Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

03. Frozen Circus

நான்கு மூலைகளில் ஒன்றில் புத்தகங்கள் அடுக்கடுக்காக வைக்கப்பட்டிருக்க,

அடுத்த மூலையில் சில வகையான உபகரணங்கள் சற்று சிதறி காணப்பட்டது ஏதோ ஒரு அவசர தேவைக்காக எடுக்கப்பட்டிருப்பதை உணர்த்தியது.

ஆறு அடி உயரமான ஒருவர் கையில் gloves அணிந்து அந்த அறையில் நின்று கொண்டு ஏதோ ஆராய்ந்து கொண்டிருந்தார்.

அந்த அறையின் வெளிச்சம் சற்று குறைவாகவே இருக்க காரணம் அங்கு போடப்பட்ட மின்குமிழின் இயல்பா? அல்லது மின்குமிழ் பழுதடைய போகிறதா என்று தெரியவில்லை. அதை பற்றிய கவலையும் அவருக்கு இல்லை.

மேசையின் மீது வைக்கப்பட்டிருந்த அந்த பளிச்சிடும் மின்குமிழின் அருகே ஒரு புடைவையை பிடித்து பார்த்தார். ஒன்றும் தெரியவில்லை.

கைவில்லை ஒன்றை வைத்து நோட்டமிட்டார். ஒன்றும் தெரியவில்லை.

கூட்டு நுணுக்குக்காட்டியில் வைத்து நோட்டமிட்டார். ஒன்றும் தெரியவில்லை.

இறுதி முயற்சியாக மின்குமிழ்களை அணைத்து விட்டு கழியூதா கதிரை வெளிவிடும் touch ஐ பிடித்து அவதானிக்க, அதில் 3 கைரேகை அச்சுகள் தெளிவாக இருந்தன.

உடனே தனது குறிப்பு புத்தகத்தில் குறித்து கொண்டவர் புடைவையை கவனமாக locker ல் வைத்து விட்டு  அவ்விடத்தை விட்டு அவசரமாக நகர்ந்து சென்றார்.
.
.
.
"Mum! Frozen circus கு போவோமே. இந்த முறை 90+ புள்ளிகள் எடுத்தால் கூட்டி போகிறேன் என்று promise பண்ணீங்க!" என்று 14 வயதுடைய எறும்பு போல சுறுசுறுப்பான, சற்று அதிகமாகவே தைரியம் உடைய Kate தனது அம்மாவிடம் கூற,

"Ok ok fine darling! Evening 6 ஆயத்தாமாகி இரு! அப்பா வந்ததும் போவோம்" என்று அவளின் அம்மா சமாதானப்படுத்தி விட்டு தனது சமையல் வேலை பார்க்க சென்றார்.

Dreamcatcher town என்பது Sparkles town கு தென்மேற்கு பகுதியில் 10km கு அப்பால் உள்ள ஒரு town.

அதில் இருப்பவர்களின் நடத்தை சற்று வித்தியாசமாகவே இருக்கும். தைரியசாலிகளாகவும் வினோதமானவர்களாகவும் இருப்பர்.

அவர்களின் எந்தவொரு ஆடையும்  வானவிலில் உள்ள 7 நிறங்களையும் எந்த பகுதியிலிலாவது கொண்டிருக்கும்.

மாடி வீடுகளோ, அருகருகே அமைக்கப்பட்ட வீடுகளோ இல்லை. மாறாக பெரிய பண்ணைகளுடன் தோட்டத்துடன் தான் வீடுகள் கட்டப்பட்டிருக்கும்.

அத்துடன் இயற்கைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பர். அதே போல அன்பாக பழகுவார்கள். தனக்கு நெருங்கியவர்களுக்கு ஏதாவது என்றால் எந்த எல்லைக்கும் போய் விடுவர்.

Sparkles town ல் இருப்பவர்கள் Dreamcatcher town ல் இருப்பவர்களுக்கும் இது தான் வித்தியாசம்.

அங்கே இப்போது ஒரு வாராமாக Frozen circus நிகழ்ச்சியை திறமையான ஒரு குழுவினரால் நடாத்தப்பட்டு வருகிறது.

இன்று தான் நிகழ்ச்சியின் இறுதி நாள்.

Kate உம் அது ஆரம்பித்த நாள் முதல் அதனை பார்வையிட வேண்டும் என்று கெஞ்சிக் கொண்டிருக்க, அவளுக்கு இன்று அந்த வாய்ப்பு கிடைத்தது.

Kate கு ஒரு அக்கா. தான் ஒரு journalist ஆக வேண்டும் என்ற கனவுடன் மேல் படிப்புக்காக Sparkles town ல் தங்கி படிக்கிறார்.

அப்பா dentist. அப்பா வேலை விட்டு வந்தால் அவளுக்கு ஒரு சிறிய பெட்டியும் அதனுள் காகிதம் ஒன்றில் ஒரு தகவலும் வழங்குவது வழக்கம்.

தகவல் என்றால் ஏதாவது ஒரு advice. அவற்றை அவளும் பத்திரமாக சேர்த்து ஒரு பெட்டிக்குள் வைத்து, தினமும் எழும் போது ஒன்றை வாசித்து விட்டே எழுந்து செல்வாள்.
.
.
.
அங்கே அவர்கள் கண்ட காட்சி இருவரையும் உறைய செய்தது.

"டேய், பக்கத்து கடையில் dad டா!" என்று Andrian திகைத்து நிற்க,

"ஆமாடா! உன் dad தான். இப்போ தான் அப்பாவை பார்க்குற மாதிரி reaction கொடுக்குற? இதுக்கு முதல்ல பார்த்து இல்லையா?" என்று வினவினான் Samuel.

"Joke ஆ? நாளைக்கு room போட்டு சிரிக்கிறேன்.
இல்லை, அவரு என்கிட்ட இன்று வேலை அதிகம். என்கூட book shop கு வர முடியாது என்று சொன்னார் டா! ஆனா இப்போ அதோ அந்த cake shop ல இருக்காரு" என்று Andrian serious ஆக கூற,

"டேய் அவரு shop owner கு cause file பண்ணுறாரா இருக்கும் டா. உன் அப்பா தான் இந்த முழு town ல இருக்கிற எல்லாருக்கும் எதாவது ஒரு குற்றச்சாட்டு போட்டு police station கு tours அனுப்பி வைக்கிறாரே!" என்றான் Samuel.

"இது அடுத்த joke ஆ? சிரிப்பே வரல்ல. ஆமா நீ எதுக்கு shock ஆகின?" என்று Andrian க
வினவ,

அவனோ "இல்லை! உன் அப்பாவுக்கு பக்கத்துல என் daddy இருக்காரு!" என்று கூறினான்.

"அதுக்கு?" என்று புரியாமல் வினவ,

"Mummy இன்னக்கி movie பார்க்க கூப்பிட்டாங்க. Daddy முக்கிய வேலை இருக்கு என்று சொல்லிட்டு cake shop ல cake aunt ஓட cake சாப்பிட்டு இருக்காரு!
இதை அப்படியே photo எடுத்து mummy கிட்ட காட்டினால் daddy கு தலைக்கு மேல star சுத்தும்!" என்று Andrian ன் phone ஐ எடுத்து photo எடுத்தான்.

இருவரும் தேவையான புத்தகங்களை வாங்கி கொண்டு வெளியே வர, அங்கே cake shop கு அருகில் உள்ள கடையில் ஆட்கள் குவிந்து இருந்தனர்.

எவ்வளவு எட்டி பார்த்தும் என்ன நடக்கிறது என்று விளங்கவில்லை.

"சொன்னேன் தானே! உன் அப்பா அந்த கடைக்கும் seal வைச்சு இருப்பாரு!" என்று Samuel நக்கல் அடிக்க,

அவனோ முறைத்து விட்டு தன் வீட்டிற்கு Samuel ஐ அழைத்து வந்தான்.

சிறிது நேரம் Andrian உடன் play station விளையாடி விட்டு வீடு திருப்பினான் Samuel.

Samuel Andrian ஐ அழைத்து எடுத்த photo ஐ தனது phone கு forward பண்ண கூற,

அவனும் அதனை forward செய்து விட்டு phone ஐ வைக்க, அவனுக்கு  அந்த புகைபடத்தில் cake shop ற்கு அருகில் இருந்த கடை தெளிவாக விளங்கியது.

மக்கள் குவிந்து நின்ற அந்த கடையை பார்க்க ஆவலாக இருந்த Andrian அதனை zoom செய்தான்.

உன்னிப்பாக பார்க்க, அங்கே ஒருவன் கடையினுள் செல்வதை அவதானித்தான்.

அவனோ black jacket அணிந்து கிட்டதட்ட 23 or 25 வயதை உடைய ஒருவனை போல காட்சியளித்தான்.

பின் பக்கமே விளங்க, அவனின் முகம் புகைபடத்தில் பதிவாகியிருக்கவில்லை.

அப்பா வந்தவுடன் photo ஐ காட்ட இருந்தவன் dress மாற்றி விட்டு தொலைக்காட்சியை on செய்தான்.

Avengers movie போய் கொண்டிருக்க, oven ல் போட்டு எடுத்த popcorn ஐ கொரித்தப்படி பார்த்து கொண்டிருந்தான்.

இடையில் breaking news என்று ஒளிபரப்பாகியது. அய்யோ என்று சலித்து கொண்டவன், sound ஐ குறைத்து விட்டு samuel கு அழைப்பை ஏற்படுத்தினான்.

அடுத்த முனையில் இருந்து "Hello!" என்றதும் தற்செயலாக Andrian தொலைக்காட்சியை பார்க்க,

அதில் cake shop கு அருகில் இருந்த கடையை காட்டிக் கொண்டிருந்தான்.

"அப்படியே hold ல இரு!" என்றவாறு sound ஐ Andrian கூட்ட,

"இன்று மாலை 4 மணியளவில் Delicious cake shop கு பக்கத்தில் இருக்கும் நகை கடையில் ஒரு விசித்திரமான சம்பவம் நடைபெற்று இருக்கிறது.

அந்த கடையில் இருக்கும் கடை முதலாளி போல ஒரு சிலை அங்கே cashier ல் வடிவமைக்கப்பட்டிருக்க, கடை முதலாளியை காணவில்லை என அக்கடையின் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

அவர்கள் பகலுணவுக்காக வெளியே  சென்ற போதே இது நடைபெற்றுள்ளது. மேலும் இந்த சிலையை யார் கொண்டு வந்தார் என்று யாருக்கும் தெரியவில்லை.

சாட்சியாளர்களாக யாரும் பதிவாகவில்லை. மேலும் கடை முதலாளிகளுக்கு என்ன நடந்தது என்றும் கேள்வி குறியாகவே உள்ளது.

இதை பற்றிய போலீஸ்  விசாரணைகள் தொடர்கின்ற நிலையில், இதை பற்றிய விரிவான தகவல்கள் பிரதான செய்திகளில் எதிர் பாருங்கள்!" என்று நிறைவடைந்தது.

Andrian கோ இது மிகவும் விசித்திரமாக தோன்ற, இதனை பற்றி மேலும் அறிந்து கொள்ள
ஆர்வமாக இருந்தான்.
.
.
.
அதுவோ பிரம்மாண்டமான கூடாரம். கிட்டத்தட்ட 150 பேருக்கு அதிகமாக உட்கார்ந்து நிகழ்ச்சியை கண்டு களிக்க கூடியவாறு அமைக்கப்பட்டிருந்தது.

"Welcome to the Frozen circus!" என்றவாறு ஒருவர் mic உடன் magician ஐ போல ஒருவன் உடை அணிந்து வர,

அவருக்கு பின்னால் வினோதமாக உடை அணிந்த இரண்டு ஆண்களும் இரண்டு பெண்களும் வந்தனர்.

சில அடிகள் உயரமான இடத்திலிருந்து தங்களது உயிரை பணயம் வைத்து சம்பாத்தியத்திற்காக சாகசங்களை நிகழ்த்தி கொண்டிருந்தனர்.

பின்னர் யானை நடனம் ஆடுதல், புலி நெருப்பு வளையலினூடாக பாய்தல், அம்பு எறிதல், கோமாளியின் அட்டகாசங்ககள், சில வித்தியாசமான விளையாட்டுகள் என்பன தொடர்ந்து நடைபெற்றன.

சந்தோசத்தில் குதூகலித்து பார்வையிட்டு பார்த்து கொண்டிருந்த kate ன் கண்கள் விரிய, அவளின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்த போகும்   இறுதி நிகழ்ச்சியும் ஆரம்பமாகியது.




அந்த பரிசோதனைகளை மேற்கொள்ளும் நபர் யார்?

அந்த சிலை அங்கே இருக்க காரணம் என்ன?

Kate வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்த போகும் அந்த சம்பவம் என்ன?

Thanks for the votes and comments.
Keep supporting.

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro