Mr Volter
Museum ல் இருக்கும் Crystal வேறு ஒன்றா or red crystal orange crystal ஆக colour change ஆகி இருக்கிறதா என்று அனைவரும் group discussion ல் இருக்கும் போது Mr Sebastian ன் assistant Mr Volter அவர்களிடம் வந்து "எந்த Crystal அ பத்தி பேசிக்கொண்டிருக்கிறீங்க" என ஆவேசமாக கேட்க பயத்தில் இதை தான் என்று ஆட்காட்டி விரலினால் orange crystal ஐ காட்டினான் danish.
அங்கு இருந்த robin ஐ கண்டு அதிர்ந்த Volter அதை காட்டிக்கொள்ளாமல் " உன் அப்பா பெயர் என்ன??" என robin னிடம் Volter வினவ பயத்தில் "Mr Oliver, sir" என்றான்.
"ok fine.இப்ப சின்ன பசங்க museum பார்த்தது போதும் ஓடிடுங்க வீடுகளுக்கு" என விரட்ட gwen " excuse me Sir, உங்க museum ஆல red crystal காணாம போனதாகவும் அதை தேடித்தரவும் சொல்லி இருந்தாங்க" என முடிப்பதற்குள் "இருக்க வேண்டிய Crystal இங்க இருக்கு இப்ப சின்ன பசங்க எல்லாம் வெளிய போனா ரொம்ப உதவியா இருக்கும் " என Mr Volter விரட்டினார்.
" Excuse me Sir, அப்ப அது வேற Crystal ஆ Sir??" என robin வினவ " ஆனா museum ல இருந்து தான் message வந்தது sir" என loral கூறினாள்." சின்ன பசங்க என்ன சொல்லுரிங்க என்டு வெலங்குது இல்ல...இப்ப இங்கிருந்து ஓட போறிங்களா இல்லையா?" என Mr Volter அதட்ட நால்வரும் வெளியேறினர்.
Loral ன் வீட்டினர் loral கும் friends கும் விளையாடுவதற்காக மரக்கிளைகளுக்கிடையில் play house ஒன்றை கட்டிக்கொடுக்க அங்கு அனைவரும் சென்றனர்."என்னடா அவரு அவ்வளவு ஏசுறாரு? தப்பானதா கேட்டோம்" என robin வினவ " அது தானே நாம நாளைக்கு Mr Sebastian அ meet பண்ணி இத பத்தி கேட்போம்" என loral கூறினாள்."அது சரி ஏன் robin ட அப்பாவ கேட்கணும்??? ஒருவேளை robin கு மூளை இல்ல என்டு அப்பா கிட்ட சொல்லவோ தெரியாது..." என gwen கூறி சிரித்தாள்.
முதல் கேள்வி robin ஐ சிந்திக்க வைத்தாலும் gwen அடுத்து கூறியதில் கடுப்பாகினான். Loral ன் அம்மா biscuits செய்து வந்து கொடுக்க danish "Hey, this is my favourite.thank you aunt" என கூறியது தான் கடன் 3 biscuits ஐ ஒரே அடியாக வாயில் போட்டான். போட்டுக் கொண்டே "what's the name of this dessert loral" என gwen வினவ " tipperary biscuits" என்றாள் loral." இது traditional Scottish dessert...இது Brave cartoon ல இருந்து தான் எனக்கு அறிமுகம் ஆகியது" என danish கூற "பரவல்லயே cartoon crazy ஆக இருந்தாலும் எங்கள விட நிறைய விஷயங்கள் உனக்கு தெரியும்" என நண்பனை robin பாராட்டினான்.
கொஞ்ச நேரம் அரட்டைகளிளும் விளையாட்டுகளிளும் செலவழித்து விட்டு நாளை காலையில் museum ல் சந்திப்பதாக கூறி விடைப்பெற்றனர்.
இரவு உணவை robin gwen தாத்தா என்போர் ஒன்றாக அமர்ந்து சாப்பிட Crystal ஐ பற்றி அனைத்தையும் கூறினர் Mr Volter உட்பட அப்போது தாத்தா Mr Volter ஐ கண்டது இல்லை எனவும் அவர் புதிதாக வேலையில் சேர்ந்து இருக்க வேண்டும் என்று ஊகித்தார்.
இருவரும் சாப்பிடும் போது தாத்தா சிறு புன்னகைக்க robin ஏன் என்று வினவினான்."இரண்டு பேரும் இப்ப இப்படி இருந்ததுக்கு காலம் போக இரண்டு பேரும் ஒற்றுமை ஆகுவீங்க...பாருங்களேன்" என கூற "அது கனவுலயும் நடக்காது" என்றான் robin.
"எனக்கு மட்டும் ஆசை இல்ல rubber band ஓட close ஆகுறது" என கூற "மெட்டி எனக்கு அந்த பெயர் சொல்லி கூப்புடாத என்டு எத்துனை தடவை சொல்லறது" என பொறிந்தான் robin."ok ok leave ur fight now & go to sleep... Good night my sweet hearts love you two" என கூறி bedroom கு அனுப்பி வைத்தார் தாத்தா.
இரவு ஒரு மணியளவில் Gwen washroom செல்ல bedroom ல் இருந்து வர kitchen பக்கத்தில் சத்தமொன்று கேட்க அன்று வந்தது போல கள்வனாக இருக்க வேண்டும் என்று எண்ணி அருகில் உள்ள தும்புத்தடி உடன் kitchenனுள் நுழைய அவ் உருவத்தின் அருகில் சென்று தும்புத்தடியை ஓங்க அவ் உருவம் முகத்துக்கே torch அடிக்க தன்னை கண்டதாக எண்ணி இரண்டு வீட்டுக்கு கேட்க்கும் அளவுக்கு கத்தினாள்.
அவ் உருவம் gwen ன் வாயை மூடி " சும்மா கத்தாத நான் robin " என கூற "நீ என்ன மோகினி வார நேரம் kitchen ல பண்ற?" என "தண்ணி குடிக்க நான் வந்தேன் அதயும் உன்ட சொல்லிடு வரனுமா?நீயே ஒரு மோகினி அதுதானே just miss ஆகி இருந்தா என் தலையையே உடஞ்சி இருப்ப"என கூறினான்.
"அங்க என்ன சத்தம் இரவு ஒரு மணிக்கும் உங்க சண்டை முடியல்லயா?எல்லாரும் தூங்கனும்.போய் தூங்குக" என சத்தத்தைக் கேட்டு எழும்பிய தாத்தா கூறினார்.
" Ok Grand pa " என கூறி இருவரும் தத்தமது room ற்கு வரும் போது அதே basement ல் சத்தம் ஒன்று கேட்க "வா போய் பார்ப்போம்"என gwen robin ஐ இழுக்க "உனக்கு தைரியம் கூட தான்.
Grand pa வ பேசி சொல்லுவோம்" என robin தாத்தாவின் அறைக்கு செல்ல அவனை தடுத்து "நீ boy ஆ girl ஆ? Grand pa வ கூட்டி வரும் போது அவன் ஓடி இருப்பான் வா உள்ள போம்" என கூறி அவனை இழுத்து கொண்டு செல்ல "அது கள்ளன் தான் என்டு பார்க்க முதலே decide பண்ணிடியா...ஒருவேளை எலியா சரி இருக்கலாமே" என robin கூற gwen அவனை முறைத்துக் கொண்டே உள்ளே சென்றாள்.
கதவைத் திறந்து உள்ளே செல்ல இவர்களை கண்டு கள்ளன் வந்த சிறு யன்னல் வழியாக பாய்ந்து சென்றான்.அவனின் முகத்தை ஒழுங்காக பார்க்க முடியவில்லை.
இருவரும் இணைந்து கத்த தாத்தாவும் ஓடி வந்தார்.basement light ஐ on செய்ய அங்கு பொருட்கள் எல்லாம் சிதறி காணப்பட்டது."நாளைக்கு police இடம் complaint பண்ணுவம் தாத்தா" என்றாள் gwen."இங்க வந்தவன் எதையோ தேடி இருக்கிறான்" என்றார் தாத்தா.
"இங்க பாருங்க" என robin கூற அன்று danish கீழே விழ உடைந்த போத்தலில் Green shining liquid ல் கால் தடங்கள் பதிந்து இருந்தது. "நாளை பார்ப்பம்.இப்ப போய் தூங்குக."என தாத்தா கள்ளன் வந்த யன்னலை lock செய்தார்.
அடுத்த நாள் காலையில் play house கு சென்று மற்றும் இருவரிடமும் நடந்த சம்பவத்தை கூறினர்.
இன்று Mr Sebastian பார்க்க செல்ல வேண்டும் என loral நினைவூட்டிய பின் அனைவரும் museum நோக்கி புறப்பட்டனர்.Mr Sebastian ஐ கண்டு messageயும் Crystal யும் பற்றி கூற அப்படி ஒன்று அவர்கள் அனுப்பவில்லை எனவும் இங்கு orange crystal மாத்திரமே உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இவர்களின் கதையை இடைமறித்த Mr Volter வேலை இருப்பதாக Mr Sebastian ஐ அழைத்தார்." Mr Volter is my new assistant.last week தான் வந்து சேர்ந்தார்" என பிள்ளைகளுக்கு introduce பண்ணி வைத்தார்.robin gwenஐ மெதுவாக தட்ட "என்னடா பெரியவங்க பேசிட்டு இருக்கும் போது தட்டுற" என வினவ மீண்டும் தட்டினான்.
"என்ன பிரச்சினை உனக்கு? " என கேட்டீக்கொண்டே robin ஐ பார்க்க அவன் Mr Volter ன் shoes ஐ காட்டினான். Gwen அதிர்ந்தாள். அதில் Green shining liquid படித்திருந்தது.......
Thanks for the votes & comments.
Keep supporting.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro