15. Book vs Dream
நாளை சில சிக்கல்களின் வருகைக்காக சூரியன் தன் கதிர்களை மடக்கி பூமியின் மீது இருளை ஆள வைத்தான்.
Princess Helena முத்துக்களை இணைத்து அழகான முத்து மாலை ஒன்றை செய்து அதனை கண்ணாடியின் மீது வைத்து அலங்கரித்து கொண்டிருக்க, பின்னால் யாரோ வந்து அவளின் தோலை பிடித்தார்.
அவளோ திடீர் செயலால் கத்த ஆரம்பித்தாள். பின்னால் இருந்த நபர் "hey Helen! நான் Tanya. கத்தி என்னை மாட்டி விடாத மா!" என்று கெஞ்சும் பார்வையில் பார்த்து கேட்டாள்.
"Tanya நீ? எப்படி room குள்ள வந்தாய்? இந்த நேரத்தில் யாருக்கும் வெளியே போக இயலாதே!" என்று கேள்விகளை அடுக்கி கொண்டு போக,
"Relax Helen! ஒவ்வொரு அறைக்கும் ஒன்றோடு ஒன்று தொடர்புடைய secret door இருக்கு. வா காட்டுறேன். இந்த கதவுகள் வைக்க reason நடைபாதையில் ஏதாவது பிரச்சினைகள் ஏற்பட்டால் தப்பிக்கிறதுக்கு!" என்று பக்கத்தில் இருந்த சுவரிலிருந்த கல் ஒன்றை princess Tanya இழுக்க, இடது பக்கத்தில் இருந்த அறை தென்பட்டது.
"உனக்கு தெரியாதது ஏதாவது இருக்கா Tanya?" என்று அவளை வியப்புடன் பார்த்து princess Helena வினவ, சிரித்து கொண்டே தனது அறைக்கு கூட்டி சென்றாள் princess Tanya.
"உனக்கு black colour ஆ பிடிக்கும்?" என்று அறையை வட்டமிட்டவாறு ஆங்காங்கே black decorations ஐ பார்த்து princess Helena வினவ, "yeah. Legends love black colour! அது தான்" என்று கூறி கண்ணடித்தாள் princess Tanya.
"இதுக்கு மட்டும் ஒன்னும் குறைச்சல் இல்லை!" என்று princess Helena சிரித்தவாறு கூற, "உன் கையில் என்ன இருக்கு? Wow மாலையா? அழகா இருக்கு!" என்று முத்து மாலையை காட்டி கேட்டாள் princess Tanya.
"எனக்கு இப்படி ஏதாவது செய்வது ரொம்ப பிடிக்கும்! Wait உனக்கு தர என்கிட்ட சின்னதாக ஒரு வஸ்து இருக்கு!" என்று மீண்டும் அவளின் அறையை நோக்கி போக திரும்பினாள் princess Helena.
"அது என்ன வஸ்து?" என princess Tanya நூலகத்தில் இருந்து கொண்டு வந்த புத்தகத்தை திறக்க முடியாமல் பற்களால் இழுந்தவாறு கேட்க, "அதுவா! எனக்கு கற்பித்த gentle man royal ஒருவர் பொருளுக்கு வஸ்து என்று தான் சொல்வார். அதுதான் எனக்கும் பழகி போச்சு!" என்று சுவரில் எந்த கல்லை இழுப்பது என்று யோசித்தவாறு கூறினாள் princess Helena.
"ஆமா! உன்னை பற்றி தேடும் போது கூடுதலாக கிடைத்த red marks எல்லாம் lady royals கு செய்த கொடுமைகள் தான்!!! நீ வேற level அந்த விஷயத்துல. இன்னமும் அந்த lady royal எப்படி chair கூடவே அவங்க வீட்டுக்கு போனார் என்று யோசிக்கும் போது சிரிப்பு சிரிப்பா வருது!" என கூறி அவளை பார்க்க,
சுவரில் ஏதோ தேடுவதை கண்டு "Helen, சுவரை உன்னிப்பாக பார்! அதுல உன் room number செதுக்கி இருக்கும் கல்லை இழு, திறப்படும்." என இந்த முறை புத்தகத்தை குறட்டினால் திறந்தவாறு கூறினாள்.
Princess Helena கல்லை இழுக்க, சுவர் திறப்பட்டது. பின் உள்ளே சென்று royal கப்பலில் செய்த bracelet ஐ கொண்டு வந்து princess Tanya ன் கையில் போட்டாள்.
"This is so cute. I love it!" என princess Helena ஐ princess Tanya கட்டியணைக்க, அவளின் மடியில் இருந்த புத்தகம் கீழே விழுந்தது.
"இது என்ன புத்தகம்?" என்று கீழே குனிந்து கையில் எடுக்க எத்தனித்த, princess Helena கு அதனை கண்டதும் அந்த கனவுகள் மீண்டும் கண் முன்னே படமாக ஓடியது.
தலையை பிடித்து அப்படியே கட்டிலில் அமர, பதறிப்போய் "என்ன?" என்று கேட்டாள் princess Tanya. யாரிடமாவது கூறினால் மனதில் உள்ள பாரமாவது குறையும் என்று நினைத்து அன்று கண்ட கனவுகளையும் gentle man royal Stephen ஐ கண்டால் அந்த கனவுகள் கண்முன்னே வருவதாகவும் கூறினாள்.
"I can't believe this! கனவுகள் என்றால் ஏதாவது கெட்ட கனவு என்று கூறி முடிக்கலாம். ஆனால் gentle man royal Stephen ஐயும் இந்த book யும் கண்டதும் மீண்டும் அந்த கனவு வருவது என்றால் ஏதாவது இதுல இருக்கு என்று என் மூளைக்கு படுது!" என யோசித்தவாறு princess Tanya கூறி,
மீண்டும் அவளே தொடர்ந்தாள் "I don't know about this! But உண்மையிலேயே உன்கூடயும் அந்த fred bread கூடவும் பேசும் போது எனக்கு ஏதோ ஒரு feeling. It means just like we have met earlier. எப்போ நெருக்கமாக பழகிய உணர்வு!" என இந்த முறை serious ஆக பேசினாள் princess Tanya.
"ஒரு வழி இருக்கு! இந்த புத்தகத்துல இருந்து ஏதாவது கிடைக்குமா என்று பார்ப்போம்!" என princess Helena கூற, "நான் என் தலைமுடி எல்லாம் விழும் வரைக்கும் try பண்ணி பார்த்துட்டேன். But திறக்க முடியவில்லை. ஏதோ ஒரு key தேவைபடும் போல. Key ன் அச்சு book cover ல இருக்கு!" என புத்தகத்தை தெரியாமல் மீண்டும் princess Helena இடம் காட்டினாள் princess Tanya.
தூரத்தில் இருந்து ஓநாய்கள் துரத்த Princess Helena உம் இன்னும் முகம் தெரியாத மூவரும் பின்னால் பார்க்காமல் ஓடுகின்றனர்.
அந்த முகங்கள் இப்போது மெதுமெதுவாக தெளிவாகி கொண்டு வருகிறது......அருகில் காற்சட்டை அணிந்திருப்பது prince fred உடைய..... உடைய முகம்.....ஆம்..... அவனுடைய முகத்தை ஒத்த முகம்.....முகம் முழுவதும் பயம் தொற்றிக் கொண்டிருந்தது......கண்ணீர் வடித்து கொண்டே ஓடுகிறான்.....
அடுத்த முகம்..... தெரியவில்லை.....அவன் அருகில்.....Helena ன் கையை பிடித்து இருப்பது.....ஆம்.....அந்த கையில் அவள் இன்று கொடுத்த bracelet தென்பட்டது.....
அடுத்த நபர்...இல்லை...இல்லை...யாரோ தெரியவில்லை...ஆனால் வீரன்...வீரன்...
இவ்வாறு கண்முன்னே வந்த அந்த காட்சியை princess Tanya விடம் கூற, இருவருமே குழம்பி போனர். Princess Helena ஐ தனியாக உறங்க வைக்க மனம் விடாததால் இருவரும் ஒன்றாகவே princess Helena ன் அறையில் உறங்கினர்.
.
.
.
நள்ளிரவு நேரத்தில் தன்னை முழுவதுமாக கறுப்பு நிற ஆடையால் மூடிய ஒருவன் நூலகத்தினுள் நுழைந்தான்.
அவன் நேராக princess Tanya சென்ற பகுதிக்கு செல்ல, அங்கே இறாக்கை திரும்பிய வண்ணம் இருந்தது. ஆனால் அதனுள் வைக்கப்பட்டிருந்த இரகசிய நூல் இருக்கவில்லை. கோபம் கொண்டவன் தன் கை முஷ்டியை மடித்து தன் முழுபலத்தையும் இறாக்கையின் மீது காட்டினான். ஏதும் பலனின்றி திரும்பி சென்றான்.
அவன் அடித்த அடியில் அவனது கையில் இருந்த காப்பு உடைந்து கை கிழிந்தது.
.
.
.
காலை கதிரவன் மடக்கி இருந்த கதிர்களை விரிக்க, இருளோ வெளிச்சத்தை கண்டு மிரண்டு ஓடியது.
நேற்று இரவு நடந்தவைகளிலிருந்து கஷ்டப்பட்டு மீட்டு எடுத்து princess Helena ஐ picnic காக தயார்படுத்தினாள் princess Tanya. அதற்கான அனைத்து ஆயத்தங்களையும் picnic kit யும் princess Tanya எடுக்க, அம்மாவுடன் phone பேசிக் கொண்டிருந்தாள் princess Helena.
வெளியே சென்று yard ல் இருவரும் அமர்ந்து கொள்ள, கையில் macroon உடன் அதை இரண்டாக பிளந்து நடுவில் உள்ள icing ஐ நக்கிவாறு வந்தான் prince fred.
அவனுக்கும் princess Helena ன் கனவையும் நேற்று கண்டவைகளையும் கூற, அவனோ நடுநடுங்கி போனான்.
.
.
.
"Stephen! உனக்கு இவ்வளவு பேரையும் சமாளிக்க முடியுமா?" என lady royal Alisa வினவ, "don't worry my dear! I can!" என backpack ஐ போட்டவாறு கூறினார் gentleman royal Stephen.
அப்போது அவரின் கை தூக்கிபட, அவரின் கையில் இருந்த கட்டை கண்டார் lady royal Alisa. "Stephen கையில என்னது?" என பதறிப்போய் வினவ, " நீ ஏன் எதுக்கெடுத்தாலும் tension ஆகுற! Just apple வெட்டும் போது வெட்டிப்பட்டது!" என்று விட்டால் இன்னும் தோண்டி தோண்டி கேள்வி கேட்பாள் என்று எண்ணி அங்கிருந்து ஓட்டம் பிடித்தார் gentleman royal Stephen.
.
.
.
"Hey! Volker என்ன கையில் காயம்?" என prince Ryan வினவ, "அதுவா! Urmm...pumpkin ball ஐ கீழே விழ செய்ய படிகட்டுல எண்ணெய் ஊற்றி வைத்தேன். ஆனால் என்னுடைய கெட்ட காலத்துக்கு நானே விழுந்துட்டேன்." என்று prince Volker கையை பிடித்தவாறு கூறினான்.
அவ்வழியாக வந்த princess roqulle அனைவரினதும் கையில் maps ஐ கொடுத்து விட்டு 3 maps ல் மாத்திரம் பிழையாக பயணபாதையை குறித்து princess Helena கு கொடுக்குமாறு ஒரு இளவரசியின் கையில் கொடுத்து விட்டாள்.
"நீ ரொம்ப தான் பழிவாங்குற!" என்று நமட்டு புன்னகையுடன் prince Ryan கூற, அவளும் பதிலுக்கு சிரித்து விட்டு பேச்சை மாற்ற, "நீ ஏன் கை நீட்டமாக t shirt அணியுற?" என வினவினாள்.
"இந்த season ல நாங்க long sleeve t shirt அணியுறது தான் tradition." என்று கூற, எல்லோரையும் gentleman royal Stephen அழைத்தார்.
.
.
.
Maps ஐ கையில் வாங்கிய princess Tanya "நாம போகலாம்!" என கூற, "இப்போதே இவன் முகத்தை பாரு, நெருப்பை கண்ட butter போல பயந்து உருகி போய் இருக்கான். So உங்களை நான் ஆபத்துல போட விரும்பவில்லை.
எனக்கு தான் கனவு வருகிறது என்றால் நான் தான் இதற்கு மூலகாரணம் என்று விளங்குது. என்னால் தான் உங்களுக்கு பிரச்சினை வரும். So நம்முடைய friendship ஐ இப்போதுல இருந்து break பண்ணி விடுவோம்! இதுதான் சரியான முடிவாக தோணுது" என princess Helena கூற அவளை அறியாமையே அவளின் கண்களில் இருந்து நீர் வழிந்தது.
.
.
.
"Prince Alex! Can you lead this group?" என gentleman royal Stephen வினவ, "ok! But urmm...என் water bottle ஐ மறந்து வைத்து விட்டு வந்துட்டேன். I'll bring it quickly. நீங்க போங்க" என்று தனது அறைக்கு ஓடினான்.
அனைவரும் picnic ஐ ஆரம்பிக்க, princess Helena இன்னும் ஒரு முடிவு எடுக்க முடியாமல் yard தவித்து கொண்டிருந்தாள்....
Princess Helena ன் கனவின் அர்த்தம் என்ன?
Library கு வந்த அந்த மர்ம நபர் யார்?
Princess Helena என்ன முடிவு எடுப்பாள்?
Princess Helena உம் நண்பர்களும் picnic செல்வார்களா?
Thanks for the votes and comments.
Keep supporting.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro