!!11!!
மாயாவுடன் கார்த்திக் வந்து இறங்க ராஜி இருவருக்கும் ஆராத்தி எடுத்து உள்ளே அழைத்து சென்று பூஜை அறையில் விளக்கு எற்ற சொன்னார்.
அவளோ நடுக்கத்துடன் பேச்சை கேட்டு கவனாமாக விளைக்கை ஏற்றி கடவுள் இடம் எல்லாம் உன் செயல் பெருமாளே. இனி எல்லாம் படியா நீதான் நடத்தனும் என மனம் உருக வேண்டினாள்
நீயும் கும்பிட்டுக்கோ கார்திக் என ராஜி சொல்ல
சரிமா என அவனும் மனதுக்குள் " கடவுளே இந்த கல்யாணம் விதி செயலா இல்லை அவள் சதி செயலா என் நால யூகிக்க முடியல நீ தான் இனி பார்த்துக்கணும்.. அப்பிடியே மையூவையும் காப்பாற்று என வேண்டினான்....
ராஜி, " மையூ நீ அங்கே இருக்கிற ரூம்ல போய் கொஞ்சம் நேரம் ரெஸ்ட் எடும்மா கார்த்திக் நீயும் உன் ரூமுக்கு போ. "என சொல்ல
" அம்மா வந்து "கார்த்திக் எதோ சொல்ல முயல
அதை புரிந்து கொண்ட ராஜி " டேய் உன்ன தான் போக தான் சொன்னேன்.. வந்து போய் எல்லாம் அப்புறம் பேசிக்கலாம் இப்போ நீ போ " என துரத்த வேற வழி .இல்லாமல். கார்த்திக் வேற வழி இல்லாமல் அந்த இடத்தைவிட்டு விட்டு சென்றான்"
விஸ்மையா ராஜி சொன்ன அறைக்கு சென்று அங்கே கிடந்த சோபாவில் உட்காந்து கொண்டு அந்த அறையே சுற்றி பார்த்தாள் பிறகு எங்க இந்த நந்தினி காலைல பார்த்தது அப்புறம் என்கிட்டே வந்து பேசவே இல்லையே
எங்க போனா அவ என யோசித்து கொண்டு இருந்தாள்.
இங்கே கௌசல்யா தங்களது அறையில் மீண்டும் நந்தினியிடம் எடி பாரு என் அண்ணி சாந்தி முகுர்தத்துக்கு வேற நல்ல நேரம் பார்க்க ஆரம்பிச்சுட்டா இப்பிடியே போச்சினா அவன் உன்ன முழுசா தண்ணி தெளிச்சி விட்டுர்வான் டி அப்புறம் உன் நிலைமையே கொஞ்சம் யோசிச்சியாஎன பொரிந்து தள்ள .
அம்மா உனக்கு நல்ல மாதிரியே பேச தெரியாதா. எப்போ பாரு.இப்பிடியே பேசிட்டு இருக்க அப்பிடி எல்லாம் ஒன்னு நடக்காது.. அதுக்கு நான் விடவும் மாட்டேன் எனக்கு கார்த்திக் விட மாயா மேல நம்பிக்கை இருக்கு ,நந்தினி சொன்ன உடன்
அடிப்பாவி என்னடி இப்பிடி சொல்லுற...ஏறக்குற கௌசல்யா அலற
இப்போது நந்தினிக்கு எரிச்சலை இருந்தது காலையில் இருந்து கார்த்திக் இடம் பேச அவள் முயற்சிக்க அவனோ கண்டுகொள்ளாமல் விட்டது ,அதோடு சேர்த்து கௌசல்யாவும் ஒவ்வரு விசயத்தை பேசி தூபம் போட, அதை கேட்க கேட்க நந்தினிக்கு எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் ஆகிவிட்டது
இருந்தும் விட்டுக்கொடுக்காமல் பேசினாள் அவள் தாயிடம்
இன்னும் என்ன அம்மா உனக்கு பிரச்சனை..
பின்ன அவன் மேல நம்பிக்கை இல்லைன்னு நீயே சொல்லுறியே உனக்கு மனசாட்சி இருக்கா.. அவன் பேச்சை தானே வந்தவளும் கேட்பா.
அம்மா திரும்ப முதல இருந்து ஆரம்பிக்காத அவ எனக்கு எதிரே திரும்பவும் மாட்டா அப்பிடி ஒன்னும் நினைக்க மாட்டா.
....................
பட் நான் நினைப்பேனே பேபி... இன்னும் கொஞ்சம் நாள் தான் அப்புறம் உன்ன இந்தியாவில் இருந்து கடத்திகிட்டு வர போறேனா இல்லையானு மட்டும் பாரு .. என தன்னுடைய டாக்டர் கோட் போட்டு படி கண்ணாடி வழியாக நந்தினியின் புகை படத்துடன் பேசி கொண்டு இருந்தான்... அவன்....
அப்போதான் தனது போனில் இருந்து மாயாவின் திருமணத்துக்கு.. வாழ்த்து சொல்ல வேண்டும் என ரிமைன்டர் சவுண்ட் கொடுக்க..
அதை எடுத்து பார்த்தவன் ஒ ஷிட்... எப்பிடி மறந்தேன் குட்டிம்மா கோபத்துல பேச மாட்டாளே கடவுளே.. என வேகமாக மையூவிற்கு அழைத்தான் மையூவிற்கு .
அறையில் இருந்து நந்தினியே பற்றி யோசித்து கொண்டு இருந்த மையூ அப்போது தான் தான் செல் அலறியதை கவனித்து வேகமாய் சென்று எடுத்து பார்த்தாள் ..
அதில் வந்த எண்ணை பார்த்து போனை எடுத்து இசை போக பிறகு எப்போ போன் பண்ணுது பாரு பக்கி.. இப்போதான் என் யஞாபகம் வந்தது போல அட்டெண்ட் பண்ண மாட்டேன் போடா என போன் அட்டெண்ட் செய்யாமல் விட்டு அதையே முறைத்து பார்த்த படி அமர்ந்து இருந்தாள் சிறிது நேரத்தில் அதுவே அடிப்பதை நிறுத்துவிட
அவனோ என்ன போன் எடுக்க மாட்டேங்குறா நிஜமாலுமே கோபத்துல இருக்காளோ இல்லை தூங்கிட்டாளா என்னனே தெரியலையே என தனது வாட்சில்.. இந்திய நேரம் பார்க்க.. அது மாலை நேரம் தான் என காட்டியது மீண்டும் அவன் முயரிசிக்க.
மீண்டும் நானே என்று போன் ஆரம்பிக்க மையூ தான் பிழைத்து போகட்டும் என போன் எடுத்து ஹலோ.. என்று கோபத்துடன் சொன்னாள்
தங்க காட் போன் எடுத்துட்டியா..அவனும் நிம்மதியாக சொல்ல
அதைக்கேட்டு பேசாதே டா கொன்னுடுவேன் உன்ன இது தான் நீ போன் பண்ணுற நேரமா .. எப்போ இருந்து உன் கால்க்கு வெயிட் பண்ணினேன் தெரியுமா.. லீவ் தான் கிடைக்காதுன்னு சொல்லிட்ட அதுக்காக ஒரு போன் கூட பண்ண கூடாதுன்னு இருக்கா டாக்டர்னா நீ பெரியே அப்பாடக்கரா டா எரும.. என மையூ திட்டுவதை பொறுமையாக கேட்டபடி இருந்தான் சிறிது நேரம் அவனிடத்தி பதில் வராதது எண்ணி மையூதான் தான் அமைதியாகினாள் .
அவள் அமைதியாகிவிட்டாள் என்று புரிந்து கொண்ட அவன் முடிஞ்சதா எம்மா போதும் போதும் டா அம்மு.. என் கிட்டயே இப்பிடி பேசுற மாப்பிள்ளை ஓட நிலைமை ரொம்ப குஷ்டம் ச்சீ கஷ்டம் அவன் கேலி செய்ய
அவர் ஒன்னும் உன்ன மாதிரி கிடையாது இது மையூ
பாருரா சப்போர்ட் ..
அவன் மீண்டும் கேலி செய்ய ஆரம்பித்தவுடன்
இவளுக்கு தான் ஒரு மாதிரி ஆகிவிட்டது டேய் என்று பல்லை கடித்தபடி திட்ட ஆரம்பிக்க
அவளது கோபத்தை புரிந்து கொண்டவன் ஓகே ஓகே.. கூல் சாரி டா ஒரு முக்கியமான ஆபரேஷன் இருந்தது அதான் உனக்கு போன் பண்ண முடியல...
ஹ்ம்ம் சரி பரவாயில்லை விடு.. ஆபரேஷன் நல்ல படியா முடிஞ்சதா ..
[ இது தான் விஸ்மையா ]
நல்ல படியா முடிஞ்சது சரி அப்புறம் சொல்லு மா மாப்பிள்ளை பத்தி.. என்ன பண்ணுறாரு.. எங்க இப்போ பக்கத்துல இருந்தா குடு பேச..
அவங்க.. ஏதோ ஆபீஸ் வேலை விசயசமா தாத்தா கிட்ட பேசிட்டு இருக்காங்க.. அப்புறம் நந்தினி இருக்கா இல்லை.
நந்தினி என்று சொன்னவுடன் அவன் தெரிந்தும் தெரியாதவன் போல்.. [ அவளை பற்றி தெரியே வேண்டுமே என ] எந்த நந்தினி.. என கேட்க
டேய்.. என் கூட பிஜி பண்ணினாலே டா அவ தான் மையூ சொல்ல
ஆமா ஆமா ஞாபகம் வந்துடுச்சு அவளுக்கு என்ன,
அவளுக்கு ஒன்னும் இல்லை.அவ ரிலேடிவ் தான் கார்த்திக்.. என்று.. தனக்கு கேன்சர் இருபத்தை மறைத்து.. பாதி உண்மையும் பொய்யும் கலந்து மையூ சொல்ல..
அதை கவனமாக கேட்ட அந்த புதியவனுக்கோ கோபம் ஏறி கொண்டே போனது.. இவ்வளோ வேலை பார்த்து இருக்காளா அதுவும்.. அவன் நேசிக்கும் ஒரு பெண் .. அவனுடையே தோழியே அல்லவா.. பகடக்காயயா ராஸ்கல் எவ்வளோ தைரியம் இது ஏதும் உணராமல்.. இந்த லூசு.. இப்பிடி சம்மதம் சொல்லி வச்சு இருக்கே . அதுக்கு மேல் மையூ சொல்லுவத்தை கேட்க பிடிக்காமல் . போதும் அம்மு..நிறுத்து என கத்தி விட்டான்
மையூ அப்பிடியே அதிர்ந்து போய் பேச்சை நிறுத்தி " சந்தோஷ்.."என சொல்ல
" பேசாத.. வந்தேன் தொலஞ்ச நீ .. இவ்வளோ நடந்து இருக்கு எனக்கு ... ஒரு வார்த்தை ஒரே ஒரு வார்த்தை எனக்கு சொல்லணும் உனக்கு தோணலையா. அவ சொன்னான்னு சரி சொல்லிற்க.. ஊருக்கு வந்து பேசுறேன் பாப்பா.. இதுக்கு மேல நல்ல நாள் அதுவுமா எதாவுது திட்டிர போறேன் போன வைக்கிறேன்.. எல்லாரையும் கேட்டேன் சொல்லு உனக்கு இருக்கு என கோபமாய் பேசிவிட்டு.. போனை கட் செய்தான்.."
மையூ என்ன பேசுவது தெரியாமல் அப்பிடியே உறைந்து போய் போனை கண்ணீர் உடன் பார்த்துக்கொண்டு இருந்தாள் எவ்வளோ நேரம் அப்பிடியே நின்றாளோ
அப்போது, ராஜி .. உள்ளே வந்து என்ன ஆச்சு ம்மா ஏன் கண்ணு எல்லாம் கலங்கி இருக்கு கேட்க்கும் போது மையூ நிதானத்திற்கு வந்தாள் அவள் பதில் சொல்லுவதற்குள் அவரே .. வீட்டு ஞாபகம் வந்துருச்சா ம்மா..அன்பாய் கேட்க
அவள் அவரே பார்க்க..
ஒன்னும் பயம் வேண்டாம் அங்க எப்பிடி இருந்தியோ அப்பிடியே இருக்கலாம் என்ன வேணும்மா தயங்காம என்கிட்டே கேட்கலாம் சரியா ..ராஜி
அவள் மெல்ல சரி என்று தலை அசைக்க ..
சரி.. போய் குளிச்சுட்டு இந்த சேலையே கட்டிக்கோம்மா
அதை வாங்கி பார்த்தவள் எதுக்கு அத்தை இதுவே நல்லா தானே இருக்கு.. தான் கட்டி இருந்த சேலையே பார்த்து மையூ சொல்ல .
அவளது கேள்வியில் ராஜி.. என்ன பதில் சொல்லுவது என குழம்பி விழிக்க.. [ இவ்வளோ அப்பாவியா இருக்காளே டேய் கார்த்திக்.ஹ்ம்ம்கும்.. ]
ஆ.. நீ முதல குளிச்சுட்டு வாம்மா நான் சொல்லுறேன் என அவளை குளியல் அறைக்குள் விட்டுவிட்டு திரும்பினார்
அப்போது தான் நந்தினி வந்து என்ன அத்தை இங்க என்ன பண்ணுறிங்க கேட்டாள்
ம் என்னடி ம்மா பண்ண சொல்லுற மையூவை ரெடி பண்ணிட்டு இருக்கேன்..என சொல்ல
உங்களுக்கு எதுக்கு இந்த வேலை அத்தை என்கிட்டே சொன்னா நான் பார்த்துக்கிற மாட்டேனா.. என அவள் வழியே
ராஜி மனதுக்குள் [ நல்ல பார்த்துப்ப டி மக்கா .. என் புள்ளையே ஓட வாழ்க்கைக்கே கெடுத்தவள் வைச்சவள் ஆச்சே.. என்று நினைத்த படி அவளுக்கு பதில் சொன்னார்.. ] இதுல என்ன இருக்கு நந்து.. விடு நானே பார்த்துகிறேன் என இருவரும் பேசி கொண்டு இருக்கும் போதே மையூ குளித்துவிட்டு வந்து சேர்ந்தாள்
அவள் கட்டி இருந்த சேலை .. அவள் அழகை மேலும் எடுத்து காட்ட .. முதல் முறையாக .. நந்தினிக்கு தன் தாய் சொன்னது போல் ஒரு வித பயம் தோன்றியது தான் எடுத்த முடிவு தவறோ என சிந்திக்க ஆரம்பித்தாள் மையூவை தலை முதல் கால் வரை பார்த்து எந்த ஒரு மேக் அப் இல்லாமல் அவள் அழகாய் இருக்காளே...என நந்தினிக்கு தோன்றியது
ராஜி.. வா ம்மா நேரம் ஆகிட்டே இருக்கு.. [ அவருக்கோ நந்தினியே மையூவிடம் பேச விடாத படி செய்து ஆகா வேண்டும்.. ] அதற்க்கு தான்.. மையூவுக்கு தானே அருகில் இருந்து எல்லாம் செய்ய.. வேண்டும் என்கிற முடிவுக்கு வந்தார்..
இங்கே நந்தினி மையூவிடம் தனியா பேச நேரம் பார்த்துக்கொண்டு இருக்க
ஆனால் ராஜி மையூவை ரெடி ஆகியாச்சு.. வாமா என கையேடு.. அழைத்து கொண்டு ஹாலுக்கு சென்று விட்டார்..
அவள் இடம் பேச முடியவில்லையே என்கிற கோபத்தில் அத்தை என்ன இது நான் அவள அழைச்சுட்டு வர மாட்டேனா ..கோபத்தில் கேட்க
ராஜி. சற்று அவர் குரல் உயர்த்தி.. நந்தினி எனக்கு தெரியும் எத எப்போ எப்பிடி செய்யனும்னு . நீ எனக்கு சொல்ல வேண்டியது இல்லை.. போ போய் முதல சாப்புட்டு நீ வா மையூ என மருமகளை அழைத்துக்கொண்டு முன்னாடி சென்று விட..
ராஜியின் அதிக அக்கறை பார்த்து நந்தினி.. அவள் கையில் இருந்த செல் போனை கோபத்தில் தூக்கி எறிந்தாள் . [ அது உன் கையல இருக்குறதுக்கு இப்பிடி உடைஞ்சு போகலாம் என கீழே விழுந்து சிதறியது.. ].
இங்கே மையூ மற்றும் கார்த்திக்கு. ராஜியை இரவு உணவு பரிமாறினார்
அனைவரும்.. ஏதும் பேசாமல் சாப்பிடுவதில் கவனமாக இருக்க..
கௌசலயா தான் போருக்க மாட்டாமல் ஆரம்பித்தாள் .. ஏன்.. அப்பா கல்யாணம் .. தான் முடிஞ்சதே.. அது தானே நமக்கு வேண்டும்.. இப்போ மத்த சடங்குகளுக்கு என்ன அவசியம்
என இங்கிதம் கொஞ்சம் கூட இல்லாமல் கேட்க..
பெரியவர் இதை தான் இருந்தார்.. போல் " ஏனம்மா கௌசி.. நீ பேசுறது.. உனக்கே நல்லவா இருக்கு.. இதே உன் பொண்ணா இருந்தா இப்பிடி பேசுவியா.. இல்ல அவளுக்கு இப்பிடி நடந்த அதை பார்த்துகிட்டு நீ தான் சும்மா இருப்பியா எதையும் கொஞ்சம் அடக்கி வாசிக்கணும் என அவர் கண்டிப்புடன் சொல்ல..
நந்தினி.. இப்பிடியே போனால் எல்லாரும் மையூவின் பக்கம் பேச ஆரம்பிச்சுடுவாங்களே என்கிற பயத்தில் அம்மா நீ கொஞ்சம் சும்மா இரு நீங்க என்ன சொல்லுற படியே செய்ங்க அத்தை.. என அவள் சொல்லிவிட ..
இப்போது அதிர்வது மையூவின் முறை ஆனது .. எ .. என்ன சடங்கு என அவள் கார்த்திக்கை திரும்பி பார்க்க..
அவனோ.. இதுக்கும் எனக்கும் எந்த சம்பதம் இல்லை.. என்பது போல்..உணவில் கவனம் செலுத்த .. நந்தினி.. மையூக்கு எல்லா வற்றையும் [ தான் சொல்ல நினைப்பது எல்லாம் ] மெசேஜில் அனுப்பிவிட்டு .. மையூவை முகத்தை பார்க்க..உன் போனை பாரு என்று கண்ணால் சொல்ல அதை பார்த்த கார்த்திக் ஏதோ சரி இல்லையே.. என..
மையூ உன் போன் எங்கே ..
இதோ என்கிட்ட தான் இருக்கு
ஒரு நிமிஷம் தர முடியுமா என் மொபைல்ல சிக்னல் கிடைக்கல முக்கியமான கால் பண்ண வேண்டிய இருக்கு..
ஹ்ம்ம் இந்தாங்க. என அவள் போனை குடுக்க போனை வாங்கி கொண்டு அவன் பேச போவது போல்.. அவளுக்கு வந்த மெச்செஜ் இன்பாக்ஸ் ஓபன் செய்து பார்க்க அவன் சந்தேக பட்டது போல் நந்தினியின் மட்டமாக பேசி ஒரு செய்தி அனுப்பி இருந்தாள் ..
அதை படித்துவிட்டு. செய்தி வந்த தடம் தெரியாமல் டெலிட் செய்துவிட்டு.. தனது வேலை விசயமாக பேசிவிட்டு. உள்ளே வந்து அவள் இடம் போனை குடுக்க ,அப்புறம் குடுத்துக்கலாம் என அவனிடத்திலே வைத்துக்கொண்டான்
அவள்.. கை கழுவ எழுந்து செல்ல கார்த்திக் அவள் பின்னால் எழுந்து சென்று.. சற்று நெருங்கி நின்று.. மாயா உன் கிட்ட கொஞ்சம் இல்லை நிறையே பேச வேண்டியது இருக்கு சோ அம்மா என்ன சொல்லுறாங்களோ அத கேட்டு.. நம்ம ரூம்க்கு வந்து சேறு.. இட்ஸ் ஹைலி இம்போர்டன்ட்.. ப்ளீஸ் சொல்லிவிட்டு தாத்தா அருகில் சென்று நல்ல பிள்ளை போல் அமர்ந்து கொண்டான்..
ஆனால் மையூ தான் என்ன பேச வேண்டியது இருக்கு, என்கிட்ட அதான் அன்னைக்கே எல்லாம் பேசியாச்சே என ஹாலுக்கு வந்து சேர நந்தினி..
மையூ பார்த்தியா என கண் ஜாடையில் அவள் இடம் கேட்க..
அவள் கேட்பது புரியாமல்.. என்ன பார்த்தியா ,எதை சொல்லுற நந்தினி மையூ கேட்க
உன் போன்..
என்ன போன் எங்க வச்சேன் என் போன..மையூ தேட அங்கே கார்த்திக் வந்து சேர்ந்தான் மையூ உன் போன் என்கிட்ட தான் அப்புறமா தரேன்.. சொல்லிவிட..
நந்தினி.. நொந்து போய் விட்டால்..
அதற்குள் ராஜி.. மையூ . அழைத்து கொண்டு கார்த்திக் அறையில் விட்டுவிட்டு திரும்ப
மையூ அத்தை.. அது..ஏதோ சொல்ல போவதற்கு முன்பு
கார்த்திக் வருவான் ம்மா.. ஒரு பயம் வேண்டாம் என சொல்லிவிட்டு..கீழே சென்று விட..
கொஞ்சம் நேரத்தில் கார்த்திக் அவனது அறைக்கு வந்து சேர்ந்தான்..
அங்கே மையூ என்ன பேச போறான்.. ஒன்னும் புரியே மாட்டேங்குதே.. என அறையில் அடி பிரதக்சனம் செய்து கொண்டு இருந்தாள்
அதை பார்த்து.. போதும் மாயா.. உட்காரு கால் வலிக்க போகுது. என கார்த்திக்.. சொல்ல..
அவனது குரல் கேட்டு மையூ அப்பிடியே நின்று விட்டாள் ..
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro