Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

18. Baseball vs Catwalk

நான்கு பேரும் திரும்பி தங்களது அறைகளுக்கு செல்ல முயலும் போது பின்னால் இருந்து "you four! just stop!" என்று குரல் கேட்க, நால்வரும் சிலை போல நின்றனர்.

யார் என்று திரும்பிப் பார்க்க அங்கு நின்றிருந்தவர் lady high royal. "Come to my office!" என கட்டளையிட, நால்வருடன் சேர்ந்து lady royal Alisa உம் office ற்கு விரைந்தனர்.

"இவ்வளவு நேரம் எங்கு இருந்தீர்கள் ? சுரங்கபாதையூடாக எங்கு போனீங்க? புதையல் தேடியா போனீங்க? உங்களுக்கு வேண்டிய வேண்டிய மாதிரி சுத்துறதுக்கு இது ஒன்றும் park கிடையாது. 

எனக்கு என்ன shock என்றால் இதுல prince Alex உம் இருக்கிறது தான்! இதை பற்றி நான் உங்களுடைய parents கு கட்டாயம் report பண்ணுவேன் and 1 week lessons இல்லாத வேலைகளில் yard கு செல்வது நால்வருக்கும் முற்றாக தடை!" என்று நால்வரின் பெயர்களையும் குறித்து கொண்டார் lady high royal.

அவரை இடைநிறுத்திய princess Helena "lady high royal இது எல்லாவற்றிற்கும் காரணம் princess Roquelle தான். அவள் எங்கட map ல் திசைகளை மாற்றி வைத்தாள். அதை எங்கிட்ட கூற வரும் போது தான் prince Alex உம் நம்ம கூட சேர்ந்துகிட்டான். அதுக்கு பிறகு வேறு பாதையில் போகிறோம் என்று தெரிந்தவுடன் திரும்பி வர...." என்று மூச்சு விடாமல் பேசியதை இடைநிறுத்தினார் lady high royal.

"Stop it! Princess Helena. முதல்ல நீங்க gentleman royal Stephen கூட போகாமல் yard ல் உட்கார்ந்து கதை அளந்து கொண்டிருந்தது உங்களுடைய தவறு. முதல்ல அதை புரிந்து கொள்ள வேண்டும்.

அடுத்தது, தான் செய்த தவறை நியாயப்படுத்த மற்றவர்களை இழுத்து அவங்க மீது பழி போட கூடாது. அதுவும் princess Roquelle ஐ! நீங்கள் என்ன சொன்னாலும் தலைகீழாக நின்றாலும் என் தீர்ப்பு மாறாது" என்று princess Roquelle ன் அம்மாவின் நெருங்கிய நண்பியான lady high royal விடா பிடியாக இருந்தார்.

"எல்லாம் Alisa ட செல்ல வேலைகள் தான்!" என்று lady royal Alisa ன் மீது lady royal Elena பழி போட தயாராகும் போது அவ்வழியாக gentleman royal Stephen செல்ல, பாதியில் கதையை நிறுத்தி விட்டு வெளியில் ஓடினார் lady royal Elena.

அவரின் செயலில் lady high royal தலையில் அடித்து கொண்ட பின் நால்வரையும் lady royal Alisa ஐயும் வெளியே செல்லுமாறு உத்தரவிட்டார்.
.
.
.
"Lady royal! நாங்க சொன்னது தான் உண்மை. ஆனால் இப்போ நம் அம்மா அப்பா கிட்ட complain பண்ணாங்க என்றால் நாம என்ன பண்ணுறது? ஏற்கனவே என்னால சில lady royals கு கஷ்டங்கள் ஏற்பட்டதால் தான் இங்கு சேர்த்தாங்க!" என்று princess Helena தடுமாற்றமடைந்து கூற,

"what? சில lady royal கா? இல்லை..." என்று ஒற்றை புருவத்தை உயர்த்தி கேட்டாள் princess Tanya.

"Dont worry! எது நடந்து இருக்கும் என்று என்னால ஊகிக்க முடியும் so நான் உங்க நான்கு பேரோட அம்மா அப்பா கிட்ட பேசுறேன். Ok ஆ? இப்போ போய் wash பண்ணி rest எடுத்து விட்டு next lesson கு வாங்க!" என்று அனுப்பி வைத்தார் lady royal Alisa.

நால்வரும் தங்களுடைய அறைகளுக்கு சென்று குளித்து விட்டு சிறிது நேரம் உறங்குவதற்காக  கட்டிலிற்கு சென்றனர்.

அதற்குள் Princess Tanya Royal faces எனும் app ல் ROYAL FRIENDS எனும் பெயரில் group ஒன்றை ஆரம்பித்து அதில் மற்ற மூவரையும் சேர்த்து விட்டாள்.

"Hi guys! Hope we four gonna be good no... no... best friends! இந்த idea எனக்கு lady high royal எங்களை பார்த்து பார்த்து எனது குடலில் உள்ளவை வெளியே வந்துவிடும் என்று  பேனையின் கூறும் அளவுக்கு அதன்  நுனியை மேசையில் குத்தி குத்தி கொண்டிருந்த நேரம் வந்தது. அதுதான் வந்து முதல் வேலையா அதை செய்து விட்டேன்." என்று princess Tanya முதல் message ஐ போட,

"எனக்கு ok! But prince Alex? Are you ok with this? நீங்க இப்படி private groups ல இருக்க விரும்புவீங்களா?" என்று princess Helena அடுத்த message ஐ type செய்தாள்.

"Are you crazy? நானும் உங்களை போல தானே! எனக்கும் நீண்ட நாளைக்கு பிறகு இப்படி மூவர் கூட சேர்ந்து இருக்கவும் புதுவித experience உம் எடுக்கவும் chance கிடைத்து இருக்கு! அதை நான் miss பண்ண மாட்டேன். And miss use பண்ணவும் மாட்டேன். So I like to friend with you three!" என்று அடுத்த message ஐ prince Alex போட,

இது ஒன்றும் தெரியாமல் vanilla milk shake ல் போடப்பட்டிருந்த ice cream ஐ straw ஆல் குத்தி அதனை வாயில் போட்டு கொண்டிருந்தான் prince fred.

நீண்ட நேர chatting ன் பின் prince Alex கட்டிலில் அமர, கட்டிலில் அவன் சுரங்க கதவை திறக்க உதவிய திறப்பு கண்ணுக்குப் பட்டது.

அதனை கையில் எடுத்து பார்க்க, அதில் diamond வடிவ கைப்பிடியின் நுனியில் ஏதோ பிளவு ஒன்று இருக்க அதனை ஆராய்ச்சி செய்து கொண்டே அவனுக்கு தூக்கமும் சென்றது.
.
.
.
அடுத்த lesson கான bell அடிக்க, இளவரசர்கள் அனைவரும் baseball விளையாடுவதற்கான நீல நிற ஆடைகளை அணிந்து yard கு வந்து கொண்டிருந்தனர்.

இடையில் prince Alex prince fred ஐ கண்டு அவனுடன் பேசியப்படியே வெளியே வந்தான்.

"Wow! Nice bangle!" என்று prince Alex கையில் போட்டிருந்த இரத்தினங்கள் பிடிக்கப்பட்ட காப்பை காட்டி prince fred கூற, "இதுவா? இது என் தாத்தாவோடது. இதை தாத்தா நிறைய யுத்தகங்களின் அணிந்து இருக்காரு! அதே போல mostly வெற்றியும் பெற்று இருக்காரு. Lucky bangle என்று சொல்வாங்க. நானும் அவரை போல வீரனாகுவேன் என்று தாத்தா அடிக்கடி சொல்வாங்க.

அவருடைய கடைசி ஆயுதம் இது தான். இங்க பாரு! இந்த green button ஐ அழுத்தினால் வட்டமான கத்தி தோன்றும். See this. But கத்தி நுனியில் இருக்கிற இந்த red diamond தான் எதுக்கு என்று தெரியாது!" என்று அவற்றை பற்றி முழு விபரத்தையும் prince alex கூறிய வண்ணமும் அதன் கூர்மையை இரசித்த வண்ணமும்  prince fred உம் yard ஐ அடைந்தனர்.

அவனின் அந்த விசித்திரமான கத்தியை கண்டு ஒரு சோடி கண்களில் லாவா குழம்புகள் குமிழியிட ஆரம்பித்தது.

"This is fantastic! என் தாத்தா எனக்கு அவரோட violin ஐ gift பண்ணினாரு. அவருக்கு எவரையும் வசப்படுத்தக்கூடியவாறு violin வாசிக்க முடியும். என்னாலும் முடியும் என்று அவர் சொல்வாரு. But as I think I can't. ஆனால் எனக்கு என் பாட்டி சொல்லி தந்திருப்பது போல எவ்வளவு கஷ்டமான riddles ஐயும் quick ஆக answer பண்ண முடியும்." என்று prince fred கூற,

"As I think you can play piano as well as your grand pa. முதல்ல உன்னால் முடியும் என்று நினை. Next try பண்ணு! நீ சாதிப்பாய்! I know you can do!" என்று prince fred ஐ motivate ஆக்கினான் prince Alex.
.
.
.
இளவரசிகள் அனைவரும் pink colour gowns அணிந்தவாறு yard ற்கு வருகை தந்தனர்.

வரிசையாக வலது பக்கத்தில் இளவரசிகள் 50 பேர் நிற்க, இடது பக்கத்தில் இளவரசர்கள் 50 பேர் வரிசையாக நின்றிருந்தனர்.

Princess Helena ன் அருகில் princess Tanya நின்றிருக்க, இருவரும் இளவரசர்களின் வரிசையை நோக்கி பார்வையை செலுத்தினர்.

அங்கு prince fred, prince Alex உம் முன் வரிசையில் இருக்க, அவர்களுக்கு இருவரும் Hi சொல்லி baseball முதல் நாளுக்கு  all the best எனவும் கையினால் சமிஞ்சை செய்ய, பின்னால் ஒருவரின் வயிறு கருகிக் கொண்டிருந்தது.

தொலைபேசியில் யாரிடமோ பேசி கொண்டிருந்த பின் yard கு வந்த gentleman royal Stephen இளவரசர்களை baseball ground கு அழைத்து சென்றார்.

அவருக்கு அடுத்து வந்த lady royal Alisa இளவரசிகளை அருகில் உள்ள fashion show ற்காக அமைக்கப்பட்ட மேடைக்கு அழைத்து சென்றார்.

"Princesses! Today we gonna learn how to do catwalk. It means எப்படி ஒரு fashion show ல மேடையில நடப்பீங்க என்பது தான்.

You have to follow 6 rules! First இந்த மேடை நேராக தான் இருக்கும். நிறைய பேர் உங்களை அவதானிப்பாங்க. So நீங்க உங்களுடைய confidence ஐ முதலில் அதிகரித்து கொள்ள வேண்டும்.

Second and third project fabulous! Keep smiling. 32 பற்களை tooth paste advertisingகு காட்டுகிறது போல அல்ல. Light ஆக and gentle ஆக தலையை அசைக்கவும் வேண்டும்.

Forth quick change. விரைவாக சில வினாடிகளில் உங்களுடைய next costume ஐ அணிந்து வர வேண்டும்.

Next எப்போதும் camera ஐ focus பண்ண படி இருக்க வேண்டும். உங்களை சுற்றி 1000 cameras இருந்தாலும் எல்லாவற்றுக்கும் pose கொடுக்க வேண்டும்.

Final மேடையின் நுனியில் இருந்து 14 inches வரை straight ஆக நடந்து வந்ததன் பின் spine ஒன்று பண்ணி திரும்பி செல்ல வேண்டும்!

So this is enough for now! Let's try!" என்று கூற, சிலர் அவர் கூறியதை அவசர அவசரமாக note book ல் mark செய்து கொண்டனர்.

Princess Roquelle உம் அவளது நண்பிகளும் தன்பாட்டுக்கு கண்ணாடியை பார்த்து கொண்டு தலையை அலங்கரித்து கொண்டிருந்தனர்.

பின்னர் அனைவரும் வரிசையாக catwalk கு தயார் ஆகி நின்றனர்.

முதலாவதாக ஒருத்தி முன்னால் நடந்து விட்டு திரும்பி வர, அவளின் high heels மற்றையவளின் gown ஐ துளைத்து heels உம் gown உம் நீண்ட நாட்களின் பின் கண்ட இணைபிரியாத நண்பர்கள் போல அணைக்க இளவரசிகள் இருவரினதும் நிலைதான் கவலைகிடமாக மாறியது.

Starting அபசகுனமாக தொடங்க, quick change ல் princess Tanya உம் princess Roquelle ன் நண்பியும் அணிய வேண்டி ஆடைகளுக்கு சண்டையிட்டு 19 ஆடைகளை துண்டு துண்டாக கிழித்து போட்டனர்.

20, 21 ஆவது ஆடையில் blouse யும் bottom யும் இருவரும் மாற்றி இரட்டை பிறவிகள் போல அணிந்து வந்து சிலருக்கு fashion ஐயையும் கற்பித்தனர்.

Princess Helena catwalk நடக்கும் போது கண்களின் அருகாமையில் பறந்த சென்ற butterfly ன் நுண்ணிய மயிர்கள் கண்ணினுள் செல்ல தடுமாறினாள், அதனை கசக்கி கொண்டே நடந்தாள்.

இதற்கிடையில் நீண்ட gown ஐ அணிந்தபடி முன்னால் சென்ற princess Roquelle ன் ஆடையை தெரியாமல் மிதிக்க, spine எடுத்த அடுத்த அடி எடுத்து வைக்க முற்பட்ட princess Roquelle நிலைதடுமாறி கீழே விழுந்தாள்.

விழுந்தவள் விழுந்தவாறே இருந்து அனல் பார்வை பற்ற வைக்க, அங்கோ பின்னால் princess Helena தனது முகம் விளங்காது முகத்தை முழுவதும் hat யில் புதைத்து வைக்கும் முயற்சியில் ஈடுபட்டாள்.....


அந்த லாவா கண்கள் யாருடையது?

Gentleman royal Stephen ன் அடிக்கடியான தொலைபேசி பேச்சுகள் lady royal Alisa ன் கவனத்திற்கு வருமா?

Princess Roquelle ன் அடுத்த முயற்சி எவ்வாறு இருக்கும்?

Thanks for the votes and comments.
Keep supporting.

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro