!!8!!
இது சரியா வருமோ என்கிற பயத்தில் மாயா கார்த்திக்கை நிமிர்ந்து பார்த்தாள்..
அவளின் எண்ணம் புரிந்தவனாய் பயம் வேண்டாம் மாயா நீங்க சொன்ன மாதிரி தான் எல்லாம் நடக்கும் அதுக்கு நான் பொறுப்பு இப்போ நீங்க உங்க முடிவ தான் சொல்லணும் என அவன் அவள் முடிவை எதிர்பார்க்க
மாயா அவன் சொன்னதை கேட்டு.. அரை மனதாய் " இப்போவும் இது சரியா வருமான்னு எனக்கு தோணல சார் ஆனா நந்தினி ,நீங்க எல்லாரும் சொல்லறதை வச்சு எனக்கு சம்மதம் என்று அவள் சம்மதம் சொல்ல..
நந்தினி சந்தோஷத்தில் அவளை கட்டி அனைத்து போதும் விஷ்மையா இது போதும் உன் உதவியே நான் என் காலம் வரை மறக்க மாட்டேன்.."சொன்னாள் "
வீட்டுல நாம அவ்வளோ பேசி சம்மதம் சொல்லாதவன் இப்போ சரின்னு சொல்லி இருக்கானா ஏதோ விஷயம் இருக்கு என பெரியவர் யோசனையுடன் கார்த்திக்கை பார்த்து கொண்டு இருந்தார்.பிறகு எப்பிடி விஸ்மையாவின் அப்பாவிடம் எப்பிடி திருமணம் பேச்சை எடுத்து செல்வது அவளது வீட்டில் யார்-யார்-இருக்கிறார்கள் ,எப்பிடி என நால்வரும் கலந்து பேசி ஒரு முடிவுக்கு வந்தார்கள் ,விஸ்மையா தனது கைக்கடிகாரத்தில் நேரத்தை பார்த்து , அவர்களிடம் ,அப்போ நான் கிளம்புறேன் நான் வந்து ரொம்ப நேரம் ஆச்சு தேடுவாங்க என கிளம்ப
அவளை பார்த்து கார்த்திக் அவளுடன் எழுந்து " நான் வேணும்ன்னா ட்ரோப் பண்ணவா "அக்கறையாய் கேட்க "
ஐயோ அது எல்லாம் வேண்டாம் சார் நானே போயிடுவேன்.. "" இல்லை உன் ஹெல்த் "அவன் ஒருமையில் பேச்சை ஆரம்பித்துவிட்டான் என்பதை இருவரும் உணரவில்லை
ஆனால் வேதாச்சலம் கவனித்துவிட்டார் " அது எல்லாம் ஒரு பிரச்சனையை இல்லை சார் நான் பார்த்துகிறேன்.. என அவள் சொல்ல "
"அப்போ வீட்டுக்கு போயிட்டு நந்தினிக்கு மெஸ்சேஜ் போட்டுரு என கார்த்திக் சொல்ல அவளும் சமத்து பிள்ளைபோல் சரி என்று தலைஅசைத்துவிட்டு சென்று விட்டாள்
மாயாவை வழி அனுப்பி வைத்து விட்டு.. நந்தினி பெரியவர் பக்கம் திரும்பி.. " நான் தான் அப்போவே சொன்னேன்ல தாத்தா
அவ்வளோ நேரம் அவள் போவதை கொஞ்சம் பதட்டமாக பார்த்துக்கொண்டு அமர்ந்து இருந்தவனின் அருகில் சென்ற நந்தினி அவ போயிடுவா கார்த்திக் நீ பெயருக்கு தான் ஹஸ்பண்டா நடிக்க போற அதுக்குன்னு இப்போவே நீ நடிப்ப ஆரம்பிக்கவேண்டாம் வந்து உட்காரு இந்த நால கொண்டாட வேண்டாமா நம்ம வேலை எவ்வளோ ஈசியா முடிஞ்சு இருக்கு பாருங்க.. அணைத்து பற்கள் தெரிவது போல் ஒரு சிரிப்பை..சிந்தியே படி சொல்ல இதை கேட்ட
கார்த்திக் அவளை ஒரு வித அருவெறுப்புடன் பாத்தான் பிறகு.. பெரியவர் இடம் தாத்தா நான் கிளம்புறேன் எனக்கு ஆபீஸ்ல ஒரு முக்கியமா மீட்டிங் இருக்கு. என சொல்லிவிட்டு நகர போக.."
அவனை தடுத்து என்ன கார்த்திக் கிளம்பியே ஆகணுமா அப்போ சரி நானும் உன் கூடவே வரேன் என்னையும் அப்பிடியே பார்லர்ல விட்டுட்டு என நந்தினி சொல்ல
அதை கேட்ட கார்த்திக் தனது கைக்கடிகாரத்தில் நேரத்தை பார்த்த படி " ஹ்ம்ம் எனக்கு நேரம் இல்லை நந்தினி, நீ கால் டாக்ஸி பிடிச்சு போ. "சொல்லிவிட்டான்
"ஏன் இப்போ தான் விஸ்மையவை வீட்டுல விட்டுடவா கேட்ட அப்போ மட்டும் உனக்கு நேரம் இருந்ததா ."
"முடியாதே பொன்னே யாரு தயவு வேண்டாம்னு சொல்லிடு போறா உனக்கு என்ன வந்தது நல்லாதானே இருக்கே நீயே போ எனக்கு நேரம் ஆச்சு என்று அவன் வெடுக்கு என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டான்
இந்த கார்த்திக் புதியவன் நந்தினிக்கு அவளது முகமோ அவனது பேச்சை கேட்டு.. அவமானத்தில் கருத்து போய்விட்டது அவள் அவனை உன்னை என் வழிக்கு கொண்டு வர எனக்கு தெரியும் கார்த்திக் இப்போத்தானே ஆரம்பிச்சுருக்கேன் இனிமேல் தானே இருக்குஅவளது முக மாற்றத்தை கவனித்தும் கவனிக்காதது போல் பெரியவர்.. வீட்டுக்கு கிளம்ப சொல்ல நந்தினி வேற வழி இல்லாமல். அவருடன் கிளம்பி வீட்டுக்கு திரும்பும் வழியில். இறங்கி கொண்டாள்வேதாசலம் தன் மகன் இடம் இந்த விஷயத்தை எப்பிடி சொல்லுவது என்று... யோசித்த படி.. வீட்டுக்கு திரும்பினார்..அங்கே அவர் வருகைகாக ரகு மற்றும். ராஜி காத்து கொண்டு இருந்தார்கள் இன்றைக்கு இருவருக்கும் ஒரு முடிவு தெரிய வேண்டியே இருந்தது அதை பார்த்த அவர்.. " என்னப்பா ரகு.. ஆபீஸ் போகல இன்னும் " இப்போ அது ஒன்னு தான் அப்பா இங்கே குறைச்சல் எரிந்து விழுந்தார் ." வேற எதுக்கு இங்க இப்போ குறை வந்துருச்சு உனக்கு இவ்வளோ கோபம் ரகு.." வேதாச்சலம் பொறுமையாக கேட்க பெரியவரின் நிதானம் ரகுவின் கோபத்தை கொஞ்சம் குறைத்து இருந்தும் பேசவேண்டி இருந்ததால் கேள்விகள் கேட்க ஆரம்பித்தார் " பின்ன என்ன அப்பா இங்க என் புள்ள முகத்துல சிரிப்பையே காணோம் எதையோ பரி கொடுத்தது போல் இருக்கான் அவன் முகத்த பார்க்க சகிக்கல எங்களுக்கு என்ன தான் நடுக்குது இங்கே,அந்த பொண்ணு என்னனா அவ பாட்டுக்கு இவன கல்யாணம் பண்ணிக்கிறேன் சொன்னா , சரி ரெண்டு பேருக்கும் பிடிச்சு இருக்கு சரி சொன்னோம் ஆனா இப்போ அவளே இவனுக்கு வேற பொண்ண பார்க்குறேன் கல்யாணம் பண்ணிக்கோ படுத்தி எடுக்குறா நீங்களும் அதுக்கு ஏதும் சொல்லாமல் அமைதியா வேடிக்கை பார்த்தா என்ன அர்த்தம் அப்பா .யாரும் இல்லதா அனாதையா அவன் . ." என கோபத்தில் ரகு பேச..
ரகுவின் பேச்சை அமைதியாக கேட்ட அவர்.. " பேசியாச்சா ரகு பிறகு தன மருமகள் இடம் நீ ஏன்மா அமைதியாக இருக்க நீயும் உன் பங்கிற்கு கேள்வி கேட்டுட்டு என அவர் சொல்லராஜி மௌனமாய் அழுத படி நின்று இருந்தார் அவரால் தந்தை போல் பார்த்துக்கொண்டு மாமனாரை எதிர்த்து பேச முடியவில்லை அதனால் அழுத்த படி நின்றிருந்தார் அதற்கும் ரகு.. கோபமாய் எதோ சொல்ல போவதற்குள்.. இவர்களின் பேச்சு சத்தம் கேட்டு அங்கே கௌசல்யா வந்து சேர்ந்தாள் . என்ன ஆச்சு , என்ன பேசுறீங்க என கேக்க மக்களது எண்ணத்தை புரிந்து கொண்ட பெரியவர் நீங்க ரெண்டு பெரும் என்னோட ரூம்க்கு வாங்க அங்கே பேசிக்கலாம் கையோடு முத்து என்று அங்கே வேலை பார்க்கும் ஆளை அழைத்து.. நான் சொல்லுற வரைக்கும் யாரு உள்ளே வர கூடாது அதை பார்த்துக்கிற தான் வேலை உனக்கு.. பார்த்துக் என்று சொல்லிவிட்டு.. ராஜி ரகுவை அழைத்து கொண்டு நகர அதை கேட்ட கௌசல்யா . அப்பா.. நான் உங்க பொண்ணு.. என பதிலுக்கு போர் கோடி தூக்கினார் அது நால தான் சொல்லுறேன் , நீங்க ரெண்டு பெரும் வாங்க என அவர் சென்று விட..கௌசல்யா அங்கயே அமர்ந்துவிட்டாள்உள்ளே வந்த வேதாசலம் எப்பிடி ஆரம்பிப்பது என்று யோசிக்க. அவரது அமைதி கண்டு ரகு மீண்டும் அப்பா பேசுங்க பேசணும் தானே வந்திங்க இப்போ அமைதியா இருந்தா என்ன அர்த்தம் மொதல கார்த்திக்க கல்யாணம் பண்ணிக்க கேட்ட சரி நம்ம பயலுக்கு பிடிச்சு இருக்கேன்னு சம்மதம் சொன்னோம் ஆனா இங்க இப்போ நடக்குறது என்ன அப்பா..சொல்லுங்க என்ன சொல்ல சொல்லுற ரகு இதெல்லாம் நீயே தானே இழுத்துக்கிட்டது தானே நான் அணைக்கே சொன்னேன் கௌசி என் பொண்ணு தான் அதுக்குன்னு எல்லாம் இருக்க வேண்டியே இடத்துல இருக்கணும் நீ கேட்கல அதோட விளைவு தான் இது.."தந்தையின் பேச்சை கேட்டு அதிர்ந்தவர் அப்பா , " தங்கை கஷ்டத்துல இருக்கிற அப்போ நம்ம கண்ணு பார்வையில வச்சு அவளுக்கு உதவனும் நினச்சது தப்பா . "ஆதங்கம் தாளாமல் கேட்க
" தப்பு கிடையாது ரகு ஆனா எல்லாத்துக்கும் ஒரு எல்லை இருக்குல.. சரி விடு பழச பேசி என்ன ஆகா போகுது இப்போ நந்தினி பார்த்து இருக்கிற பொண்ணு நம்ம கார்த்திக்கு சரியான பொண்ணு தான் என நந்தினியின் திட்டம் மாயாவுடன் நடந்த சந்திப்பு.. கார்த்திக்கின் முடிவு எல்லாம் அவர் சொல்லி முடிக்க.. "எல்லாம் கேட்ட ரகு எப்பிடி உணர்ந்தார் என்பதை வார்த்தையால் சொல்ல முடியாது என்று அவரது முகம் மாற்றமே சொல்லியது ராஜியின் நிலையோ இன்னும் மோசமாய் போய் விட்டது அவரால் பெரியவர் சொன்னதை சகிகித்து கொள்ள முடியவில்லை .பின் மாயா சொன்னது போல் ரகுவும் அப்பா இது சரியா வரும்னு எனக்கு தோனல வேற எதாவுது இதுக்கு வழி இருக்கணு பார்க்கலாம்
"வேற வழியே இல்லை ரகு நீ இதுக்கு மறுத்தால் நந்தினி வேற பெண் பார்ப்பா அது நம்ம கார்த்திக் வாழ்கையே பால் அடிச்சா என்னாலையும் உங்க நாளையும் தாங்கிக்க முடியாது என அவர் சொல்ல
" அப்பா " என அவர் அதிர்ந்து விட்டார் .
ஆமா ரகு இப்போ நான் சொல்ல போறத நீங்க ரெண்டு பெரும் கவனமாக கேட்டுக்கோங்க என்று அவர் திட்டம் அனைத்தும் அவர் சொல்லி முடிக்க
இப்போது ரகு மற்றும் ராஜி அவர் திட்டத்துக்கு முழு மனதுடன் சம்மதம் தெரிவித்தார்...
மாயா சொன்னது போல்.. அவள் வீட்டுக்கு எந்த வித சந்தேகம் வராத படி வேதாச்சலம் கல்யாணம் தரகர் இடம் பேசி ஜாதக பொருத்தத்தை பார்த்து பெண் பார்க்க வர போவதாக தாமோதரனுக்கு சொல்லி அனுப்பினார் .
தாமோதரனுக்கு.. சந்தோஷம் மற்றும் ஆச்சரியத்துக்கு அளவே இல்லாமல் போய்விட்டது.. இவ்வளோ பெரியே இடமா என்று அவர் இந்த விசையத்தை தன் மனைவி இடம் சொல்ல..அவருக்கும் சந்தோஷம் தோற்றி கொண்டது,இதை அனைத்தும் பக்கத்துக்கு அறையில் இருந்து கேட்டு கொண்டு இருந்த மையாவுக்கு அப்போது தான் நிம்மதியான மூச்சு விட முடிந்தது.. சொன்ன மாதிரியே செய்துடாங்களே என பெரியவர் மற்றும் கார்த்திக் மீதி மரியாதையை கூடியது..ஆனால் அவளது சகோதரிகள் இருவரும் தான் பொறாமையில் வெந்து பொருமி போய் இருந்தார்கள் ..
" என்ன டி ரேஷ்மி இது நாம ஒன்னு நினைக்க இங்கே வேற ஒன்னு நடக்குதே.. இவளுக்கு இப்பிடி ஒரு வாழ்வா "
ஆமா அக்கா நீ சொல்லுறதும் சரி தான் இப்போ என்ன பண்ணுறது... ." இரு டி நான் பேசுறேன் என்று தாமோதரன் இடம் சென்று " அப்பா எதுக்கும் நல்ல விசாரிங்க அப்பா. இவ்வளோ பெரியே இடம் வேற நிறையே எதிர்பார்பாங்களே.. என மேலும் ஏதோ சொல்ல போக..
தாமோதரனுக்கு கோபம் வந்து விட்டது போதும் ராகினி.. அது எல்லாம் விசாரிச்சாச்சு.. ஜாதகம் எல்லாம் பார்த்து தான் அவங்க எல்லாம் வராங்க உன் பேச்சை கேட்டு இவ்வளோ நாள் வந்த வரன் எல்லாம் தட்டி கழிச்சாச்சு.. இனியும் இந்த இடத்தை விட எனக்கு மனசு இல்லை.. அதுனால பேசாம இருகிறதா இருந்தா இருங்க இல்லை உங்க வீட்டுக்கு கிளம்பிற வழியே பாருங்க. என்று அவர் கண்டிப்புடன் சொல்ல
இரு பெண்களின் முகமும் அவாமனத்தில் விழுந்துவிட்டது இதற்க்கு மேல் பேச அவர்களுக்கு என்ன பைத்தியமா..பிறகு ருக்மணி இடம் சென்று.. பலகாரம் செய்யே என்ன தேவையோ ஒரு லிஸ்ட் போட்டு குடு கடைல இருந்து கொடுத்து அனுப்புறேன் அவங்க வரதுக்குள்ள எல்லாம் ரெடியா இருக்கணும் பாப்பாவ ரெடி ஆகா சொல்லிடு அப்பிடியே என்று சொல்லிவிட்டு அவர் கடைக்கு சென்று விட..
ராகினி – ரேஷ்ம. ருக்குமணி இடம் வந்து அம்மா நாங்க கிளம்புறோம் எங்க வீட்டுக்கு
அவர்களது பேச்சை கேட்டு.. ருக்மணி அதிர்ந்து என்னடி சொல்லுறிங்க மையூவ பொண்ணு பார்க்க வராங்க நீங்க இருந்து அவளுக்கு உதவி செய்விங்க பார்த்தா கிளம்புறேன் சொல்லுறிங்க
ஆமா இப்போ அவளுக்கு கல்யாணம் ஒன்னு தான் குறைச்சல் .. என ரேஷ்மா சொல்ல
போதும் டி என்ன பேச்சு நீ பேசுற அவ உங்க கூட பொறந்த தங்கை தானே அவளை பார்த்து இப்பிடி பேச உங்களுக்கு எப்பிடி டி மனசு வந்தது..
அம்மா சும்மா கத்தாதிங்க இப்போவே எங்கள கண்டா மதிக்கவே மாட்டா மாட்ட இதுல இவ்வளோ பெரியே இடம்ன்னா எங்க நிலைமை அரோகரா தான்- என இரு பெண்களும் பேசிக்கொண்டே போக
போதும் டி மா நீங்க ரெண்டு பெரும் அவங்க அவங்க புருஷன் வீட்டுக்கு கிளம்புங்க என் பொண்ணுக்கு எப்பிடி என்ன செய்றதுன்னு எனக்கு தெரியும் என ருக்மணியும் முகத்தில் அறைந்தது போல் சொல்லிவிட்டார்
அவர் அப்பிடி சொல்லவும் ராகினி. அம்மா நாங்களும் உன் பொண்ணு தான்..
" அதுக்கு நீங்க என்னவேணும்னாலும் பேசுவிங்க நான் கேட்டுகிட்டு சும்மா இருக்கனுமா... வேணாம் டி கிளம்புங்க.. "
அவர்கள் தந்தையும் தாயும் தங்கள் இடம் கெஞ்ச வேண்டும் என்கிற எண்ணத்தில் வார்த்தைகளை துடுக்கா விட அதுவே அவர்களுக்கு எதிராய் திரும்பிவிட்டது நினைத்து அமைதியாக தங்கள் அறைக்கு திரும்பி விட்டார்கள் ...... அப்பிடி யார் அவளை பெண் கேட்டு வந்து இருக்கிறார் என பார்பதற்கு நடந்தது எல்லாம்
விஸ்மையா
தன் அறையில் இருந்து கண்ணீருடன் கார்த்திக்கின் குடுப்பம் வரதுக்கு வேண்டி காத்து கொண்டு இருந்தாள் ஒரு வித இனம் புரியாத பயத்துடன்...இனி.....
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro