!!6!!
நந்தினி தன் உணர்வுகளை கட்டுபடுத்தி சோகமாய் இருப்பது போல் முகத்தை மாற்றி கொண்டு... "
இப்போ என்ன பண்ண போற மாயா. எப்பிடி இதை தடுத்து நிறுத்த போற.. "
" அது தெரியாம தான் உட்காந்து இருக்கேன்.. எனக்கு அப்பா அம்மாவும் தலை குனிய கூடாது அதை சமயம்.. இந்த கல்யாணம் நின்னு போகணும் ஆனா எப்பிடி தான் தெரியல "
நந்தின் சிறிது நேரம் யோசிப்பது போல் நடித்து விட்டு.. " நான் வேணும்ன்னா ஒரு யோசனை சொல்லவா மாயா.. "
மாயா அவசரமாய் ., சொல்லு டா நீ எப்போவும் தப்பா ஏதும் சொல்ல மாட்ட.. சொல்லு "
" நீ கல்யாணம் பண்ணிக்கோ டா.."
" நந்து விடியே விடியே ராமணயம் கேட்டுட்டு இப்போ சீதைக்கு ராமன் சித்தப்பான்னு சொல்லுற மாதிரி இருக்கு நீ பேசுறது.. நான் ஒரு கேன்செர் பேஷன்ட் எனக்கு எப்போ என்ன நடக்குமே தெரியாது. இந்த நிலைமைல நீயும் என்ன கல்யாணம் பண்ணிக்க சொன்னா என்ன அர்த்தம் "இயலாமையுடன் கேட்டாள் மாயா
அவளது பேச்சை கேட்ட நந்தினி , அவசரம் வேண்டாம் மாயா.. நான் சொல்ல வராத முதல பொறுமையா கேளு அப்புறம் உன் முடிவ சொல்லு.. இப்போ எனக்கு நேரம் ஆச்சு நாளைக்கு உனக்கு லீவ் தானே.. நாம காபி ஷொப்ல இத பற்றி பேசலாம் அப்போ நம்ம கூட இன்னும் ரெண்டு பேரு இருப்பாங்க அவங்க கிட்ட கலந்து யோசிச்சு ஒரு முடிவுக்கு வரலாம் என்ன சரியா.."
" மாயாவுக்கு இருந்த நெருக்கடியில் இருந்து எப்பிடியாவுது விடுதலை கிடைத்தால் போதும் என்று இருந்தது அதனால் அவளும் சரி என தலை அசைத்து வைத்தால்.."
" சரி வா சாமி கும்பிட்டு கிளம்பாலாம்.. மனசுல எதையும் போட்டு குழப்பிக்க வேண்டாம்.. எந்த பிரச்சனைக்கும் ஆரம்பம் இருந்தால் முடிவுன்னு ஒன்னு இருக்கும்.. [ சாத்தான் வேதம் ஓதுவது இங்கே தான் நடக்கும் .. ]
" ஹ்ம்ம்.. " என சொல்லிவிட்டு நந்தினி உடன் சேர்ந்து பெருமாளை வணங்கிவிட்டு அவள் வீட்டுக்கு திரும்பினாள்
வாசலில் மாயாவை எதிர்ப்பார்த்த படி நின்றிருந்த ருக்மணி , ஏண்டி போனா போன இடம் வந்தா வந்த இடமா. எவ்வளோ நேரம் டி.. கோவில் போய்.. "
" சாரி மா கூட்டம் அதிகம் அதுவும் இல்லாமல் நந்தினி வேற வந்து இருந்தா பேசிட்டு வர நேரம் ஆகிருச்சு.. "
சரி சரி உள்ளே வா. சாப்பாட்டு சுடு பண்ணி எடுத்துது வரேன்
" சரி மா.. என சாப்பிட அமர்ந்தால்.. "வேகமாய் சாப்பிட்டுவிட்டு.. . ப்ராஜெக்ட் வொர்க் இருக்கு மா நான் அப்புறம் வரேன் அம்மா என சொல்லிவிட்டு தனது அறை கதவை அடைத்துவிட்டு மறைத்து வாய்த்த மாத்திரைகளை எடுத்து போட்டு கொண்டு தன் வேலையே பார்க்க ஆரம்பித்தால், நந்தினி என்ன வழி சொல்ல போகிறாள் என்கிற யோசித்தாள்
இங்கே
கார்த்திக் வீட்டில் நாளுக்கு நாளாய் நிலைமையும் சரி நிம்மதியும் சரி.. குலைந்து போய் கொண்டு இருந்தது.. [ விதியும் நந்தினியும் கேட்பார் இன்றி தன் ஆட்டத்தை காண கட்சிதமாய் ஆடி கொண்டு இருந்தார்கள்.. ]
நந்தினி.. சந்தோசத்துடன் வீட்டுக்குள் வர.. எதிர அமர்ந்து இருந்த வேதாசலம் அவளின் புன்னகையே பார்த்து.. சொன்ன வேலையே முடிச்சுட்டா போலையே என நினைத்த படி அமர்ந்து இருந்தார்..
தாத்தா என்று சந்தோசமாய் கத்தி கொண்டே வர அவளது சத்தம் கேட்டு ராஜி மற்றும் கௌசல்யா கீழே இறங்கி வந்தார்
என்ன மா நந்தினி ரொம்ப சந்தோசமாய் இருக்கிற மாதிரி இருக்கு அந்த பொண்ண பார்த்தியா பேசிட்டியா என்ன .. ??
ஆமா தாத்தா பேசிட்டேன்..
" ஒ அப்போ நீ சொன்னதுக்கு அந்த பொண்ணு சம்மதம் சொல்லிடுச்சா" என்று யோசனை உடன் கேட்க.. "
" இல்லை தாத்தா.. சொல்லிடுவா நாளைக்கு நீங்க நானு கார்த்திக் போறோம் அவ கிட்ட பேசுறோம்.. அப்புறம் இப்போ அவளுக்கு இன்னும் நெருக்கடியான நேரம்.. அவ அப்பா அவளுக்கு மாப்பிள்ளை பார்த்து இருக்காராம். அவளுக்கு இருக்கிற நிலைமைல இத எப்பிடி தடுத்து நிறுத்துறது கேட்டா நான் தான் நாளைக்கு சொல்லுறேன் சொல்லிடு வந்தேன்.. எப்பிடி தாத்தா என் பிளான். "
" அவளது யோசனை கேட்டு.. ராஜி.. அதிரிந்து.. " அடிப்பாவி மகளே.. போயும் போயி உனக்கா அந்த புள்ள பிரெண்டா வரணும் என முகம் தெரியாத.. மாயாவுகாக ராஜியின் உள்ளம் பதறியது..
கௌசல்யா மகளை எண்ணி கர்வத்தில்.. . சூப்பர்.. நந்தும்மா எனக்கு தெரியும் நீ எது செய்தாலும் கரெக்டா செய்துடுவேன்னு.. என பாராட்டினார்..
இதை எல்லாம் வீட்டு வாசலில் நின்று கேட்டு கொண்டு இருந்த கார்த்திக் உள்ளுக்குள் மேலும் நூறு சில்லாக நொறுங்கி போய் கொண்டு இருந்தான்.. ச்சீ..... இவளையா நான் காதலிச்சேன்..
அவன் வந்து விட்டதை பார்த்த கௌசல்யா அவசரமாய்.. வாங்க.. மாப்பிள்ளை என சொல்ல..
நந்தினி சந்தோசமாய் திரும்பி அவன் இடம் சென்று ." ஹே காத்திக் வா வா உனக்கு தெரியுமா நம்ம ப்ரொப்லெம் சரியாக போகுது.. என தீபாவளி வாழ்த்து சொல்லவது போல் சொல்ல...
பெரியவர்கள் இருக்கிறார் என்பதால் தான் கார்த்திக்.. அவளை முறைத்து விட்டு தன் அறைக்கு சென்று விட்டான்.. அதுவும் வேதாச்சலத்தின் பார்வையாலையே தன்னை அடக்கியதால் மட்டுமே..
அவன் சென்றதை சிறிது நேரம் நின்று பார்த்துவிட்டு... ... மீண்டும் நந்தினி பெரியவர் இடம் திரும்பி.. அப்போ நாளைக்கு போறோம்ல.. தாத்தா..
" கண்டிப்பா நந்து ம்மா இப்போ நீ போய் சாப்டுட்டு ரெஸ்ட் எடு என்று சொல்லிவிட்டு அவளை அனுப்பி வைத்தார்.. "
இரவில் ராஜி தன் கணவன் . இடம்.. பொரிந்து தள்ளி விட்டார்... என்னங்க நடக்குது இங்க.. இல்லை என்ன நடக்குதுன்னு கேட்குறேன்.. என் புள்ள முகத்துல சிரிப்பே போச்சி.. அவ என்னனா அவ இஷ்டத்துக்கு என்னமோ பண்ணுறா சொல்லுறா
ரகுவும் அவரது கேள்வியில் தலையே பிடித்து கொண்டு அமர்ந்து விட்டார்... " அவருக்கும் பதில் தெரிந்தால்.. தானே.. சொல்லுவார்..எல்லாம் அவர் கை மீறி நடக்கும் பொது.. அவரும் தான் என்ன செய்வார்..
இப்போது மாயா மற்றும் கார்த்திக்கின் நிலை ஒன்றாங்க. இருந்தது.. .. அவன் காதலை எண்ணி கல்யாணம்.. வேண்டாம் நிற்க மாயாவோ...மரணத்தை எண்ணி கல்யாணம் வேண்டாம் என்று நின்றாள் இதில் யாரு வெல்வார்கள் நந்தினியா இல்லை விதியா.. காலம் தான் பதில் சொல்ல வேண்டும்...
ஹாய் பிரெண்ட்ஸ் எக்ஸாம்ஸ்ல கொஞ்சம் பிஸி அதான் குட்டி எபி
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro