Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

01. School

"ஒரு மாதத்திற்கு முன்பாக Monostar laboratory ல் எதிர்பாராத விதமாக  ஏற்பட்ட விபத்தில் Professor Morris Felix காணாமல் போய் உள்ளதுடன் அவரை பற்றிய எந்த தடயமும் இதுவரை அறியப்படவில்லை.

மேலும் ஆய்வுக்கூடத்தில் கண்டறியப்பட்ட ஒரு வகையான உலோகம் பிளாட்டினம் என கண்டறியப்பட்டுள்ளது.

ஐந்து கோடி டொலருக்கு மேலாக நட்டம் ஏற்பட்டுள்ளதுடன் CCTV camera களில் அந்நாளில் எடுக்கப்பட்ட தடயங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டுள்ளன.

அதனால் Prof Morris Felix ஐ தவிர வேறு யார் அந்த ஆய்வுக்கூடத்தில் இருந்துள்ளனர் என இன்னும் அறியப்படவில்லை.

விசாரணைகள் தொடர்ந்து நடைபெறுகின்ற நிலையில் ஆய்வுக்கூடத்திலுள் யாரையும் அனுமதிப்பதில்லை என Sparkles town போலீஸார் தெரிவித்துள்ளனர்." 

என தொலைக்காட்சியில் காலை செய்தி ஒளிபரப்பு ஆகிக் கொண்டிருந்ததை பார்த்து கொண்டிருந்த கிட்ட தட்ட 50 வயதை ஒத்த தோற்றமுடைய ஒருவரின் கவனத்தை களைத்தவாறு படிக்கட்டில் இருந்து "Dad! Dad!" என்று கீழே இறங்கி வந்தான் 14 வயதை உடைய Adrian.

"Mummy எப்போ வருவாங்க dad?" என்று கேட்ட வண்ணம் kitchen ல் புகுந்து உணவு பெட்டியை திறந்து பார்த்தான்.

"Mummy இன்னும் இரு மாதங்களில் தான் வருவாங்க!" என்று Adrian அப்பா கூற,

"அப்போ அவ்வளவு நாளைக்கும் இந்த cheese cake உம் waffles யுமா சாப்பிடனும்!?" என்று தனது உணவு பெட்டியை மூடிய வண்ணம் கூறினான்.

Andrian ன் அம்மா astronomer. Sparkles town ல் astronomy laboratory இல்லாமையால் அவர் town கு வெளியே சென்று அவர்களுடைய research முடியும்வரை தங்கி நின்று வருவார்.

ஆகவே Andrian அம்மாவுடன் நேரம் செலவழிப்பதை விட அப்பாவுடன் நேரம் செலவழிப்பதே அதிகம்.

Andrian homework ல் இருந்து playstation ல் partner ஆக இருப்பது வரை அவரே கூடவே இருந்தார்.

Andrian க்கு அம்மாவின் சமையல் என்றால் அதிக நாட்டம் இருந்தாலும் அவர் இருக்கும் போது மட்டுமே அவன் அதனை அனுபவிப்பான்.

Andrian ன் அப்பாவும் தான் சளைத்தவன் அல்ல என்றவாறு  YouTube ல் பார்த்து ஒவ்வொரு dishes ஐ try பண்ணுவார்.

அவரின் world famous dishes தான் cheese cake உம் waffles உம்.

நாளை மறுதினம் Andrian ன் birthday.

ஆகவே அவனுக்கு பிடித்த Spaghetti with meatballs ஐ செய்ய யோசித்து வைத்திருந்தார்.

சிறிய புன்னகையை உதிர்த்த அவரின் முன்னால் போய் நின்ற Andrian,

"dad, இன்று நாம எங்க town ல இருக்கிற museum கு போகிறோம். அதுக்கு permission signature வேண்டும்!" என்று letter நீட்டினான்.

"Oh! Jurassic museum. Good! அங்கு படிக்க நிறைய விஷயங்கள் இருக்கு. Notepad ஐயும் எடுத்து கொண்டு செல்!" என்று கூற,

அவனும் அவசர அவசரமாக bread toast ஐ வாயில் அமுக்க, தனது பையில் புத்தகங்களை அமுக்கினான்.

வெளியே பஸ் வண்டி நின்று பலமாக horn அடிக்க, அவனோ letter ஐ எடுத்து கொண்டு ஓட்டம் பிடித்தான்.

Sparkles AD school என்பது அந்த town ல் இருக்கும் பிரசித்தி பெற்ற இரண்டு பாடசாலைகளில் ஒன்றாகும்.

அவனும் பஸ் வண்டியிலிருந்து இறங்கி, சுற்றி வர பார்த்தான்.

வழமையாக இருப்பதை போலவே இருபுறமும் மரங்கள் நடப்பட்டு இருக்க, அதன் கீழே ஒவ்வொரு குழுக்களாக கூடி music bands, football team மற்றும் soccer team ல் உள்ள மாணவர்கள் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தனர்.

இதனை தவிர மாணவிகள் கூட ஆங்காங்கே நின்று பல வகையான சுவையான கதைகளை பேசிக் கொண்டிருந்தனர்.

இவைகளை தாண்டிச் சென்ற Andrian கு கண்ணில்பட்டது தொலைவில் இருந்த black place தான்.

அங்கோ இதுவரைக்கும் 16 வயதை அடைந்தவர்களும் சில potassium போல ரௌடிஸம் உள்ளவர்களே நிர்வகித்து வந்தனர்.

அந்த இடம் எப்படிபட்டதென்றால் அனைத்து மாணவர்களின் projects, assessments மற்றும் researches அங்கே இருக்கும்.

ஆசிரியர்களால் வெவ்வேறு வகுப்புகளுக்கு ஒரே தலைப்பில் இவை கொடுக்கப்பட, ஒரு சில இலஞ்சங்களை கொடுத்து பெயர் மாற்றப்பட்டு மீண்டும் type செய்து கொடுக்கப்படும்.

இலஞ்சம் என்பது super duper football players, soccer players, rugby players ன் cards உம் rock stars ன் cards உம் கொடுக்கப்பட்ட வேண்டும்.

இவை சில வகையான toys மற்றும் cornflakes box ல் attach ஆகி வரும். அதுவும் வித்தியாசமான cards கிடைப்பது என்பது அதிர்ஷ்டம் தான்.

இவை ஆசிரியர்களுக்கு தெரியாமலும் இல்லை.

இதனை தாண்டி உள்ளே நுழைந்து இரண்டாம் மாடியை அடையும் போதே அவன் காதருகில் வந்த ஒருவன் "Cheese cake இருக்கா?" என்று மெதுவாக கேட்டான்.

திரும்பி பார்த்தவன் "எங்கடா பைத்தியத்தை காணோம் என்று பார்த்தேன்!" என்றவாறு அவனை கூட்டிக் கொண்டு வகுப்பறையினுள் நுழைந்தான் Andrian.

Samuel அவன் Andrian ன் உயிர் தோழன். எப்போதும் அவன் கூடவே சுற்றி கொண்டிருப்பான். அவன் அப்பா police department ல் Andrian ன் அப்பாவுடன் வேலை செய்கிறார்.

அம்மா microbiologist அவனுக்கு ஒரு அக்காவும் ஒரு தங்கையையும். இரண்டுக்கு நடுவில் பிறந்தது இரண்டு பாரங்கற்களுக்கிடையில் மாட்டிய பூனையாக பறிதவித்தான்.

அவனின் கருத்துக்களோ அக்காவினதும் தங்கையினதும் முன்னிலையில் எடுப்படாததால் அவனுக்கு girls ஐ கண்டாலே பிடிக்காது. இலகுவில் நம்பவும் மாட்டான்.

அவனுக்கு Andrian ன் அப்பாவின் cheese cake என்றால் உயிர். அதை சாப்பிடுவதற்காகவே பாடசாலைக்கு வராதவனும் தினமும் பாடசாலை வருவான்.

இருவரும் இணைந்து வகுப்பறையினுள் நுழைய, இரண்டாம் வரிசையில் போய் அமர்ந்தனர் இருவரும்.

இருவரும் வகுப்பறையினுள் பெரிதாக famous இல்லாவிட்டாலும் Andrian நன்றாக படிப்பான்.

Samuel படிப்பான் ஆனால் Andrian ன் அளவுக்கு இல்லை. அவனோ super heroes cartoon பார்ப்பதில் அதிக நேரத்தை செலவழிப்பான்.

இதனை தவிர வகுப்பறையினுள் ஒவ்வொரு விதமான மாணவர்களும் இருந்தனர்.

Lila எப்பொழுதுமே தூங்கிக் கொண்டே இருப்பாள். அவள் எழுந்து நிற்பது வெறும் good morning/good afternoon சொல்வதற்கு மட்டுமே.

Todd அவன் தான் வகுப்பில் rowdy என்ற நினைப்பு. எல்லோரையும் பயமுறுத்தி வைத்திருப்பான் எதற்காக homework செய்வதற்காக,

Rowley அவனின் தலை கொஞ்சம் பெரிது. ஆகவே Einstein போல நடந்து கொள்வான். எதனையும் science உடன் சம்பந்தப்படுத்தியே பேசுவான். ஒரு பந்தை எறிவதையும் எறியத்தை வைத்து கணிப்பான்.

Hema புத்தகத்தில் மூழ்கி இருப்பாள். அதுவும் கதை புத்தகத்தில். அவளை தொலைந்ததாக ஆசிரியர்கள் தேடும் போது நண்பர்கள் முதலாவது செல்வது library கு தான்.

அதுவும் கதையில் இறுதி பக்கத்தை வாசித்து விட்டு எவ்வாறு முடிவு உள்ளது என்று பார்த்து விட்டே வாசிப்பதற்கு ஆரம்பிப்பாள்.

Diana அவளுக்கு magic என்றால் உலகம். YouTube ல் கூட அதிகம் பார்ப்பது இதை தான். அவளும் சில tricks ஐ வைத்து நண்பர்களை புதுமைப்படுத்துவாள்.

ஒரு நாள் பாடசாலைக்கு புறாக்களை கொண்டு வந்தது தான் கடன் அதிபரின் தலையில் போய் அது எச்சம் இட்டதை தொடர்ந்து magic பொருட்கள் பாடசாலைக்கு கொண்டு வருவது தடை விதிக்கப்பட்டது.

Sofia, அவள் தான் பாடசாலையில் அழகானவள் என்று ஒரு எண்ணம்.  பெரிய பணக்கார குடும்பம் என்பதால் வீம்பு அதிகம். அவளுக்கு பின்னால் இன்னும் 3 நண்பர்கள். அவர்களும் அதே தான்! எப்போ பார்த்தாலும் makeup உம் விலை உயர்ந்த toys உம் பற்றி தான் கதை!

உள்ளே நுழைந்த வகுப்பாசிரியர் "Good morning students, உங்களுடைய வரலாற்று ஆசிரியர் இன்று எனது பாடத்தையும் சேர்த்து எடுக்க போகிறார்." என்று கூற,

அனைவருக்கும் தூக்கி வாரி போட்டது.

அது ஏனோ வரலாறு என்றால் ஒரு allergy. பாடத்தின் மீது தவறா? வரலாற்று ஆசிரியரின் கற்பித்தலில் தவறா? என்று அவர்களுக்கே தெரியவில்லை.

"Good morning Mrs. Leona!" என்று மாணவர்கள் வேண்டா வெறுப்பில் எழுந்து நிற்க, "Students, இன்று நாம museum கு போறதை மறந்துட்டீங்களா?" என்று Mrs. Leona கண்ணாடியை சரி செய்து கூறினார்.

"Trip ஆ!" என்றவாறு மாணவர்கள் குதித்து எழுந்து bags ஐ pack செய்ய, "No students, not a trip! Museum கு நாம போக போறது படிக்கிறதுக்கு. Take your breakfast and the note books only!" என்று கூற,

அனைவரும் சலித்து நிற்க,

"அய்யோ Ma'am! Let's have some fun. Museum பார்த்துட்டு அப்படியே அருகில் இருக்கிற Rollercoaster ல ஏறிட்டு வருவமா?" என்று கேட்டான் Ferry. அவனோ இதை போல adventurous mood ல் தான் எப்போதும் இருப்பான்.

Rollercoaster என்று கேட்டதும் Mrs Leona கு கை கால் எல்லாம் பதறியது...

Monostar laboratory ல் ஏற்பட்ட விபத்து  சாதாரண விபத்தா? அல்லது திட்டமிட்டு செய்யப்பட்டதா?

CCTV Camera ல் தடயங்களை அழித்தவர் யார்?

ஏன் Mrs Leona வுக்கு கை கால் பதறியது?


முதலாவது update போட்டு விட்டேன். How was it?

Support by you valuable votes and comments.

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro