!!௨!!
நந்தினி பேசியது எல்லாம் விஸ்மாயா கண் முன் படமாய் விரிந்தது.
" எனக்கு என்ன , நல்லா இருக்கேன் தான் ஆனா ஹ்ம்ம் என ஒரு பெருமூச்சு உடன் நந்தினி பேச்சை நிறுத்தினாள்....!!!
" ஏன் என்ன ஆச்சு.... நந்தினி நீ ஏன் இப்பிடி விரக்தியா,பேசுற உனக்கு பிடிச்சவர தானே கல்யாணம் பண்ணிக்க போற அப்புறம் என்ன? தோழி ஏன் கவலையாக பேசுகிறாள் என விஸ்மையா நந்தியின் முகத்தையே பார்த்தாள்
" அதுல தான் பிரச்சனையே விச்சும்மா..." என நந்தினி சொல்ல
" என்னடி குழப்புற அப்பிடி என்ன தான் பிரச்சனை....சொல்லேன்" விஸ்மையா பதட்டத்தில் கேட்டே விட்டாள் எங்கே தோழி தன்னை போல் ஏதும் கஷ்ட படுகிறாளோ என்கிற பயம் தான்
" கார்த்திக்கும் எனக்கும் ஜாதகம் பொருத்தம் பார்த்த அப்போ அவர் ஜாதகத்துல எதோ தோஷம் இருக்காம் அதுல முதல் தாரம் நிலைக்காதாம் அது நால எங்க கல்யாணம் இப்போதைக்கு நடக்குற மாதிரி தெரியல ஆனா நான் கார்த்தி கிட்ட ஒரு யோசனை சொன்னேன் ஆனா அவன் அதுக்கு சம்மதிக்க மாட்டேன்கிறான் என்ன பண்ண எனக்கே புரியல என நந்தியின் சொல்லி முடிக்க.."
அப்பிடி என்ன யோசனை நந்தினி அவர் ஏன் அதை மறுக்கனும் என முகம் தெரியாத அவன் மீது விஸ்மையா பரிதாபம் பட்டாள்.. கடைசியில் அவளது நிலை பரிதாப பட போகிறது என்று தெரியாமல்.
" அது வந்து, ஒரு முடியாத அதாவுது உடல் நிலை சரி இல்லாத பெண்ணை பார்த்து முதல் தாரமா கல்யாணம் செய்துகுறது டா எப்பிடியும் உடல்நல குறைவால் இறந்துட்டா அந்த தோசம் கழிந்துவிடும் அப்புறம் நான் கார்த்தியே கல்யாணம் பண்ண எந்த தடை இல்லாம செய்துக்கலாம், இத சொன்னா அவர் கேட்க மாட்டேங்குறாரு, விச்சு, இப்போ நீயே சொல்லு நான் சொன்ன யோசனை சரி தானே சின்ன வையசுல இருந்தே கார்த்திக்கு தான் எனக்கு நான் தான் கார்த்திக்கு சொல்லி சொல்லியே வளர்த்துட்டாங்க.. . இப்போ ஒரு ஜாதகதுக்காக நான் கார்த்தியே இழக்கனும்ன்னா எப்பிடி முடியும் சொல்லு." என நந்தினி பேசிக்கொண்டே போக
நந்தியின் பேச்சை கேட்டு விஸ்மையா திகைத்து போய் அமர்ந்து விட்டாள். "ஒரு திருமணத்துக்கு இன்னொரு திருமணம் பரிகாரமா இது எப்பிடி சாத்தியம், இது என்ன சினிமாவா " என யோசிக்க ஆனால் வீட்டுக்கு நேரத்தோடு கிளம்ப வேண்டுமே என்று சரி நந்தினி நாம இன்னும் ஒரு நாள் பேசலாம் எனக்கு வீட்டுக்கு கிளம்பனும் என்று சொல்லிவிட்டு கிளம்பி வந்துவிட்டாள்.
மீண்டும்.. மீண்டும்.. நந்தினி.. சொன்ன விஷயம் மனதில் ஓடி கொண்டு இருக்க....
அபோதுதான் அறை கதவு வேகமாய் தட்டும் சத்தம் கேட்டு விஸ்மையா திடுக்கிட்டு ச்சைசை இவ்வளோ நேரமும் இதை பற்றியேவா யோசித்து கொண்டு இருந்தேன் அம்மா என்ன நினைபாங்க என அவசரமா போய் கதவை திறந்தாள் அந்த அப்பாவி பாவை
அங்கே ருக்மணி அவளை முறைத்து , ஏண்டி அறிவில்லை உன்னக்கு எம்புட்டு நேரமா கதவை தட்டுறேன் திறக்குறதுக் என்ன மணி என்ன ஆச்சுண்ணு பார்த்தேலே பசியா வரம் ஏதும் வாங்கி வந்து இருக்கியா என்ன ..வா சாப்பிட அப்பிடி என்ன உள்ளே செய்த்துட்டு இருந்த..
" அம்மா ஆ... அது வந்து.. ஒன்னும் இல்லை தூங்கிடென் என வாய்க்கு வந்ததை சொன்னாள்" விஸ்மையா
"அதை கேட்ட ருக்மணி , என்னது தூங்கிடியா ஏண்டி அறிவு இருக்கா உனக்கு கோவில் போயிட்டு வந்து யாரும் தூங்குவாங்கலா, சரி சரி.. வா சாப்பிட்டு வந்து தூங்கு என சொல்ல"
" இதோ வரேன் அம்மா நீங்க முன்னாடி போங்க நான் முகம் கழுவிட்டு.. வந்துறேன் என விஸ்மையா சொன்னாள்
" ஹ்ம்ம் சரி வா திரும்ப போய் படுத்துறாத என கண்டிப்புடன் சொல்லிவிட்டு சென்றார் ருக்மணி"
"அவர் சென்ற உடன் கதவில் சாய்ந்து ஹப்பாடா தப்பிச்சோம் என ஒரு பெரியே மூச்சை இழுத்துவிட்டு முகம் அலம்பிவிட்டு சாப்பிட டைனிங் ஹால் வந்தாள்"
தாமோதரன் சொந்தமாய் மல்லிகை கடை வியாபாரம் செய்து வருகிறார் தொழில் ஓர் அளவிற்கு நல்ல லாபம் வருவதால் தனது வீட்டை இடித்து முன்று மாடி. கட்டிடமாய் கட்டி விட்டு இருக்கிறார் கடையும் இன்னும் கொஞ்சம் பெரிது ஆக்கி டிபர்ட்மெண்ட் ஸ்டோர் அளவுக்கு இல்லை நாலும் பெரிதாய் மாற்றி இருந்தார் மிகவும் அமைதியவர் தான் கஷ்ட பட்ட காலத்தில் உதவாத எந்த உறவின் கூடவும் இப்போ ஒட்டி உறவாட பிடிக்காதவர் தனது இரு பெண்கள் படிப்பில் ஆர்வம் இல்லை என்று சொல்லிவிட பெரியவாளுக்கு அடுத்து இரண்டாவுது பெண்ணுக்கும் அடுத்து அடுத்து திருமணத்தை முடித்து வைத்துவிட்டார் கடைக்குட்டியான விஸ்மையா எம் சி ஏ கடைசி ஆண்டு ப்ராஜெக்ட் செய்து முடித்து இருந்தாள் ஆன்லைனில் சிறியே ப்ரொஜெக்ட் எல்லாம் செய்து குடுத்து சம்பாதித்து கொண்டு இருக்கிறாள் கேம்பஸில் தேர்வு ஆகி இருப்பதால் அடுத்த இரண்டு மதங்களில் வேலை சேர காத்து இருப்பவள்.
அப்பிடி தான் ஒரு நாள் ப்ராஜெக்ட் விசையமாக வெளியே சென்று இருந்த பொழுது அந்த சம்பவம் நடந்தது தன் தோழியுடன் வேலை விசையமாக பேசிக்கொண்டு இருக்கையில் மயங்கி சரிந்தாள் விஸ்மையாவின் நிலையே பார்த்து அவளது தோழி பயந்து போய் சுற்றி இருந்தவர்களின் உதவியுடன் மருத்துவமனைக்கு அழைத்து சென்றாள் அங்கே அவளுக்கு எல்லா டெஸ்டுகளும் எடுத்து அனுப்பிவைத்தார்கள் சரியாக இருண்டு வாரம் கழித்து அதே ஹோச்பிடல் சென்று தனது மெடிக்கல் ரிப்போர்ட் வாங்கி பார்த்தவளுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி காத்து கொண்டு இருந்தது......
அதில் தனக்கு கான்செர் இருப்பதாக சொன்னார்கள் அங்கே இருந்த டாக்டர் மேலும் ஆப்ரேஷன் செய்தால் மட்டுமே பிழைப்பதற்கு வாய்ப்புகள் இருக்கு என சொல்ல இதை கேட்டுமா தான் இன்னும் உயிரோடு இருக்கிறோம் என மாயாவுக்கு அழுகையாக வந்தது இந்த விசையத்தை எப்பிடி தன் பெற்றோர் இடம் சொல்லுவது அப்பிடியே சொன்னாலும் தாங்கிகொள்ளுவார்களா , அய்யோ இல்லை நான் இருக்கிற வரைக்கும் அவங்கள சந்தோசமா பார்த்துக்கணும் இப்போதைக்கு இத அவங்களுக்கு சொல்ல வேண்டாம் என தன்னுடையே மெடிக்கல் ரிப்போர்ட் எல்லாம் தோழியிடம் குடுத்துவிட்டு மருந்து-மாத்திரைகளுடன், மாதம் இரு முறை வீட்டுக்கு தெரியாமல் செக் அப் போய் வந்தாள், தன் பெற்றோர்க்கு தெரியாமல் மருந்து மாத்திரை சாப்பிட்டுவந்தாள் , அடிகடி. தலை சுத்தல் வந்தால்.. தன்னோட அறைகுல்லையே முடைங்கி கொள்ளுவாள் எங்கே அவர்கள் கண்டுபிடித்து விடுவார்களோ என்கிற பயம், பணம் இருக்கிறது தான் ஆனால் இப்போ தான் சகோதிரி இருவரும் கல்யாணமும் அடுத்து எல்லா சடங்கிற்கு எல்லாம் செலவு செய்தவர் இப்போ எப்பிடி தனக்கு மருத்துவ செலவு செய்வார் என்ற கவலை இதில் இப்போது தன் தோழி சொன்ன விசயம் அவளை அதிர்ச்சிக்கு உள்ள ஆக்கியது.
....................................
கார்த்தி- மும்பையில் எம் பி ஏ முடித்துவிட்டு தன்னோட குடும்ப தொழில் தந்தை உடன் இணைந்து பிசினஸ் கவனித்து கொண்டு இருக்கும் 27 வயது இளைஞன் அம்மா- ராஜலக்ஷ்மி அப்பா- ரகுராம் தாத்தா-வேதாசலம், பரம்பரை தொழில் - டெக்ஸ்டைல் பிசினஸ் வேதாசலம் அவருக்கும் இருண்டு பிள்ளைகள் பெரியவன் ரகுராம் சின்னவள் கௌசல்யா அவரின் கணவர் சங்கர் இவர்களின் செல்ல புதல்வி தான் நந்தினி, என்னதான் சமுகத்தில் சங்கர் பெரியே இடத்தில இருந்தாலும் மாமனார் வீட்டு சொத்தில் பாதியே கொள்ள அடிக்காவிட்டால் இவருக்கு உறக்கம் ஏதும் வராது
பாவம் அவர் பெற்ற பெண்ணையும் அப்பிடியே வளர்த்து விட்டார்.ராமாயணத்தில் கயிகை எப்பிடியோ அப்படிதான் இந்த கௌசல்யா தானும் தன்னுடையே குடும்பம் தங்களுக்கு அடிமையாக ரகுராம் மற்றும் அவனது குடும்பம் இருக்க வேண்டும் என்று நினைத்தாள் அவள் .
இதுநாள் . இவளை காதலிக்கும் கார்த்திக் என்ன பாடுபட போகிறான் என்று வேதாசலம் முன்பே யோசித்துவிட்டார் போல அதனால் தான் இன்னும் எல்லாம் பொறுப்புகளையும் தன் கிட்டயே வைத்து கொண்டார் [ பெரியவர் நா பெரியவர் தான் பா கரெக்ட் டெசிசன் தாத்தா]
கார்த்திக், மும்மையில் இருந்து திரும்பி வந்த உடன் சங்கர் தன் குடும்பத்துடன் ரகுராம் வீட்டுக்கு வந்துவிட்டார் வந்த உடனே அவர் செய்த முதல் வேலை தன் பெண்ணுக்கும் - கார்த்திக்கும் கல்யாணம் நிச்சயதார்த்தம் பண்ண வேண்டும் என்று கௌசல்யா சொல்ல என்ன அப்பா இது என்று ரகுராம்- ராஜலக்ஷ்மி பெரியவரை பார்க்க..
அவர்" சிறிது நேரம் யோசித்துவிட்டு ஒரு நல்ல நாள் பார்த்து ஜாதகம் பார்க்கலாம் என சொல்லிவிட்டு அப்போதைக்கு பேச்சை முடித்து வைத்தார்.
சங்கர் தன் மனைவி காதில் " என்னடி உன் அப்பா ரொம்ப யோசிக்கிறாரு ஜாதகம் வேற பார்க்கணும் சொல்லுறாரு நாம எதாச்சும் செய்யணுமே, உங்க அண்ணனுக்கு கார்த்திக் ஒரே பையன் இவ்வளோ சொத்துக்கும் ஒரே வாரிசு வேற எவளாவுது வந்து உரிமை கொண்டாட விடுவேனா நான் எப்பிடியாவுது நம்ம நந்தினியே - கார்த்திக்கு கல்யாணம் செய்து வைக்கணும் அப்புறம். எல்லா சொத்தையும் நம்ம பொண்ணு பெயர்ல எழுதி வாங்கணும் என சொல்லிக்கொண்டு இருந்தார் [இன்னாருக்கு இன்னார் என்று எழுதி வைத்தான் தேவன் அன்று எல்லாம் விதி படி தான் நடக்கும் என இவர்களுக்கு தெரியாமல் போய்விட்டது]
ரகுராம் இடம் ராஜலக்ஷ்மி ' ஏங்க இது சரியா வருமா.. "யோசித்துக்கொண்டே கேட்க
தனது லப்டோப்யில் அன்றையே கணக்கு வழக்கை பார்த்து கொண்டு இருந்துவர் தன் மனைவியின் இந்த திடீர் கேள்வியில் நிமிர்ந்தார் என்னடி இப்போ புதிர் போடுற இப்போ எதுக்கு சரியா வருமா கேட்குற.. எது சரியா வருமா"
' இல்லைங்க, நம்ம கார்த்திக் கல்யாணம் தான் "
" ஹ்ம்ம் அவன் சந்தோசம் தானே நமக்கு முக்கியம் அதுவும் இல்லாமல் அப்பா சொல்லுறது தான் பார்ப்போம் என்ன நடக்குதுன்னு'என சொல்லிவிட்டு தனது வேலையே பார்க்க ஆரம்பித்தார்
" அது "
" போதும் ராஜி எதையும் போட்டு குழப்பிக்காத நிம்மதியா தூங்கு நான் நாளைக்கு மீட்டிங் வேற பெப்பெர்ஸ் ரெடி பண்ணனும் என மீண்டும் தன் வேளையில் கவனம் ஆனார்.. ..
" ராஜலக்ஷ்மி, இப்போது ரகுவின் செயல் கோப படுத்தியது நிம்மதியா தூங்கணுமா , ஆமா என்கிட்டே தான் இந்த அரட்டல் உருட்டல் மிரட்டல் எல்லாம் எங்க பேசணுமோ அங்கே பேசுறது கிடையாது என முணுமுணுத்து கொண்டே படுத்து விட.
" ரகுராம் மனதுக்குள் இனி வேலையே பார்க்க விட மாட்டாளே இவ என லேப்டாப்பை முடி வைத்து விட்டு தன் மனைவி இடம் வந்தார்.
" சொல்லு ராஜி என்ன பிரச்சனை இப்போ உனக்கு... "
" ஒன்னும் இல்லை போங்க போய் உங்க பிசினஸ், லேப்டாப் அதையே கட்டி அழுங்க எனக்கு என்ன வந்தது என முகத்தை திருப்பிக்கொண்டு படுத்துவிட்டார் "
" ஹாஹா ,ஏண்டி இப்பிடி என் உயிரை வாங்குற , இப்போ என்னன்னு சொன்னாதானே எனக்கு தெரியும் " ரகுராம் கேட்க
" ஆமா உங்களுக்கு விரல குடுத்தா கூட கடிக்க தெரியாது பாருங்க .. வந்துடாரு பேச , கார்திப்பா என் கோபத்தை கிளராம போய்டுங்க அவ்வளோ தான்"
" கார்திப்பா என்கிற வார்த்தையே வைத்தே மனைவியின் கோபத்தை புரிந்துகொண்டார் சமாதனம் செய்து ஆகணுமே என பேச ஆரம்பித்தார் சரி சரி விடு அதான் எனக்கு புரியலைன்னு சொல்லிட்டேன்ல ம்மா இப்போ சொல்லு என்ன பிரச்சனைன்னு "
" இந்த கல்யாணம் சரியா வருமாங்க , எல்லாரும் நம்ம கிட்ட கலந்து பேசாம முடிவ மட்டும் சொல்லுறாங்க , நான் அவன பெத்தவ கிடையாதா என் புள்ளை மேல எனக்கு அக்கறை தான் இருக்க கூடாதா , உங்க தங்கச்சி வந்த உடனே அவ முடிவு பண்ணிட்டு வந்து பேசுற மாதிரி இருக்குங்க மாமா வேற கார்த்தி வந்த உடனே ஜாதகம் பார்க்கலாம் சொல்லுறாரு என்னங்க நடக்குது இங்க அப்போ நாம எதுக்கு என் புள்ளை என்ன யாரும் இல்லாதவனா" என ராஜி தன்னுடையே மனக்குறையே கணவர் இடம் புழம்பி தள்ள
அதை கேட்ட ரகுராம் யோசனையுடன் ' எதுனால ராஜி அப்பிடி .சொல்லுற, நம்ம கௌசி பொண்ணு தானே "என கேட்க
" இல்லைங்க, எனக்கு எதோ சரியா படல அதுவும் இல்லாம , நந்தினி மேல எனக்கு தனிப்பட்ட கோபம் எல்லாம் இல்லைங்க ஆனா ஏதோ தப்பா இருக்கிற மாதிரி இருக்கு, நம்மக்கு இருக்கிறது ஒரே புள்ளைங்க அவன் நாளைக்கு கஷ்டப்பட்டா நாம பார்த்துட்டு நிம்மதியா இருக்க முடியுமா சொல்லுங்க " இது ராஜி
" நீ சொல்லுறது சரி தான் ம்மா ஆனா உன் பையன் மனசுல என்ன இருக்குனு நம்மக்கு தெரியனும்ல ஒரு வேலை அவனுக்கு நந்தினியே பிடிச்சு இருந்தா நாம என்ன பண்ண முடியும் சொல்லு" ரகு சொன்னார்
" நாம எடுத்து சொன்ன புரிஞ்சுப்பாங்க ,நீங்க பேசுங்களேன் அவன்கிட்ட "
" சரி பொறு நான் அப்பா கிட்ட இதபத்தி பேசுறேன் சரியா இப்போ நீ நிம்மதியா தூங்கு "
" சரிங்க என அவர் அமைதியா இப்போது படுத்து விட்டார்"
ரகுராம் தான் இதை பற்றி தந்தை இடம் எப்பிடி பேசுவது என்று யோசித்தார் "
இவ்வளோ மேட்டார் ஓடுது இந்த கார்த்திக் எங்கே போனான் , எப்பா கார்த்திக்கு எங்கே ப்பா இருக்க சீக்கிரம் இங்கே வா உன் பஞ்சயாத் தான் ஓடுது
நள்ளிரவு நேரம் ,மதுரை ஏர்போர்ட்டில் வந்து இறங்கியே உடன் கார்த்திக் நந்தினியே தான் , "ஹே நந்து நான் ஊர்க்கு வந்துட்டேன் என சொல்ல
நந்தினி சந்தோஷத்தில் , ஹே கார்த்தி நாளைக்கு காலையில் தான் வருவேன்னு சொன்னே இப்பிடி திடிருன்னு வந்து நிக்கிற சரி பரவாயில்லை அங்கயே இரு நான் இதோ வந்துட்டேன் என்று அவள் சொல்ல
அதை கேட்டு கார்த்திக் , வேண்டாம் நந்து நீ ஏன் சிரமம் படுற அதுவும் இந்த நேரத்துல என அக்கறையாய் சொல்ல
ஐயோ கார்த்தி ,உன் கூட டைம் ஸ்பென்ட் பண்ணி எவ்வளோ நாள் ஆச்சு நீ அங்கயே இரு நான் வந்துட்டேன் சரியா என சொல்லிவிட்டு போனை வைத்தாள்
கார்த்திக் நந்தினிடம் பேசிவிட்டு ஏர்போர்ட்டைவிட்டு வெளியே வந்தவன் அந்த இரவு நேர குளிரை அனுபவித்தபடி காத்து கொண்டு இருந்தான்.
நந்தியின் சொல்லியது போல் சீக்கிரமாகவே வந்து இறங்கினாள் தனது ச்கொடாவில் இருந்து, கார்த்தி என ஓடி சென்று அவனை அணைக்க போக
கார்த்திக் ஒருநிமிடம் அதிர்ந்து சுற்றிலும் பார்த்து, நந்தினி அங்கயே நில்லு என்ன பண்ணுற நீ ஓர் அடி பின்னால் நகர்ந்து போனான்
அவனது பேச்சில் முகம் சுளித்த நந்தினி , அப்பிடியே நின்று கார்த்தி , நான் உன் அத்தை பொண்ணு அதுவும் இல்லாம கல்யாணம் வேற பண்ணிக்க போறோம் ஜஸ்ட் ஒரு ஹக் அதுக்கு ஏன் இப்பிடி ரியாக்ட் பண்ணுற நீ சொல்ல
நீ சொல்லுறது எல்லாம் சரி தான் நந்து பட் இது ஒன்னு வெளிநாடு கிடையாது அதுவும் மணி என்ன ஆச்சுனு பாரு உன்னோட இந்த நேரத்துல ஜஸ்ட் ஒரு ஹக் பார்க்கிறவங்களுக்கு நம்மள காட்சி பொருளா மாத்திடும் சோ கிளம்பலாமா என நீண்ட விளக்கம் குடுத்துவிட்டு கார்த்திக் தனது லக்கேஜ் எல்லாம் காரில் அடிக்கி விட்டு முன் சீட்டில் ஏறி அமர்ந்தான்
அவனது பேச்சில் நந்தினி தான் எரிச்சலில் மனதுக்குள் இவனை திட்டியே படி டிரைவிங் சீட்டில் அமர்ந்து காரை கிளப்பினாள் ,
நேரா வீட்டுக்கு தானே போறோம் என கார்த்திக் கேட்க
இல்லை கார்த்தி நாம இப்போ ஒரு பார்ட்டிக்கு போறோம் என நந்தினி பேசியது போதும் என டிரைவிங்கில் கவனம் செலுத்தினாள்.
hai friends itho second epi potuten padichutu unga comments sollunga makkale
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro