16. Picnic
நூலகத்தினுள் நுழைந்த library ma'am புத்தகங்கள் சரியாக அடுக்கப்பட்டுள்ளதா என கண்காணிப்பற்காக நூலகத்தை சுற்றி வலம் வந்தார்.
எப்போதும் அவருக்கு நூலகத்தின் ஒரு பகுதியை கடந்து போகும் போது அப்பகுதியில் ஒட்சிசனை சுவாசிக்க மறந்து விடுவார். ஆனால் ஏனோ இன்று அப்பகுதியால் செல்லும் போது சற்று எட்டிப் பார்க்க தோன்றியது.
உள்ளுக்குள்ளே மனம் படபட என அடித்தாலும் கால்கள் செல்வதை நிறுத்தவில்லை. எல்லாம் ஒழுங்காக இருந்தவாறே இருந்தது.
சந்தோசத்தில் ஒட்சிசனை உள்ளெடுத்து விட்டு திரும்பி செல்ல எத்தனிக்கும் போது, அவளின் கண்களுக்கு அந்த இறாக்கைப் பட்டது. கண்டவுடனே கண்கள் மேலே செல்ல, மயங்கி சரிந்து விழுந்தார் அவர்.
.
.
.
"அரசே! அரசே! நம்ம திட்டத்தில் சிலர் மூக்கை நுழைக்கின்றனர்." என்று வியர்வை வடிய வடிய ஓடி வந்த தூதுவன் ஒருவன் கூற, பயத்தையும் அடிமைத்தனத்தையும் ஆயுதமாக்கி கொண்ட இருள் தேசத்தின் அரசன் தனது ஆள்காட்டி விரலால் கிடையாக வரைந்து காட்டினான்.
தூதுவன் அதிர்ந்து நிற்க, அரச சபையில் அமர்ந்து நின்ற கிழவன் நமட்டு புன்னகையுடன் தலை அசைத்து கொண்டிருந்தார்.
.
.
.
"Are you crazy? சந்தோஷமான நேரத்தில் கூடி இருக்கவும் ஆபத்துல விட்டு விட்டு ஓடிறதுக்காகவா friends பிடிப்பாங்க? Friendship என்பது ஒரு அழகிய உறவு. அதை சில பேர் உணர்ந்து கொள்வாங்க! நான் தேர்ந்தெடுத்த என் நண்பியை எந்த காரணத்துக்காகவும் கை விட மாட்டேன். நீ என்னதான் எங்களை விட்டு போக நினைத்தாலும் பின்னாடியே வந்து torture பண்ணுவோம். அப்படி தானே Fred bread!" என அவன் முகத்தை princess Tanya பார்க்க,
அவனோ மீளாத பயத்தில் இருந்தான். Princess Tanya மேசைக்கடியால் அவனின் காலை உதைக்க, அப்போது தான் அவன் தன்னிலையடைந்தான்.
திக்கி திணறி ஆம் என தலையசைக்க, "பார்த்தயா? அவன் கூட ஆம் என்று சொல்லிட்டான். இதுக்கு பிறகு உனக்கு என்ன பிரச்சினை வந்தாலும் நாம மூவரும் சேர்ந்து தான் தீர்க்க போகிறோம்.
Ok ok இப்படியே போனால் இந்த update முழுவதும் சோகமாக தான் போகும். Let's join with them in the picnic!" என்று எழுந்து இருவரையும் எழ செய்தாள்.
பின் மூவரும் சுற்றி முற்றி பார்க்க, அங்கு ஒருவரினதும் மூச்சு காற்று கூட இருக்கவில்லை. "எல்லோரும் நம்மல விட்டுட்டு போய்டாங்களா?" என princess Helena வினவ,
"அதுக்கு ஏன் நம்ம blood pressure ஐ ஏற்றி கொள்றது? அதுக்கு தான் map இருக்கே!" என்றவாறு map ஐ பார்த்து "north கு போகனும்!" என்றாள் princess Tanya.
சற்று தூரம் விரைவாக நடந்தாலும் அவர்களால் மற்றவர்களை தேடி பிடிக்கவில்லை. திரும்பி போகும் idea ஐ prince fred முன் வைத்தாலும் அதற்கு ஆயிரம் தத்துவங்களை கூறி காதை அறுத்தாள் princess Tanya.
இவர்களின் இடையில் நடக்கும் பனிபோரை இரசித்தவாறு நடந்தாள் princess Helena.
15 நிமிட பயணத்தின் பின் யாரோ தன்னை பின் தொடரும் உணர்வு ஏற்பட்டது princess Helena கு. தன் நண்பர்களிடம் கூறுவமா வேண்டாமா என்று எண்ணிய princess Helena 'prince fred சிறிய கரப்பான் பூச்சிக்கே பயப்படுவான் இப்போது இதை சொன்னால் எங்கு ஓடுவான் எங்கு ஒளிவான் என்றே தெரியாது ஆகவே கூற தேவையில்லை. நானே போய் பார்க்கிறேன்' என எண்ணினாள்.
இருவரும் வாய் தகராறு அதிகரித்து செல்லும் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்டு மெதுமெதுவாக வேகத்தை குறைத்தாள். எப்படியோ இருவரையும் பார்க்க பல அடிகள் பின்னால் இருக்க, வெற்றி சிரிப்பை சிரித்தாள்.
ஆனால் சிரிப்பை புதைத்து விடும் நோக்கில் அருகில் இருந்த புதரின் இலைசருகுகள் வேகமாக அசைய ஆரம்பித்தது.
உள்ளுக்குள்ளே இருந்த மொத்த தைரியத்தையும் சேகரித்து கொண்டு, கீழே இருந்த மரத்தின் கிளையை எடுத்து 'எங்களை follow பண்ணதற்காக 3 நாட்கள் படுத்த படுக்கையாக படுக்கையில் போடுறேன்' என கோபத்தில் புதரின் அருகில் மெதுமெதுவாக நடந்தாள்.
இவள் ஒருவேளை தன்னை தாறு மாறாக அடிப்பாளோ தெரியவில்லை என்று எண்ணிய அந்த நபர் புதரிலிருந்து வெளியே பாய்ந்தார். இதனை சற்றும் எதிர்பார்க்காத princess Helena யார் என்று பார்ப்பதை விட்டு விட்டு கத்திக் கொண்டு தடியால் முன்னால் அடித்து கொண்டிருந்தாள்.
அவளின் கத்தும் சத்தம் கேட்டு வாங்குவாதத்தை வெற்றியும் தோல்வியும் இன்றி முடிவித்தனர் இருவரும். "Fred bread Helen ஐ காணோம். இது எல்லாம் உன்னால தான். எப்ப பாரு பேசிக் கொண்டே இருக்க!" என்று அவன் மீது princess Tanya பொறிய,
"Shut up! Tany கித்துள் பாணி! நானா இவ்வளவு நேரம் காதை கடித்தேன். நீ தான் உனக்கே பேசுவதன் அர்த்தம் என்ன என்று தெரியாமல் பேசிக்கிட்டே போன! அதை விடு let's go and find Helen!" என்று அவளை இழுத்து கொண்டு பின்னால் ஓடினான் prince fred.
"இப்படி அடித்தால் கொசுக்கும் வலிக்காது!" என்று princess Helena முன்னால் உள்ள நபருக்கு அடிக்காமல் கண்களை மூடிக் கொண்டு வளியில் தடியை மட்டும் அங்கும் இங்கும் ஆட்டிக் கொண்டிருந்தாள்.
ஆண் குரல் அதுவும் சிறிய குரலை ஒன்றை கேட்டவுடன் மெதுவாக கண்களை திறந்து பார்க்க, அவளுக்கோ அதிர்ச்சி காத்து கொண்டிருந்தது.
"Prince Alex!" என்று வாய் தானாக முணுமுணுக்க, பின்னால் அதே இரு சொற்களை ஒலிப்பதை கேட்டாள்.
திரும்பி பார்க்க, அங்கு princess Tanya உம் prince fred உம் அதிர்ச்சியில் prince Alex ஐ பார்த்த வண்ணம் நின்றிருந்தனர்.
"ஏன் என்னை பேயை பார்க்கிறது போல பார்க்கிறீங்க? நான் பார்க்க அப்படியா இருக்கிறேன்?" என்று prince Alex வினவ,
"Actually yeah, oops sorry I mean no! நீங்க எப்படி இங்க?" என்று princess Helena கையில் இருந்த தடியை கீழே போட்டு விட்டு கேட்டாள்.
"Princess Roquelle உங்களுக்கு பாதையை மாற்றி map கொடுத்து அனுப்பிட்டாள். அதை சொல்லதான் நான் gentleman royal Stephen கிட்ட பொய் சொல்லி விட்டு உங்களை தேடி வந்தேன்." என்று விளக்க,
"அது தான் நாம இவ்வளவு தூரம் வந்தும் யாரையும் கண்டு பிடிக்க முடியவில்லை!" என்று princess Tanya கூற, "எல்லாம் சரி அப்போ ஏன் prince, நீங்க ஒளிந்து ஒளிந்து வந்தீங்க? நேரடியாக நம்மகிட்ட வந்து சொல்லலாம் தானே!" என்று princess Helena வினவினாள்.
"நான் நேரடியாக வருவதற்காக இருந்த போது தான் நீங்க தலையை உடைக்க வந்துடீங்களே!" என்று princess Helena ஐ பார்த்து கூறினான் prince Alex.
பின் நால்வரும் இணைந்து சென்றவழியால் திரும்பி வந்தனர். ஆனால் அவர்களால் மீண்டும் school னை அடைய முடியவில்லை. 15 நிமிடத்தில் உள்ளே நுழைந்தவர்கள் 30 நிமிடங்கள் தாண்டியும் வெளியே வந்து கொள்ள முடியவில்லை.
வரும் போது கண்ட மரங்கள் அல்ல இப்போது இருப்பது. ஆகவே நால்வரின் மனதிலும் பயம் ஆள ஆரம்பித்தாலும் அவற்றை வெளிக் காட்ட முயலவில்லை.
கால்களும் வலி எடுக்க, prince fred போய் மரத்தண்டு ஒன்றில் கையை வைத்து கால்களை தாவினான். அவனின் அருகே மற்ற மூவரும் வந்து சுற்றி வழி தேடி கொண்டிருந்தனர்.
திடீரென்று prince fred கை வைத்திருந்த மரத்தண்டு முறிய, இவர்கள் நின்று கொண்டிருந்த நிலம் வெடித்து நிலத்தின் உள்ளே விழுந்தனர்.
நால்வரினதும் கைகால்கள் உடையாது காப்பாற்றியது கீழே போடப்பட்டிருந்த வைக்கோல்.
"நான் உயிரோடு தானே இருக்கேன். இல்லை என் ஆத்மா தான் பேசுவதா?" என்று கையிலும் கழுத்திலும் நாடிகளை பிடித்து பார்த்தவாரு கூற, "நீயும் உன் தொல்லையும் அவ்வளவு சீக்கிரம் எங்களை விட்டு போவதாவது!" என்று முதுகை பிடித்து எழுந்தாள் princess Tanya.
"நாம எங்க இருக்கோம்?" என்று princess Helena எழுந்து நின்றவாறு வினவ, அவளை எழுந்து நிற்க உதவிய prince Alex "ஏதோ சுரங்க பாதை போல விளங்குது. அதோ தூரத்தில் வெளிச்சம் ஒன்று விளங்குது. வெளியேறும் பகுதியோ தெரியவில்லை." என்று கூறினான் prince Alex.
"இங்கு இருக்குறதை விட நல்லம் போய் பார்ப்பது!" என்று princess Helena கூற, அனைவரும் வெளிச்சத்தை நோக்கி புறப்பட்டனர்.
சிறிது தூரம் செல்ல, அந்த வெளிச்சம் மெதுமெதுவாக அதிகரிக்க தொடங்கியது. ஆகவே நடந்தவர்கள் ஓட தொடங்கினர். இறுதியாக அந்த வெளிச்சம் வந்த இடத்தை அடைய, அங்கோ அவர்களுக்காக ஏமாற்றம் காத்து கொண்டிருந்தது.
முன்னால் பாதை மூடப்பட்டிருக்க, அந்த சுவரில் இருந்த பளிங்கு கல் ஒன்று மின்னிக் கொண்டிருந்தது.
அதுவே அவ்வளவு தூரத்திற்கு வெளிச்சத்தை தந்த சிறிய கல். "கடுகு சிறிதானாலும் காரம் பெரிது என்று இதுக்கு தான் சொல்வாங்க!" என்று கூறி ஏமாற்றத்தில் அருகில் இருந்த கற்பாறையின் மீது அமர்ந்த கொண்டாள் princess Tanya.
"Tanya இந்த பகுதியை பற்றி உனக்கு தெரியாதா? உனக்கு தான் தெரியாதது ஒன்றும் இல்லையே!" என்று அவள் அருகில் அமர்ந்து கொண்டாள் princess Helena.
சுற்றி வர தேடல் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த prince Alex உம் இறுதியில் தோல்வி வலையில் விழ எழுந்து நிற்க பலனின்றி அவனும் அவர்களுடன் இணைந்து கீழே அமர்ந்து கொண்டனர்.
பளிங்கு பதிக்கப்பட்ட சுவரை உற்று நோக்கிய prince fred கு அதன் கீழே காணப்பட்ட சில விடுகதைகளும் அதற்கான விடைகளுக்கேற்ப சுற்றும் locker ஒன்று பரீட்சயமானது போல தோன்றியது. ஆனால் அதனை ஆரம்பித்தால் இடை நடுவில் விட கூடாது. ஆரம்பித்தாலும் அரைமணி நேரம் எடுக்கும்.
ஆகவே தன் நண்பர்களிடம் "guys! இது எனக்கு தெரிந்த riddles தான் இருக்கு! ஆனால் இதை எல்லாம் செய்து முடிக்க அரைமணித்தியாலம் எடுக்கும் அதோடு இதை இடைநடுவே நிறுத்தவும் முடியாது! என்ன பண்ணுறது?" என்று prince fred வினவ,
"நான் lady high royal கு red alert அனுப்பிவிட்டேன்! ஆனால் நாம நிலத்துக்கு கீழே இருப்பதால் அவர்களுக்கு நம்ம alert கிடைக்க நேரமாகும் என்று நினைக்கிறேன்!" என்றான் prince Alex.
"அதுவரை நீ பண்ணுறதை பண்ணு fred bread! நான் கொஞ்சம் தூங்கி எழும்புகிறேன்!" என்று தலையை prince Helena ன் மடியில் வைத்து கண்களை மூடிக் கொண்டாள் princess Tanya.
Prince fred விடுகதைகளுக்கான விடைகளை தேடிக் கொண்டிருக்க, gentleman royal Stephen ன் phone ஒலித்தது...
சுரங்கத்தில் மாட்டிக் கொள்ள வைத்தது இருள் நாட்டு அரசனின் சதியா?
Prince fred கு அனைத்து விடுகதைகளுக்கும் விடைகள் கண்டு பிடிக்க முடியுமாக இருக்குமா?
Prince Alex இவர்களுடன் இருப்பதை princess Roquelle கண்டால் என்ன நடக்கும்?
சுரங்கத்தில் இருந்து நண்பர்கள் எவ்வாறு தப்பிப்பர்?
Thanks for the votes and comments.
Keep supporting.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro