Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

Mr & Mrs Oliver

நண்பர்கள் வெளியேற அங்கு police officers சுற்றி வளைத்தனர்.நால்வரையும் police station கு அழைத்து செல்ல முயல "Excuse me Sir, தவறா எடுத்து கொண்டு இருக்கிறீங்க...நாங்க எதையும் களவு எடுக்க போக இல்ல" என gwen கூற " அப்போ visiting ஆ போனோம்" என பதிலடி கொடுத்தான் danish.

"நீயே நம்மல jail ல தள்ளி விட போற...வாய மூடிடு இரு" என gwen காதில் கிசுகிசுக்க police officer ஓ "கைல வெச்சி இருக்கிற Crystal யாரோடது" என robin ன் கையில் இருந்த Crystal ஐ காட்டி கூறினார்." Sir அது Mr Volter திருடின crystal  அத police கு கொண்டு வர தான் நாங்க இத எடுத்துட்டு வந்தோம். வேற எந்த தப்பும் பண்ண இல்லை sir...இத எடுத்துட்டு எங்கள விட்டு விடுங்க sir" என robin crystal ஐ நீட்ட "நமக்கு தெரியும் யார் திருடன் யார் திருடன் இல்ல என்டு சின்ன பசங்க இதுல மூக்கை நுழைக்க தேவையில்லை.நாங்க உங்க அம்மா அப்பா ட இத பத்தி சொல்லனும்" என police officer robin னிடம் இருந்து crystal ஐ பெற்று கொண்டு நண்பர்களை வீட்டில் விட்டு warn பண்ணி பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

Danish ஐயும் loral ஐயும் தண்டனையாக ஒரு கிழமை வீட்டுக்கு வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டது.

Gwen ன் வீட்டினர் gwen ஐ மீண்டும் அவள் வீட்டுக்கு அழைத்து வர Driver ஐ robin வீட்டுக்கு 2 நாட்களுக்கு பின் அனுப்பினர். Gwen  robin னிடம் விடை பெற்றுச் செல்லும் போது ஏனோ ஒருநாளும் இல்லாமல் ஏதோ ஒன்றை இழப்பதாக உணர்ந்தான்.

That's called as friendship "MANY PEOPLE WILL WALK IN & OUT OF YOUR LIFE,BUT ONLY TRUE FRIENDS LEAVE FOOTPRINTS IN YOUR HEART" என தாத்தா ஒரு முறை கூறிய கருத்து robin கு நினைவுக்கு வந்தது.பல வருடங்களுக்கு பின் நட்பு ஒன்றை உருவாக்கி சந்தோசமாக நேரத்தை நண்பர்களுடன் செலவழித்து  திடீரென அர்த்தமில்லாமல் பிரிவது robin கு மிகவும் வருத்தமாக இருந்தது.

2 நாட்களுக்கு danish loral உடன் phone calls ஆல் கூட தொடர்பு கொள்ளமுடியாமல் போனது robin கு கவலையாக இருக்க பக்கத்தில் gwen இருப்பது ஆறுதலாக இருந்தது ஆயினும் இப்போது அவளும் போக முற்படும் போது அவன் மிகவும் உடைந்து போனான்.

" Gwen car வந்துருச்சு luggage உம் போட்டாசு " என்றார் தாத்தா. கீழே வந்திறங்கிய gwen தாத்தாவிடம் விடைபெற்று robin ன் அருகில் வர அவன் சோகமாக நின்று கொண்டிருந்தான். அவனிடம் "நான் போய் call பண்றேன்.miss u rubber band" என அணைத்து அவன் காதருகில் "இன்னம் one hour ல் loral ட play house கு வா...நாங்க அங்கு உனக்காக Wait பண்ணுவம்..." என கூறி கண்ணடித்து விட்டு "உனக்கு 
இந்த face set ஆகுது இல்லடா rubber band " என கூறி விடைப்பெற்று சென்றாள்.முதல் முறையாக rubber band என்று கூறியதில் சிரித்தான் robin.

அங்கு danish bed ல் தான் படுத்திருப்பது போல் pillows ஐ வைத்து விட்டு யன்னல் வழியாக பாய்ந்து loral ன் play house ஐ அடைந்தான். Gwen ன் car driver gwenனோடு அப்பா போல பழகுவதால் தன்னை அழைத்து செல்ல வேண்டாம் என்றும் ஏதாவது காரணம் கூறி பெற்றோருக்கு இன்று மாத்திரம் புரிய வைக்கும் படியும் கூறி கெஞ்ச அவரும் ஏதாவது கூறி சமாளிப்பதாக கூறினார்.

வழியில் loral ன் play house ல் விட்டு விட்டு அவர் gwen ன் வீடு நோக்கி புறப்படார்.மூவரும் கதைத்து கொண்டிருக்க அவர்களை robin ரொம்ப miss பண்ணதாக gwen கூற "Gwen இப்படி கேட்குற என்டு தப்பா நினைக்காத...robin ட இது வரை அவன் அப்பா அம்மா பற்றி ஒன்னுமே சொல்ல மாட்டான் நாங்களும் இதுவரை கேட்டதில்லை...நீ அவன்ட cousin தானே அதுதான் உன்ட கேக்குறோம்" என gwen பதிலை கேட்க ஆர்வமாக கேட்டாள் loral.

பெரு மூச்சு ஒன்றை விட்டு " robin ட parents Mr & Mrs oliver. அவங்க, grand pa, grand ma & Robin உம் ஒன்றா இருந்தாங்க.robin ஓட அப்பாவும் அம்மாவும் professors. Grand ma உம் Grand pa உம் robin மேல உயிரையே வச்சிருந்தாங்க. 2 years கு முதல்ல grand ma இறந்துடாங்க... அது robin கு பெரிய இழப்பா இருந்திச்சு. இறந்து 2 month ல robin ஓட parents கு north England ல இருந்து east England கு transfer வந்ததால அவங்க அங்க shift ஆகிடாங்க. அப்படியே கடந்த 2 years ஆ ஒவ்வொரு இடமா shift ஆகினதால robin இதுவரை 5 schools ல படிச்சி இருக்கிறான்.இப்படியே போனா robin ட future spoil ஆகும் என்று grand pa robin அ பத்திரமாக பார்த்துக் கொண்டு நல்லா படிக்க வைக்க mini town கு கூட்டி வந்தாரு. இப்போ robin ட parents America ல top 10 ல உள்ள university ல professor ஆ work பண்ணுறாங்க. அவங்க robin கூட இருந்தப்போ கூட அவனுக்கு புடிச்சது எல்லாம் வாங்கி கொடுத்தாலும் அவனோட time spend பண்ணுறது குறைவு அது அவங்க தப்பு இல்ல அவங்க பண்ணுற வேலை அப்பிடி...ஆனால் Grand ma இறந்த பிறகும் அம்மா அப்பா busy ஆகின பிறகும் அவனுக்கு தனிமை அதிகமாகிச்சி.அவனட அம்மா அப்பா vacation  கு வருவதா பல முறை சொல்லி robin காத்து இருந்து ஏமாந்து இருக்கிறான்.அதனால தான் அன்பான சொற்கள அவன் நம்புற இல்லை  Grand pa ட தவிர...robin அவன் பொற்றோர்ட அன்புக்காக ஏங்குபவன்.அவனுக்கு உங்க இரண்டு பேரையும் ரொம்ப பிடிக்கும்.அவன் friends ஓட இருக்கும் போது கவலைகளை மறந்து சந்தோசமா time spend பண்ணுறான். Grand pa உம் இத அடிக்கடி என்கிட்ட சொல்லுவாறு. Finding good friends is the real adventure...தேடினாலும் கிடைக்காத உறவு நல்ல நண்பர்களின் நட்பு.Robin நல்ல பையன் அவன் உங்க இரண்டு பேரையும் நம்புறான் so எந்த situation லயும் அவன கைது விட்டுறாதிங்க..." என கண்ணீர் துளிகளுடன் முடித்தாள்.

" நீ robin அ சீண்டி கொண்டு தானே இருப்ப ஆனா உண்மையான அன்பு வைச்சிருக்க..." என Danish கேட்க " ஆமா எல்லாரும் நம்மல பாத்து அனுதாபம் மட்டுமே காட்டினா அது நமக்கு பிடிக்காதே.அதுதான் எப்ப பார்த்தாலும் அவனோடு சண்டை பிடிச்சிட்டு இருக்கிறேன்" என தன் கதையை முடிக்க danish உம் loral உம் இக்கட்டான நிலையில் கூட robin ஐ கைவிடுவதில்லை என gwen இடம் promise செய்தனர்.

அவள் சென்ற சிறிது நேரத்தில் தாத்தா robin னிடம் phone ஐ கொடுக்க யார் என்று கேட்டான்.பதிலளிக்காமல் கையில் கொடுக்க அதில் Mom என வந்தது.

அதை பெற்று காதில் வைக்க " robin you are becoming a bad boy...what's the stupid thing that you did??நாம இவ்வளவு உனக்காக கஷ்டப்படுறோம்.ஆனா robin யாரோ வீட்டுக்கு திருட சென்றிருக்க...what happened to you robin??" என அம்மாவும் அப்பாவும் திட்ட இதற்கு மேலும் பொறுமையின்றி "நீங்க இரண்டு பேரும் நான் சொன்னத எப்ப கேட்டீங்க...I don't need money or toys just i need only care & love from you two...இந்த பிரச்சினை நடந்து இரண்டு நாட்களுக்கு பின் தான் எனக்கு ஏச உங்களுக்கு time கிடைச்சது. நான் திருட போனது எதுக்கு என்று கூட கேட்க உங்களுக்கு நேரம் இல்லையே. நீங்க இரண்டு பேரும் இங்க இருந்தா sometimes இப்படி ஒன்று நடந்து இருக்காது. Grand pa நல்லா தான் பார்த்துக் கொள்றாரு...but I need you two...as other children,I wanna play with you, I wanna sleep while hearing stories from you, I wanna go to shopping with you, I wanna celebrate festivals with you mom & dad...please I don't need money...try to understand me" என அழுகையுடன் வெளியே செல்ல தாத்தாவும் அவனை தனிமையில் விட தீர்மானித்தார்.

Robin ஓ நேராக loral ன் play house னுள் செல்ல அவர்களோ A book about the crystals என்ற book ஐ ஆராய்ந்து செய்து கொண்டிருந்தனர்...

Thanks for the votes & comments.
Keep supporting.

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro