!!9!!
சகோதரிகளின் பேச்சை கேட்டு மையாவுக்கு மனது பாரமாய் ஆகிவிட்டது இரண்டு பெரும் சிறுவயது முதல் ஒட்டாமல் போனது ஏனென்று புரியாமலே போய்விட்டது ,கவலை படாதீங்க அக்கா , சீக்கிரம் உங்கள் எல்லாரையும் விட்டு நான் ரொம்ப தூரம் போயிடுவேன் என மனதுக்குள் விஸ்மையா சொல்லிக்கொண்டாள் .
மாலை நேரம் ஆகிவிட கார்த்திக் குடும்பத்தினர் வரப்போவதால் மையா ருக்மணி சொன்னது போல் கிளம்பிக்கொண்டு இருந்தாள்
ஏதோ யோசனையுடன் அவள் ஒரு வித படபடப்பு பயம் என இனம் புரியாத நிலையில் கார்த்திக் மற்றும் அவனது குடும்பத்துக்கு காக காத்து கொண்டு இருக்க
அவளை மேலும் தவிக்க விடாமல் சொன்னது போல் பெரியவர் கார்த்திக் ரகு ராஜி..நந்தினி குடும்பத்துடன் வந்து சேர்ந்தார்,
தாமோதரன் வேகமாக உள்ளே வந்து தன் மனைவி இடம் அவங்க எல்லாம் வந்துட்டாங்க போல ருக்கு மாயா ரெடியான்னு போய் பாரு நான் வந்தவர்களை பார்க்குறேன். என அவர் வந்தவர்களை அமர செய்தார்
ருக்மணி , மகள் அறையில் சென்று அவள் என்ன செய்கிறாள் பார்க்க அங்கே அவள் தனக்கு தெரிந்த அளவிற்க்கு கிளம்பி இருந்தாள் அவளிடம் அவங்க எல்லாரும் வந்துட்டாங்க மாயா என்று சொல்லிவிட்டு கிட்சென் சென்று விட்டார் .
அதைக்கேட்டு, மையா இன்னும் பதட்டம் ஆனாள் , கடவுள் இடம் பெருமாளே எல்லாம் நல்லா படியா முடியனும் அப்பாவுக்கு எந்த சங்கேதம் வந்துட கூடாது என .வேண்டினாள் .
இங்கே ராகினி மற்றும் ரேஷ்மா மறந்தும் கூட தங்களது அறையே விட்டு வெளியே வர வில்லை ஆனால் உள்ளே இருந்த படியே என்ன பேசுகிறார்கள் என கேட்டுக்கொண்டு இருந்தார்கள் ,
ருக்மணி எல்லோருக்கும் பலகாரம் கொடுக்க .
கௌசலயா தான் முதலில் பேச ஆரம்பித்தாள் , பொண்ண வர சொல்லுங்க என்று அடுத்து ஏதோ பேச போக
வேதாசலம் இவள் காரியத்தை கெடுத்துவிட கூடாது என்று கௌசி என அதட்ட
நந்தினி தாய் இடம் அம்மா நீ கொஞ்சம் சும்மா இரு அவளும் தன் பங்கிற்கு கௌசல்யாவை அதட்டினாள்
கௌசியோ மகளை மனதுக்குள் திட்டியே படி .நிமிர மாயா அங்கே .அழைத்து வரபட்டால். அதை பார்த்து கௌசல்யா அடி ஆத்தி இவ என்ன இம்புட்டு அழகா இருந்து தொலைக்கிரா .. என மகளை கவலை உடன் திரும்பி பார்க்க அதை ஏதும் உணராத .நிலையில் நந்தினி அங்கே நடக்கும் அனைத்தையும் வேடிக்கை பார்த்துகொண்டு இருந்தாள் .
விஸ்மையாவை பார்த்தவுடன் ராஜீக்கு பிடித்துவிட ரகுவும் சந்தோசத்துடன் சம்மதம் சொன்னார் எல்லார் பார்வையும் இப்போது கார்த்திக் இடம் செல்ல
அவன் நிமிர்ந்து அங்கே நின்று கொண்டு இருந்த விஸ்மையாவை பார்த்தான்
அவளும் கலக்கத்துடன் அவனை பார்க்க, அந்த பார்வை அவனுள் ஏதோ செய்ய அது என்னவென்று யோசித்த பட எனக்கும் சம்மதம் அம்மா என சொன்னான்
இத கேட்ட தாமோதரனுக்கோ இரட்டிப்பு சந்தோசம் தன் மகள் நல்ல பெரியே இடத்தில வாழ போகிறாள் என்று
பிறகு வேதாச்சலம் , தன்னோடு அழைத்து வந்த ஜோசியர் இடம் நல்ல நாள் திருமணதிற்கு பார்க்க சொல்ல
அவர்.. இந்த மாச கடைசில நாள் ரொம்ப நல்ல இருக்கு ஐயா
தாமோதரன் மற்றும் ருக்குமணி. என்னது இந்த மாசத்துக்குள்ளையா என்று திகைத்துவிட்டார்கள்
பெரியவர் .. ஒன்னும் பிரச்சனையை இல்லையே தாமோதரன் கேட்க
இல்லை.. ஐயா அது நாள் ரொம்ப கம்மியா இருக்கே அதுக்குள்ள எப்பிடி எல்லா வேலையும் முடிக்க என அவர் தயங்க ...
இது தான் விசையமா நான் அதுக்கு எல்லாம் ஏற்பாடு பண்ணிடுறேன்.. நீங்க நல்ல படியா எங்க வீட்டு மகாலக்ஷ்மியே பத்திரமா பார்த்துகிட்டு எங்க கிட்ட சேர்த்தாலே போதும் என அவர் சொல்ல
அதுக்கு அப்புறம் தான் எந்த ஒரு தயக்கம் இல்லாமல் தாமோதரன் சரி என்று சொன்னார்
இதை கேட்ட ருக்மணி. மனதில் தோன்றியே கடவுளுக்கு எல்லாம் மகளுக்கு நல்ல இடத்தில வரன் வந்து இருப்பதாய் எண்ணி நன்றி தெரிவித்தார்.
இதை எல்லாம் கேட்டபடி ஒரு ஓரத்தில் மையா தலை குனிந்த படி அமர்ந்து தன் பிரச்சனைக்கு தீர்வு சொல்லியே தோழிக்கும் , கார்த்திக்கும் நன்றி சொல்லியே அமர்ந்து இருந்தாள் மனதுக்குள்..
அறையில் இருந்து இவை எல்லாம் கேட்டு கொண்டு இருந்த இரு பெண்களுக்கும்.. ஈயத்தை காய்ச்சி காதில் உற்றியது போல் இருந்தது.. .
வேதாசலம் அடுத்தடுத்து என்ன செய்ய வேண்டும் என்ன மகனுக்கு மற்றும் தமொதரனுக்கும் என்ன செய்யே வேண்டும் என்ன சொல்ல ஆரம்பிக்க கார்த்திக் மெல்ல ராஜி பக்கம் திரும்பி.. அவர் காதில் ஏதோ சொன்னான்...
அதை கவனித்த வேதாசலம் அவனிடம் நேராகவே என்ன கார்த்திக் .. என்று கேட்க
ராஜி அவசரமாய்.. அது ஒன்னும் இல்லை மாமா .
நீ சும்மா இரும்மா அவன் பேசட்டும்.. சொல்லு கார்த்திக்
தாத்தா அது வந்து வந்து.. நான் மையா கிட்ட ஒரு நிமிஷம் பேசணும்.. என அவன் சொல்ல
வேதாசலம், தாமோதரனை பார்க்க..
அவரோ ருக்மணியே பார்த்தார்.. அவர் பதில் சொல்லும் முன்பே நந்தினி முந்தி கொண்டு என்ன கார்த்திக்.. நம்ம வழக்க படி இப்பிடி எல்லாம் கல்யாணத்துக்கு முன்னாடி பொண்ண பார்க்க கூடாது உனக்கு தெரியாதா என்ன.. ( அவளுக்கோ அவன் மாயாவிடம் பேச வேண்டும் சொன்னதை கேட்டு அதிர்ச்சி இது என்ன இப்பிடி கேட்குறான் அப்பிடி என்ன அவள் கிட்ட பேசணும் அவன் என்கிற நினைப்பில் முந்தி கொள்ள. )
இப்போது கார்த்திக். மாமா தப்பா எடுத்துகாதிங்க.. ஒரு அஞ்சு நிமிஷம் தான் பேச பேசணும் என்ன நீங்க நம்பலாம்...
அதற்குல் ருக்மணி.. ஐயோ என்ன தம்பி நீங்க.. தரலாமா போய் பேசிட்டு வாங்க... மையா அழைச்சுட்டு போம்மா..
என்னது பேசணுமா.. அதான் எல்லாம் அன்னைக்கே ரேச்டரன்ட்லையே பெசிடோமே இனி என்ன .. என என்கிற எண்ணத்துடன்.. வா.. வாங்க .. என்று கார்த்திக்கை அழைத்து அவள் நகர போக
நந்தினி,அவசரமாக நான் வேணும்னா கூட வரவா கார்த்திக் ( அந்த இடத்துக்கே சம்பதம் இல்லாத கேள்வியே அவள் கேட்டு வைத்தாள் )
அதைக்கேட்டு கார்த்திக்... " ஹாஹா ... ஒன்னும் பயம் வேண்டாம்
நந்தினி.. உன் பிரெண்ட நான் கடிச்சு ஒண்ணுமே சாப்பிட்ற மாட்டேன்.. நீங்க வாங்க மையா என அவளோடு.. அவளது அறைக்கு சென்றான், அங்கே அவளது அறை அவனது அறையில் ஆனால் அங்கே தேவையான அனைத்தும் இருந்தது அதை பார்த்தவன் அவளிடம்
"ஹ்ம்ம் ரூம் நீட்டா இருக்கு "
" தேங்க்ஸ் , உட்காருங்க சார்.. "
" கார்த்திக்கோ அவள் சார் சொன்ன உடனே அமர போவதை விட்டுட்டு அவசரமாய் சென்று தங்களை யாரும் கவனிக்கிறார்களா என்று பார்த்துவிட்டு கதவை சாத்தி தாள் போட்டுவிட்டு வந்தான் "
" அதை பார்த்த மையாவோ கடவுளே என்ன பண்ணுறாரு இந்த மனுஷன்.. என நினைத்ததை கேட்டும் விட.."
" பின்ன.. நீ பாட்டுக்கு.. இண்டர்வியுவுக்கு வந்த பொண்ணு மாதிரியும் நான் என்னமோ உனக்கு பாஸ் மாதிரியும்.. வார்த்தைக்கு வார்த்தை சார் போட்டா, என்ன ஆகுறது.."
" அப்புறம் உங்கள எப்பிடி நான் ...என அவளுக்கு அதுக்கு மேல் பேச்சு வர மறுக்க.."
"பெயர் சொல்லி தான் இல்லைனா.. உங்க வீட்டுல எப்பிடி ஹஸ்பண்ட கூப்பிடுவிங்களோ அப்பிடி கூப்பிடாலும் எனக்கு ஓகே தான்.
ஹான் .அது.. என அவள் திருதிருவென முழிக்க..
சரி விடு.. நான் பேச வந்ததை பேசிடுறேன்.. அப்புறம் எப்பிடி கூப்பிடனும் பிரச்சனைக்கு வரலாம்.. என மேலும் சத்தம் வெளியே கேட்டுவிடாதபடி தன் குரலை தாழ்த்தி , ம் மாயா.. அடுத்த செக் அப் எப்போ உனக்கு.. டாக்டர் என்ன சொல்லுறாங்க.. உன் ஹெல்த் ஸ்டேடஸ் என்ன இது எல்லாம் எனக்கு தெரியனும்.."
அது , இப்போ மெடிசின் கொடுத்து இருக்காங்க.. என்னோட மெடிக்கல் ரிப்போர்ட் ப்ரெண்ட் கிட்ட கொடுத்து வச்சு இருக்கேன்.. இங்க வீட்டுல என் நால வைக்க முடியதுனால.
" ஒ , அப்போ அடுத்த செக் அப். "
" அது அடுத்த மாசம் தான்.. "
" அப்போ சரி . அதுக்குள்ள நீ நம்ம வீட்டுக்கு வந்துர்வ.. நான் கேன்சர் ஸ்பெசலிஸ்ட் கிட்ட பேசிடுறேன்.. அங்க வந்த உடனே ட்ரீட்மென்ட் ஆரம்பிச்சுடலாம்.. "
" என்னது நீங்க.. எனக்கு ..எதுக்கு "அவள் தயங்கிய படி கேட்க
" அதுல ஒன்னும் தப்பு இல்லை மையா ஒரு பிரெண்டா கூட இத பண்ண கூடாதா, உனக்காக "அவன் வருத்தமாக சொல்ல
" இல்ல.. அதுக்கு சொல்லல நான்.. எனக்கு யாரோட ஹெல்ப் தேவை இல்லையே."
" அப்போ உன் ஹெல்ப் மட்டும் நாங்க எந்த ஒரு.. தயக்கம் இல்லாம வாங்கிக்கணுமா.. "
" ஆனா நந்தினி.. அப்பிடி என் கிட்ட சொல்லலையே.."
" அதை கேட்ட அவனோ.. அவளுக்கு அவ கவலை.. என்று நினைத்து விட்டு.. ம் சொல்லல தான் .. ஆனா. அதுக்காக என் நால சுயநலமா யோசிக்க முடியல.. நீ எனக்கு செய்யுற உதவிக்கு தான் உனக்கு நான் உதவ போறேன்.. சரின்னு சொன்னா நான் ரொம்ப சந்தோஷ படுவேன். இல்லேன்னா இப்போவே வெளியே போய் உங்க அப்பாகிட்ட சாரி சார் இந்த கல்யாணம் நடக்குது சொல்லிடுவேன்..என்ன கிட்டதட்ட அவன் மிரட்ட..[நந்தினி எப்பிடி இவளை மடக்கினாளோ அதே தான் கார்த்திக்கும் கடைப்பிடித்தான் ]
அதைக்கேட்டு மையா " ஐயோ ப்ளீஸ் அப்பிடி ஏதும் பண்ணிடாதிங்க.. இப்போ என்ன எனக்கு ட்ரீட்மென்ட் க்கு ஹெல்ப் பண்ணணு தரலாமா பண்ணுங்க, அப்பா கிட்ட மட்டும் ஏதும் சொல்லிடாதிங்க.. அப்புறம் அவ்வளோ தான்.."என அழுதுவிடுபவள் போல் சொல்ல
அவளது நிலைமை பார்த்து இருந்தாலும் மனதுக்குள் சிரித்த படி கார்த்திக் அப்பிடி வா வழிக்கு குட் இந்த விஷயம் நமக்குள்ளயே இருக்கட்டும் தாத்தா . அப்புறம் நந்தினி யாருக்கும் தெரியே வேண்டாம் சரியா.. . "
" ஹ்ம்ம் ஆனா ஏன் நந்தினிக்கு தெரியே கூடாது.."அவள் புரியாமல் கேட்க
" அது நீ போக போக தெரிஞ்சுப்ப..இப்போவெளியே போலாமா வந்து ரொம்ப நேரம்ஆச்சுன்னு நினைக்கிறேன் என பேசியது போதும் என.. அவன் எழுந்துவிட."
" மையாவும் ஏதும் சொல்லாமல்.. அவன் பின்னே சென்றாள் "
" பேசியாச்சு தாத்தா என கார்த்திக்.. பெரியவர் அருகில் சென்று அமர்ந்து விட்டான் "
" நந்தினி.. மாயாவிடம்.. என்ன சொன்னான் என்று பார்வையாலையே கேட்டால்
மாயா ஒன்னும் இல்லை என தலை மட்டும் அசைக்க அதை பார்த்த கார்த்திக்.. மனதுகுல் சிரித்து கொண்டான்...
நிட்சையே தாம்பூலம் மாற்றியாச்சு.. இனி கல்யாண வேலை எல்லாம் வேகமாய் நடக்கும் தாமோதரன்.. அப்போ நாங்க கிளம்புறோம்.. என வேதாசலம்.. தாமோதரனிடம் விட பெற..
தாமோதரன் , " ரொம்ப சந்தோசம் ஐயா போயிட்டு வாங்க என தனது இரு கரம் குவித்து வழி அனுப்பி வைத்தார்
மாயாவிடமும் எல்லாரும் சொல்லி கொண்டு கிளம்பி சென்றார்கள்.
மாயாவின் பெற்றோருக்கு அளவில்லா சந்தோஷம்
ருக்குமணி , தான் தான் பேச ஆரம்பித்தார் ரொம்ப நல்ல மனுஷங்களா இருக்காங்களங்க . இவ்வளோ நாள் இவளுக்கு வரன் எல்லாம் தட்டி போறது நினைச்சு கவலையா இருந்தது ஆனா இப்போ எல்லாத்துக்கும் சேர்த்து அந்த ஆண்டவன் நம்ம சந்தோஷம் இரண்டு மடங்க குடுத்துட்டாருங்க
மனைவி சொன்னதை கேட்டு தாமோதரனுக்கும் அவர் சொல்லுவது சரி தான் தோன்றியது , அம்மா ருக்மணி நீ சொல்லுறது சரிதான் , நம்ம கிட்ட நாள் ரொம்ப கம்மியா இருக்கு எல்லா வேலையும் நாளைல இருந்து ஆரம்பிக்கணும் என சொன்னார்
அறையில் இருந்த இரு பெண்களுக்கும் எரிச்சலாக வந்தது
வேதாச்சலம் உத்தரவு படி திருமண வேலைகள் வேகமாக நடந்து கொண்டு இருந்தது
இதோ இன்றைக்கு இரு வீட்டாரும் திருமணத்திற்கும் துணிமணிகள் எடுக்க ஒன்று கூடி விட்டார்கள்
தாலி... சேலை... நகை , ருக்குமணி ராஜி.. கடையே விலை பேசி கொண்டு இருந்தார்
மாயா தான் எதுலையும் ஒட்ட முடியலாமல் தவித்து போய் விட்டாள் இன்னும் அவள் மனதில் தனக்கு இந்த திருமணம் தேவையா என்று என்கிற எண்ணம் தான் இன்னும் ஓடிகொண்டே இருந்தது..
இதை கவனித்த கார்த்திக்கோ மனதில் அவள் மேல் பரிதாபம் தான் எழுந்தது.. நமக்கு இருக்கிற மாதிரி தானே அவளுக்கும் இருக்கும்...
ஹாய் பிரெண்ட்ஸ் எக்ஸாம் நால எபிசொட் டிலே ஆகி சாரி மக்களே
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro