!!1!!
அலை பாயுதே கண்ணா
என் மனம் மிக அலை பாயுதே
உன் ஆனந்த மோஹன வேணுகானமதில்
அலை பாயுதே கண்ணா
உன் ஆனந்த மோஹன வேணுகானமதில்
அலை பாயுதே கண்ணா
என மனம் உருகி கண்ணனின் காணம் பாடி முடித்தாள், அந்த வீட்டு இளைய தேவதை அவள்..! சிரிக்கும் போது அவள் கண்களும் சேர்ந்து சிரிக்கும்,முகத்தில் எப்போதும் அமைதியின் பாவம் குடி கொண்டு இருக்கும். அவளை பார்க்கும் யாவருக்கும் கண்ணிமைப்பதையும் மறக்கசெய்யும் அம்சம் பொருந்தியவள். இந்த அழகின் தேவதையின் பெயரை இக் கதை நகர நகர அறிந்துகொள்வீர்கள்.
வீடு முழுக்க சாம்ப்ராணி போட்டு துளசி மாடத்தில் விளக்கு ஏற்றி வைத்து பூஜை செய்து முடித்து விட்டு தன் தாயே தேடி சென்றாள் , அம்மா...அம்மா(வசீகரிக்கும் இனிமைக் குரலில்) நான் கோவிலுக்கு போய்விட்டு வரேம்மா என்று தன் அம்மாவிடம் சொல்லிவிட்டு அருகில் இருக்கும் நரசிம்ம பெருமாள் கோவிலுக்கு புறப்பட்டாள்.
அடுப்படியில் வேலைசெய்யும் அவளின் அம்மா (மனசுக்குள் )
பெருமாளே இப்படி நித்தமும் உன்னை தரிசிக்கும் அவளுக்கு எப்போ தான் வழிகாட்டப்போராயோ தெரியலையே என்று தாய்மைக்கே உரையே உணர்வில் உளறி கொண்டிருந்தார்
நரசிம்மர் கோவில் அந்த பெருமாள் எல்லோருக்கும் அருள் புரியே ஏனோ இவள் மேல் மட்டும் அந்த நரசிம்ம மூர்த்திக்கு இரக்கமே பிறக்கவில்லை, இதோ இன்றைக்கும் வந்துவிட்டாள்...இந்த கோப மூர்த்தியே தரிஷனம் செய்ய கோவில் பிரகாரத்தில் வளம் வந்து கொண்டு இருந்தவள் கிழே கிடந்த எண்ணெயே கவனிக்க தவறிவிட்டாள் [ " ஒரு வேலை பெருமாள் திருவிளையாடல் ஆரம்பமோ.." ].
" ஆ அம். அம்மா .. என வழுக்கி விழ போனவளை தாங்கி பிடித்தது ஒரு வலுவான கரம் [ யாருப்பா அது.. ]அவளோ கண்களை இருக்க மூடிகொண்டாள்.
" கிழே பார்த்து வரகூடாதுன்னு ஏதும் வேண்டுதல் இருக்கா என்ன என கம்பிரமான ஒரு குரல் , அந்த பெண்ணை பிடித்தவன் தான் இந்த குரலுக்கும் சொந்த காரன் "
தான் கிழே விழவில்லை என்கிற சந்தோசம் யாரோ ஒருவன் தன்னை விழாமல் தாங்கி பிடித்து இருக்கிறான் என்கிற பயத்தில் அவனிடத்தல் இருந்து விலகி , சாரி தப்பா எடுத்துகாதிங்க , நான் கவனிக்காமல் வந்துட்டேன்... என திக்கி திணறி சொல்லிவிட்டாள், [ எங்கே அவன் தன்னை தவறாக நினைத்து விடுவானோ என்கிற பயத்தில் " ]
அவளின் பதட்டம் , அவனுக்கு புதிதாய் தோன்றியது, இப்போ எதுக்கு இவ்வளோ பதட்டம் இவளுக்கு கிழ விழ போனா பிடிச்சேன் அவ்வளோதானே அவனை பொறுத்துவரை ஆன் பெண் பழகுவது இது எல்லாம் ஒரு விஷயம் இல்லை...
ஆனால் இவள் என்னவென்றால் இவ்வாறு தவறு செய்தது போல் நடுங்கி கொண்டு இருக்கிறாள் , என்று ஒரு பக்கம் வியப்பாகவும் மறு பக்கம் எரிச்சலாகவும் இருந்தது ..மனசுல பெரியே ரதின்னு நினைப்பு போல என அவன் நினைத்து கொண்டு இருக்கும் போதே...
" என்ன கொஞ்சம் விட்டா நான் போவேன் என்று அவள் மெல்ல சொல்ல. '
அப்போது தான் தன் தவறு அவனுக்கு உரைத்தது இவ்வளோ நேரமாக ஒரு அறிமுக இல்லாத பெண்ணை.. தான் தாங்கி பிடித்து கொண்டு நிற்ப்பதை அதுவும் பொது இடத்தில், என்ன நினைத்து இருப்பாள் என்னை பற்றி,
இப்போது மன்னிப்பு கேட்பது இவனது முறை ஆனது, " சாரி இப்போவாச்சும் கிழ பார்த்து போங்க.. "
அவள் வேற ஏதும் சொல்லாமல்..அவன் தன்னை விட்டால் போதும் என்று வெறுமென சரி என்று தலை அசைத்து விட்டு அந்த இடத்தை விட்டு.. வேகமாய் ஓடிவிட்டாள்"
அவனும் அவள் கவமாக போகிறாளா என்று ஒருமுறை திரும்பி பார்த்து சில்லி கார்ல் என்று அந்த இடத்தை விட்டு நகர்ந்துவிட்டான் ,
அதற்க்கு பிறகு இருவரும் ஒருவரையொருவர் மறந்தே போய் விட்டார்கள் .
இவள் கோவில் பிரகாரத்தை சுற்றி விட்டு... பகவன் இடம் , ' பெருமாளே நாராயணா , எப்போவும் வழக்கமா வேண்டுறது தான் எக்காரணத்தைகொண்டு அம்மாக்கு மட்டும் என்னோட மெடிக்கல் ரிப்போர்ட் பற்றி தெரியவே கூடாது, என் ஆயுள் கடைசி வரைக்கும், நான் இப்பிடியே இருந்துவிட்டு போகிறேன் தயவு செய்து என்னோட இந்த கடைசி வேண்டுதல நிறைவேர்த்தி வச்சுட்டுப்பா .. எனக்கு வேற ஏதும் வேண்டாம் என் பெற்றோர் நலமாக இருக்கணும் என்று வேண்டி கொண்டு கோவில் விட்டு வெளியே வர பொழுது அவள் உடன் கல்லூரியில் படித்த தோழி ஒருத்தி அவள் எதற்க்க வந்துகொண்டு இருந்தாள்
தோழியும் இவளை பார்த்து சந்தோசமாய் " ஹாய் விஸ்மையா எப்பிடி டி இருக்க எவ்வளோ நாள் ஆச்சு உன்னை பார்த்து, ஆமா ஏன் இப்பிடி இளைச்சு போயிட்ட, உடம்பு ஏதும் சரி இல்லையா என்ன"
விஸ்மையா , " ஹாய் நந்து, ஏன் எனக்கு ஒன்றும் இல்லைப்பா நா.. நான் நல்லா தான் இருக்கேன், நீ எப்பிடி இருக்க நந்தினி" கொஞ்சம் தடுமாறியே படியே பதில் சொன்னாள்
நந்தினியின் இடம் ஒரு நல்ல பழக்கம் இருந்தது அதாவுது மற்றவர்கள் எதாவுது யாரிடமும் சொல்லாதே என்று சொன்னாள் போதும் அதை அடுத்தவர்கள் இடம் சொல்லிவிட்டு தான் மறுவேலை பார்ப்பாள் இல்லையென்றால் அந்த விசையத்தை வைத்து அவர்களிடம் தனக்கு தேவையானா வேலை வாங்கிவிடுவாள், வேற வழி இன்றி மற்றவர்களும் அவளுக்கு பயந்து வேலையே செய்து குடுத்து விடுவார்கள் இது விஸ்மையாவுக்கு தெரிந்து இருந்ததால் நந்தினியிடம் சற்று கவனமாகவே பேசினாள்.
"எனக்கு என்ன நான் நல்லா இருக்கேன் தான் ஆனா . ஹ்ம்ம் என ஒரு பெருமூச்சு உடன் நிறுத்தினாள்..!!! பிறகு தோழிகள் இருவரும் சிறுது நேரம் பேசிவிட்டு அவர்-அவர் வீட்டுக்கு திரும்பினார்கள்
ஆனால் இறைவனை வணங்கிவிட்டு கிளம்பும் திருப்தி விஸ்மையாயிடம் சிறிதளவு கூட இல்லை மனதை மேலும் அடைப்பது போல் இருந்தது எதையோ சிந்தித்தபடி ஒருவழியாக வீட்டை வந்து அடைந்தாள்
சிந்தனை முழுவதும் தோழியின் பேச்சில் இருந்ததால், தன் கண் முன் நின்ற தாய்,சகோதரிகள் மூவரையும் கவனிக்காமல் தனது
அறையில் போய் முடங்கி விட்டாள் அந்த பாவை, தான் மட்டும் தான் துன்பம் அனுபவிக்கிறோம் என்று நினைத்தால் அவளது தோழியும் அல்லவா ஒரு சிக்கலில் மாட்டி தவிக்கிறாள் என்கிற யோசனை இவளுக்குள்.
அறையின் வெளியே...
என்னம்மா இது வீட்டுக்கு வந்தவங்கள.. வாங்கன்னு கூட கேட்க கூடாதுன்னு இருக்கா என்ன வந்தா அவ பாட்டுக்கு உள்ளார போய் கதவை அடைசுகிட்டா அதையும் நீ பார்த்துகிட்டு சும்மா நிக்கிற.. என்ன ஏதுன்னு கேட்க மாட்டியா...? என விஸ்மையாவின் பெரியே அக்கா பொரிந்து தள்ளி விட்டாள்.
படிக்கிற திமிர வேற யார்கிட்டயாவது காட்ட சொல்லும்மா, எங்க கிட்ட வேணாம்,நாங்களும் இந்த வீட்டு பொண்ணுங்க தான் அதுவும் இல்லாம இந்த வீடு மாப்பிள்ளைங்களுக்கு மரியாதையை குடுக்கலைன்னா நாளைக்கு உன்னை தான் ம்மா சொல்லி காட்டுவாங்க என தங்கள் கோபத்தை காட்டி கொண்டு இருந்தார்கள் அந்த வீட்டு இரண்டு இளவரசிகள்.
ருக்குமணி, அவர்களின் பேச்சை கேட்டு செய்வது அறியா நின்று கொண்டு இருந்தார், இருந்தாலும் சின்னவளை விட்டு குடுக்க மனம் இல்லாமல் பெரியவள் இடம்" சரி டி விடு.. அவள் எதோ ஞாபகத்துல கவனிக்காமல் போயிட்டா அதுக்குன்னு இப்படியா பேசுவிங்க உடம்புக்கு ஏதும் சுகம் இல்லையோ என்னவோ போங்க போய் ஆகுற வேலையே பாருங்க ரெண்டு பெரும் என்று மூடி இருந்த அறை கதவை கவலை உடன் பார்த்தார் ருக்மணி.. ( என்னதான் பிரச்சனை தெரியலையே, இவ ஏன் இப்போ எல்லாம் இப்பிடி இருக்கா, ஒரு வேலை படிக்க போன இடத்துல ஏதும் தவறு நடந்துருச்சா என்ன பெருமாளே, அப்பிடி ஏதும் இருக்க கூடாது என் புள்ளையே நீ தான் காப்பாத்தணும் என கடவுளிடம் அந்த தாயால் வேண்ட மட்டுமே முடிந்தது"
அதற்குள் தாமோதரன் வந்து விட, ருக்மணி தனது கணவருக்கு மாலை நேரம் பலகாரம் எடுத்துட்டு வர சமயலறைக்கு சென்றார்.
தன் தாயிடம் பலிக்காத விஷயம் தந்தை இடம் பலிக்கும் என்கிற எண்ணத்தில் ராகினி – ரேஷ்மா இருவரும் தந்தையிடம் வந்து முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு, " அப்பா நாங்க எங்கே வீட்டுக்கு கிளம்புறோம்" என சொல்ல
தாமோதரன் மகளின் பேச்சை கேட்டு திடுக்கிட்டு என்னம்மா என்ன ஆச்சு இப்போ எதுக்கு கிளம்புறிங்க , ஒரு வாரம் மாதிரி தங்குற மாதிரி வந்திங்க இப்போ திடிர்ன்னு இப்பிடி சொன்னா..?"
பெரியவள், " வராத கண்ணீரை கண்களில் இருந்து துடைத்துவிட்டு எங்கே அப்பா , எங்களுக்கு தான் இந்த வீட்டுலையே மரியாதையே இல்லையே அப்போ நாங்க ஏன் இங்க இருக்கணும் எதோ அப்பா வீடு ஆச்சே கொஞ்சம் இருந்துட்டு போகலாம் வந்ததுக்கு நல்ல செய்யிறிங்க என சொன்னாள்"
" என்னம்மா சொல்லுறிங்க யாரு.உங்களுக்கு மரியாதையை பேசினது போனது என தாமோதரன் விசாரிக்க "
" எல்லாம் உங்க பொண்ணு விஸ்மையா தான் ப்பா" ரேஷ்மா சொன்னாள்
சின்ன மகளின் பெயரை கேட்ட உடன் தாமோதரன் யோசித்துவிட்டு" பாப்பாவ இருக்காதே "
" பார்த்தீங்களா , பார்த்தீங்களா
நீங்க நம்ப மாட்டிங்க எங்களுக்கு தெரியும் ப்பா அது நால தான் சொல்லுறோம் எதுக்கு பொல்லாப்பு நாங்க கிளம்புறோம் என்று இளையவள் சொல்ல "
அதற்குள்.. " ருக்மணி. பலகாரம் எடுத்து வந்து விட்டார் அங்கே நடப்பதை கவனித்த அவர்...மனதுக்குள் " அடிப்பாவிங்களா அதுக்குள்ள பத்த வச்சுடிங்களா இப்போ இந்த மனுஷன் என்ன பாடு படுத்த போறாரோ, அந்த புள்ளையே என யோசித்த படி கணவர் அருகே வர..
அதற்குள் , தாமோதரன், மனைவியே பார்த்து, என்ன மணி இது புள்ளைங்க ஏதோ சொல்லுறாங்க..."கொஞ்சம் கடுமையாக கேட்க
ருக்மணி மனதுக்குள் தன் இரு மகள்களை திட்டியே படி தாமோதரனுக்கு பதில் சொன்னார்" இல்லைங்க அது அவளுக்கு கொஞ்சம் உடம்பு சுகம் இல்லைங்க அது நால அப்பிடி இருக்கா இல்லேன்னா உங்களுக்கு தெரியாதா சின்னவளை பற்றி"
" அதுக்காக வந்தவங்கள, வாங்க கூட கேட்காமல் இருக்கிறது என்ன பழக்கம்"
" இனி இப்பிடி நடக்காதுங்க நான் பார்த்துகிறேன் என அவர் கணவரை சமாதனம் செய்து விட்டார் "
" சரி சரி பார்த்துக்.., ஹ்ம்ம் மாப்பிள்ளை.. புள்ளைங்களுக்கும் பலகாரம் குடு என அவரை அனுப்பி வைத்தார்"
கிளப்பிவிட்ட பிரச்சனை இப்பிடி வெடிக்காமல் போனதில் ராகினிக்கு ரொம்பவே வருத்தம்
ரேஷ்மா" என்ன அக்கா இப்பிடி ஆகி போச்சி நாம ஒன்னு நினைச்சா இங்கே வேற நடந்திற்ச்சே."
அதுக்கு ராகினி "விடுடி பார்த்துக்கலாம் என ரேஷ்மா உடன் பலகாரம் சாப்பிட போனாள்
இங்கே விஸ்மயா தனது அறையில் அமர்ந்து அது எப்பிடி முடியும் அப்பிடி எப்பிடி செய்யலாம் யார் இதுக்கு சம்மதிப்பா இது சாத்தியமா என நந்தினி, தன் இடம் சொன்னது பற்றி அவள் யோசிக்க செய்தாள் .
Hai friends itho 1st epi potuten padichutu unga comments sollungo dearies.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro