08. Platinum
Coffee shop ல் உள்ள அனைவரும் அங்க பாருங்க! என மற்றவர்களை கூவிக்கொண்டு வெளியே பார்வையை செலுத்தினர்.
அங்கே பெரிய பெரிய பலூன்களால் அலங்கரிக்கப்பட்ட பொம்மைகளும் ஒற்றை சில்லு ஓட்டுநர்களும் நீண்ட கால் மனிதர்களும் தங்களுடைய circus நிகழ்ச்சி நாளை மறுநாள் நடக்க போவதாக விளம்பரப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.
Kate ன் முகத்தை பார்த்த Tania இது அதுவா எனக் கேட்டாள். அவளோ தெரியாது என்றாலும் அவளின் பார்வையில் பயம் தெரிந்தது.
"நாம இந்த சர்க்கஸிற்கு செல்லுவோம்!" என்று andrian கூற அனைவரும் கேள்வி பார்வையுடன் பார்த்தனர்.
" ஒரு வேலை அந்த மாயக்காரன் இந்த circus ல் இருந்தால்.... எனக்கு வர முடியாது!" என்று samuel பயத்துடன் கூற அங்கே taniaவோ வயிற்றைப் பிடித்து சிரித்துக் கொண்டிருந்தாள்.
" ஆண் சிங்கம் இவ்வளவு பயமா" என நக்கலாக கேட்டாள்.
அப்போதே அவளை இழுத்து அடிக்க நினைத்த sameul ன் கையைத் தடுத்தான் andrian.
" இல்ல இப்போ நாம அந்த சர்க்கஸிற்கு போவோம் ஒருவேளை அந்த மந்திரவாதி இங்கு இருக்கிறது தெரிந்தால் நாம போலீசாரிடம் காட்டிக் கொடுப்போம். அவர்கள்ட வேலையை இலகு படுத்தின மாதிரியும் இருக்கும். இல்லை என்றால் இந்த விசாரணைகள் தொடர்ந்து கொண்டே செல்லும்" என்று andrian கூற
அதற்கு kate ஆமோதித்தாள். ஆனால் அவள் அங்கு செல்ல தைரியமற்றவலாக இருந்தாள்.
ஆகவே நால்வரும் எழுந்து காபி ஷாப்பிலிருந்து வெளியே செல்ல அந்த பெண்மணியும் அவசரமாக இவர்களை இடகத்துக் கொண்டு முன்னால் சென்றாள்.
"ஒரு manners இல்லை. இடிச்சா சாரி கேட்கனும் என்று கூட school படிச்சி கொடுத்து இல்ல. இவ்வளவு தென்னை மரம் மாதிரி மட்டும் வழந்து இருக்காங்க!" என்று பொறிந்து தள்ளினான் samuel.
அங்கு தனது முகத்தை மறைத்தவாறு தொப்பி ஒன்றை அணிந்த ஒரு நபர் அவளின் பின்னாலே தொடர்ந்தார்.
அவளோ டாக்ஸி ஒன்றுக்கு கையை காட்டி நிறுத்து அதனுள் ஏற அவனும் அதன் பின்னிருந்த டாக்ஸியினுள் நுழைந்தான் அவன்.
அவள் சற்று தூரம் செல்ல ஆள் நடமாற்றமற்ற ஒரு பகுதியை அடைந்தாள்.
பின்னால் சற்று தாமதமாக வந்த டாக்ஸியிருந்து விரைவாக இறங்கிய அவனுக்கு அவளை பிடிக்க முடியவில்லை.
சுற்று முற்று திரும்பி பார்த்தான். எங்கும் ஒரே இடமாக தோன்றியது. அங்கே நான்கு கட்டிடங்களும் அதற்கு எதிராக இன்னும் நான்கு கட்டிடங்களும் ஆள் நடமாற்ற மற்றும் காணப்பட்டது.
கீழே வீதியை அவதானித்தான். அங்கே அவனுக்கு வாகன டயரின் அச்சுப்பதிவு கிடைத்தது.
அதனை தொட்டுப் பார்க்க அது சிறிது உஷ்ணம் ஆக இருந்தது. இப்போதுதான் அந்த தடயங்கள் கிடைத்தது என்பதை அதை வைத்து ஊகித்துக் கொண்டான்.
அவளோ அங்கு ஒரு கட்டிடத்தினுள் நுழைந்து ஒரு பட்டனை அழுத்த அருகில் உள்ள கதவு திறந்தது.
அவள் அந்த இருட்டறையில் நுழைந்தாள். அங்குள்ள வயோதிபரிடம் "நம்ம பிளான் அனைத்தும் வீணாகப் போகிறது!" என்று கூறி கொண்டே உள்ளே நுழைய அந்த இருட்டறையில் கதவுகளும் முழுமையாக மூடப்பட்டது.
அந்த நபரோ அவளை எல்லா இடமும் தேடினார். அவள் அகப்படவில்லை. ஆகவே அந்த விசித்திரமான கட்டிடங்களை படம் பிடித்துக் கொண்டார்.
.
.
.
நால்வரும் samuel ன் வீட்டிற்கு சென்றனர்.
அங்கே அவனின் அப்பா இருக்க அவரிடம் andria ன் அப்பாவை பற்றி ஏதும் தகவல் தெரிந்ததா என்று கேட்டனர். அவரோ இன்னும் எதுவும் இல்லை என்றவாறு தலையை அசைத்தார்.
கவலையுடன் இருந்த andrianனை மூவரும் தேற்றினர். அப்படியே நால்வரும் kate ன் அக்காவின் வீட்டிற்கு சென்றனர்.
அங்கே kate அக்கா இருக்கவில்லை. அவர் பெற்றோரின் மர்மத்தை பற்றி தகவல்கள் திரட்ட தனது கிராமத்திற்கு சென்றிருந்தாள்.
Kate தனது அப்பாவின் அட்வைஸ் அடங்கிய பெட்டியை காட்டினாள். அதை உற்சாகமாக மற்ற மூவரும் வியந்து பார்த்துக் கொண்டிருந்தனர்.
அதில் ஒன்றை எடுத்து படித்தான் andrian. அதில் உனக்கு ஒன்று வேண்டும் என்றால் அதற்கு நீ முயற்சி செய் என்று இருந்தது.
ஏனோ அவனுக்கு அது தனது அப்பாவை தேடுமாறு கூறுவதாக நினைத்து வைத்தது. அந்த அட்வைஸில் உள்ள உற்சாகத்தை உணர்ந்தான்.
ஆகவே அவனும் மற்ற மூவர்களிடம் "போலீசார்களின் விசாரணைகளை பார்த்துக் கொண்டிருந்தால் நேரம் தான் வீண் விரயம் ஆகிறது. ஆகவே நாமும் சற்று இந்த மர்மத்தை பற்றி தேடி அறிவோம்!" என்றான்.
இதற்கு கேட்டும் taniaவும் சரி என்று தலை அசைக்க, samuel ஓ "வீணான பிரச்சனை எதற்கு? அதுதான் போலீசார்கள் இதனைத் தேடுகிறார்களே!" என்றான்.
ஆனாலும் andrian னின் கட்டாயப்படுத்தலுக்கு இணங்கி அவனும் ஆம் என்றான்.
" இப்போ நாம் எதிலிருந்து ஆரம்பிப்பது?" என்று kate கேட்க, " தொலைச்சத தொலைச்ச இடத்துல இருந்து தான் கண்டுபிடிக்கனும். நாம முதலாவது இந்த சம்பவம் நடைபெற்ற இடத்திலிருந்து ஆரம்பிப்போம்." என்றான் andrian.
ஆகவே நால்வரும் இணைந்து அந்த ஹோட்டலின் முன் சென்றிருந்தனர். "இப்போ நாம எப்படி உள்ளே போவது? எதற்காக போவதாக கூறுவது? பொலிஸ் விசாரணைகள் வேறு நடக்குது. அப்பாவுக்கு தெரிஞ்ச யாராவது பாத்துட்டா வம்பு தான்" என்று கேள்விகளை எழுப்பினான் samuel.
"நாம் உள்ளே செல்ல தேவை இல்லை இங்கே பார் இங்கே எங்கேயும் சிசிடிவி கேமராக்கள் இல்லை. உள்ளே உள்ள கேமராக்களில் எதுவும் பதிவாகவில்லை என ஏற்கனவே உனது அப்பா சொன்னார். But ஒரே ஒரு கேமரா மட்டும் ஒளிந்து இருக்கு. அதோ! அது அங்க இருக்குற யாருக்கும் ஏன் பொலிஸ்க்கு கூட தெரியாது. அதை நாம ஆராய்ந்து பார்ப்போம்" என்றான் andrian.
" ஆனால் அது எப்படி உனக்கு மட்டும் தெரியும்? நம்மள நம்பி எப்படி சிசிடிவி கேமராக்களை காட்டுவாங்க?" என்று கேள்வி எழுப்பினாள் kate.
அதுவும் சரிதான் என்று தலை அசைத்தாள் Tania. "எனக்கு தெரிந்த ஒரு நண்பனின் அண்ணா ட கடை தான் இது. அவர் இங்கு வார வெளிநாட்டு actors actresses அ நோட்டமிட போட்டு வைத்து இருக்கிறாரு. அங்கே போய் பார்ப்போம்" என்று samuel கூற,
நால்வரும் இணைந்து அங்கே சென்றனர். அங்கே நண்பனின் அப்பா இருக்க
" இவரிடம் கேட்பது சரியாக படவில்லை என்று அடுத்தது என்ன செய்வது என்று நால்வரும் யோசிக்க தொடங்கினர்.
அருகில் இருந்த டோனட் ஷாப்பினுள் நால்வரும் நுழைந்து எப்படி அந்த சிசிடிவி பதிவுகளை எடுப்பது என்று ஆராய்ந்து கொண்டிருந்தனர்.
இவர்களில் இந்த பேச்சை அருகில் இருந்த ஒரு பெரியவர் காது கொடுத்து கேட்டுக் கொண்டிருந்தார்.
" சரி நம்ம அந்த நண்பனின் பெயரைக் கூறி சிசிடிவி பதிவுகளை கேட்டால் என்ன? அவரின் அப்பாவுக்கு என்னை andrian யும் ஏற்கனவே தெரியும் தானே. ஆகவே அவர் ஒன்றும் சொல்ல மாட்டார்." என்று கூறினான்.
இதற்கு andrian ஓ "ஏற்கனவே இந்த நகரத்தில் ஆயிரம் மர்மங்கள் ஆகவே எதை நம்பி அவர் ஒப்படைப்பார்? இப்போது இந்த நகரத்தில் இருக்கும் எவருக்கும் அடுத்தவர் மேல் நம்பிக்கை இல்லை." என்றான்.
திடீரென அந்த நபரோ இவர்களின் மேசைக்கு அருகே தனது கதிரையை போட்டார்.
அவரின் முகத்தை பார்க்க சன் கிளாஸ் அணிந்து மீசையும் தாடியும் வைத்து பார்க்க ஒரு விசித்திரமான நபராக காணப்பட்டார்.
இவரின் இந்த செயற்பாட்டால் திகைத்த நால்வரையும் பார்த்த இவர் "என்னை பார்த்து பயப்படாதீங்க. நான் ஒரு டிடெக்டிவ். நான் இந்த நகரத்தில் நடக்கும் மர்மத்தை பற்றி ஆராய்ந்து கண்டுபிடிக்க இருக்கின்றேன். உனது பெயர் அன்றியன். உனது அப்பாவும் இந்த மர்மத்தில் காணாமல் போனதாக எனக்கு தெரியும். ஆகவே நான் உங்களுக்கு உதவியாக இருப்பேன். எனக்கு நேரடியாக போலீசாரிடம் தகவல்களை பெறுவதை விட இவ்வாறு உங்களிடம் தகவல்களைப் பெற்றுக் கொள்வது இந்த மர்மத்தை இலகுவாக முடிக்க உதவும்..." என்று பேசிக் கொண்டே செல்ல,
" உங்களை எப்படி நம்புவது?" என சட்டென்று கேட்டுவிட்டாள் கேட்.
" என்னுடன் நால்வரும் வாருங்கள்" என்று அவர் அவரின் வாகனத்தில் நால்வரையும் ஏற்றிக் கொண்டு சற்று ஒதுக்குப்புறமான பகுதிக்கு கூட்டி சென்றார்.
அங்கே பலகையால் அமைக்கப்பட்ட ஒரு வீடு காணப்பட்டது. அந்த வீட்டுக்குள் சென்ற நால்வரும் சுற்று முற்றும் பார்த்தனர்.
அங்கே பார்க்க வித்தியாசமானதாக எதுவும் காணப்படவில்லை. மாறாக பொதுவான ஒரு வீடாகவே காணப்பட்டது.
முன்னால் சென்ற அந்த நபரோ சற்றென்று ஒரு தடி போன்று ஒன்றை பின்னால் இழுக்க, முன்னால் இருந்த ராக்கைகள் மேலே உயர்ந்தது.
உள்ளே சென்று பார்க்க, விசாரணைகள் சம்பந்தப்பட்ட விடயங்களும் நகரத்தின் வரைபடமும் தொங்கவிடப்பட்டிருந்தன. அதில் அன்றியனின் அப்பாவின் ஒரு புகைப்படமும் அதில் தொங்கிக் கொண்டு இருந்தது.
மேலும் அந்த கேக் ஷாப்பின் உரிமையாளரின் படமும் தொங்கிக் கொண்டிருந்தது.
ஆகவே தொடர்ந்த andrian "இந்த இரண்டு மர்மத்திற்கும் காரணம் ஒருவரா?" என்றான்.
அதற்கு அவரோ "இருக்கலாம் இருக்காமலும் இருக்கலாம். ஏனென்றால் சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்து சில உலோக துண்டுகளை ஆராய்ந்து பார்த்தேன். அவை இரண்டும் பிளாட்டினம் என கண்டறியப்பட்டது. ஆனாலும் அவற்றின் அடர்த்திகளோ வித்தியாசமாக காணப்பட்டது.
இரண்டும் பிளாட்டினம் என்பதால் இந்த சம்பவம் இரண்டும் ஒன்றை ஒன்று சம்பந்தப்பட்டிருக்கலாம். மேலும் இந்த நிகழ்வுகள் இரண்டும் நடைபெறும் இடங்களில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகள் அகற்றப்பட்டுள்ளது. ஆகவே இது தனிநபரால் செய்யப்பட்ட ஒரு மர்மம் அல்ல ஒரு கூட்டணி சேர்ந்து செய்த ஒரு செயலாகவே நான் நினைக்கின்றேன்" என்றார்.
ஆனால் அவரோ அந்த இரண்டாவது பிளாட்டின துண்டை எவ்வாறு கண்டெடுத்தார் என்று நால்வருக்கும் அறிவிக்கவில்லை.
மேலும் அந்த பெண்மணியின் பின்னால் சென்றதையும் அவர் அறிவிக்கவில்லை.
இவற்றையெல்லாம் கேட்ட நால்வரும் இவர் ஒரு டிடெக்டிவ் என்பதை உறுதிபடுத்தி கொண்டனர்.
ஆகவே இவர்களும் தங்களுக்கு ஏதாவது தகவல்கள் கிடைத்தால் அவருக்கு ஏத்தி வைப்பதாக கூறிவிட்டு அவ்விடத்தை விட்டு நகர்ந்து சென்றனர்.
" இருந்தாலும் எனக்கு அவர் மீது நம்பிக்கை இல்லை" என்றாள் kate.
ஏன் என andrian வினவ "அவரே தானாக வந்து டிடெக்டிவ் என்பதையும் இப்படி தகவல்கள் கண்டுபிடிக்கப்பட்டது என்பதையும் கூறுவது எனக்கு நல்லதாக படவில்லை. அவருக்கு நாம அந்த சிசிடிவி பற்றி பேசினது விளங்கி இருக்குமோ! எதற்கும் நாம் கவனமாக நடந்து கொள்வோம்." என்றாள்.
இதற்கு மற்ற மூவரும் ஆம் என்று தலையசைத்தனர்.
.
.
.
அங்கு அவரின் வரைபடத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த அந்த புகைப்படத்தை கையில் எடுத்து யோசித்த வண்ணம் உறங்கிப் போனார் அந்த டிடெக்டிவ்.
யார் அந்த பெண்மணி?
டிடெக்டிவ் ஏன் நண்பர்கள் நால்வருடனும் தான் கண்டுபிடித்ததை பகிர்ந்து கொண்டார்?
அந்த சிசிடிவியில் ஏதாவது தகவல் கிடைக்குமா?
மறைத்து வைக்கப்பட்ட அந்த புகைப்படம் என்ன?
Keep supporting!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro