20. Key Vs Map
அதனை கண்ணாடியில் உன்னிப்பாக அவதானித்து கொண்டிருந்த princess Helena ஐ நோக்கி திடீரென lady high royal ன் பார்வை திரும்ப, அவளோ திடுக்கிட்டு போய் அசைவின்றி நின்று கொண்டிருந்தாள்.
"Princess Helena! என்ன அங்கிருந்து பண்ணுற?" என்று அவளின் அருகில் வந்து கேட்க,
"urm...urm...அது...நான் கண்ணாடியில் தூசி இருக்கா என்று பார்த்தேன். அவ்வளவு தான்! பாருங்க clean பண்ண வந்த ஆட்கள் கண்ணாடியை கூட நன்றாக துடைத்து இருக்காங்க!" என்று கண்ணாடியில் விரலை வைத்து தூசி படிந்திராததை காட்டினாள்.
.
.
.
திறப்பும் diamond உம் ஒன்றோடு ஒன்று ஒட்டி இருக்க, அந்த நொடியில் திடீரென இரண்டும் சேர்ந்து ஒரு வரைபடமாக மாறியது. வரைபடத்தின் மீது அந்த diamond இருக்க, அதில் பாடசாலையின் முழு வரைபடமும் நூலகத்திலிருந்து காலடிகள் சுவடுகள் காட்டு பகுதியை நோக்கியும் வரையப்பட்டிருந்தன.
மேலும் சில திசைகளும் சில குறியீடுகளும் வரைப்படத்தை சுற்றி அலங்கரிக்கப்பட்டிருந்தன.
ஏதாவது மர்மம் இதில் இருப்பதாக உணர்ந்த prince Alex அதனை உன்னிப்பாக கவனிக்கும் வேளையில் காலையுணவை கொண்டு வந்த room service கதவை தட்டினான்.
திடுக்கிட்டவன் வரைப்படத்தை கையிலிருந்து விடுவிக்க அது நிலத்தில் விழுந்தது. விழுந்த வேகத்தில் diamond வரைபடத்திலிருந்து கழற, உடனே வரைப்படமும் திறப்பு வடிவத்திற்கு மாறியது.
.
.
.
"Ok princess Helena. இப்போ morning warm up காக warm up ground கு செல். பின் முதல் lesson கு குதிரை லாயத்திற்கு செல். After that lunch எடுத்துவிட்டு 2 மணிக்கு bell அடிக்கும் போது என் office ற்கு வர வேண்டும். Time is important!" என்று கூறி அனுப்பி வைத்தார் lady high royal.
Morning warm up கு princess Helena அவசர அவசரமாக செல்ல, அங்கு அனைவரும் வரிசைப்படி நின்று கொண்டிருந்தனர். அவளுக்கு தன் நண்பர்களை காண வாய்ப்பும் கிடைக்கவில்லை.
ஒருவாறு அரைமணித்தியால morning warm up முடிந்ததும் அனைவரும் குதிரை லாயத்திற்கு சென்றனர்.
Princess Helena செல்லும் வழியில் அவளின் பின்னால் prince Volker உம் அவனது நண்பர்களும் ஏதோ ஒன்றை பற்றி தீவிரமாக பேசிக் கொண்டு வருவதை அவதானித்தவள் யாரையாவது prank செய்ய idea போடுகிறார்கள் என்று நினைத்து விட்டு விட்டுவிட்டாள்.
அவசரமாக அவளை தாண்டிச் செல்லும் போது அவளுடன் மோதிய prince Volker, கீழே விழ சென்ற princess Helena ஐ பார்த்து நமட்டு புன்னகையிட்டு "பலமாக காற்று அடித்தால் பறந்து விடுவாய். So கழுத்தில் கயிறு கட்டி கோ!" என்றான் சத்தமாக.
விழ சென்றவளின் தோலை பிடித்து நிமிர்த்திய prince George "டேய் வெட்கமா இல்லை. Princess கிட்ட உன் வீரத்தை காட்டுற!" என்று ஏசிக் கொண்டே, princess Helena சொன்ன thanks ஐ கூட காதில் வாங்காமல் அங்கிருந்து நகன்றான்.
குதிரை லாயத்திற்கு சென்ற princess Helena ஐ தேடி மூன்று நண்பர்களும் அவளின் அருகில் வந்து சேர்ந்தனர்.
"Helen! என்ன நடந்தது? எல்லோரும் ஏதோ பேசிக் கொள்றாங்க!" என்று prince fred வினவ, அவளும் நடந்ததை கூறினாள்.
"Volker ஐ!!!" என்று அவனுடன் சண்டைக்கு செல்ல முயன்ற prince Alex ஐ நிறுத்திய princess Helena "Alex வேண்டாம். அவனுங்க தான் எப்போதும் யாரையாவது கிண்டலடித்து கொண்டும் prank செய்து கொண்டும் இருக்காங்க. அவனுங்க கூட மோத போனால் நமக்கு இருக்கவும் இடமில்லாமல் போய் விடும். So calm down. எல்லாவற்றுக்கும் சேர்த்து ஒருநாளை அவங்களுக்கு ஏதாவது பண்ணுவோம். But not now!" என்று சமாதானம் செய்தாள்.
"ஆனாலும் prince George ஏன் உனக்காக அங்கு பேசினான். ஏன்?" என்று யோசிக்க, gentleman royal Jackson வந்து பாடத்தை ஆரம்பித்தார்.
அனைவரும் குதிரையின் மீது பயணிப்பதே lesson ஆக அமைந்தது. அவர் ஒரு குதிரையின் மீது ஏற்கனவே சொல்லி கொடுத்ததை போல எல்லாம் முறையாக செய்து விட்டு குதிரையின் மீது அமர்ந்து கொண்டார்.
பின் குதிரையின் வயிற்று பகுதியில் gentle ஆக காலால் தட்ட அதுவும் மெதுவாக நடக்க தொடங்கியது.
பின் இளவரச இளவரசிகள் அதன்படி செய்யுமாறு கூற, அனைவரும் தங்களது குதிரைகளின் அருகில் போய் முன்னேற்பாடுகளை செய்தனர்.
ஒருவன் குதிரையின் belt ஐ இறுக்கமாக கட்டாது அவசரத்தில் ஏறி அமர்ந்தான்.belt தளர்ந்து இருக்க, அவன் என்னமோ நாமும் வௌவாலும் ஒரே முலையூட்டி வகை என்பதை நிரூபிக்கும் முகமாக குதிரையின் வயிற்று பக்கத்தில் தலை கீழாக தொங்கிக் கொண்டிருந்தான்.
Princess Roquelle ன் நண்பி ஒருத்தி குதிரையில் ஏறி அமர்ந்து, அதனை போக சொல்லி சொல்லி பல்வேறு முயற்சி செய்தும் அதுவோ திறமையாக வடிவமைக்கப்பட்ட சிலை போன்று ஒரு அடிக் கூட அசையாமல் நின்று கொண்டிருந்தது.
இன்னுமொரு dreaming இளவரசி குதிரையின் முன்னின்று அதனுடன் candle light dinner கு சென்று dinner எடுப்பதை போல கனவு கண்டு கொண்டிருந்தாள்.
Pumpkin ball அனைத்தையும் முறைப்படி செய்து குதிரையின் மீது அமர, அதுவோ அவனின் பாரத்தை நான்கு கால்களாலும் தாங்க முடியாமல் கால்கள் நடுநடுங்கி கீழே விழுந்து படுத்து கொண்டது.
Prince fred தனது நண்பர்களுக்கு சில tips ஐ சொல்லிக் கொடுக்க, அனைவரினதும் முன்னிலையில் நால்வரும் குதிரையின் மீது ஏறி லாயத்தை சுற்றி வலம் வந்தனர். மேலும் குதிரையை 5 சென்டிமீட்டர் உயரமான கம்பின் மீது பாயவும் செய்தனர்.
குறுகிய காலத்தில் இவ்வளவு திறமைகளை காட்டிய நால்வரையும் gentleman royal Jackson புகழ்ந்து தள்ள, princess Roquelle ன் காதிலோ இரும்பை உருக்கி ஊற்றுவது போல இருந்தது.
ஒரு மணியளவில் பாடம் முடிந்ததும் அனைவரும் canteen பக்கம் சென்று உணவு உண்ண ஆரம்பித்தனர். உணவு உண்டு கை கழுவிய பின் எஞ்சியிருந்த அரைமணி நேரத்தில் நண்பர்கள் மூவரும் princess Helena விடம் lady high royal ஐ பற்றி கேட்க ஆரம்பித்தனர்.
அப்போது தான் திறப்பை பற்றி நினைவுக்கு வந்த prince Alex "guys! இந்த திறப்பில் ஏதோ மர்மம் இருக்கு. இது வெறும் திறப்பு இல்லை. இந்த கைபிடியில் பிளவு ஒன்று இருக்கே, அதில் என் தாத்தாவுடைய diamond ஐ வைத்தவுடன் அது ஒரு வரைபடமாக மாறியது." என்று திறப்பை காட்ட,
"Unbelievable! நீ சொல்றது உண்மையா?" என்று வியப்புடன் வினவினான் prince fred.
"ஆமா! நான் உனக்கு அன்று காட்டிய diamond தான் இதோடு பொருந்துது. இப்போ இந்த இடத்தில் நிறைய பேர் இருக்காங்க so எனக்கு செய்து காட்ட முடியாது! & one more! இதுல வந்த வரைபடம் எங்க high school ஐ தான் காட்டியது. அதுவும் நம்ம library ல இருந்து சில காலடிகள் மேற்கு திசையில் இருக்கிற காட்டை நோக்கி செல்கிறதை போல வரைந்து இருந்தது." என prince Alex கூற, கூறுவதை நம்ப முடியாமல் கேட்டு கொண்டிருந்தனர் மற்ற மூவரும்.
"நான் உன்னை இப்படி இருப்பாய் என்று கனவில் கூட நினைக்கவில்லை! அந்த சுரங்க பாதையோட திறப்பை அங்க வைத்து விட்டு வராமல் அதையும் எடுத்துட்டு வந்திருக்க பாரு, உன்னை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை. எங்களை மாதிரி யாராச்சும் மாட்டிக்கிட்டால் அந்த திறப்பு அவங்களை காப்பாற்ற உதவி இருக்கும் தானே!" என்று திறப்பை எடுத்து வந்ததற்கு princess Tanya பேருருரை நடத்த,
"உன்னை போல மிக தொலைவான நோக்கு அவனுக்கு இல்லை. அதுதான்!" என்றாள் princess Helena.
"நான் தொலைநோக்கு தான் கேள்வி
பட்டிருக்கேன். அது என்ன தொலைவான நோக்கு?" என்று candy toffee ஐ வாயில் போட்டவாறே prince fred வினவ,
"எனக்கு எங்க அரண்மனையில கற்பித்த ஒரு gentleman royal தான் சொல்லி தந்தாரு! இதுக்கே shock ஆகினால் எப்படி? அவரு எனக்கு ஒரு முறை பழமொழிகள் கற்பித்தாரு. அதுவும் New version ல! அதில் ஒன்று தான், சுத்தம் சுகாதாரம் தரும்! எப்படி?
சரி அதை விடுவோம். அவரை பற்றி சொல்றது என்றால் நிறைய இருக்கு. Time வரும் போது சொல்றேன். Now let's solve this mystery!" என்று princess Helena திறப்பை எடுக்க, அவர்களின் மேசைக்கு princess Roquelle, அவளது இரு நண்பிகள், prince George மற்றும் prince Volker வந்து நின்றனர்.
நால்வரும் திறப்பை மறைக்க முற்பட்டனர். Prince Alex திறப்பை பின்னால் princess Helena ன் கைக்கு மாற்றினான்.
"Prince Alex! இவங்க கூட இருக்கிறதை விட எங்க கூட இருக்கிறது தான் உன் தகுதிக்கு பொருத்தமானது. So எங்க gang ல வந்து சேர்!
பாரு இவங்களை! ஒருத்தவன் சாப்பாட்டு எங்கோ நான் அங்கே என்ற concept ல வாழ்றவன். மற்றவள் எல்லோரையும் பற்றி details collect பண்ணி பண்ணியே காலத்தை கடத்துறவள். மூன்றாவது மற்றவர்களுக்கு அநியாயம் செய்து விட்டு அறியாமல் நடந்தது என்று பூனை கண்ணை காட்டும் மாய இளவரசி!" என்று மூவரை பற்றியும் தவறாக princess Roquelle பேச,
"Shut up Roquelle! என் தகுதியையும் என் friends ஐயும் பற்றி பேச நீ யாரு? எனக்கு தேவையான ஆட்கள் கூட நான் பேசுவேன் பேசாமல் இருப்பேன். என் வாழ்க்கையில் தலைபோட நீ யாரு?
Listen to this! இதுக்கு பிறகு என் friends ஐ பற்றி ஏதாவது தவறாக உன் வாயில் இருந்து வந்தது என்றால் நான் என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது!" என்று பொறிந்து தள்ளினான் prince Alex.
"பாருடா! நம்ம royal face hero கு ரொம்ப தான் கோபம் போகுது! கொஞ்சம் தண்ணீர் போட்டு அணைத்து விடுவோமா?" என்று prince Volker prince Alex ஐ வம்புக்கு இழுத்தான்.
"டேய் விடு டா! இவங்க எல்லாம் bubble gum matter! இவங்க கூட நம்ம வீரத்தை காட்டுவது மரத்துக்கிட்ட காட்டுவதை போல! நம்ம நேரம் தான் வீணாகும்" என்று மேலும் வம்புக்கு இழுத்தான் prince George.
இதற்கிடையில் பின்னால் கை கட்டி இருந்த princess Helena ன் கையை princess Roquelle ன் நண்பி எட்டி எட்டி என்ன ஒளித்து கொண்டிருப்பது என்று பார்க்க, அவள் கையிலிருந்த திறப்பை princess Tanya கு கொடுத்தாள்.
அவள் அதனை prince fred கு இடம் மாற்ற, அவனோ அதனை பிடிக்க தவறி விட்டான். திறப்போ நழுவி கீழே விழுந்து tiles இல் வழுக்கி சென்று ஒரு high heels ன் முன்னால் போய் தஞ்சமடைந்தது.....
வரைபடத்திலிருக்கும் அந்த மர்மம் என்ன? அதனை நண்பர்களால் கண்டு பிடிக்க முடியுமா இருக்குமா?
திறப்பு யாரின் காலருகே விழுந்தது?
இதுவரையுள்ள 20 updates கு எவ்வளவு Marks போடலாம்?
Thanks for the votes and comments.
Keep supporting.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro