24. King's story
Queen Margaret நால்வரையும் கண்டு ஏதோ பேச வரும் போது, அவரை தெரியாமல் இடைமறித்த lady royal Elena "Queen Margaret, இவங்க எல்லாம் உங்க கிட்ட கதை கேட்க ஆசையாக இருக்காங்க. So can you tell a story for them?" என்று வினவ,
"Why not? I love to say stories for little buddies!" என்று queen Margaret கூற, அனைவரையும் story telling room னுள் கூட்டி சென்றனர்.
Pink mats உம் blue mats உம் கீழே விரித்து இருக்க, இளவரசிகள் pink mats லும் இளவரசர்கள் blue mats லும் உட்கார்ந்தனர்.
Princess Helena கு பக்கத்தில் princess Tanya உம் அவர்களுக்கு அடுத்த பக்கத்தில் prince Alex உம் prince fred உம் அமர்ந்திருந்தனர்.
"200 ஆண்டுகளுக்கு முன் இங்கிருந்து 1000 மைல் தூரத்தில் ஒரு அரசன் ஆட்சி செய்து வந்தான்.
அவருடைய வீரம், பொறுமை, அதிர்ஷ்டம் மற்றும் அனுபவத்தின் மூலம் அவர் 1000 மைல் தொலைவிலிருக்கும் அனைத்து தீவுகளையும் ஆட்சி செய்ய முக்கிய காரணமாக அமைந்தது.
அத்துடன் அவர் இவ்வாறு ஒரு குடையின் கீழ் ஆட்சி செய்வதற்கு இன்னுமொரு காரணமாக அமைந்தது என்னவென்றால் அவரிடமிருந்த செங்கோலும் தன் பரம்பரை இரத்தத்தால் மட்டும் அழிய கூடிய சிவப்பு நிற பளிங்கு பதிக்கப்பட்ட கிரீடமும்.
இவ்விரண்டும் அவருக்கு அவர் ஆட்சி செய்த மொத்த 99 தீவுகளில் வாழ்கின்ற மக்களால் வழங்கப்பட்ட ஒரு பரிசு! அதனை தனதாக்கிக் கொள்ளும் எவரும் 1000 மைல் தூரத்தில் இருக்கும் அனைத்து தீவுகளையும் ஒரு குடையின் கீழ் ஆட்சி செய்யலாம்" என்று கூற,
Princess Helena ன் காதில் அருகில் வந்த princess Tanya "ஏன் எல்லோரும் ஒரு குடையின் கீழ் ஆட்சி என்று சொல்றாங்க? ஒரு தொப்பியின் கீழ் ஆட்சி என்று சொல்லலாமே?" என்று பூமியின் நடுவே ஏதோ ஆராய்ச்சிகள் செய்யும் போது எழுந்த கேள்விகளை போல் கேட்டாள்.
"இப்போ அது தான் ரொம்ப முக்கியம்! குடை போட்டால் நனையாதாம். தொப்பி போட்டால் நனையுமாம். விளக்கம் போதுமா?
நீ ஒரு உலகம் பாரு fred அ! அவன் இன்னுமொரு உலகம். எங்கு வந்தேன் எதற்கு வந்தேன் என்று தெரியாமல் Queen Margaret சாப்பிட வைத்து இருக்கிற chocolate lemon bars ஐ வேட்டையாடி கொண்டிருக்கிறதை." என்று தலையில் அடித்து கொண்டாள் princess Helena.
"அந்த அரசனுக்கு 16 வாரிசுகள். பிற்காலத்தில் அரசனுக்கு வயது போக தள்ளாடும் வயதில் அவர் ஆட்சி செய்த 99 தீவுகளையும் வாரிசுகளுக்கிடையில் பிரித்து கொடுத்தார்.
சமமாக அல்ல. மாறாக எவனுக்கு வீரம், பொறுமை, அனுபவம் மற்றும் அதிர்ஷ்டம் நிறைந்து இருந்ததோ அவனை அதிகளவான தீவுகளை ஆட்சி செய்வதற்காக நியமித்தார்.
அதற்கு அரசனின் முதல் மகன் 45 தீவுகளை ஒரே தடவையில் ஆட்சி செய்ய தெரிவானான்.
இப்படியே சில ஆண்டுகள் உருண்டோட, 16 பேரும் 16 விதமாக தீவுகளை ஆட்சி செய்தனர்.
சிலரின் தீவுகள் தீவிர வளர்ச்சியும் சிலரின் தீவுகள் தீவிர வீழ்ச்சியும் அடைந்தன. வீழ்ச்சி அடைந்த தீவுகளை மீண்டும் அவர்களின் தந்தை மீட்டு எடுத்து நன்றாக ஆட்சி செய்யும் மகன்மார்களுக்கு கையளித்தார்.
அவரின் கடைசி மகனோ அவன் ஆட்சி செய்யும் தீவில் உள்ள மக்களை அடித்தனத்தின் உச்சியில் வைத்திருந்தான். அவர்களின் காசுகளையும் செல்வங்களையும் வரி எனும் பெயரில் இயன்றவரை சுரண்டி தனது அரண்மனையில் குவியல் குவியலாக சேர்த்து கொண்டான்.
மேலும் மக்களை சுரங்க தொழில் செய்யுமாறு வற்புறுத்தினான். அங்கு கிடைக்கும் அனைத்து விலைமதிக்க முடிக்காத செல்வங்களையும் மாணிக்கங்களையும் தனது பையில் போட்டு கொண்டான்.
சரியாக கூலி கொடுக்காமல் பெண்களையும் பிள்ளைகளையும் கூட சுரங்க தொழிலுக்கு தொழிலாளிகளாக நியமித்தான்.
ஓய்வும் கல்வியும் அங்கு பஞ்சமாகவே இருந்தது. போக போக உணவும் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட, மக்கள் இரகசியமாக அவனுடைய அப்பாவிடம் அவனை பற்றி முறையிட்டனர்.
ஆகவே அவர் அவனை கண்டித்து அவனுடைய செல்வங்கள் அனைத்தும் மீட்டெடுக்கப்பட்டு அத்தீவு அப்பாவி மக்களிடம் மீண்டும் கையளிக்கப்பட்டது. பின் அவனுடைய தீவை பராமரிக்கும் பொறுப்பு முதல் மகனுக்கு கையளிக்கப்பட்டது.
காசும் செல்வமும் இல்லாமல் ஒரு நாளாவது கடைசி மகனால் வாழ முடியாது போனது. தனது அண்ணன்மார்களுக்கு கீழே இருக்க விரும்பாத கடைசி மகன் அன்றிரவே ஒரு முடிவுக்கு வந்தான்.
இரவோடு இரவாக அப்பாவையும் அண்ணன்மார்களையும் பழிவாங்கும் எண்ணத்துடனும் மொத்த 99 தீவுகளையும் தன் அப்பா போல தான் மட்டும் ஆட்சி செய்து அனைத்து செல்வங்களையும் தனதாக்கிக் கொள்ளும் நோக்கத்துடன் செங்கோலையும், கிரீடத்தையும் திருடுவதற்காக இரவுணவில் அப்பாவுக்கு உறங்க மாத்திரையை கலந்து கொடுத்தான்.
நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு பிறகு அப்பாவின் அறையினுள் நுழைந்த கடைசி மகன், அவரின் செங்கோலும் கிரீடமும் வைத்திருக்கும் இடத்தை நோக்கி நகர்ந்தான்.
அதனை எடுக்கும் சந்தர்ப்பம் பார்த்து யாரோ ஒருவன் அவனை கெட்டியாக பிடித்து பின்னால் தள்ளிவிட இருளில் யார் என்று முகம் காணாது தனது தற்பாதுகாப்புக்காக அருகில் இருந்த வாளால் முன்னால் இருந்தவனை குத்தினான் கடைசி மகன்.
குத்திபட்டவனோ வலியில் துடிக்க, கடைசி மகன் எதையும் எடுக்காது அங்கிருந்து ஓடி மலை குகையொன்றில் ஒளிந்து கொண்டான்.
அடுத்த நாள் காலையில் அவனுக்கு அவனது தந்தை இறந்ததாகவும் கொலைகாரனை வேலை வீசி தேடுவதாகவும் செய்தி எட்டியது.
அப்போது தான் நேற்றிரவு தன்னை தள்ளி விட்டவர் வேறு யாருமில்லை தனது தந்தை தான் என்பதை உணர்ந்து கொண்டான்.
ஆகவே அந்த நாட்டிலிருந்து யாருக்கும் தெரியாது ஓடி சென்று அவன் முன்பு ஆட்சி செய்த நாட்டிற்கு அருகிலிருந்த சிறிய தீவை அடைந்தான்.
தனக்கென இராணுவ படை, அரச சபை, மக்கள் மற்றும் ஊழியர்கள் என்று அனைத்தையும் தந்தையின் நாட்டிலிருந்து வரும் போது கொண்டு வந்த பணத்தின் மூலம் வாங்கினான். படிப்படியாக இருள் தேசம் ஒன்றை கட்டியெழுப்பினான்.
அவனது அண்ணன்மார்கள் தந்தையின் மறைவின் பின்பு செங்கோலும் கிரீடமும் அந்த அரண்மனையில் வைத்திருப்பது பாதுகாப்பானதல்ல என்று எண்ணி அவற்றை மறைக்க திட்டமிட்டனர்.
இந்த அனைத்து வரலாறு மற்றும் கிரீடம் மறைத்து வைத்திருக்கும் இடத்தை காட்டுகின்ற ஒரு புத்தகமும் அப்புத்தகத்தை திறப்பதற்கான திறப்பு, கிரீடம் மற்றும் செங்கோல் என்பவற்றை அவர்கள் மிகவும் நுணுக்கமான முறையில் மறைத்து வைத்தனர்.
இன்றும் அவை மாயமாக மறைந்து தீய ஆட்சியாளர்களிடமிருந்து பாதுகாக்கின்றது. அவை எப்போது வெளியே வருகிறதோ அப்போது நமக்கிடையே இருக்கும் அமைதி ஆரவாரமாகி நிம்மதியில்லாமல் ஆகிவிடும்..." என்று கதையை முடித்தார் Queen Margaret.
"Helen! அவங்க கதை சொல்லும் போது நம்மலயே பார்த்து பார்த்து சொன்னது போல இருந்தது...உனக்கு feel ஆகவில்லையா? ஏதோ ஒன்று எனக்கு இடிக்கிது இங்க!" என்று prince Alex அறையை விட்டு வெளியேறும் போது கூற,
"Yeah! நானும் அதை கவனித்தேன்." என்று கூட்டணி சேர்ந்து கொண்டாள் princess Tanya.
"Guys! இவங்க சொன்ன இந்த கதைக்கும் நமக்கு கிடைத்த அந்த புத்தகத்துக்கும் தொடர்பு இருக்கிற மாதிரியே இருக்கு!" என்று prince fred கூற,
"Wait! இன்று தான் உருப்படியாக ஒன்று சொன்ன... so புத்தகத்தை திறக்க அதனுடைய திறப்பு தேவைப்பட்டது. திறப்பு இருக்கும் இடத்தை கண்டு பிடிக்க வரைபடம் தேவைப்பட்டது. வரைபடம் கிடைக்க Alex உடைய தாத்தாவோட diamond தேவைப்பட்டது. So alex ஓட தாத்தாவுக்கும் இந்த கதைக்கும் என்ன சம்பந்தம்??? நாம கதையை கேட்டு விட்டு over ஆக think பண்ணுறோமா?
ஒருவேளை அந்த அரசனோட மகன் தான் உன் தாத்தாவா? Alex?" என்று கேள்வி எழுப்பினாள் princess Helena.
"இல்லை. Helena உன் ஓட தாத்தா தான் அந்த அரசனோட முதல் மகன்..." என்று பின்னால் கேள்விக்கான விடை வரவே நால்வரும் திரும்பி பார்க்க, அங்கு இருப்பவரை கண்டு திகைத்து நின்றனர்.
.
.
.
அவன் ஒருவாறு புத்தகத்தையும் திறப்பையும் கண்டு பிடித்து, அருகில் இருந்த sofa ல் அமர்ந்தான்.
அவனது note book ஐ எடுத்து, அதில் எழுதப்படாத பக்கங்களை திருப்பினான்.
குச்சியின் மூலம் புத்தகத்தை திறந்தவன் அதிலுள்ள பக்கங்களை வேக வேகமாக திருப்பினான். இறுதியாக நடுபக்கத்திலிருந்த சில points ஐ குறித்து கொண்டான்.
மீண்டும் புத்தகத்தை இருந்த இடத்திலே வைத்து விட்டு வெற்றி நடையுடன் கிரீடத்தை எடுப்பதற்காக புறப்பட்டான்...
.
.
.
முதுகு பகுதியில் இருந்த தளும்புகள் அவன் கோழைதனத்தில் யுத்தத்தின் போது பின்புறம் காட்டி ஓடியதை சாட்சியாக காட்டியது.
அன்றைய யுத்தம்...நேர்மைக்கும் அநியாயத்துக்கும் இடையிலான யுத்தம்...King Edward...நேர்மையும் உண்மையும் சாட்சியாக கொண்ட படைவீரர்கள்...King Steve...வீரமும் வெற்றியையும் மனதில் பொறித்த வண்ணம் போராடிய வீரர்கள்...
எதிரணி இரண்டினதும் ஒற்றுமையும் பலமும்...20 நாட்கள் யுத்தம்...இருள் அரசனின் வீரர்களின் தோல்வி...அநியாயம் நியாயத்தால் வென்ற அந்த நாள்...பின்னால் திரும்பி ஓடும் போது தாக்கிய அந்த வாள்...
என்று கண் முன்னே அந்த அரசனின் முன்னால் படம் ஓட அதனை break போட்டு நிறுத்தும் வகையில் உள்ளே நுழைந்தான் அந்த கிழவன்.
"கிரீடம் உள்ள இடம் தெரிய வந்து விட்டது. நாளை நீ தான் 99 தீவுகளுக்கும் முடிசூட்டு அரசன். நம்முடைய இராணுவ கப்பல் 99 தீவுகளை சுற்றி வர உள்ள நடுக்கடலில் சென்று நங்கூரம் இட்டு இருப்பதாக இப்போது தகவல் கிடைத்துள்ளது .
கிரீடம் கைக்கு கிடைத்ததும் 99 தீவுகளில் உள்ள அரசர்களை கடத்தி இங்கு கொண்டு வந்து எங்கள் அரசன் முன்னே மண்டியிட வைக்க எல்லா ஏற்பாடுகளும் தயார்!" என்று அந்த கிழவன் கூற, அந்த இருள் அரசன் வெற்றி புன்னனகையையும் சிறிதாகவே உதிர்த்தான்...
Queen Margaret கு எப்படி princess Helena ன் தாத்தாவை தெரியும்?
அவன் கிரீடத்தையும் தன்வசப்படுத்தி கொள்வானா?
இருள் அரசனின் ஆசைகள் நிறைவேறுமா?
நண்பர்கள் நால்வரும் தாத்தாவின் மர்மத்தை கண்டுபிடிப்பதாக கூறி குச்சியையும் புத்தகத்தையும் கண்டுபிடித்தது பெரிய தவறா?
Thanks for the votes and comments.
Keep supporting.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro