Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

!!14!!


நாட்கள் அதுப்போக்கில் செல்ல விஸ்மையா -கார்த்திக் உறவு நல்ல நண்பர்கள் எங்கிற அளவிற்கு முன்னேறி இருந்தது , எந்த ஒரு விசயம் நாளும் மையூ தவறாமல் கார்த்திக்கிடம் ஒப்பித்துவிடுவாள் அவளது தினசரி கதைகளை கேட்க எவ்வளோ வேலை இருந்தாலும் சீக்கிரம் ஆஃபிஸில் இருந்து வந்துவிடுவான் . ஆனால் நந்தினி இடம் சிக்காமல் .

ஹலோ அம்மா ..

" டேய் சந்தோஷ் எப்படி டா இருக்க. இப்போதான் உனக்கு என்னோட ஞாபகம் வந்ததா "

" அம்மா பொறுமை பொறுமை ஒவ்வொரு கேள்வியா. கேளுங்க ம்மா அப்போதான் பதில் சொல்லுவேன் "

" போடா யாருக்கு வேணும் உன் பதில் "

" என்ன ம்மா மீ அப்பாவி "இப்படி நீங்க கோப படலாமா "

என சந்தோஷ் தாய் இடம் கெஞ்ச

சங்கரி ," சரி சரி ரொம்ப கெஞ்சாத எப்படி இருக்க . "

" எனக்கு என்ன நல்லா இருக்கேன் அப்பா எங்கே ம்மா "

" அவர் இன்னும் வரல டா , நீ சொல்லு , நல்லா வேலா வேலைக்கு சாப்பாடு எல்லாம் சாப்பிடுறியா . வேலை ஒன்றும் கஷ்டம் இல்லையே . எப்போ. லீவுக்கு ஊர். வர . " என சங்கரி பேசி கொண்டே போக

சந்தோஷ் , அம்மா ஸ்டாப் ஸ்டாப். கொஞ்சம் மூச்சு வாங்கிட்டு பேசுங்க. கோட். முதல பாப்புவ போய் பார்த்தீங்களா எப்படி இருக்கா அவ "

சங்கரிக்கு தெரியும் மகனை பற்றி மையூ பற்றி தெரிந்த பின்பு தான் அவர் கேட்கும் எந்தொரு கேள்விக்கு பதில் கிடைக்கும் என்று.

" அவ நல்லா இருக்கா. டா . ஆனா நான் தான் போய் இன்னும் புள்ளையே. பார்க்கல "
" என்ன அம்மா சொல்லுறீங்க பார்க்கல. ஆனா நல்லா இருக்கான்னு எப்படி சொல்லுறீங்க "அவனுக்கு இப்போது கோபம் வந்து விட்டது

" டேய் , பார்க்கல ஆனா தினமும் போன்ல பேசிட்டு தான் இருக்கேன் போதுமா வந்துட்டான் என்ன கேள்வி கேட்க என கோபமா அவரும் முணுமுணுக்க .

சந்தோஷ் " சாரி ம்மா என்னனு தெரியல பாப்பு கிட்ட பேசினேன் அப்போது இருந்தே என் மனசே சரி இல்லை . அதான் அப்படி கேட்டேன் ம்மா " என அவனும் வேதனை உடன் சொல்ல

அதை கேட்ட சங்கரிக்கோ, உள்ளம் பதறியது ," என்ன டா தம்பி சொல்லுற பாப்பா என்ன சொன்னா . "

" அது ஒன்னும் இல்லை ம்மா நேர்ல வந்து சொல்லுறேன் இப்போ அவளுக்கும் மாப்பிள்ளைக்கு சேர்த்து கிப்ட் அனுப்பி இருக்கேன் ரெண்டு நாள்ல வந்துடும் , நீங்களும் -அப்பாவும் அதை போய் கொடுத்துட்டு பார்த்துட்டு வாங்க "

" ஏன் டா நீ வரலையா "

"இல்லம்மா நான் அடுத்த மாசம் வருவேன் . எனக்காக நீங்களும் அப்பாவும் போய் பார்த்துட்டு வாங்க ப்ளீஸ் ம்மா " கெஞ்சினான்

"சரி டா " சங்கரியும் கேட்டுக்கொண்டார்

" நீங்க உங்க உடம்ப பார்துகொங்க அம்மா நான் அப்புறம் பேசுறேன் "

" சரி டா . நீயும் பார்த்துக்கோ . நேரத்துக்கு சாப்பிட்டு என சொல்லி விட்டு போனை வைத்தார்

அவர் மனதிலும் குழப்பத்திற்கான நிலைமை , " என்ன இந்த பையன் இப்பிடி சொல்லுறான் .என்னவா இருக்கும் . ஒரு வேலை மையூவுக்கு நிஜமாலுமே பிரச்சனையா இருக்குமோ ... என்று யோசித்த படி அமர்ந்து விட்டார்

அப்போது தான் ராமன். வேலை. முடித்து விட்டு வீடு வந்தவர் . என்ன இது வீடு இப்பிடி திறந்து கிடக்கு எங்க போனா இவ என யோசித்த படி உள்ளே வர அங்கே சங்கரி விஸ்மையா பற்றி நினைத்து கொண்டு எங்கயோ வெறித்து பார்த்த படி அமர்ந்து இருந்ததை பார்த்து . என்ன ஆச்சு இவளுக்கு . " சங்கரி ஏய் சங்கரி "

ராமன் குரலில் பதறியே சங்கரி " ஏ... என்னங்க. எப்போ. வந்திங்க . "

" அது சரி நான். வந்தது கூட தெரியாம அப்பிடி என்ன யோசனை , கதவு வேற திறந்து கிடக்கு . "

" ச்சு ஒன்னும் இல்லை . ஏதோ யோசனை. அதவிடுங்க .நான் போய் உங்களுக்கு காபி எடுத்துட்டு வரேன் என அவர் எழ போக

ராமன் சங்கரி கையே பிடித்து உட்கரு முதல . என்ன விஷயம் சொல்லு அப்புறம் காபி பத்தி யோசிக்கலாம் "

" ஹ்ம்ம் " மீண்டும் சோபாவில்அமர்ந்த அவர் சந்தோஷ் தன்னிடம் பேசியதை. எல்லாம் சொல்ல. .

" எல்லாம் சரிதான் சங்கரி. ஆனா நம்ம எப்பிடி இதுல தலையிடுறது அதுளையும் என ராமன் இழுக்க "

"என்னங்க பேசறீங்க அந்த புள்ள பாவம். எதையும் யார் கிட்டயும் சொல்ல மாட்டா நம்மலா பார்த்து தெரிஞ்சுகிட்டா தான் உண்டு . "

" எல்லாம் சரி தான் சங்கரி. இப்போ. என்ன பண்ணுறது. "

" ரெண்டு நாள் கழிச்சு போய் நாம பார்த்துட்டு வரலாம் நீங்க என்ன சொல்லுறீங்க , என சங்கரி கணவன் இடம் கேட்க.

" நான் என்னத்த. சொல்ல . உன் இஷ்டம்.. , அப்புறம் இப்போ போயிட்டு எனக்கு ஒரு கப் காபி போட்டு எடுத்துட்டு வா "

" இதோ என சங்கரி காபி. எடுத்துட்டு வர போய் விட , ராமனும் சங்கரி சொன்னதை பற்றி யோசிக்க ஆரம்பித்தார் "

" சங்கரி காபி எடுத்துட்டு வந்து ராம் இடம் கொடுக்க.. "

ராமன் மீண்டும், ' சங்கரி எதுக்கும் தமோ கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு மையூவ பார்க்க போலாம் என்ன

" சரிங்க நான் போய் ருக்குமணி கிட்ட சொல்லிட்டு வந்துறேன் "

"சரி என ராமன் ஓய்வு எடுக்க சென்று விட சங்கரி விஸ்மையாவின் தாயே தேடி அவர் வீட்டுக்கு சென்று . அவர்கள் இடம் சொல்லிவிட்டு இரண்டு நாள் கழித்து கிளம்பிறதுக்கு எல்லா பொருட்டுகளையும் எடுத்து வைத்தார் .. "

———-

" மையூ .. ராஜி பேச்சை கேட்காமல் வீட்டில் உள்ள எல்லா வேலையும் தன் தலையில் போட்டுகொண்டு செய்துக்கொண்டு இருந்தாள்

.

அதை நந்தினி ஒரு கேலி சிரிப்பு உடன். பார்த்து கொண்டு இருந்தாள்... "

அப்போது தான் அந்த வீட்டில் வேலை செய்யும் வேலை ஆள்... ராஜிடம் .

அம்மா யாரோ மையூம்மாவை தேடி யாரோ வந்து இருகாங்க.என சொல்ல

நம்ம மையூவை தேடியா .. யாரா இருக்கும் .சரி நீ போ என வேலை ஆளை அனுப்பிவிட்டு . ராஜி யாரு என்று பார்க்க

அங்கே சங்கரி மற்றும் ராமன் நின்று... மையூ இருக்காளா .கேட்க

" நீங்க .. "

நாங்க என பதில் சொல்லணும் முன் விஸ்மையாவே அத்தை. இது சரியா வருமா பார்த்து சொல்லுங்க என வந்து சேர

அங்க அமர்ந்து இருந்த சங்கரியே பார்த்து. அத்தை.. என சந்தோஷத்தில் சிறுபிள்ளை போல் அவரை கட்டிக்கொண்டாள்

. " எப்போ வந்திங்க எப்பிடி இருக்கீங்க "

கொஞ்சம் மூச்சு வாங்கிட்டு பேசு மையூ ம்மா .. ... இப்போதான் வந்தோம் நல்லா இருக்கோம்

ராஜிடம் இந்தாங்க அக்கா என சில பொருட்கள் இருந்த பையே குடுக்க

அவர் இது எல்லா எதுக்கு...

சங்கரி , அது சரி அக்கா. புள்ளையே. பார்க்க வரேன் சும்மாவா வர முடியாதே அதுவும் இல்லாம மையூ ரெண்டு வீட்டுக்கும் ரொம்ப செல்லம்... அதான்

" ராஜியும் அதுற்கு பிறகு மறுப்பு சொல்லமல் வாங்கி மையூவிடம் குடுத்து உள்ளே போய் வை மையூம்மா அப்பிடியே சாப்பிட எதாவுது எடுத்துட்டு வா "

இதோ ஒரு நிமிஷம் அத்தை எ அவளுக்கு ன என அனைவருக்கும் சாப்பிட பலகாரம் எடுத்துட்டு வந்தாள்

.

சங்கரி மையூவிடம் நலம் விசாரித்தார். அவரது விசாரிப்பில் தன்னை ஆராய்வது போல் மையூவுக்கு தோன்ற ...

அவள் ராஜியே பார்த்து எதாவுது பண்ணுங்க அத்தை என பார்வையாளையே கெஞ்ச

அவருக்கும் இந்த நிலைமையே எப்பிடி சமாளிப்பது தெரியாமல் அமர்ந்து இருந்தாள்

அப்போதான் கார்த்திக் .. என்றும் இல்லாமல் சீக்கிரம் வந்துவிட

அவனை பார்த்ததும் தான் அவளுக்கு நிம்மதியானது "ஹப்படா இனி சமளிச்சுடலாம் .' சங்கரிடம் அத்தை. அவங்க வந்துட்டாங்க ' என்று சொல்ல

சங்கரி .எங்கே என்று பார்க்க அங்கே கார்த்திக் இவர்களை நோக்கி வந்து கொண்டு இருந்தான் ..

அவனை பார்த்த சங்கரிக்கு மனதில் நம்ம புள்ளைக்கு ஏற்ற பையன் தான் தோன்றியது ராமனுக்கு அதே நிலை தான் "

" கார்த்திக் இவர்களை நெருங்கிவிட . யார் இவர்கள் என்பது. மையூவிடம் பார்வையாளையே கேட்க "

" இவங்க என் அத்தை மாமா .. என அறிமுகம் செய்தாள்.. "

" ஓ .. வாங்க என சொல்லிவிட்டு மையூவிடம் " ஒரு நிமிஷம் மேல வா என்று சொல்லிவிட்டு அவன் அறைக்கு சென்று விட "

" மையூ அப்பிடியே அவன் சொன்னதை கேட்டு நின்றுவிட்டாள். மனதுக்குள் ' இது என்ன புதுசா இப்பிடி பேசிட்டு போறாங்க என அவள் முழித்த படி நிற்க

சங்கரி தான் என்ன யோசனை பாப்பா போ – அவளை துரத்த

இல்ல அத்தை அது ..

" வந்து போய் எல்லாம் ஒன்னும் இல்ல நீ போ

" அத்தை, நீங்க சாப்பிட "

"மையூம்மா இப்போதானே டீ சாப்பிட்டோம் அதுவும் இல்லாம நாங்க வந்து ரொம்ப நேரம் ஆகிடுச்சு , உன்னையும் தம்பியையும் தான் பார்க்க வந்தோம் பார்த்துட்டோம் . இப்போ கிளம்புறோம்

அதை கேட்ட ராஜி , என்ன இது இப்போதான் வந்திங்க அதுக்குள்ள "

" அது எல்லாம் ஒன்னும் இல்லை அக்கா இன்னும் ஓரு நாள் வந்துட்டா போச்சு . அப்போ நாங்க கிளம்புறோம் என சங்கரி ராமன் ராஜி இடம் சொல்லிவிட்டு , மையூ பக்கம் திரும்பி நாங்க வரும் டா பார்த்துக்கோ , தம்பி கிட்ட சொல்லிட்டு என சொல்லிவிட்டு கிளம்பி சென்று விட

இப்போது மையூ தங்களது அறைக்கு எப்பிடி செல்வது என்று யோசனை உடன் தயங்கிய படி நிற்க

வந்தவர்களை வழி அனுப்பிவிட்டு வந்த ராஜி மையூவை பார்த்து.. " என்ன இவ இப்பிடி நின்னுகிட்டு இருக்கா என்று யோசித்த படி .. என்ன ஆச்சு மையூ ஏன் இப்பிடி நின்னுட்டு இருக்க "

அவரது குரலில் சுயநினைவுக்கு வந்தவள் . அவரிடம் , அத்தை அது .. அவங்க .. என பாதி பேச்சை மென்று விழுங்க

அவள் என்ன சொல்ல வருகிறாள் என்று புரிந்து கொண்ட ராஜி ," அவளிடம் . மையூ எந்த குழப்பம் வேண்டாம் கார்த்திக் மேல பயமும் வேண்டாம் சரியா நீ போ என அவளை அனுப்பிவைத்தார் "

மையூவும், எதுக்கு வர சொன்னாங்க என்னவா இருக்கும் என்கிற யோசனை உடன் அறைக்கு செல்ல , அங்கே கார்த்திக் கட்டிலில் கண் மூடி உறங்குவது போல் இருக்க

அவ்வளோ நேரம் என்ன பேசுவது என்று குழம்பிய படி வந்த மையூ அவனின் நிலை பார்த்து அப்பிடியே நின்று விட்டாள்..

" என்ன இது நம்மள வர சொல்லிட்டு .இப்போ இவங்க தூங்குரங்க .. இப்போ எழுப்புறதா இல்ல திரும்ப கிழ போலாமா "

"கிழ போகலாம் தூங்கட்டும் என அவள் திரும்ப போக ," எங்க போற மையூ " – என. கார்த்திக் குரல் கேட்டு அப்பிடியே நின்றாள்

அவன் பக்கம் திரும்பி .. இல்ல நீங்க தூங்கிட்டு இருக்கீங்க நினச்சு கிழ போலாம்னு

என் மேல அவ்வளோ பயமா மையூ . இவ்வளோ நேரம் கழிச்சு . அம்மா சொல்லி. அத்தை சொல்லியும் யோசிச்சுட்டே வர – என வருத்தத்துடன் சொல்ல

" ஐயோ அப்பிடி இல்லைங்க நீங்க திடீர்னு அப்பிடி சொன்னா அத்தை என்ன நினைப்பாங்க "

" ஹ்ம்ம் ஒன்னும் நினைக்க மாட்டாங்க , "

" ஆமா. நினைக்க மாட்டாங்க நீங்க கண்டீங்க , சரி இப்போ எதுக்கு வர சொன்னிங்க என்ன விஷயம் "

" இப்போவாது கேட்க தோணுச்சே .. நான் எதுக்கு. வர சொன்னேன்னு , என்று அவளை கேலி செய்துவிட்டு . , உன் ட்ரீட்மெண்ட் பத்தி பேச தான் வர சொன்னேன் , என் பிரென்ட் க்கு தெரிஞ்சவர் ஒருத்தர் யு.எஸ் ல இருகாராம் அவர் இன்னும் கொஞ்சம் நாள்ல இந்தியா வர பொறாராம் அவர் கிட்ட பேசி உனக்கு ட்ரீட்மெண்ட் செய்யலாம் இருக்கேன், மாட்டேன் மட்டும் சொல்ல கூடாது , நான் எல்லாம் ஏற்பாடு செய்துட்டேன் என்று அவன் பேசி கொண்டே போக

மையூ அப்பிடியே உறைந்து போய் கண்ணீர் வழியே அமர்ந்து இருந்தாள்......

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro