04. Rainy day
சந்தோசத்தில் குதூகலித்து பார்வையிட்டு கொண்டிருந்த kate ன் கண்கள் விரிய, அவளின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்த போகும் இறுதி நிகழ்ச்சியும் ஆரம்பமாகியது.
முழுவதும் கருப்பு நிறத்தில் நீண்ட ஆடையை அணிந்து கையில் இரத்தின ஊன்றுக்கோலுடன் வந்தவன் அச்ச அசல் தீய மந்திரக் காரனை போலவே காட்சி அளித்தான்.
அவனது மாயங்கள் அனைத்தும் மற்றைய மந்திர காரர்களை விட சற்று பலமாகவும் பயத்தை ஏற்படுத்தக்கூடிய விதமாகவும் இருந்தது.
நெருப்பின் மூலமாக கருப்பு நிற வண்ணத்துப்பூச்சிகளை உருவாக்கினான்.
சிறிய பந்துக்களை வெட்ட, அதிலிருந்து இரத்தம் தாரை தாரையாக வழிந்தது. அதிலிருந்து ஒவ்வொரு அங்கங்களும் இழக்கப்பட்ட பொம்மைகள் வெளியே வர செய்தான்.
ஒருவனை படுக்க செய்து அவனது மார்பை கிழித்து, இதயத்தை வெளியே எடுத்தான்.
அதனை கையினால் மூடி திறக்க, அதிலிருந்து கறுப்பு காகம் கையிலிருந்து பறந்து சென்றது.
இவனது magic போக போக பயங்கரமானதாக மாற, கூடாரத்திலிருந்து அரைவாசி பேர் எழுந்து சென்றனர்.
Kate ன் பொறுமை எல்லையை தாண்டி செல்ல, எழுந்து பக்கத்தில் இருந்த தக்காளி ஒன்றை எடுத்து அந்த Magician மீது வீசினாள்.
அவளை தொடர்ந்து மற்றவர்களும் கைகளில் கிடந்ததை தூக்கி Magician மீது வீசினர்.
Magician அவளை நோக்கி பார்வையை வீச,
அவனது பார்வை சற்று பயத்தை உண்டாக்க, அவளது பெற்றோர் அவளை அழைத்து கொண்டு வீட்டிற்கு சென்றனர்.
"What have you done Kate?!" என்று அவள் அம்மா வீட்டினுள் நுழைந்த அடுத்த நொடி சற்று பதற்றமாக கேட்க,
"ஏன் அம்மா? நான் செய்தது எதாவது தவறா? அவர் செய்தது சரியான விஷயமா? Circus என்பது ஒரு வகையான entertainment. அவைகளை special ஆ சிறுவர்கள் தான் இரசிக்கிறாங்க. அப்படி பட்ட இடத்துல இப்படி ஆட்களை கொலை பண்ணுற மாதிரி magic பண்ணுறது தப்பு தானே. ஏன் இப்படி பட்ட magic அ global magician club ஆல் கூட தடை விதித்து இருக்காங்க. தவறை கண்டா தட்டிக் கேட்கனும் என்று தானே நீங்க எனக்கு சொல்லி தந்து இருக்கீங்க!" என்று kate விளக்கினாள்.
"நீ சொல்றது சரி தான். ஆனால் எதுக்கு நமக்கு தேவையில்லாத பிரச்சினை? அவனை பார்த்தால் எனக்கு பயமா இருக்கு." என்று ஏதோ ஒரு விதமான பயத்துடன் அவளின் அம்மா கூற,
"பயப்படடாதே! அதை விடு. பாரு kate எவ்வளவு பெரிய ஆள் ஆக வளந்துட்டா! நீ எதுக்கும் பயப்பட கூடாது. எது சரியோ அதை தான் செய்யனும்!" என்று தன் மகளின் பக்கம் பேசினார் kate ன் அப்பா.
இரவு பதினொரு மணியளவில் அங்கே பலத்த காற்றுடன் மழை பெரிதாக பெய்ய தொடங்கியது.
தூங்க சென்றவளுக்கு தூக்கம் போகவில்லை. A diary of wimpy kid எனும் புத்தகத்தை திறந்து, விட்ட இடத்திலிருந்து வாசிக்க ஆரம்பித்தாள்.
திடீரென இடி இடிக்க, சற்று பயந்து தான் போனாள்.
மழை பெய்து முடிவடையும் என்ற எந்த அறிகுறியும் இருக்கவில்லை.
ஆகவே மின்னலின் வெளிச்சம் அறையினுள் பாயாது இருக்க திரைசீலையை மூட எழுந்து வந்தாள் Kate.
மெதுமெதுவாக அடி எடுத்து வைக்க, அவளுக்கு ஏனோ அந்த Magician ஐ ஞாபகம் வந்தது.
யன்னல் அருகே கையை கொண்டு செல்ல, அந்த யன்னலில் கறுப்பு பூனை ஒன்று அவளின் மீது சீறி பாய்ந்தது.
நல்ல வேளை யன்னல் மூடி இருக்க, அவளின் மீது அந்த பூனை வந்து விழவில்லை.
அவளுக்கோ திடீர் நிகழ்ச்சியில் கை கால் வேலை செய்யவில்லை. அப்படி உறைந்து நின்றாள்.
பூனையும் அவளை பார்த்து சீறி விட்டு செல்ல, அவளின் கண்கள் முன்னால் veranda ல் இருந்த கதிரைக்கு சென்றது.
பார்க்க வேண்டாம் பார்க்க வேண்டாம் என்று மூளை சொல்ல, அவளின் மனமோ பார் பார் என்றது.
மூளையினதும் மனதினதும் போராட்டம் தொடர, மனமே வென்றது.
அவளின் பார்வையும் அங்கே செல்ல, பலமாக பெய்து கொண்டிருந்த மழையில் கதிரை நனைந்து கொண்டிருந்தது.
அவளுக்கு அந்த கதிரையில் விழும் ஒவ்வொரு துளிகளும் தெளிவாக விளங்கியது.
உன்னிப்பாக அதனை அவதானிக்க, திடீரென மின்னல் வெட்டியது. அதன் வெளிச்சம் அந்த முழு இருண்ட பிரதேசத்தையும் பிரகாசமாக்கியது.
அந்த நொடியில் அந்த கதிரையில் ஒருவன் அமர்ந்திருப்பது போல காட்சியளிக்க, அவளோ பயத்தில் எந்த அசைவும் இன்றி அப்படியே நின்றிருந்தாள்.
அவளுக்கு பேச்சு வரவில்லை. மாறாக அவளின் இதய துடிப்பு அவளுக்கே கேட்டது.
விஞ்ஞான விளக்கப்படி ஒளியின் வேகம் ஒலியின் வேகத்திலும் அதிகம் என்பதால் இடியும் மின்னலும் ஒரே தடவையில் மேகத்தில் உருவாகினாலும் முதலில் மின்னல் வந்து சேர்ந்த பின்னே அடுத்து இடி நிலத்தை அடையும் என்றபடி,
அடுத்ததாக காதை கிழிக்கும்வாறு இடி இடித்தது.
காதுகளை மூடிய அவளுக்கோ கண்களை மூட மூளை சொல்லவில்லை.
அந்த கதிரையில் விழுந்த நிழல், இடியின் சத்தத்துடன் நகர ஆரம்பித்தது.
நொடி பொழுதில் அந்த நிழல் வேகமாக வந்து அவளின் கைபட்டுக் கொண்டிருக்கும் யன்னலில் மோத,
அதே கணத்தில் Kate ன் தோளை பின்னாலிருந்து ஒரு உருவம் தொட,
அப்படியே மயங்கி சரிந்தாள் kate.
.
.
.
பல மணி நேரமாக அப்பாவின் வருகைக்காக காத்து கொண்டிருந்த Andrian sofa ல் உட்கார்ந்தவாறே தூங்கிப் போனான்.
சிறிது நேரத்தில் அவனுடைய அப்பா கதவை திறந்துகொண்டு உள்ளே வர, Andrian ஓ நன்றாக தூங்கிக் கொண்டிருந்தான்.
ஆகவே அவனை எழுப்பாது blanket ஆல் அவனை போர்த்திவிட்டார்.
நாளைய பிறந்தநாள் party ற்கு சகல ஏற்பாடுகளையும் இரவோடு இரவாக செய்து கொண்டிருந்தார்.
தொடர்ச்சியான வேலைகளினால் களைப்படைந்த Andrian ன் அப்பா living room லே உறங்கினார்.
அடுத்த நாள் புதிய ஆரம்பத்துடனும் வாழ்வில் சில மாற்றங்களை உருவாக்கும் விதமாகவும் சூரியன் உதிக்க,
அதன் கதிர்கள் அவனின் கண்களில் விழுந்தது ஆகவே அவனோ கண்களைக் கசக்கிக் கொண்டு எழுந்து பார்த்தான்.
"Daddy daddy!" என்று அழைத்தும் பதில் ஏதும் வரவில்லை எழுந்தவன் living room ஐ சுற்றி வலம் வர,
அவன் கண்களுக்கு fridge ல் ஒட்டப்பட்டிருந்த சிறிய குறிப்பு பட்டது.
அதில் "Eat me!" என்று இருக்க, அவனுக்கோ அப்பாவின் வேலையாகவே தோன்றியது.
Eat me என்றால் kitchen ல் தான் ஏதாவது இருக்கும் என்று நினைத்து kitchen குள் நுழைந்தான்.
அங்கே micro oven ல் இன்னுமொரு குறிப்பு ஒட்டப்பட்டிருந்தது. அதில் "I'm here!" என்று இருக்க,
அதனை திறந்தான். அதில் காலையுணவும் blueberry pie இருந்தது.
Blueberry pie ஐ சாப்பிடுவதற்காக வெட்ட ஆரம்பிக்க, அதனுள் ஒரு பொலித்தீன் பையில் இன்னுமொரு குறிப்பு இருந்தது.
சாப்பிட்ட வண்ணமே அதனை பார்க்க, அதில் Dress me! என்றிருந்தது.
கையில் blueberry pie உடன் அறையினுள் நுழைய, அங்கே அவனது கட்டிலில் box ஒன்றிருந்தது.
Blueberry pie பட்ட விரல்களை சூப்பிய விட்டு அதனை எடுக்க, அதிலும் ஒரு குறிப்பு இருந்தது.
அதில் "look your beauty in the mirror" என்றிருந்தது. இது எல்லாம் ரொம்ப over. Lovers கூட இப்படி எல்லாம் பண்ணமாட்டாங்க! என்று தலையில் அடித்து கொண்டவன் box ஐ திறந்து பார்த்தான்.
அதில் இருந்ததை கண்டு நான் நினைத்தது சரி தான் என்றவாறு கோபம் கொண்டான் Andrian.
.
.
.
Andrian ன் அப்பா town லுள்ள சற்று luxury hotel ல் Andrian ன் birthday party ஐ arrange பண்ணிக் கொண்டிருந்தார்.
இதற்கிடையில் அவருக்கு department ல் இருந்து அழைப்பு வர, அவர் அருகில் இருந்த படிக்கட்டில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.
"Uncle! Uncle!" என்று Samuel Andrian ன் அப்பாவை கூப்பிட ,அவரோ தான் phone call ல் இருப்பதாக செய்கை செய்தார்.
சற்று நேரத்தில் மீண்டும் வந்த Samuel "uncle! Uncle!" என்று அழைக்க, மீண்டும் அவர் இரு என்று சைகை மூலம் கூறினார்.
அடுத்த இரு வினாடிகளில் மீண்டும் வந்த Samuel "uncleeeee uncleeeee!" என்று மெதுவாக அவரை சுரண்டிய வண்ணம் அழைக்க,
அவரோ "excuse me! இங்க ஒருத்தன் அடிக்கடி என்னை கூப்பிட்டு கொண்டு இருக்கான். ஏதோ அவசரமா இருக்கும். I'll call you right back.!" என்று அழைப்பை துண்டித்து விட்டு Samuel இடம் ஏன் என்று வினவினார்.
அவனோ தயங்கியபடி "umcleeeee cheese cakeeeee!" என்றான்.
"Samuellll! Cheese cake கேட்கவா என்னை வந்து disturb பண்ண? பாரு நான் department conference call ல இருந்தேன்" என்று முறைக்க,
அவனோ "cheese cakeeeee தான். அது...." என்று Samuel முடிக்கும் முன்பே,
"Samuellll! இது எல்லாம் ரொம்ப over. நான் உண்மையில உன் மேல கோபமா இருக்கேன். இதை வேறு யாரு சரி செய்து இருந்தால் அப்பவே cause file பண்ணியிருப்பேன்!" என்று கோபமாக கூற,
Samuel கோ அதுக்கு பிறகு பேச்சு வரவில்லை.
இதற்கிடையில் அங்கு வந்த waiter ஒருவர் "அய்யோ sir! என்ன பண்ணுடீங்க?" என்று பதற்றத்துடன் கேட்க,
Andrian ன் அப்பாவும் என்ன என்று தெரியாமல் பதறி போக, அங்கே பெரிய கூட்டம் ஒன்றே கூடியது.
Magician ன் நிழல் தான் அதுவா?
Magician தானா kate ன் தோளை பிடித்தது?
Andrian கோபம் கொள்ள காரணம் என்ன?
ஏன் Andrian ன் அப்பாவை ஆட்கள் சூழ்ந்தனர்?
நான் horror part ஒன்று try பண்ணேன். எப்படி இருக்குது என்று சொல்லுங்க!😁
Thanks for the votes and comments.
Keep supporting.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro