!!4!!
"அங்கே, கார்த்திக் தன் தலையே பிடித்த படி அமர்ந்தது இருந்தான் மனதுக்குள் இப்பிடி ஒரு நிலை தனக்கு வரும் என்று அவன் நினைத்து கூட பார்க்கவில்லை தன்னுடையே காதல் இவ்வளோ சீக்கிரத்தில் முடிந்துவிடும் என்று அவனால் யோசிக்க கூட முடியவில்லை"
நந்தினி அவன் அருகில் வந்து அமர்ந்தவள் மெல்ல " கார்த்திக்........."என அழைத்தாள்
அவன் நிமிர்ந்து பார்க்காமல் " சொல்லு நந்தினி.. "என சொல்ல
" ஏன் இப்பிடி சொல்லிட்டு வந்துட, கார்த்திக் "நந்தினி கேட்க
" பின்ன என்ன நந்தினி உன்னை இழக்க என் நால முடியாது அதே மாதிரி உன் இடத்துல வேற யாரையும் வச்சும் பார்க்க முடியாது என்னால அது தான் உனக்கு கல்யாணம் முடிக்க சொன்னேன்.."என்று கார்த்திக் வேதனையுடன் அவளிடம் சொன்னான்.
அதை கேட்ட நந்தினி கோபத்தில் பேசுவது போல்" எனக்கு கல்யாணம் பண்ணி வச்சு நீ தியாகி பட்டம் வாங்க போறியா கார்த்திக்.. . என்னால மட்டும் உன்னை மறந்து வேற ஒருத்தர கல்யாணம் பண்ணிக்க முடியும்ன்னு நீ நினைக்கிறியா அது தான் இல்லை கார்த்திக் நான் ஒரு யோசனை சொல்லுறேன் அது சரியா வரும் நீ சரின்னு சொன்னா போதும் வீட்டுல நான் பேசிக்கிறேன் என்ன,
அவர்களது பிரச்சனைக்கு தீர்வு இருக்கு என்று தெரிந்ததும் கார்த்திக் சந்தோசமாய் நந்தியின் கையே படித்த படி" நிஜமாவா சொல்லுற, அப்பிடி என்ன யோசனை, சொல்லு டா எதுனாலும் நான் செய்யறேன்"
"தன்னுடையே திட்டத்தை நந்தினி சொல்ல ஆரம்பித்தாள்
[இன்று கோவிலில் விஸ்மையா விடம் என்ன சொன்னாலோ அதையே தான் இவன் இடம் சொல்லி முடித்தாள்"]
" கார்த்திக் அவள் சொல்லும் யோசனையே கேட்டு கோபத்தில்" போதும் நந்தினி நிறுத்து இதுக்கு மேல பேசினா நான் மனுசனா இருக்க மாட்டேன் போயிட்டு இங்க இருந்து என்ன கொஞ்சம் நேரம் தனியா இருக்க விடு போ என கத்த
"கார்த்திக்.." என நந்தினி மேலும் ஏதோ சொல்ல போக
" உன்னை போக சொன்னேன் நந்தினி " அவன் கோபத்தில் உறுமினான்
அவனை சிறிது நேரம் பார்த்துவிட்டு , மனதுக்குள் உன்னை இதுக்கு சம்மதிக்க வைப்பேன் கார்த்திக் சம்மதிக்க வைக்கலைனா நான் நந்தினி இல்லை என நினைத்துவிட்டு அந்த அறையே விட்டு வெளியே வந்தாள் "
அவள் சென்றுவிட்டாள் என உணர்ந்த கார்த்திக்." . ச்சே. என்ன எல்லாம் சொல்லிவிட்டாள் கல்யாணம்னா என்ன சும்மாவா, நந்தினி சொன்னதை நினைத்து அவனுக்குள் கசந்து போனது "
" வெளியே வந்த. நந்தினி.. சும்மா இருந்தா அது அவளுக்கு அழகு இல்லையே., தான் நினைத்த விஷயத்தை எல்லோர் முன்னாடி சொல்லிவிட்டால்
விஷயத்தை கேட்ட அனைவரும் ஒவ்வரு மனநிலைமையில் இருந்தார்கள்
" ராஜி தன் மகன் விஷயத்தில் யாரும் எதுலையும் தன்னை ஒரு வார்த்தை கேட்க வில்லை என்று வேதனையுடன் எல்லாவற்றையும் பார்த்துகொண்டு இருந்தார்."
இங்கே வேதாசலம் அவருக்கு தான் செய்த வேலை சரியாக அதோட விளைவை காட்டுது என்று தோன்றியது
தன் மகளை மற்றும் அவளது கணவர் மற்றும் அவள் பெற்ற மகளை பற்றியும் அவருக்கு நன்றாக தெரியும் என்பதால் இதில் எப்பிடியாவுது கார்த்திக்கை விடுவிக்க அவர் செய்த சின்ன சதி தான் இது, பேரனுக்கு ஏற்ற பெண்ணை தேடி கண்டுபிடித்து அவன் வாழ்வை காப்பாற்ற அவரின் சின்ன முயற்சி
நந்தினி இவ்வாறு தான் யோசிப்பாள் என்று அவருக்கு முன்பே கணித்துவிட்டார், அதனால் கார்த்திக் வந்த உடனே தைரியமாக தன் திட்டம் படி காயே நகத்தினார்.
இதோ இன்று அவர் நினைத்ததும் நடந்துவிட்டது..
நந்தினி, பணத்துக்காக கார்த்திக்கு இரண்டாம் தரமாக கூட வர சம்மதித்துவிட்டாள் ஆனால்
கௌசல்யா தான் நந்தினி இடம் ஏண்டி உனக்கு பைத்தியமா பிடிச்சு இருக்கு இப்பிடி பேசிட்டு வந்து இருக்க மாப்பிள்ளை கிட்ட.., என கோபத்தில் கத்தினாள் , தாய் அவளுக்கு பயம் எங்கே தன் பெண் ஏமாந்து போய்விடுவாளோ என்று
அம்மா நீ சும்மா இரு , நான் தெரிஞ்சு தான் சொல்லிட்டு வரேன் , எனக்கு கார்த்திக் கூட ரொம்ப வருஷம் வாழனும் அம்மா அதுக்கு தான் இந்த யோசனை சொன்னேன், இது நந்தினி
எல்லாம் கேட்டுக்கொண்டு இருந்த ராஜி ,ஏன்ம்மா நந்தினி.. என எதோ கேட்க போக..
அதற்குள் வேதாசலம் நடுவில் புகுந்து நீ இரும்மா ராஜி, நந்தினி.... இது தான் உன் முடிவா, நல்லா யோசிச்சிக்கோ அப்புறம் வருத்த படகூடாது ஆமா இதுக்கு கார்த்திக் சம்மதம் சொல்லிடானா.என கேட்க
" எப்பிடி தாத்தா அதுக்குள்ள சம்மதம் சொல்லுவாரு நாம தானே பேசி அவருக்கு புரிய வைக்கணும் என சாதாரணமாக சொன்னால் நந்தினி
" ஆமா ஆமா நாம தான் புரியே வைக்கணும்..என பெரியவரின் குரலில் இருந்த நக்கலை அவள் கவனிக்கவில்லை..."
தினமும் நந்தினி அவன் இடம் பேசியே அவன் மனதை கரைக்க.. முயன்றால் ஆனால் அவனோ அவள் இடம் இருந்து மெல்ல-மெல்ல விலக ஆரம்பித்தான், இப்பிடித்தான் இவர்களின் விவகாரம் கிணற்றில் போட்ட கல் போல் இருந்தது, இப்பிடி தான் அன்றைக்கும் கோவிலில் வைத்து பேசலாம் என்று அவள் கார்த்திக்குடன் போன பொது தான் விஷ்மையாவை பார்த்து விசயத்தை சொன்னாள் .
நாட்கள் வேகமாக நகர அன்று நந்தினிக்கு தன்னுடையே திட்டத்திற்கு துருப்பு சீட்டாய் விஷ்மையா சிக்க போவது தெரியாமல் அவள் வேலை விசையமாக வெளியே செல்கிறேன் என்று தாயிடம் சொல்லிவிட்டு தன்னுடையே மருத்துவ சம்பந்தமானா கோப்புகளை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டாள்.[ விதி தன்னுடையே ஆட்டத்தின் முதல் கட்டத்தை விஷ்மையாவிடம் இருந்தே சிறப்பாக ஆரம்பித்து வைத்தது ]
************
கார்த்திக் வந்த உடன் தந்தை உடன் சேர்ந்து அவரகளது கம்பனிக்கு செல்ல ஆரம்பித்து இருந்தான் ,ஆபீசில் எல்லா வேலையும் தன் தலைமையில் எடுத்து செய்ய ஆரம்பித்தான் , அவனுக்கு நந்தினியின் திருமண பேச்சில் இருந்து தப்பிக்க வேண்டும் அதற்காகவே நாள் முழுவதும் கம்பனியே கதி என்று கிடந்தான்.
இங்கே வீட்டில் நந்தினி கார்த்திக்கு காக தீவிரமாக அவள் எதிர்பார்ப்பின் படி பெண்ணை தேடி அலைந்தாள்.வேதாசலம் நந்தினியின் வேகத்தை பார்த்து அசந்து தான் போனார் என்று சொல்லவேண்டும்.
நந்தினி மீண்டும் ஒருமுறை கார்த்திக்கிடம் பேசி பார்க்க வேண்டும் என்று ஒவ்வரு நாளும் அவனுக்காக காத்திக்கிட்டு இருக்க அவனோ அவளிடம் சிக்காமல் கண்ணாமூச்சி ஆடிக்கொண்டு இருந்தான். இன்று எப்பிடியாவுது அவனிடம் பேசிவிட வேண்டும் அவனுக்காக ஹாலில் காத்து கிடந்தாள்.
கார்த்திக்கும் அவள் எதிர்பார்த்தது போல் வந்தான் அவளை அங்கே பார்த்து ஏதும் சொல்லாமல் அவளை கடந்து செல்ல முயன்ற போது
நந்தினி, அவனை வழி மறைத்து , கார்த்திக் ஏன் என்கூட பேசவே மாட்டேங்கிற , எல்லாம் பின்னால நாம சந்தோசமா இருக்க தானே பண்ணுறேன் நீயே என்னை புரிஞ்சக்களைன்னா வேற யாரு என்ன புரிஞ்சுப்பா சொல்லு கார்த்தி, என நந்தினி உருகி –உருகி பேச
கார்த்தி அவளது பேச்சுக்கு பதில் ஏதும் சொல்லாமல் முறைத்து மட்டும் பார்த்துவிட்டு நகர்ந்து விட்டான்
காலை
கார்த்திக் எந்த வேலை செய்யே தோன்றாமல் அப்பிடியே ஹாலில் எதோ யோசனையில் அமர்ந்து இருக்க
அப்போது தான்அங்கே வந்த வேதாசலம் தன் பேரனை அழைத்து " எப்பா கார்த்தி ஒரு சின்ன வேலை நம்ம சொந்தகாரவங்க தான் உனக்கு பெரியம்மா முறை வரும் உனக்கு அவங்கள ராகவேந்திரன் ஹோச்ட்பிடல சேர்த்து இருக்காங்களாம் நான் கொஞ்சம் வேற வேலையா வெளியே போறேன் பா நீ போயிட்டு அவங்கள பார்த்துவிட்டு மட்டும் வா ப்பா என சொல்ல..
" சரிங்க தாத்தா சொல்லிவிட்டு அவன் கிளம்பினான்
அவன் கூடவே நந்தினியும் நானும் வரேன் கார்த்திக் என்று கிளம்பிவிட்டாள், அவன் மறுத்தும்.. வேற வழி இன்றி அவளை அழைத்து சென்றான் தன்னோடு
ராகவேந்திரா ஹோச்பிடல், மதுரை மாநகரில் இருக்கும் பெரியே தனியார் மருத்துவமையில் இதுவும் ஒன்று , இங்கே தான் புற்றுநோய்க்கான பிறவியில் இந்த மாததிற்க்குகான பரிசோதனைக்கு விஸ்மையா வந்து இருந்தாள், அவளது பார்வை தன்னை யாரும் பின் தொடர்கிறார்கள இல்லை தெரிந்தவர் யாரும் வருகிறார்களா என பயத்துடன் அங்கும் இங்கும் பயத்தில் அலைபாய்ந்து கொண்டு இருந்தது , மனதுக்குள் சீக்கிரம் டாக்டர பார்த்துட்டு கிளம்பிடனும் கடவுளே என ஒரு வித அவஸ்தையுடன் அமர்ந்து இருந்தாள்
கார்த்திக் மற்றும் நந்தினி ஹோச்பிடளுக்கு வந்து தங்கள் உறவினரை
பார்த்துவிட்டு, வெளியே வரும்,போதும் தான் எதிர்பாராமல். விஸ்மயாவை நந்தினி அங்கே பார்த்துவிட்டாள், ஹே.. மாயா என்று அவளை கத்தி அழைத்து விட...
அவள் அருகில் நின்ற கார்த்திக் , " ஹே , என்ன பண்ணுற... நீ அறிவு இருக்கா இல்லையா இது ஹோஸ்பிடல் இப்பிடி கத்துற
" சாரி கார்த்தி, அதோ அங்கே என் ப்ரெண்ட் அங்கே நிக்கிறா அவள பார்த்த உடனே என்ன மறந்து.. கத்திட்டேன்.."என நந்தினி சொல்ல
"அவங்க ஏதும் வேலை விசையமா வந்து இருக்கலாம் அதுக்குன்னு இப்பிடியா இடம் பார்க்காம கத்துவ.. "என கார்த்திக் நந்தினியே அதட்டினான்
தன் தவறை உணர்ந்து " கார்த்திக் ப்ளீஸ் நாம அவ கிட்ட போகலாமே...என கெஞ்சினாள்
" சரி வா நாம போய் பார்த்துட்டு வரலாம்..என கார்த்திக் நந்தினியே அழைத்து கொண்டு மாயா இருந்த பிரிவுக்கு சென்றான்
அப்போது தான் நந்தினி அது கான்செர் பிரிவு என்பதை கவனித்தாள் மனதுக்குள் மாயா இங்க என்ன பண்ணுறா என்று நினைத்த படி அங்கே நின்று அவள் வரவுக்கு வெளியே காத்து கொண்டு இருந்தால் கார்த்திக் உடன்..
தனது செக் அப் முடிந்து மாத்திரைகள் மட்டும் மெடிக்கல் ரிப்போர்ட் உடன் வெளியே வந்தவள் அங்கே நந்தினியே கண்டு அதிர்ந்து நின்றாள், இவள் எப்பிடி இங்கே,
பிறகு, சுதாரித்து.." ஹே நந்தினி நீ என்ன பா இங்க ஒரு நிமிஷம் இரு இதோ வந்துறேன் என்று சொல்லிவிட்டு மீண்டும் உள்ளே சென்று டாக்டர் இடம் சொல்லிவிட்டு வெளியே வந்தாள்...
"அதை நான் கேட்கணும், நீ இங்க என்ன பண்ணுற அதுவும் கேன்சர்" என சந்தேகமாக விஸ்மையாவை பார்த்து நந்தினி கேட்க
கடவுளே இவ எப்பிடி இங்க," அது ப்ராஜெக்ட் விஷயமா பேசிட்டு போலாம்ன்னு வந்தேன் என தடுமாறியே படி சொன்னால்
" போய் சொல்லாத மாயா நான் விசாரிச்சுட்டேன் இப்போ நீ சொல்ல போறியா இல்ல அப்பாக்கு போன போட்டு, கேட்கவா.. என குரல் அஉயர்த்தி ஒரு பொய் சொல்ல
நந்தினி அப்பா என்று சொன்ன உடன் விஷ்மையா அங்கே கிடந்த சேரில் சரிந்து அமர்ந்து உடைந்து அழ ஆரம்பித்துவிட்டாள். அவ்வளோ நேரம் போனில் எதையோ பார்த்துகொண்டு இருந்த கார்த்திக் ஏன் இப்பிடி அழுகிறாள் என நிமிர்ந்து பார்த்தவன் ,மனதுக்குள் இவள் கோவில்ல பார்த்த பெண் ஆச்சே, இவள் எப்பிடி இங்கே பிறகு அவள் அழுவது பொறுக்காமல் நந்தினி இடம் நந்து பாரு உன் நால அவங்க இப்போ அழறத முதல அவங்கள அழைச்சுட்டு கிளம்பு வெளியே போய் பேசிக்கலாம்
இங்க நின்னு பேச வேண்டாம் அவன் சொன்ன உடன் என சுற்றிலும் பார்த்தபடி சொன்னான். அவனுக்கு விஸ்மையா எல்லோருக்கும் கட்சிபொருள்ஆவது பிடிக்கவில்லை
நந்தினி, அங்கே கிடந்த சேரில் அமர்ந்து அழுது கரைந்து கொண்டு இருந்த தோழியின் தோளில் கை வைத்து சரி சரி மாயா அழாத வா வெளியே போய் பேசலாம் என விஸ்மாயாவை அழைத்து கொண்டு.. அந்த ஹோச்பிடல்
எதிரில் இருந்த ஒரு காபி ஷாப்க்கு சென்றார்கள் ,அங்கே நந்தினி மாயாவுக்கு என்ன பிரச்சனை என்று கேட்க.
நந்தினியின் எண்ணம் அறியாமல் மாயாவும் தனக்கும் இருக்கும் பிரச்சனையே ஒன்று விடாமல் சொன்னாள் எல்லாம் கேட்டுக்கொண்டு இருந்த நந்தினிக்கு
மனதுக்குள் இவள் தான் நம்ம திட்டத்துக்கு சரியான ஆள் , நாம ஏன் இவ கிட்ட பேசி , பார்க்க.. கூடாது.. என்று முடிவு எடுத்துவிட்டாள்..
இது ஏதும் அறியாமல் கார்த்திக், கவலையுடன் விஸ்மயாவிடம் என்ன பண்ணுரிங்க இப்போ , ஹெல்த் இப்போ எப்பிடி இருக்கு டாக்டர்ஸ் என்ன சொல்லுறாங்க..."என அக்கறையாய் விசாரித்தான்
" கொஞ்சம் தியங்கியே படி விஸ்மையா அவனுக்கு பதில் சொன்னாள் " ப்ரமைரி ஸ்டேஜ் தான் சர்ஜரி பண்ணனும் சொல்லி இருக்காங்க சில டெஸ்ட் எடுத்து இருக்காங்க இன்னைக்கு தான் ரிப்போர்ட் வாங்க வர சொன்னங்க அதுக்கு தான் வந்தேன் "
" ஹ்ம்ம் .... எப்போ ஆபரேஷன்."
" அது.. கொஞ்சம் நாள் கழிச்சு செய்துக்கலாம்ன்னு "என அவள் மேலும் தயங்க
இப்போ நந்தினி.. " ஏன் நல்ல நாள் ஏதும் பார்க்குறியா என்ன..."
" இல்லை நந்தினி , அக்கா ரெண்டு பேருக்கும் இப்போ தான் கல்யாணம்.. முடிஞ்சது..வளைகாப்பு.. குழந்தை..அது-இதுன்னு அப்பாக்கு கொஞ்சம் அதிகமா செலவு ஆகிடுச்சு.. இந்த நேரத்துல அப்பா கிட்ட எனக்கு இப்பிடி இருக்குன்னு சொன்னா, தாங்கிக்க மாட்டாங்க அதுவுமில்லாம பணம் நெருக்கடி வந்துற கூடாதே அதுக்கு தான்
இப்போதான் நான் வேலைக்கு சேர்ந்து இருக்கேன் எப்பிடியும் எனக்கு கொஞ்சம் நாளில் ஹைக் கிடைச்சுறும் அதுக்கு அப்புறம் ஆபரேஷன் பண்ணிக்கலாம் இப்போதைக்கு மாத்திரை மட்டும் எடுத்துக்கலாம்னு இருக்கேன் என அவள் சொல்லி முடிக்க.."
நந்தினி, கோபத்தில் " உனக்கு என்ன பைத்தியமா பிடிச்சுற்க்கு"என கேட்க
" என்ன என்னடி பண்ண சொல்லுற ... பணம் வேண்டாமா.."விஷ்மையா கேட்க"
அதுக்காக.. எவ்வளோ நாள் கத்துகிட்டு இருப்ப அதுக்குள்ள எதாவுது ஆகி போச்சினா என்ன செய்றது "
" விடு என் தலை எழுதுன்னு போக வேண்டியது தான் ஆனா.. அப்பாவ கஷ்ட படுத்த எனக்கு இஷ்டம் இல்லை..."என விஷ்மயாவும் பிடிவாதமாய் நின்றாள்
" இரு பெண்களின் பேச்சை கேட்க கார்த்திக் மனதில் மாயா என்ன மாதிரி பெண் என்று தான் தோன்றியது... " சிறுது நேரம் கழித்து அவனே.." நாங்க வேணும்னா பணம் உதவி செய்யறோம் ஆபரேஷன் பண்ணிக்கலாமே .."
" அதை கேட்ட விஸ்மையா " ஐயோ வேண்டாம் சார்... கண்டன் வாங்கி தான் நான் நல்லா ஆகணும் இல்லை.. அப்பாவுக்கு தெரிஞ்சா ரொம்ப வருத்த படுவாங்க... அதுவும் இல்லாம.. அப்பாக்கு கடன் எல்லாம் பிடிக்காது.. "
நந்தினி, " சரி மாயா . இப்போ என்ன தான் முடிவு பண்ணிர்க்க.."
" ஹ்ம்ம் இப்போதைக்கு இந்த பிரச்சனையே இப்பிடியே விட்டுரலாம் இருக்கேன் .
சரி நந்தினி நேரம் ஆச்சு நான் கிளம்புறேன் இன்னொரு நாள் பேசலாம்.. வரேன் சார்..." வரேன் நந்தினி.. என இருவர் இடம் சொல்லிவிட்டு கிளம்பியே மாயாவை தடுத்து கார்த்திக்...ஒரு நிமிஷம்... நாங்க உங்கள வீட்டுல விட்டுறோம்.. எங்க இவளுக்கு தனியாக சென்று ஏதும் ஆகிவிடுமோ என்கிற எண்ணத்தில் கேட்டான்"
" இல்லை பரவாயில்லை சார்.. நானே போயிடுவேன்."
" இல்லை உங்க ஹெல்த் "
" அது பிரச்சனை இல்லை சார் நான் ஆட்டோல போய்க்கிறேன் என்று சொல்லிவிட்டு விஸ்மையா சென்றுவிட்டாள்..."
ஆனால் நந்தினி அதே இடத்தில அமர்ந்து யோசித்து கொண்டு இருக்க...
அதை பார்த்த...கார்த்திக்... " என்ன நந்தினி யோசனை எல்லாம் பலமா. இருக்கு..."
" ஹ்ம்ம் எல்லாம் விஸ்மையா பத்தி தான்..."
hai friends ellarum eppidi irukinga, itho kadhal kaatru next episode potachu padichu unga comments sollunga
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro