Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

02. Museum

Rollercoaster என்று கேட்டதும் Mrs Leona கு கை கால் எல்லாம் பதறியது.

இதே போல் மாணவர்களை aquarium park ற்கு கூட்டிச் சென்று அரை உயிருடன் வரும் வழியில் rollercoaster ஐ கண்டு மாணவர்கள் ஆரவாரமிட, அவரோ வண்டியை நிறுத்தினார்.

Mrs. Leona அனைவரும் ஏறி ஒவ்வொருவராக  Seat belt ஐ இறுக்கமாக போட சொல்லிக் கொண்டிருக்க, அவரும் மறந்து தன் பையுடன் rollercoaster ல் ஏறி அமர்ந்தார்.

மெதுவாக ஆரம்பித்த rollercoaster வேகமாக நகர இவருக்கோ வாந்தி வராத குறை தான். அருகில் அமர்ந்து இருந்த Rowley யோ வேகத்தையும் நேரத்தையும் வைத்து கணக்கு கணித்து கொண்டிருந்தான்.

பின்னால் இருந்து ஒருவன் "Ma'am! உங்க phone ring ஆகுது!" என்றவுடன் பையை திறந்து phone ஐ எடுக்க,

Rowley ஓ "Ma'am! என் கணக்கு சரி என்றால் இந்த rollercoaster இன்னும் 15 நிமிடங்களில் நிற்கும்." என்று திரும்ப,

அவனின் கைப்பட்டு Mrs. Leona னாவின் iphone 12 pro கீழே விழுந்து நொறுங்க, அவரின் இதயத்திலோ அணு குண்டு வெடித்தது.

"Ma'am!" என்று அனைவரினதும் கத்ததிலில் சுய நினைவுக்கு வந்த Mrs. Leona, "No and never! நாங்க போவது only for museum. Get ready!" என்று இந்த முறை சற்று சத்தமாகவே கூறினார்.

அனைவரும் ஆயத்தமாகி கொண்டிருக்க, Andrian தனது cheese cake ஐ Samuel கு வழங்கினான். 

அதனை எடுத்து அவன் தனது side bag னுள் போட்டு கொண்டான்.

Andrian தனது note pad ஐ தேட, அவனால் அதனை கண்டுபிடிக்க முடியவில்லை. சரி தேவையில்லை. எப்படியும் samuel எழுத மாட்டான். நாம தான் எழுதனும். அவனின் note pad ஐ கடன் வாங்குவோம். என்ற எண்ணத்துடன் letter ஐ எடுத்து கொண்டு பாடசாலையின் வாயிலுக்கு சென்றான்.

எறும்பு வரிசை போல இவர்களும் வரிசையாக நிற்க, முன்னால் பஸ் வண்டி ஒன்று வந்து நின்றது.

அதில் ஏறியவர்கள் சிறிது நேரத்தில் Jurassic museum ற்கு வந்து சேர்ந்தனர்.

ஒவ்வொருவரும் தங்களுடைய notepad ஐ விரித்து பேனைகளுடன் உள்ளே நுழைந்தனர்.

விசாலமாக வடிவமைக்கப்பட்டிருந்த museum ஐ என்றுமே பார்த்து இல்லாததை போல மாணவர்கள் கண்களை விரித்து பார்க்க,

உள்ளிருந்து ஒவ்வொன்றையும் விபரிப்பதற்காக ஒருவர் வந்தார்.

Cheese cake ன் வாசனை மூக்கை துளைக்க, samuel ஓ கையில் எடுத்து மென்று மென்று வந்தான்.

"Samuelllll!" என்று Mrs. Leona அதட்டியதில் அதிர்ந்து நின்றவன் cheese cake ஐ எடுத்து sheet ஒன்றில் சுருட்டி pocket ல் போட்டு கொண்டான்.

Andrian உம் Samuel உம் dinosaurs statue ஐ பார்க்க ஆர்வமாக இருந்ததால், சக மாணவர்களை  விட்டு பிரிந்து வேறொரு திசையில் சென்றனர்.

இருவரும் dinosaurs ன் முள்ளந்தண்டென்புகள் ஒவ்வொன்றும் இணைந்திருக்கும் விதத்தை வாயை திறந்து பார்த்து கொண்டிருக்க,

முகத்தை மூக்கிலிருந்து கீழ் பகுதி  முழுவதுமாக மூடிய சிவப்பு நிறத்தில் சிலந்தி அடையாளம் உள்ள  Black jacket ஐ அணிந்த ஒருவன் Samuel ன் pocket ல் இருந்த cheese cake ஐ எடுத்து கொண்டு ஓட்டம் பிடித்தான்.

தன் உயிர் தன்னை விட்டு பிரிந்து போவதை போல உணர்ந்தவன், அவனின் பின்னால் ஓட்டம் எடுக்க, அவனின் பின்னால் என்ன நடக்கிறது என்று தெரியாமல் ஓடினான் Andrian.

இனம் தெரியாதவனோ museum லுள்ள உள்ளே செல்ல தடை செய்யப்பட்ட அறை ஒன்றில் புகுந்து விட, இருவரும் அவனை பின் தொடர்ந்தனர்.

அவன் நுழைந்த அந்த அறை பார்க்க இருட்டாகவே இருந்தது.

இரு யன்னல்கள் மட்டும் திறந்து இருக்க அதனூடாக மாத்திரம் சற்று ஒளி கதிர்கள் அவ்வறையை எட்டிப் பார்க்க,  அவ் அறையில் museum ல் வைக்கப்பட்டிருந்த பழைமையான சில சிதைந்த எலும்புகள், செப்பு மற்றும் மண் சாடிகள், சில பெட்டிகள் என பொருட்கள் நிறைந்திருந்தன.

அதில் ஒரு பெட்டியின் மீது அமர்ந்த அந்த இனம் தெரியாதவன் cheese cake ஐ சாப்பிட ஆரம்பித்தான்.

அவனோ பல நாட்கள் பசியில் போட்டு சாப்பாட்டை கொடுத்தால் எவ்வாறு உண்ணுவானோ அவ்வாறு மூச்சு விடாமல் உண்டு கொண்டிருந்தான்.

முன்னால் சென்ற Samuel ஐ இழுத்து இரு பெட்டிகளின் பின்னால் இருக்க செய்தான் Andrian.

"என்னை விடு டா! நான் போய் இரண்டு கேள்வி கேட்டுட்டு வாரேன்!" என்று Andrian ன் பிடியிலிருந்து Samuel நகர,

"பாவம் டா. ரொம்ப பசியில இருந்து இருக்கான் போல. அதை விடு! இந்த இருட்டுல எனக்கு சரியா விளங்கல but அவன்ட கை ஏன் அவ்வளவு பளபளக்குது? ஏதாவது shield போட்டு இருக்கானா?" என்று Andrian வினவ,

அப்பொழுதே Samuel உம் பார்த்தான். "ஆமாடா! எனக்கும் விளங்குது. அது மட்டும் இல்லை அவனுடைய உதடுகள் கூட அப்படி தான் இருக்கு. ஒருவேளை அவனுக்கு ஏதாவது பங்கசு நோயோ தெரியாது. சாப்பிடுவதை பார்த்தாலே தெரியுதே!" என்று Samuel food specialist போல கதை அளந்து கொண்டிருந்தான்.

"சரி விடு நாம் போவோம்!" என்று அவனை அழைத்து கொண்டு Andrian செல்ல, samuel ன் கைப்பட்டு முன்னால் இருந்த எலும்பு கூடு ஒன்று கீழே விழுந்தது.

அவ்வளவு நேரம் அவ்வறையில்  அந்த இனம் தெரியாதவனின் உணவை அரைக்கும் சத்தம் மட்டுமே கேட்க, இந்த எலும்பு கூடு விழுந்தது பாறாங்கல் விழுந்ததை போல இருந்தது.

விரைவாக இருவரும் அவ்விடத்தை விட்டு ஓட, அந்த இனம் தெரியாதவன் இவர்கள் ஓடும் போது தென்பட்ட பின் பக்கத்தை கண்டு பதற்றமடைந்தான்.

என்ன செய்வது என்று தெரியாமல் கால் மாட்டுபட்டு  தடுமாறி கீழே விழ, சில சாடிகளும் கீழே விழுந்து நொருங்கின.

அதனை எடுத்து மீண்டும் இருந்த இடத்தில் வைக்கும் போது உள்ளே சில securities வர,

அவனோ முகத்தை மூடிக் கொண்டு யன்னல் வழியால் அங்கிருந்து தப்பி ஓடினான்.

இவர்கள் இருவரும் ஒருவாறு சக மாணவர்களுடன் போய் சேர, யாருடனும் இதனை பற்றி எதுவும் வாய் திறக்கவில்லை.

அடுத்த நாளும் இனிதே ஆரம்பிக்க,

Andrian ன் காலையுணவோ அவனுக்காக காத்திருந்தது. "Darling! Tomorrow நீ free தானே!" என்றவாறு Andrian ன் birthday கு surprise party ஒன்றை arrange பண்ணுவதற்காக கேட்டார் அப்பா.

"ஆமா daddy! எனக்கு இன்று சில books வாங்க இருக்கு. Can you come with me?" என்று Andrian வாயில் cornflakes ஐ மென்றவாறு கூற,

Surprise party காக arrangements செய்ய வேண்டி இருப்பதால் ஒரு பொய் சொல்ல தீர்மானித்தார்.

"No darling. எனக்கு இன்று கொஞ்சம் வேலை அதிகம். பாரு இப்போதே 5 call எடுத்துட்டாங்க department ல இருந்து. நீ இன்று மட்டும் Samuel கூட போ! And நான் வேலைக்கு அவசரமா போகிறேன். Take care. Love you!" என்று முத்தமிட்டு நழுவிச் சென்றார் Andrian ன் அப்பா.

அவனும் ஆம் என்றவாறு தனது பையில் புத்தகத்தை அடுக்க, முன்னால் இருந்த தொலைக்காட்சியில் செய்தி ஒளிபரப்பாகியது.

நேற்று காலை Jurassic museum ல் விசித்திரமான ஒரு சம்பவம் நடைபெற்றது. இதனை பற்றி museum நடத்துனர் கூறியதாவது,

"நான் வேலை செய்து கொண்டிருக்கும் போது தடைசெய்யப்பட்ட  store room ல் ஏதோ உடையும் சத்தம் கேட்டது. அப்பொழுது அங்கே சென்று பார்த்த போது சில சாடிகள் உடைக்கப்பட்டிருந்தது.

ஆனால் உள்ளே போய் பார்த்தால் அங்கு யாரையும் காணவில்லை. மாறாக அங்கிருந்த செப்பு பாத்திரங்களுக்கு பதிலாக பளபளக்கும் பாத்திரங்களும் சாப்பிட்டு மீதமிருந்த cheese cake துண்டு ஒன்றும் இருந்தது." என்றார் அவர்.

மேலும் அந்த பளபளக்கும் உலோகத்தை ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பி பார்த்த போது அது platinum உலோகம் என்று கண்டறியப்பட்டது.

இதன் விசாரணைகள் தொடர்ந்தும் நடைபெற்று வருவதாக போலீஸ் மா அதிபர் குறிப்பிடுகிறார்' என்று செய்தி முடிவடைய,

Andrian கோ ஒன்றும் புரியவில்லை. ஆனால் தன் daddy செய்த cheese cake world famous ஆகியது மட்டும்  என்றால் புரிந்தது.

பாடசாலைக்கு சென்ற Andrian samuel இடம் நடந்ததை கூற, அவனோ சந்தோசத்தின் உச்ச கட்டத்திற்கு சென்றான்.

"உனக்கு தான் uncle உடைய cheese cake ன் அருமை புரியல்ல. பார்த்தயா பார்த்தயா! இப்போ World famous ஆகிறிச்சு. இனி 365 நாளும் உனக்கு cheese cake தான்!" என்று Samuel கலாய்க்க, Andrian கோ நடந்தவை வித்தியாசமாகவே இருந்தது.

இருவரும் பாடசாலை விட்டு book shop கு சென்றனர்.

அங்கே அவர்கள் கண்ட காட்சி இருவரையும் உறைய செய்தது...


யார் இந்த இனம் தெரியாத நபர்?

எப்படி செப்பு சாடிக்கு பதிலாக பிளாட்டின சாடி அங்கே வந்தது?

Andrian உம் Samuel உம் உறைந்து நிற்க காரணம் என்ன?

Thanks for the votes and comments.
Keep supporting.

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro