதே இல்லை.அப்படி இருந்தும்..." என்று princess Tanya மெதுவாக கூறும் பெயரில் சத்தமாக கூற அவை அவரின் காதில் விழுந்து விட்டது.
"ஆமா! உங்களுக்கு என்னை தெரியாது. ஆனால் எனக்கு உங்களை தெரியும். உங்களை விட உங்க grand parents ஐ தெரியும்.
உங்க நான்கு பேரோட grand parents கூட நானும் எனது கணவரும் நெருக்கமாக பழகி இருக்கோம். It means we are good friends before!
அதிர்ஷ்டம்! Princess Helena உடைய தாத்தாவுக்கு நிறையவே இருந்தது. அதுமட்டுமல்ல உன் பாட்டிக்கு எதிர்காலத்தில் நடக்க போகும் சில சம்பவங்கள் கூட கனவுகளாக விளங்கும். அதுவும் அந்த கனவுடன் சம்பந்தப்பட்ட நபர்கள் மற்றும் பொருட்களை கண்டால் மீண்டும் அந்த கனவு கண் திறந்திருக்கும் போதே கனவாக ஓடும்.
அனுபவம்! Princess Tanya உடைய பாட்டி எப்போதும் அனுபவத்தை பெற்றுக் கொள்வதில் முதன்மையானவர். எப்போதும் ஒரு புதிய விஷயத்தை பற்றி கற்று கொள்ளவும் அதனை தன் வாழ்க்கையில் செயல்படுத்த அனுபவங்கள் வரும்வரை தொடர்ந்தும் பயிற்சியில் ஈடுபடுவார்.
பொறுமை! Prince fred ன் பாட்டக கிட்ட ரொம்பவே இருந்தது. அவர் ஆட்சி செய்த நாட்டு மக்கள் மிகவும் சந்தோசமாக வாழ்ந்து வந்தனர். அவர் ஒவ்வொருவரினதும் கஷ்டங்களை மிகவும் பொறுமையுடன் ஆராய்ந்து தீர்த்து வைப்பார். அவரின் பொறுமையின் காரணமாக sudoku, chess விடுகதைகள் என்பவற்றை விளையாடி எல்லோரையும் வென்று விடுவார்.
And வீரம்! Prince alex ட தாத்தாவை அந்த காலத்தில் மா வீரன் என்று சொன்னாங்க! அவர் களமிறங்கி எந்த போரிலும் அவர் தோற்றதில்லை. அவரின் பலம் பொருந்தி அந்த ஆயுதம் இப்போது prince Alex அமைந்திருக்கும் அந்த காப்பு!
உங்க grand parents கு தனித்துவமான திறமைகள் இருந்தது. நான்கு பேர்கிட்டயும் ஒரு இரகசியம் சொல்ல போகிறேன்.
அந்த தனி திறமைகளை வைத்து தான் நாங்க எல்லோரும் இணைந்து இன்று நான் சொன்ன கதையில் இருந்த அரசனின் கிரீடம், புத்தகம் மற்றும் செங்கோலையும் மறைத்து வைத்தோம் இந்த நாட்டில் ஓர் மறைவான இடத்தில் ஒளித்து வைத்தோம்." என்று queen Margaret கூறி விளக்க, நால்வரும் திகைத்து நின்றனர்.
Queen Margaret ன் அருகில் வந்த ஒரு servant அவரை அரசன் அழைப்பதாக தெரிவிக்க, நண்பர்களிடமிருந்து அதனை தெரிவித்து விட்டு அறையை விட்டு வெளியேறினார்.
"Guys! நான் நினைக்கிறதையா நீங்களும் நினைக்கிறீங்க?" என்று princess Helena வினவ,
மூவரும் ஆம் என்று தலையசைத்தனர்.
"Wait...அப்போ அந்த புத்தகம்...அது தான் இவர் சொல்கிற புத்தகமா? அப்படி என்றால்!!! அந்த library ல புத்தகங்களை ஒழுங்கில்லாமல் அடுக்கி வைத்தது...இவங்க சொல்கின்ற படி பார்த்தால், என் பாட்டி ஆக தான் இருக்கனும். Because அப்படியான tricks solve பண்ணுவதற்கு நிறைய practice இருக்க வேண்டும். அது அனுபவத்தால் மட்டும் தான் முடியும்...
நான் அந்த tricks ஐ solve பண்ணுவதற்கு கிட்ட தட்ட இரண்டு வருடங்கள் கஷ்டப்பட வேண்டியிருந்தது. நான் அதை கைவிட போகும் போது எல்லாம் என் பாட்டி என்னை ஊக்கப்படுத்தினாங்க. எப்போதாவது என் வாழ்க்கையில் அவை அவசியமாகும் என்று கூறினாங்க.
அதோட அவங்க சொல்றதை வைத்து பார்த்தால் Helen கு விளங்குற கனவு!!!" என்று princess Tanya கூற,
"அப்படி கனவு வருவது பரம்பரை நோயா? எனக்கு அந்த கனவு royal ship ல வரும் போது முதன் முதலாக விளங்கியது. அதுக்கு பிறகு gentleman royal Stephen பார்க்கும் போதும் அந்த library book ஐ தொடும் போதும் உணர்ந்தேன்! ஆனால் அந்த கனவுக்கான அர்த்தம்? இதுக்கு பிறகு நடக்க போவதையா காட்டுது?" என்று குழம்பி போனாள் princess Helena.
"& அந்த வரைபடமாக மாறிய திறப்பு ஐ எடுக்க, நான் solve பண்ணி விடுகதைகளை தீர்க்க பொறுமை வேண்டும். இந்த மாதிரியான பொறுமையை சோதிக்கும் விடுகதைகளை அரண்மனையில் பெறுமதியான பொருட்களை பாதுகாக்க வைப்பார்கள்.
எல்லோராலும் பொறுமையாக இறுதி வரை இந்த வகையான விடுகதைகளை தீர்க்க முடியாது. ஆரம்பித்து முடியாமல் போய் விட்டால் அவர்களுடைய உயிருக்கே அது ஆபத்தாக மாறிவிடும்.
இது எல்லாம் என் பாட்டி தான் எனக்கு சொல்லி கொடுத்தாங்க. So I hope அந்த திறப்பை மறைத்து வைக்க அவங்க தான் அந்த விடுகதைகளை உருவாக்கி இருக்கனும்." என்றான் prince fred.
" குகையில் அந்த அற்புதமான விலங்கை வீழ்த்தியது alex தானே so அது அப்போ alex ஓட தாத்தா தான் கொண்டு வந்து போட்டிருக்க வேண்டும்!" என்றாள் princess Helena.
"Guys! நீங்க எல்லோரும் சும்மா ஏதோ யோசித்து மண்டைய குழப்புற மாதிரி தான் எனக்கு விளங்குகிறது. அந்த குகையில் நடந்தது தற்செயலான ஒரு incident தான். நான் இல்லை என்றால் fred உன்னை காப்பாற்றி இருப்பான்." என்று prince Alex கூற, prince fred அப்படி ஒரு தருணத்தை கனவிலும் எதிர்பார்த்ததில்லை என்றான்.
"அப்போ அந்த diamond ஐ பற்றி என்ன சொல்ற? அது உன் தாத்தாவுடையது தானே! அதை திறப்பில் வைத்த பிறகு தானே குச்சியை கண்டுபிடிக்க வரைபடம் கிடைத்தது!" என்று princess Helena திடீரென கேள்வியை எழுப்ப, நன்கு குழம்பிப் போனான் prince Alex.
"நாம நான்கு பேர் சந்தித்தித்து கொண்டது கூட தற்செயலான முறைகளில் தானே! அப்படி இருக்க இது எல்லாம் எப்படி நடக்க முடியும்?" என்று சந்தேகத்தில் கேட்டான் prince fred.
"I don't know about that. But எனக்கு உங்க மூவரையும் பார்க்கும் போது முன்பு கண்டது பழகியது போலவே இருக்கும் என்று நான் ஒரே சொல்வேனே! அது அப்போ? ஏதோ நமக்குள்ள ஒரு உறவு இருக்குறதால் தானே அப்படி தோணுது! இது எல்லாம் காலம் செய்யும் சதி." என்று princess Tanyaகூற,
"நானும் கூட அதை யோசித்து இருக்கேன். இப்போ அதை எல்லாம் பேசி வேலையில்லை. We have to hurry up!" என்று அவசரப்படுத்தினால் princess Helena.
"எங்க போக போகிறோம்?" என்று prince Alex வினவ, "வயிறு மூட்ட சாப்பிட தான். வேறு எங்க?" என்று சாப்பிட செல்ல தயாரானான் prince fred.
"Not for that. நாம school கு போய் நம்ம சந்தேகத்தை எல்லாம் தீர்ப்போம். அப்படி நம்ம கைக்கு கிடைத்த புத்தகம் தான் பல ஆண்டுகளுக்கு முன் ஒளித்து வைத்ததாக இருந்தால் அதை lady royal Alisa கிட்ட கவனமாக கொடுத்து விடுவோம். Hurry up!" என்று queen Margaret கு தாங்கள் அவசரமாக செல்வதாக note ஒன்றை எழுதி வைத்து விட்டு அங்கிருந்து நகர,
.
.
.
அங்கு அவன் 'உங்கள் எதிர்காலம் dark wolf island king ன் கையில் இருக்கிறது...' note ஒன்றை எழுதி வைத்து விட்டு வெற்றி நடையுடன் கிரீடத்தை கையில் சுமந்தவாறு திரும்பிச் சென்றான்.....
அடுத்து என்ன நடக்கும்?
Thanks for the votes and comments.
Keep supporting.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro