Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

17. Key

முதல் 10 நிமிடங்கள் அந்த சுரங்கமே மயான அமைதி காத்தது. நால்வரும் ஒருவருடன் பேச முயற்சிக்கவில்லை.

முன்னால் prince fred நின்று கொண்டு விடுகதைகளுக்கான விடைகளை மிகவும் பொறுமையாக தேடிக் கொண்டிருந்தான்.

Princess Helena ன் மடியில் தூங்கிக் கொண்டிருந்த princess Tanya எழுந்து "நான் எங்கு இருக்கிறேன்? என் கட்டிலிலா? இவ்வளவு இருட்டாக இருக்கு! யாராவது switch அ on பண்ணுங்கடா! ஒருவேளை நான் கட்டிலின் அடியில் இருக்கேனா?" என்று தூக்கத்தில் புலம்ப,

"Tanya எழுந்திரு! தூக்கத்துல என்னென்னமோ புலம்புற! எனக்கு பயமா வேறு இருக்கு" என்று அவளை தட்டி எழுப்பட்டினாள் princess Helena.

திடீரென்று எழுந்து நின்றவள் பலமாக சிரிக்க ஆரம்பித்து விட்டாள். கண்களை மேலும் கீழும் உருட்ட, அசல் மோகினி போலவே இருந்தாள் princess Tanya. தலையில் போடப்பட்டிருந்த Ponytails கழற்ற முனைய,

"இதையே பார்க்க முடியல்ல. அதுல வேற தலை விரிகோலமாக இருந்தால் உன்னை பார்க்க எனக்கு பதினாறு கண்கள் தேவைப்படும்!" என்று அவளின் நடிப்பை கண்டு சிரித்து விட்டு கூறினான் prince Alex.

Princess Helena ஓ உண்மையில் அவளுக்கு பேய் பிடித்ததாக எண்ணி பயந்து போய் இருக்க, நடிப்பு என்று அறிந்தவுடன் அவளை விரட்டி விரட்டி அடிக்க துரத்தினாள்.

இருவரினதும் விளையாட்டில் princess Tanya போய், தலையை குடைந்து யோசித்து கொண்டிருந்த prince fred ன் மீது விழ, அவனுக்கோ பேய் கோபம் தலைக்கேறியது.

"Loose! எப்ப பாரு விளையாட்டு! உன் குரங்கு கூத்தை கொஞ்ச நேரத்துக்கு  தள்ளி வை. நானே பொறுமையின் எல்லைக்கு போய் Hi காட்டி கொண்டு இருக்கிறேன்." என்று ஏசிக் கொண்டிருக்க, விடுகதைக்கான நேரம் முடிவடைந்ததாக காதுகள் பிளக்கும் வண்ணம் bell ஒன்று மூன்று முறை அடித்தது.

நால்வரும் பயத்தில் நடுங்க, prince fred ஓ தீ பார்வையை princess Tanya ன் மீது வீசிக் கொண்டிருந்தான். "Fred, என்ன நடக்குது?" என princess Helena வினவ,

"இந்த விடுகதைகள் தீர்க்க இரண்டே இரண்டு lives தான் தந்தாங்க. Now ஒன்று இவளால போய்றிச்சு. ஒன்று தான் இருக்கு! அதோட 15 riddles கு சரியான பதில் கூறிவிட்டேன். இன்னும் 15 riddles இருக்கு! So please don't disturb me!" என மீண்டும் princess Tanya ஐ பார்த்து முறைத்து விட்டு தன் வேலையை தொடங்கினான் princes fred.

"இவனுக்கு pinocchio போல மூக்கு. அதில் வேற மூக்கு நுனியில கோபம்!" என தனக்குள்ளே கூறிக் கொண்டு பின்னால் போய் prince Alex ன் பக்கத்தில் அமர்ந்தாள் princess Tanya.
.
.
.
Library ma'am ஐ ambulance ல் கொண்டு செல்ல, உள்ளே இறாக்கையின் அருகே சென்று நோட்டமிட்டனர் lady high royal, lady royal Alisa உம் lady royal Elena உம்.

"இது ஒரு பெரிய அழிவுக்கு அடித்தளம். Let's inform this to royal king!" என அந்த நாட்டு மன்னருக்கு முறையிடுவதற்காக lady high royal அவசர அவசரமாக செல்ல, lady royal Alisa சுற்றி வர நோட்டமிட்டார்.

அங்கே இரத்த அச்சுடன் ஏதோ ஒரு கண்ணாடி துண்டும் கிடந்தது.
அதன் அருகே சென்று அக் கண்ணாடி துண்டை எடுத்து பார்க்க, அதில் வரிசையாக செதுக்கப்பட்டிருந்த ஓநாய்களின் முகங்களை காண, அவரின் வியர்வை சுரப்பிகள் தன் வேலையை தொடர ஆரம்பித்தது.
.
.
.
"Hello, நம்ம plan படி எல்லாம் முடிந்தது தானே?" என்று gentleman royal Stephen phone ல் பேச, அடுத்த முனையில் இருந்த வந்த பதிலை கேட்டு சிரித்தார்.

பின் இளவரச இளவரசிகள் இருக்கும் இடத்திற்கு வந்து அனைவரையும் மீண்டும் பாடசாலைக்கு அழைத்து சென்றார்.
.
.
.
20 நிமிடங்கள் சென்றது, இன்னும் 5 விடுகதைகள் மீதி.

"Guys கொஞ்சம் help பண்ணுங்களே! இது வெறும் 15 வினாடிகள் கேள்வி!

324 இல் ஒரு எண் சரியானது ஆனால் அது இருக்கும் இடம் பிழை.

681 இல் இரண்டு எண்கள் சரியானது ஆனால் அவை இருக்கும் இடங்கள் பிழை.

912 இல் இரண்டு எண்கள் சரியானது ஆனால் ஒரு எண்ணின் இடம் மாத்திரம் சரியானது.

890 இல் ஒரு எண்ணும் அது அமைந்துள்ள இடமும் சரியானது.

Guys quick! We have only 5 seconds!" என கூற, மூவரும் அவசரமாக phone லும் தரையிலும் குறித்து கொண்ட பின் ஆளுக்கு ஒரு எண்ணாக கண்டுபிடித்தனர்.

ஒருவாறு விடை சரியாக அளிக்கப்பட்டதுடன் பெருமூச்சு விட்டப்படி prince fred அடுத்த விடுகதைக்குள் சென்றான்.

"இவனுக்கு வேறு வேளை இல்லை. எங்களை போல உட்கார்ந்து rest எடுக்காமல் இவ்வளவு நேரமாக மூளையை கசக்கி கொண்டு இருக்கான். ஆ...அது இல்லை prince Alex. இப்போ தான் உங்க நினைவு வந்தது.

உங்களோடு பேசுறத்துக்காக இளவரசிகள் போராட்டமே நடத்துறாங்க! அப்படி இருந்தும் எங்க கூட சுரங்கத்தில் நீங்களும் மாட்டி கிட்டீங்க! So இந்த moment ஐ memorable ஆக வைத்து கொள்ள selfie எடுப்பமா?

Hey Helen! நீயும் வா! அங்க பாரு சுரங்கத்தில் இருக்கிற கற்களை கூட விட்டு வைக்கிறா இல்லை. அதையும் வைத்து ஏதோ craft செய்யுறா!

Prince Alex! இப்படி தான் என் இரண்டு friends உம் கொஞ்சம் ஒரு மாதிரியாக தான் இருப்பாங்க. நான் மட்டும் தான் ஏதோ சுய புத்தியோட இருக்கேன்!" என்று princess Tanya selfie எடுக்க, prince Alex ஓ இவர்களின் நடவடிக்கைகளை கண்டு சிரித்து கொண்டிருந்தான்.

ஆனால் prince Alex ன் alert ஓ lady high royal கு சென்றபாடு இல்லை. இவர்களும் அந்த நம்பிக்கையில் வெட்டி பேச்சுக்களை பேசிக் கொண்டிருந்தனர்.

Prince fred உம் கைவிடுவதாக இல்லை. ஒருவாறு prince fred ன் பொறுமையின் பலனால் அரைமணித்தியாலத்தின் பின் வெற்றி வாகையை சூடினான்.

மற்ற மூவரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பாரிய சத்தத்துடன் முன்னால் இருந்த கதவு திறப்பட்டது.

நால்வரும் திறப்பட்ட கதவை நோக்கி நகர, புதிய அறை ஒன்று முன்னால்  தென்பட்டது.  அங்கு திறப்பு ஒன்று கண்ணாடி பெட்டியில் இருந்ததை princess Helena ன் கண்களுக்கு கொத்தி விட்டு சென்றது.

நண்பர்களிடம் அதனை காட்ட அனைவரும் அதன் அருகில் சென்றனர். அதோ  கைப்பிடி diamond வடிவில் இருக்க, சுற்றி வர சிவப்பு நிற கற்கள் பதிக்கப்பட்ட தங்க திறப்பாக காட்சியளித்தது.

Princess Helena முன்னால் பார்வையை  செலுத்த, அங்கோ தங்கத்தால் ஆன கதவுக்கு அதற்கு தங்க பூட்டு போடப்பட்டிருந்தது.

"Guys இது அந்த கதவோட திறப்பாக இருக்க முடியும்!" என்று நண்பர்களிடம் princess Helena தன் கருத்தை கூற, இதற்கு மேல் காத்துக் கொண்டிருப்பதில் அர்த்தம் இல்லை என்று எண்ணிய நண்பர்கள் திறப்பை எடுத்து கதவை திறக்க தீர்மானித்தனர்.

திறப்பை எடுக்க prince Alex தைரியத்துடன் முன்னேற, அவனை இடைநிறுத்தும் முகமாக "prince Alex! இது ஒரு trap ஆக கூட இருக்கலாமே?" என்று இருந்த ஒரே வழிக்கும் முற்று புள்ளி வைத்தாள்  princess Tanya.
.
.
.
அனைவரும் பாடசாலையினை அடைய, yard ல் lady high royal உம் மற்ற மூவரும் நின்று கொண்டிருந்தனர்.

இவர்களை கண்டவுடன் "surprise!" என lady high royal கைகளை விரிக்க, band வாத்திய குழு ஒன்று அனைவரையும் சுற்றி வட்டமிட்டு தங்களது வாத்திய திறமைகளை காட்டி கொண்டிருந்தது. அவர்களின் வாத்திய உபகரணங்களின் சுருதி அனைவரையும் நடனம் ஆடவும் செய்தது.

அன்று Lady high royal ன் பிறந்தநாள் என்பதால் அனைவரையும் அவர் surprise கொடுக்க எண்ணி பெரிய party ஒன்றை தன் சுய செலவில் ஒழுங்குபடுத்தி இருந்தார்.

அனைவரும் தங்களை மறந்து ஆடல் பாடல் ஊண் உணவுகளில் கவனம் செலுத்த, lady royal Alisa ன் கண்கள் gentleman royal Stephen ஐ தேடியது.

அவரோ ஒரு கதிரையை பிடித்து உட்கார்ந்து கொண்டு, spaghetti ஐ உறிஞ்சி உறிஞ்சி சாப்பிட்டு கொண்டிருந்தார். அவர் அருகில் சென்ற lady royal Alisa நூலகத்தில் நடந்தவற்றை கூற, அவரின் கவனம் முழுவதும் பீங்கானில் வழுக்கி வழுக்கி செல்லும் meat balls துண்டின் மீதே இருந்தது.

கோபத்தின் வீரியத்தில் அவரின் முதுகில் சாப்பிட்ட அனைத்து spaghetti உம் மீண்டும் பீங்கானை அடையும் வகையில் இரு அடிகளை போட்டு முறைத்து கொண்டிருந்தாள் lady royal Alisa.

அவரோ lady royal Alisa ன் செயலில் அதிர்ந்து போய், பூனை குட்டி போல அவர் சொல்வதை கேட்க தயாரானார்.

மீண்டும் ஒரு முறை நடந்தவற்றை கூறிய பின், அவர் நூலகத்தில் கண்டெடுத்த கண்ணாடி துண்டை gentleman royal Stephen னிடம் காட்ட, அவரோ என்ன செய்வது என்று புரியாமல் திகைத்து நின்றார்.
.
.
.
"Let's try this! நமக்கு வேறு வழியில்லை. Alert போய் சேர்ந்து இருந்தால் இந்த நேரத்தில் நமல்ல கண்டுபிடித்து இருப்பாங்க. So we have to do this.  நீங்க அனைவரும் சற்று தள்ளி நில்லுங்கள்! நான் எடுக்கிறேன்!" என்று கண்ணாடியை திறந்து கண்களை மூடிய வண்ணம் திறப்பை எடுத்தான் prince Alex.

ஆனால் அவர்கள் நினைத்தவாறு ஏதும் நடக்கவில்லை. திறப்பை கொண்டு போய் கதவை திறக்க, அதுவோ இன்னுமொரு சுரங்க பாதையை காண்பித்தது.

திறப்பை எடுத்து தன் பையிக்குள் போட்டவாறே நடையை prince Alex தொடர, அவனின் அருகே வந்த prince fred "மச்சான்! இவ்வளவு காலமாக இவங்க இரண்டு பேர் கூட பெரிய போராட்டத்தில் நடுக்கடலில் தத்தளித்து கொண்டிருந்தேன். இப்போ நீ கிடைச்சுட்ட. So நான் உன் கூடவே வருகிறேன். இல்லை இந்த கித்துள் பாணி கூட இருந்தால் என் காதுல உள்ள செவிபறை மென்சவ்வு கிழிந்து காது கேட்காமல் போய் விடும்!" என்று prince Alex ன் தோல் மேல் கை போட்டு கொண்டு முன்னால் நடந்தான்.

"பாரு prince போலவா நடந்து கொள்கிறான். Rowdy போல இருக்கிறான். உண்மையில் மண்டையோட்டுல மூளை இல்லை. களிமண் தான் இருக்கு!" என princess Tanya பொறிய, அவளை சமாதானப்படுத்தி கொண்டு வந்தாள் princess Helena.
.
.
.
சில வினாடிகளின் பின், திகைத்து இருந்த gentleman royal Stephen ஐ தட்டி என்ன நடந்தது என்று lady royal Alisa கண்களால் கேட்க, அவரோ ஒன்றுமில்லை என்று தலை அசைத்தார்.

அப்போது தான் princess Helena ன் ஞாபகம் lady royal Alisa கு வர, அவளை பற்றி gentleman royal Stephen னிடம் விசாரித்தார்.

Princess Helena கு 100 வருட ஆயுட்காலமோ என்னமோ lady royal Alisa விசாரித்த இரண்டு வினாடிகள் செல்ல முன் yard ன் நடுவே party நடைபெற்று கொண்டிருக்கும் போதே நிலத்தின் அடியிலிருந்து கதவு திறப்பட, நால்வரும் எங்கு வந்து சேர்ந்துள்ளோம் என்று தெரியாமல் தலை போட்டு வெளியே பார்த்தனர்.

நால்வரினதும் நிலத்துக்கடியால் ஆன வருகை lady high royal கு heart attack ஐ ஏற்படுத்துவது போல இருந்தது. நால்வரும் party கு powder கு பதிலாக சேற்றை பூசிக் கொண்டு வந்திருந்தனர்.

Lady high royal, lady royal Alisa ன் காதில் ஏதோ முணுமுணுக்க, அனைவரையும் அவர்களது அறைகளுக்கு செல்லுமாறு கட்டளையிடப்பட்டது.

நான்கு பேரும் திரும்பி தங்களது அறைகளுக்கு செல்ல முயலும் போது பின்னால் இருந்து "you four! just stop!" என்று குரல் கேட்க, நால்வரும் சிலை போல நின்றனர்.....

Lady high royal பெரிய அழிவுக்கு அடித்தளம் என்று ஏன் கூறினார்?

விடுகதையின் விடையை உங்களால் கண்டுபிடிக்க முடியுமா?

கண்ணாடியை கண்டு gentleman royal Stephen திகைக்க காரணம் என்ன?

நால்வருக்கும் ஏதாவது punishment வழங்கப்படுமா?

Thanks for the votes and comments.
Keep supporting.

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro