!!12!!
அறையில் மாயா ஒரு வித பதட்டத்தில்.. இங்கும் அங்கும் நடந்து கொண்டு இருந்தாள் ., திருமணத்தை பற்றியே யோசிக்கத்தவள் நந்தினியின் கட்டாயத்தால் சம்மதித்து இருந்தாள் ஆனால் இன்று கார்த்திக்குடன் ஒரே அறையில் எப்பிடி தங்குவது , இவ்வளோ பெரிய வீட்டுல நமக்கு தனியா ஒரு ரூம் குடுத்து இருக்கலாம் என அவள் யோசித்துக்கொண்டு இருந்தாள்
கார்த்திக் தாத்தாவிடம் பேசி கொண்டு இருந்தான் பெரியவர், ' சரி கார்த்தி மத்தத நாளைக்கு பேசிக்கலாம். இப்போ நேரம் ஆச்சு நீ உன் ரூமுக்கு போ என அவரும் எழுந்துக்கொள்ள ஹ்ம்ம் சரி தாத்தா . என அவன் எழுந்து போகும் போது நந்தினி.. அவன் இடம் கார்த்திக் நான் சொன்னது எல்லாம் ஞாபகத்துல இருக்கட்டும்.. இந்த கல்யாணம் வெறும் பொம்மை கல்யாணம் தான்.. என்று அவன் கன்னத்தை தட்டிவிட்டு சிரித்தாள் எதற்கோ கார்த்திக்கை தேடி வந்த ராஜியின் காதில் இந்த வார்த்தை விழுந்து விட. அவரோஅடிப்பாவி , மகளே இவள இதுக்கு மேல பேச விட்டா என் குடும்பம் விளங்கின மாதிரி தான் என அவர் உடனே கார்த்திக்.. என்று அழைக்க.
அம்மா என்ன ஆச்சு ம்மா, அவன் கேட்க இன்னும் என்ன பண்ணுற இங்க.. அப்போவே உன்னை போக சொன்னேன்ல..
அது வந்து ம்மா. நந்தினி கிட்ட பேசிட்டு இருந்தேன்
அப்போது தான் ராஜி நந்தினியே பார்ப்பது போல் " நீ இங்க என்ன பண்ணுற நந்தனி "நிச்சையமாய் அந்த குரலில் அன்பு இல்லை ராஜியின் கேள்வியில் '
ஐயோ சும்மாவே ப்லேட் போடுமே இது என்று மனதுக்குள் நினைத்த படி.. " அது ஒன்னும் இல்ல அத்தை சும்மா தான் கார்த்திக் கிட்ட பேசிட்டு இருந்தேன் "
பேசுறதுக்கு நல்ல நேரம் பார்த்த டிம்மா வா எனக்கு கொஞ்சம் உதவி பண்ணு.. நீ இன்னும் ஏன்டா இங்க நின்னுக்கிட்டு இருக்க.. போ.. என அவர் அதட்ட.. அதுக்கு மேல் அங்க நிற்க என்ன கார்த்திக்கு பைத்தியமா..
ஆனால் நந்தினி ராஜியே மனதுக்குள் திட்டி தீர்த்த படி...அவர் பின்னாள் சென்றாள்..
தன் அறைக்கு வந்த கார்த்திக்கோ.. அங்கே மையூ ஒரு வித பதட்டத்துடன் நடந்துகிட்டு இருப்பத்தை பார்த்தான் ..அறை கதவை சாற்றியவன் ,அவளை பார்த்து
" மெல்ல மையூ எதுக்கு இந்த பதட்டம் "அவன் குரல் கேட்டு விஸ்மையா அப்பிடியே அதிர்ந்து நின்று விட்டாள்.."
அவள் அருகே சென்று ஹலோ என்று அவன் கை அசைத்துவிட்டுஎன்ன முழிச்சுகிட்டே தூங்குரியா.அவன் கேட்க
அவனது கேள்வியில் நிதானத்திற்கு வந்தவள் " ஹான் அது எல்லாம் ஒன்னும் இல்லை..சும்மா ஏதோ யோசனை " அப்பிடி என்ன யோசனை நான் வந்தது கூட தெரியாம "பேசிக்கொண்டெ அங்கே கிடந்த சோஃபாவில் அமர்ந்தான்
" அது.."அவள் கேட்க தயங்க
" எது "அவள் பேசட்டும் என்று வார்த்தை எடுத்து குடுத்தான்
" உங்ககிட்ட பேசணும் அதான் எப்பிடி பேசுறது யோசிச்சுகிட்டு இருந்தேன்.."
" என்ன பேசணும் மையா எதாவுது பிரச்சனையா "இப்போது அவனது குரலில் சற்று பதட்டம் " ச்சே ச்சே பிரச்சனையை எல்லாம் ஒன்னும் இல்லை "
" ஓஹ், வேற என்ன "என அவள் முகம் பார்க்க
" நாளைல இருந்து நான் வேலைக்கு போகட்டா லீவ் முடியுது.. "ஒரு வழியாக சொல்ல வந்ததை சொல்லிவிட்டாள்
" வேலைக்கா.. "இப்போது அதிர்வது அவனது முறையானது."" ஐயோ ப்ளீஸ் வேண்டாம் சொல்லிடாதிங்க நான் நந்தினி கிட்ட பேசினேன்.. அவ சரின்னு சொல்லிட்டா.. ஆனா உங்க கிட்ட கேட்கணும் சொன்னதுக்கு நான் பேசிக்கிறேன் சொன்னா ஆனா எனக்கு தான் அவசொன்னது பிடிக்கமா இவ்வளோ நேரம் உங்களக்காக வெயிட் பண்ணிட்டு இருந்தேன்...விஷயத்தை "" ம்ம் தேங்க்ஸ் மையூ உனக்காச்சும் என் சம்மதம் கேட்கணும் தோணிச்சே ' அவன் ஒரு மாதிரி குரலில் சொல்ல "அவன் குரலில் தெரிந்த மாற்றத்தில் " ஐயோ தப்பா எடுத்துகாதிங்க .. நான் உங்ககிட்ட தான் முதல்ல கேட்கணும் இருந்தேன் ஆனா நந்தினி விஷயம் கேட்டதால சொல்லவேண்டியதா போயிடுச்சி அவன் கஷ்ட படுகிறான் என்று புரிந்துக்கொண்டு அவனுக்கு அவள் சமாதானம் சொன்னதே கார்த்திக்கு பெரிய ஆறுதல்
" பராவாயில்லை சரி மையூ எனக்கு புரியுது ரொம்ப நேரம் ஆச்சு... தூங்கலாமா... "அவன் கேட்க
" நீங்க இன்னும் பதில் சொல்லவே இல்லையே.. "அவள் தயங்கிய படி நின்றாள்
" தாராளமா போகலாம்..."அவன் அனுமதி தந்தது அவளுக்கு அவ்வளோ சந்தோஷம்
" நெஜமாவ சொல்லுறிங்க.. "
"நிஜமே நிஜம் ஆனா மையூ நீ எதுக்கு இப்போ வேலைக்கு போகணும் சொல்லுற நான் தெரிஞ்சுக்கலாமா.."
" நான் தான் அன்னைக்கே சொன்னேனே .. எனக்கு ஆப்ரேசனுக்கு பணம் தேவை.. அதோட என்னோட தேவைகளை நானே தான் பார்த்துக்கணும் அதுனால தான்... ""அதை கேட்ட அவனுக்கோ ஐயோ என்று இருந்தது ,அடிப்பாவி அவ தேவையே அவளா பார்த்துக்கிற போரலாமே அப்போ நான் எதுக்கு ஒரு பிரெண்டா [ பிரென்ட் என்கிற வார்த்தையில் அவனது மனசாட்சி காரி துப்பியது என்பது தனி கதை ]கூட நான் இருக்க கூடாதா என மனதுக்குள் நினைத்த படி... ' ஹ்ம்ம் சரி உன் இஷ்டம் காலைல நான் அம்மா கிட்ட பேசிடுறேன் அப்புறம் நீ அந்த ரூம் யூஸ் பண்ணிக்கோ ,இங்கையே படுத்துக்கொள் என்று சொல்ல ஆசை தான் அவனுக்கு எங்கே அவனை தவறாக நினைத்துகொள்ளவாளோ என்கிற பயத்தில் தனது அறையில் மற்றொரு அறையில் அவளை தங்கிக்க சொல்லவிட்டான் - சார் ஜென்டில்மேன் ] எப்போ எது தேவை நாளும் தயங்காமல் என்கிட்டே கேட்கணும் சரியா , தூங்கலாமா ரொம்ப டயர்டா இருக்கும்மா .
அவன் சொன்னதுக்கு சரின்னு தலை அசைத்து
" ரொம்ப தேங்க்ஸ் சார்... "என மையூ சொல்ல
" என்னது சாரா . அம்மா தாயே.. தயவு செய்து.. என் அம்மா முன்னாடி என்ன சார் மொரு குப்பிட்டு வச்சுடாத..அவ்வளோ தான்.. "" சாரி வேற எப்பிடி தான் உங்கள குப்பிடுறது... "
" பெயர் சொல்லி கூப்பிடு இல்லை.. உங்க வழக்க படி.. ஹஸ்பண்ட எப்பிடி கூப்பிடுவிங்களோ அப்பிடி ஏதாவுது ஒன்னு பொல்லொவ் பண்ணிக்கோ எனக்கு எந்த ப்ரொப்லெம் இல்லை.. ஓகே மா ரொம்ப நேரம் ஆச்சு.போ போய் தூங்கு "என அவன் சொல்ல
" ஓகே நீங்க இங்க தூங்குங்க என்று சொல்லிவிட்டு...பேச்சு அவளோ தான் என்று அவள் சென்று விட்டாள்
அவள் சென்றதும் கார்த்திக் இரவு உடைக்கு மாறியவன் கட்டிலில் அமர்ந்து நடந்ததை யோசித்து பார்த்துக்கொண்டு இருந்தான் ஒரே ஒரு ஜாதகம் தன் வாழ்க்கையே இப்பிடி புரட்டி போடும் என்று நினைக்கவில்லை மையூவின் அறைக்கதவை பார்த்தவன் இனிமேல் இப்பிடித்தான் தன் வாழ்க்கை இருக்க போகுது , என அவன் நினைக்க நந்தினி மேல் இன்னும் வெறுப்பு தான் கூடியது நந்தினி இது உனக்கு தேவையா ஏண்டி இப்பிடி பண்ணின என புழம்பியே படி.. அப்பிடியே படுத்து உறங்கி விட்டான்.....
இங்கே நந்தினி.. தன்னுடைய அறையில் அடுத்து என்ன திட்டம் என யோசித்துக்கொண்டு இருந்தாள்
மையூவும் அப்பிடி ஒன்றும் உறங்கிவிட வில்லை கழுத்தில் இருந்த தாலியே எடுத்து பார்த்த அமர்ந்து இருந்தாள் ,அவளுக்கு திருமணம் என்று அவள் யோசித்து பார்த்தது கூட இல்லை அதுவும் கார்த்திக்குடன் , இன்னும் இது என்ன மாதிரியான திருமணம் என்று என யோசித்துக்கொண்டே இருந்தவள் அவளளுடையே யோசனையே வேலைய பக்கம் திருப்பினாள் எப்பிடி இந்த ப்ராஜெக்ட் முடிக்க போறமோ ,பிறகு ஆமா இந்த சந்தோஷ் ஏன் இப்பிடி கோப பட்டான் அவன் சொன்ன மாதிரி நாம ஏதும் பெரிய தப்பு பண்ணிட்டோமோ, வந்து பேசிக்கிறேன் வேற சொன்னனேனே என்னவா இருக்கும்.. என்கிற எண்ணத்துடன் அவளும் உறங்கிவிட்டாள்..
இனி.. விடியே போகும் விடியல்.. முவரும் நினைத்தது போல் நடக்குமா இல்லை இங்கையும் வேதாசலம் நினைத்தது போல்.. நடக்க போகுதா... காத்து இருந்து தான் பார்க்க வேண்டும்...
காற்று வீசும்....
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro